யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே
தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் ..
போகிற உயிரைத் தடுத்து நிறுத்தும் சக்தி சுந்தரகாண்டத்திற்குள் பொதிந்திருக்கும் காண்டத்தின் சிறப்பை சொற்களால் விளக்க முடியாது.
‘ராம’நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே
பிரஸன்னமாவார் என்பது ஐதிகம்.
ஆகவே சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை - சுத்தமான விரிப்பு போட்டு வைக்க்கிறோம் ..
ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சகல சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார்.
இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார்.
அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.
இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார்.
அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.
கற்பின் கனலியான சீதை அக்னியில் இரண்டு முறை இறங்கியவள்
ஆபத்தில் சிக்கும் உயிர்களைக் காப்பாற்றுபவன் ஆச்சார்யன் என்ற குரு. ஒரு நல்ல குரு இறைவனை அடையும் வழியைச் சொல்லித் தந்து விடுவார்.
சீதையாகிய ஜீவாத்மாவை, ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்க்கும் திவ்ய பணியைச் செய்ய ஆஞ்சநேயர் கிளம்புகிறார் இலங்கை நோக்கி!
இதனால் தான் ஸ்ரீராமனின் அருளைப் பெற ஆஞ்சநேயரை வணங்கினாலே போதும்! ஸ்ரீராமஜெயம் என்று சொன்னாலே போதும். அவர் அங்கே வந்து நின்று விடுவார்.
ஆஞ்சநேயர் அளவற்ற உயரம் உடைய விஸ்வரூபம் எடுத்தார்.
ஆஞ்சநேயர் அளவற்ற உயரம் உடைய விஸ்வரூபம் எடுத்தார்.
ஜயத்யதிபலோ ராமோ லஷ்மணஸ்ச மஹாபல
ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன
ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஸ
ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்
ஸலாபிஸ்து ப்ரஹரத பாத வைச்ச ஸஹஸ்ரஸ.
- சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலை தாண்டுவதற்கு முன் சொன்ன வரிகள்
ஸ்ரீ ஜெய பஞ்சகம் எனப்படும்.
இதைச் சொல்லி வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும். .
கருணாமூர்த்தி ராமர் உலகிலுள்ள ரிஷிகளெல்லாம் தன்னைத் தரிசிக்க வேண்டுமென்பதற்காக, காட்டிற்கு போகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டவனது கண்களில் கருணை சிந்துமாமே!
ராமபிரான் குழந்தையாக இருந்த போது, அவரை அடிக்கடி அழைத்துப் பார்ப்பாராம் தசரத மகாராஜா.
கருணை பொங்கும் அவரது கண்ணழகை ரசிக்க...சிறிது நேரம் பார்த்து விட்டு, திரும்பிப்போ என்பாராம்.
ராமனும் செல்வாராம். அப்போது பின்னழகை ரசிப்பாராம்.
கருணை பொங்கும் அவரது கண்ணழகை ரசிக்க...சிறிது நேரம் பார்த்து விட்டு, திரும்பிப்போ என்பாராம்.
ராமனும் செல்வாராம். அப்போது பின்னழகை ரசிப்பாராம்.
இப்படி முன்னால் கண்ணழகு, பின்னால் நடையழகு என மாறி மாறிபகவானை அனுபவித்த பாக்கியசாலி அவர்.
கருணைக் கண்களுக்கு சொந்தக்காரரான ராமரின் பக்தராகியஆஞ்சநேயரை குருவாகக் கொள்ளலாம்.
சீதையாகிய ஜீவாத்மாவை ராமனாகிய பரமாத்மாவுடன் சேர்த்து வைத்த கருணை குருவாக அவர் விளங்குகிறார்.
ஆச்சார்ய, சிஷ்ய சம்பந்தம் சுந்தரகாண்டத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.
மூச்சுத்திணறல் போன்ற சிரமப்படுத்தும் வியாதிகள் இருந்தால் அஞ்சிலே ஒன்று பெற்றான் என்ற பாடலை ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் அமர்ந்து பாடினால் சரியாகி விடும் என்பது நீண்டகால நம்பிக்கை.
