


தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிரம் மாண்டமான பூ அங்காடி தோவாளை..கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்- திருநெல்வேலி இருப்புப் பாதையையொட்டி அமைந்துள்ளது தோவாளை என்னும் அழகிய கிராமம்.


கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் மலர்கள் இங்கிருந்துதான் செல்கின்றன.


இயற்கை எழில் சூழ்ந்ததோவாளையின் ஒரு சிறு மலைக்குன்றின்மீது அமைந்துள்ளது தேவாளை முருகன் கோவிலில் ஆருளும் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் மிகவும் சக்தி வாய்ந்தவர். நான்கு கரங்களுடன் வேல் ஏந்தி காட்சி தருகிறார். மயிலின் முகம் வலப்புறம் உள்ளது.
வேண்டிய வரங்களை அள்ளித் தரும் இந்த முருகனை சாதி மத வேறுபாடின்றி மக்கள் வணங்குவது சிறப்பு.....

திருமலை முருகன் பக்தர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் மலர் முழுக்கு விழா மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது.
Thovalai Lord Murugan temple

தோவாளை கிராமத்தில் பயிரிடப்படும் ஜாதிப் பூ எனப்படும் அரிய வகை பிச்சிப் பூ நல்ல வாசனையுடன் கூடிய ஒரு வித்தியாசமான வகை ஆகும்.











பேச்சிப் பாறை என்ற இடத்திலிருந்து வரும் காட்டாறு ஊருக்கு அருகில் ஓடுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் அருகில் அமைந்துள்ளதும் சிறப்பாகும்.


மிகவும் பழமையான கைலாசநாதர் ஆலயம் ஒன்றும் உள்ளது. மேலும் இங்கிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள "சக்கரகிரி' என்ற இடத்திலும் ஒரு முருகன் கோவில் உள்ளது. திருச்செந்தூர் போன்று புஷ்பத் திருவிழா இங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த சக்கரகிரி மலைமேல் உள்ள முருகன் ஆலயத்திலும் சூரசம்ஹாரம் மிகவும் சிறப்பாகும்.




Good Morning!
ReplyDeleteமலர்களின் அரசாங்கமா?
நடக்கட்டும் நடக்கட்டும். ;)))))
படித்து ரஸித்து மலர்களை முகர்ந்து பார்த்து விட்டு மயக்கத்துடன் மீண்டும் வருவேன்.
>>>>>
நல்ல தகவல். பூக்கள் படங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளித்தன!
ReplyDeleteஆகா... கண்ணை கவரும் மலர்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா... நன்றி...
தோவாளை முருகன் கோவில் பார்க்க ஆவல் வந்து விட்டது.
ReplyDeleteமலர் அலங்காரங்கள் எல்லாம் அழகு.
மலர்கள் படம் அழகு.
மலர்களே..மலர்களே.. இதென்ன கனவா?
ReplyDeleteமலர்களிலே பல நிறங்கண்டேன் திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்
ReplyDeleteபாடலில் வந்த வரிகள் நினைவுக்கு வருகின்றது சகோதரி!.
அட அட கண்கொள்ளாக்காட்சிதான்.... அழகென்றால் அப்படி ஓர் அழகு!
அழகன்முருகன்கோவிலும் சேர்ந்ததினால் தான் இத்தனை அழகு மலர்களுக்குமோ?
அருமை. பகிர்வுக்கு மிக்கநன்றி சோதரி!
Hi....
ReplyDeleteI like flowers. Love it.
thanks for the colourful photos.
viji
பூக்களின் படங்கள் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன.
ReplyDeleteஅடடா ... பார்க்கப் பார்க்க பேரழகு! மனசில் கமழ்கிறது அவற்றின் வாசனை. கடந்த மாதம் மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்று திரும்பும் போது நாகர்கோயில் பேருந்து நிறுத்தத்தில் வெட்டியாக நான்கு மணி நேரம் காத்திருந்த வருத்தம் மேலெழுகிறது. அடுத்த முறை பார்க்கலாம்..
ReplyDeleteமுதல் படம் [அசையும் படம்] அழகோ அழகாக உள்ளது.
ReplyDeleteஉங்களை யாரும் அசைக்கவே முடியாது என்பதை உணர்த்துகிறது.
இரண்டாவது படத்தில் அழகழகான கலர் மாலைகள் ஜோர்
மூன்றாவது படம் - குதிரையுடன் உள்ள படம் EXCELLENT
//வேண்டிய வரங்களை அள்ளித் தரும் இந்த முருகனை சாதி மத வேறுபாடின்றி மக்கள் வணங்குவது சிறப்பு.....//
என்ற வரிகளுக்குக்கீழேயுள்ள படம் படுத்துள்ளது. அதை சுலபமாக நிமிர்த்தி நேராகக்காட்டலாம் தானே?
முருகன் படுத்திருந்தாலும் நேராக இருந்தாலும் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. அவர் எப்படியோ போகட்டும்.
>>>>>>>
//தோவாளை கிராமத்தில் பயிரிடப்படும் ஜாதிப் பூ எனப்படும் அரிய வகை பிச்சிப் பூ நல்ல வாசனையுடன் கூடிய ஒரு வித்தியாசமான வகை ஆகும்.//
ReplyDelete”உச்சி வகுந்தெடுத்துப் பிச்சுப்பூ வெச்சக்கிளி ....... பச்சமலைப்பக்கத்திலே மேயுதுன்னு சொன்னாங்கோ..........
மேயுதுன்னு சொன்னதிலே ...... நியாயம் என்ன கண்ணாத்தா”
என்ற பாடல் ஞாபகம் வருது. ;)
>>>>>
கீழிருந்து நாலாவது படத்தில் அந்தப்பூக்கோலம் அழகோ அழகு, தங்களின் இது போன்ற அழகான பதிவுகளைப்போலவே.
ReplyDeleteபூக்களின் கலர் இன்னும் கூட BRIGHT ஆக இருந்திருக்கலாம்.
>>>>>
//மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் அருகில் அமைந்துள்ளதும் சிறப்பாகும். //
ReplyDeleteஇந்த வரிகளின் கீழ்க்காட்டப்பட்டுள்ள பசுமையான வீடு படம் ஜோர் ஜோர்.
எங்கிருந்து தான் உங்களுக்கு இதெல்லாம் பொக்கிஷமாகக் கிடைக்கின்றதோ?
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
அந்தத் தொழில் ரகசியத்தை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.;)
>>>>>
//தோவாளை கிராமத்தில் பயிரிடப்படும் ஜாதிப் பூ எனப்படும் அரிய வகை பிச்சிப் பூ நல்ல வாசனையுடன் கூடிய ஒரு வித்தியாசமான வகை ஆகும்.//
ReplyDeleteஇந்த வரிகளுக்குகீழே வலதுபுறம் ஒரு பெண்மணி பூ வியாபாரம் செய்கிறாள்.
அந்தப்பூக்கடையில் கும்மென்று நறுமணம் வீசக்கூடும்.
பூக்கடைக்கும் மற்றொரு அசிங்கமான குமட்டும் கடைக்கும் விளம்பரமே தேவையில்லை என்பார்கள்.
இந்த பூக்கடைப்படத்தைப் பார்த்ததும் ஏனோ எல்லோராலும் மிகவும் பாராட்டப்பட்ட என் “ஜாதிப்பூ” சிறுகதையின் முதல் வரி என் நினைவுக்கு வந்தது. http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_12.html
சிரிப்பும் வந்தது.
>>>>>
முருகனைப்பற்றிய பதிவாகையால் மேற்கொண்டு எதுவும் சொல்லத்தோன்றவில்லை.
ReplyDeleteதலைப்புத்தேர்வே மணம் வீசுவதாக அமைந்துள்ளது.
பூக்களின் படங்கள் அத்தனையும் பூப்போன்று அழகாகவும் மணமாகவும் கும்மென்ற வாசனையுடன் உள்ளது.
மணம் வீசும் பதிவுக்கும் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.
ooooo 868 ooooo
மலர்களின் அரசாங்கத்தின் முன் யார்தான் கண்ணை விரிக்காமல் இருக்க முடியும் மேலும் தெரிந்த ஊரில் தெரியாத விஷயங்கள் படங்கள் திறப்பதற்கு தான் அதிகம் நேரம் பிடிக்கின்றன
ReplyDeleteமலர்களின் அரசாங்கம் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து. தோவாளை பற்றிய குறிப்புகள், பேச்சிப்பாறை, காட்டாறு எல்லாமே அழகோ அழகு!
ReplyDeleteஇன்று உங்கள் பதிவிற்கு கண்ணு படப்போகுதம்மா....!
பூக்களின் படங்கள் அதன் விளக்கம் அருமை
ReplyDeleteபூக்கள் மனதை மகிழ்வித்தது.
ReplyDeleteமிகவும் அருமை
ReplyDeleteThis is my native place... I very proud to born here...!!!!!!!!!!!1
ReplyDelete