ஏனெனில், தன் புத்திரனை வணங்குவோருக்கு வாயு பகவான் நிச்சயம் கருணை செய்வார்.
அஞ்சிலே ஒன்றாராகஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்றஅனங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்!அவன் நம்மை அளித்துக் காப்பான்!
பாடலில் நிலம்,நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
இயற்கையின் சீற்றத்தில் இருந்து விடுபட இந்த் பாடலைப் பாடி
அனுமனை வழிபடலாம்.
ஆஞ்சநேய தரிசனம் கடலினும் ஆழமான கவலைகளைக் கூட கரைத்து ஆனந்தமளிக்கும் என்பதற்கு மைநாக மலையின் கதையே உதாரணம்.
தன்னைத் தாண்டிச் செல்பவர்கள் யாராயினும் வாயில் புகுந்து வெளியேறிச் செல்ல வேண்டும். என்றாள்.
இருவரும் மாறி மாறி அளவைக் கூட்ட ஆஞ்சநேயர் திடீரென தன் அளவை மிகமிகச் சுருக்கி கட்டை விரல் அளவுக்கு மாறி, அவள் காது வழியே வெளிப்பட்டார்.
சுரஸை தன் சுயரூபமான தேவமங்கை வடிவம் காட்டி, ஆஞ்சநேயனே! நீ மாபெரும் வீரன். நீ செல்லும் காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், என ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தாள்.
வீட்டில் குழந்தைகளிடம் பூதம் வருகிறது, பேய் வருகிறது, பிசாசு வருகிறது என்றெல்லாம் நாம் பயமுறுத்தக்கூடாது. அவை வந்தாலும், நாம் எதிர்த்து நிற்க வேண்டுமெனக் கற்றுத்தர வேண்டும்.
ஆஞ்சநேயர் சுரஸையிடம் தப்பித்துச் சென்ற இந்த வரலாறைக் குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுத்தால் அவர்களின் ஆற்றல் மட்டுமின்றி, கல்வியறிவும் விருத்தியடையும்.
சுந்தரகாண்டம் எந்த நோயையும் தீர்க்கும் மாமருந்து.
எந்த கிரக தோஷத்தையும் அது நீக்கி விடும்.
குழந்தைகளுக்கு தைரியத்தையும், கல்வி நலனையும் தரும்.
திருமணமாகாத கன்னிகள் இந்த அத்தியாயங்களைச் சேர்த்து வைத்து நாளுக்கு ஒன்று வீதம் படித்தால், ஸ்ரீராமன் போல் நல்ல மணவாளன் அமைவார்.
அத்தனை காண்டங்களின் சாரமும் சுந்தரகாண்டத்திலே விரவிக்கிடக்கிறது.
ஆஞ்சநேயர், தான் சந்திக்கும் நபர்களிடம் எல்லாம், ராமனைப் பற்றியும், சீதையைப் பற்றியும், தசரதரைப் பற்றியும் விலாவாரியாகச் சொல்கிறார்.
இதிலேயே பிற காண்டங்களின் சாரம் அடங்கி விடுகிறது.
சுந்தரகாண்டம் படித்தால் மொத்த ராமாயணத்தையும் படித்த திருப்தி ஏற்படுகிறது. பல படிப்பினைகளைத் தருகிறது.
ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. அவரது வாலை யாராலும் வெல்ல முடியாத சிலம்பக்கம்பு என்று கூறுவர். .அது சுழன்றடித்தால் அதன் அருகே நிற்கும் சக்தி யாருக்கும் கிடையாது. \
அதில் இருக்கும் ஒவ்வொரு ரோமமும் ராமநாமம் சொல்வதால், அதற்குள் மந்திர சக்தி வெகுவாக பரவியிருக்கிறது.
அவரது வாலுக்கு பூஜை செய்தால், ஸ்ரீராமஜெயத்தை எழுதிய பலன் கிடைக்கும் ..
அவரது வாலிலுள்ள ரோமங்கள் சொல்லும் ராமநாமமே எண்ணிக்கையற்றதாகும்.
சுந்தரகாண்டம் படிப்பதன் நோக்கமே பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வதற்குத்தான். பிரிந்தாலும், சேர்ந்திருந்தாலும் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதையே நமக்கு வலியுறுத்துகிறது.
ராமனும், சீதையும் பிரிந்திருந்த நிலையிலும் கூட மனதாலும், நினைவாலும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக, மிகவும் பிரியமாக இருப்பது கண்டு ஆஞ்சநேயர் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தார்.
பெண்கள் கஷ்ட காலத்தில் மிகுந்த தைரியத்துடன் இருக்க வேண்டும் என்பதை சுந்தரகாண்டத்தின் வரிகள் எடுத்துச் சொல்கின்றன ..
சூரியனை சுவர்ச்சலாதேவியும்,
இந்திரனை இந்திராணியும்,
வசிஷ்டரை அருந்ததியும்,
சந்திரனை ரோகிணியும்,
அகத்தியரை லோபாமுத்திரையும்,
ச்யவனரை சுகன்யாவும்,
சத்யவானை சாவித்திரியும்,
சவுதாசனை மதயந்தியும்,
கபிலரை ஸ்ரீமதியும்,
சகரனை கேசினியும்,
நளனை தமயந்தியும்,
அஜனை இந்துமதியும்
பின்தொடர்வது போலவும்,
மனமொத்த தம்பதிகளுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவது போலவும், நானும் என் கணவனுடன் வாழ்ந்து காட்டுவேன், என்றாள்.
எவ்வளவு பெரிய உத்தம ஆத்மாக்களின் பெயர்களையெல்லாம் படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது ..!
இவர்களது பெயரைச் சொன்னாலே மகா புண்ணியம்! குடும்ப ஒற்றுமைக்கு சுந்தரகாண்டத்தை தவிர மாமருந்து வேறு ஏதுமில்லை.
In this link u can find the sundarakandam song!
http://www.youtube.com/watch?சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை' என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை
பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.
ரசித்தேன்.
ReplyDeleteஏப்ரல் 19 அன்று ஸ்ரீராமநவமி வருவதை முன்னிட்டு சுந்தரகாண்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அனுமன் வழிபாடு வட இந்தியாவில் மிகமுக்கியமான வழிபாட்டுமுறையாக உள்ளது. நம்மூரில் கந்த சஷ்டி கவசம் போல, அவர்கள் ஹனுமான் சாலிஸாவை தினமும் பக்தியோடு ஓதுகிறார்கள். சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் நோய்கள் தீரலும் மன அமைதியும் ஏற்படுவதை நான் உண்மையிலேயே கண்டிருக்கிறேன்.
ReplyDeleteபடித்தேன்,பார்த்தேன்.மகிழ்ந்தேன்
ReplyDeleteசிறப்பான மாமருந்து... படங்கள் படுஜோர்...
ReplyDeleteநன்றி...
சிறப்பான படங்கள். அருமையான உரை.
ReplyDeleteநன்றி
சுந்தரகாண்ட மகிமையை முழுமையாக அறிந்து கொள்ள வைத்தமைக்கு மிக்க நன்றி..... அரிய பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅடியேனின் தாழ்மையான வேண்டுகோளுக்கு இணங்கி, இன்று “சுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம்” என்ற தலைப்பில், சுந்தரமான சுகமான பதிவொன்றை அழகான படங்களுடன் அற்புதமாக அருளியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteரஸித்துப்படித்து ஸாரத்தை ருஸித்து அனுபவித்தபின், மீண்டும் சற்றே தாமதமாக வருவேன். அம்பாளுக்கு என் காலை வந்தனங்கள்.
அன்புடன் VGK
சகோதரி...
ReplyDeleteசுந்தரகாண்டத்தின் சுந்தரப்பெருமைகளை அதிஅற்புதமாக உங்களைத்தவிர இத்தனை அழகாக வேறுயாரால் தரமுடியும்...
மலைத்துப்போனேன் படங்களின் அழகாலும் பதிவினாலும். சொல்ல வார்த்தைகளில்லை...
சகோதரி! மிக்க நன்றி உங்கள் அன்பான இந்தச் சேவைக்கு...
சுந்தரகாண்ட பாராயண மஹிமையை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteஅதைப்படித்தாலே, பாராயணம் செய்தாலே முழு ராமாயணம் படித்த பலன் ஏற்படுமா? மிக்க மகிழ்ச்சி.
போகிற உயிரைத் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டதா? இனிமை.
எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயரும் கூடவே இருக்கிறாரா? சூப்பர்.
>>>>>>
ஸ்ரீ ஹனுமன் அமர ஓர் இருக்கை கோலம் போட்டு வைக்கிறோமா? . ஆஹா, இதை நானும் பல உபந்யாச நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteஸ்ரீ துளசி தாஸர் கதை கேட்க வரும் பக்தர்களைப் பிரதக்ஷணம் செய்யும் நோக்கம் மிக உயர்வானதாக உள்ளது.
>>>>>>>
ஸீதா தேவிக்கே அக்னிப்பிரவேஸம். அதுவும் இருமுறை. மனதைக்கலங்க வைக்கும் நிகழ்ச்சிகள்.
ReplyDeleteஸீதை ஜீவாத்மா. ஸ்ரீ ராமன் பரமாத்மா. இருவரையும் இணைக்கும் குரு ஆஞ்சநேயன். அற்புதம். ;)))))
தங்கள் கைகளைக்கொடுங்கோ .... என் கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
>>>>>>>
ஸ்ரீ ஜெய பஞ்சகம் பற்றிய தகவல் அருமையோ அருமை.
ReplyDeleteஸ்ரீ ராமரின் முன்னழகையும் பின்னழகையும் அடிக்கடி தரிஸிக்கும் பாக்யம் பெற்றவர் தஸரதச் சக்ரவர்த்தி. சூப்பரான தகவல்.
மூச்சுத்திணறலுக்கு “அஞ்சிலே ஒன்று பெற்றான்” ஸ்லோகமா?
மிக நல்லதொரு ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.
>>>>>>
மைநாக மலைக்கதையை அழகாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteமிகப்பெரிய அவளின் வாயில் புகுந்து பின் கட்டைவிரல் அளவுக்கு மாறி காது வழியே வெளிப்பட்டாரா?
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!
சுரஸையின் காதே கிழிந்திருக்குமோ!. ;)
தேவமங்கையாக மாறி விட்டாளா?
அச்சா பஹூத் அச்சா.
குழந்தைகளை இதுபோன்ற பயங்கர கதைகள் சொல்லி பயமுறுத்தக்கூடாதா?
நல்லதொரு எச்சரிக்கை கொடுத்துள்ளீர்கள். சந்தோஷம்.
>>>>>>>
திருமணமாகாத கன்னிகைகளுக்கு ஸ்ரீராமன் போன்ற குணமுள்ள மணவாளன் அமைவானா?
ReplyDeleteசந்தோஷம். சந்தோஷம். ததாஸ்து. அப்படியே அமையட்டும்.
வாலின் மஹிமை.... சிலம்பக்கம்பு.... சுழன்றடித்தல்..... ஒவ்வொரு ரோமமும் ராமநாமம் சொல்லுதல்
சிலிரிக்க வைத்து விடுகிறீர்களே ! ;))))))
பிரிந்திருப்பவர்களை ஒன்று சேர்க்கும் சுந்தரகாண்டம் வாழ்க வாழ்கவே!
இனியாவது யாரும் யாரையும் பிரியாது இருக்கக்கடவது.
>>>>>>
எவ்வளவு விளக்கங்கள்.
ReplyDeleteஎவ்வளவு பாடல்கள்.
எவ்வளவு படங்கள்.
பதிவே சும்மா ஜொலிக்குதுங்க.
எவ்ளோ கஷ்டப்பட்டு, கடின உழைப்பினைக்கொடுத்து, இந்தப்பதிவினை இவ்வளவு சுவாரஸ்யமாகக் கொண்டுவந்து பிரமிக்கச்செய்துள்ளீர்கள். அடேங்கப்பா ! )))))))))))))
தாங்களே ஹனுமன் போன்று விஸ்வரூபம் எடுத்தல்லவா பதிவிட்டுள்ளீர்கள்.
உங்களால் இதைப்பார்த்த, படித்த, ரஸித்த அனைவருக்குமே மிகவும் புண்ணியம் கிடைக்க வழி வகுத்துள்ளீர்கள்.
>>>>>>>
தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் ஸகல செளபாக்யங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பான பாராட்டுக்கள்.
இனிய நல்வாழ்த்துகள்.
ஸ்ரீராமநவமி நல்வாழ்த்துகளும்......
தித்திப்பாக நிறைய பானகம் சாப்பிட்ட மகிழ்ச்சியும் மனநிறைவும், இந்தத்தங்களின் பதிவைப்படித்ததும் எனக்கு ஏற்பட்டுள்ளது.
ருசியோ ருசி தான். நன்றியோ நன்றிகள்.
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ooooo 883 ooooo
.
நன்றி சகோதரி அனுமனை பற்றிய குறிப்புகளுடன் சுந்தரகாண்டத்தின் சிறப்பும் அருமை படங்களும்
ReplyDeleteஉங்களின் இந்த சேவை என்றென்றும் பயனளிப்பது
ReplyDeletenice to know that reading sundara kandam will unite separated couples as i know the pain of permanent separation
ReplyDeleteஉங்கள் பதிவுகளில் பாதி கதையை படங்களே சொல்லும். அருமை... அருமை...
ReplyDeleteசுந்தரகாண்டத்தின் பெருமைகளை அழகாய் சொல்லி விட்டீர்கள்.
ReplyDeleteகுடும்ப மேன்மைக்கு சுந்தரகாண்டம் என்று அருமையாக சொன்னீர்கள்.
படங்கள் எல்லாம் அருமை.
அனுமன் புகழ் பாடுவோம்.
ராம நவமி வாழ்த்துகள்.
ReplyDeleteசுந்தர காண்டத்தின் பெருமையை நன்றாக விளக்கியுள்ளிர்கள்.
'பாவயாமி ரகுராமம்' பாடல் நினைவுக்கு வந்தது நீங்கள் இணைப்புக் கொடுத்திருக்கும் பாடலைக் கேட்டவுடன்.
ReplyDeleteஅஞ்சிலே ஒன்று பெற்றான் பெருமையை கூறும் சுந்தர காண்டச் சிறப்புகள் பற்றி அறிய மனதில் சந்தோஷம் ஏற்படுகிறது.
ஸ்ரீராம நவமி தினம் எல்லோருக்கும் அமைதியையும், இன்பத்தையும் கொடுக்காததும்.
படிக்கும்போதே மனம் குளிகிறது அம்மா;என்ன ஒரு சிறப்பான பதிவு ராமநவமி தினத்தையொட்டி..மந்திரங்களை குரித்துக்கொண்டேன் நாளை பாடிப்பதற்க்காக..மிக்க நன்றிம்மா!!அழகு புகைப்படங்கள்..
ReplyDeleteகடைசியில் இருக்கும் படம் breath taking.
ReplyDeleteகுடும்ப ஒற்றுமைக்கு புரிதலும் அன்பும் இருந்தால் போதாதோ?
2
ReplyDeleteஸ்ரீராமஜயம்
============
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!
-oOo-
”ஸ்ரீராம நவமி” என்ற தலைப்பில் இன்றைய தினத்திற்குப் பொருத்தமான மிகவும் அழகான இனிய பதிவு.
வழக்கம் போல அற்புதமான படங்கள்.
சுவையான சுகமான விளக்கங்கள்.
>>>>>>>
//’ராம' என்ற மந்திரம், "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து
ReplyDeleteமந்திரத்திலுள்ள (ஓம் என்பது ஒரே எழுத்து) "ரா'
மற்றும் "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்திலுள்ள, "ம' என்ற
பீஜாக்ஷரங்களை இணைத்து உருவாக்கப்பட்டது.
பீஜாக்ஷரம் என்றால், உயிர்ப்புள்ள எழுத்து என்று பொருள்.
""ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம'' என்னும் ராமதாரக மந்திர ஜபம் செய்வதால் தொடர்ந்து வெற்றிகள் ஏற்படும்//
மிகவும் அற்புதமான அழகான பயனுள்ள விளக்கங்கள். ;)))))
>>>>>>.
ReplyDeleteஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்.
//ஸ்ரீராம நவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.//
மிகவும் மகிழ்ச்சியளிக்கும், காரிய ஸித்தியளிக்கும் அழகான சுருக்கமான ஸ்லோகமாகக் கொடுத்துள்ளது, மிகச்சிறப்பாக உள்ளது.
இன்று எதற்குமே நேரம் ஒதுக்க முடியாதவர்கள், இதையாவது தங்கள் கண்களில் அடிக்கடி படும் இடத்தில் எழுதி ஒட்டி வைத்துக்கொண்டு, தினமும் ஒரு முறையாவது சொல்ல செளகர்யமாக இருக்கும்படி, சுருக்கமாகக் கொடுத்துள்ளீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
>>>>>>
ReplyDelete//ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே
விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)
ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க,
கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;
விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி,
இந்த நம் தெய்வீகப்பதிவராம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவு என்ற வறுத்த முந்திரியையும் கலந்து >>>>>>>
இப்போது சுவைத்துப் பாருங்கள் ..............
சப்புக் கொட்டுங்கள்//
நன்றாகவே சப்புக்கொட்ட வைத்து விட்டீர்கள். ;)))))
ஆனால் ’பா ய ஸ ம்’ எங்கே ??????? ;(((((
>>>>>>
ReplyDeleteருசிமிக்கதோர் பதிவினைக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.
ராமநாமத்தை விட ருசியோ ருசியாக உள்ளது தங்களின் இன்றைய பதிவு.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
இதுபோன்ற ஆன்மீகப்பணிகளைத் தொடர்ந்து கொடுத்து உதவுங்கள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo 884 ooooo
பத்ராசலத்தில் ஸ்ரீ ராமபிரானுக்கு மிக அழகான கோயில் எழுப்பிய, கோபண்ணா என்று அழைக்கப்பட்ட, தூய ராம பக்தரான ராமதாஸரின் சரித்திரத்தினை, தாங்கள் சிறப்பான படங்களுடன், அழகாகக் கதையாகவும் சொல்லி 4-5 பதிவுகளாவது தரலாம் என அன்புடன் அனைவர் சார்பிலும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஸ்ரீராமர் அதற்கு தங்களுக்கு அருள் புரிவாராக !
வணக்கம் .நான் இந்த குழுவிற்கு முற்றிலும் புதியவன் .
ReplyDeleteசுந்தர காண்டதை பற்றி ஒரு சிறிய குறிப்பு .பாடலின் முடிவில் பட்டாபிஷேகம் பாடல் இருக்கிறது . அதை யாரும் பாடுவதில்லை . ஏன் என்று தெரியவில்லை .
இது தான் பாடல்.----
மகுடாபிஷேகம் கொண்டாரே
ஸ்ரீ ராமசந்திரன் மகுடாபிஷேகம் கொண்டாரே
சகல ராஜர்களும் சகல தேவர்களும்
சகல வேதியரும் சகல ஜாதியரும்
சகல மந்திரிகளும் சகல தந்திரிகளும்
சகல முனிவர்களும் சகல மனிதர்களும்
இந்த்ராதி தேவர்களும் சந்த்ராதி மூவர்களும்
சந்தோஷமாய் பொருந்தும் சிம்மாசனத்திலிருந்து---
பட்டாபிஷேகம் படங்கள் இணைத்திருக்கும்போது பாடல் இருந்தால் சிறப்பாக் இருக்கும் என்பது என் அபிப்ராயம்
அன்புடன் sv
பட்டாபிஷேகம் பாடல் நிறைவளிக்கிறது ஐயா..
Deleteஇனி அந்த அருமையான பாடலையும்
இணைத்து சுந்தரகாண்டத்தை படிக்கிறோம்.
இத்தனை அருமையான செய்திகளுக்கு
இனிய நன்றிகள்..