


ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாயமஹா பலப்ரகண்டாய
பல்குணசகாயகோலாகல சகல பிரம்மாண்ட பாலகாயசப்த சமுத்ர நிராலங்கிதாய, பிங்கள நயனாய அமித விக்ரமாயசூர்யபிம்ப
பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய சஞ்சீவினி சமாநயன சமார்த்தாய
அங்கதலட்சுமண கபி சைன்ய ப்ராண நிர்வாககாய தசகண்ட
வித்வம்ஸனாய இராமேஷ்டாய பல்குணசகாய சீதா சகித இராமச்சந்திர ப்ராசதகாய -ட் ப்ரயோகாங்கபஞ்சமுக ஹனுமதே நம:
இந்த பஞ்சமுக ஆஞ்சநேயா மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து அனுமனை வழிபட்டால், கிரக பீடைகள், கெட்ட கனவுகள் ஆகிய பல்வேறு இன்னல்கள் நீங்கி இனிய நல்வாழ்வும்,
ஆயுள் ஆரோக்கியமும் இனிதே அமையும்..


ஓம் ஸ்ரீராமதூதாய,ஆஞ்சநேயாய,
வாயுபுத்ராய மஹாபலாய,
ஸீதாதுக்க நிவாரணாய,
லங்காவிதாஹகாய,
ம்ஹாபலப்ரசண்டாய,
பல்குணஸகாய,
கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,
ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள்நயநாய, அமித விக்ரமாய,
ஸூர்யபிம்பஸேவகாய,
துஷ்ட நிராலம்ப க்ருதாய,
ஸஞ்சீவிநீ ஸமாநயந ஸம்ர்த்தாய,
அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய,
தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய,
பல்குணஸகாசாய,
ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய,
ஷட்ப்ரயோகாங்க பஞ்சமுகி ஹநுமதே நம:
பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய
வல்லமை மிக்க பஞ்சமுக அனுமன்.

வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார்
அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன்.

பஞ்ச முக தரிசன பலன்கள்:
அனுமன் - சனித்தொல்லை, , சகல தோஷங்களையும் நீக்குவார்
நரசிம்மர் - பயத்தைப் போக்கி துஷ்ட தேவதைகளை அடக்குவார்
கருடர் - அனைத்து வியாதிகளையும் நீக்குவார்
வராகர் - செல்வத்தைப் பெருக்கி பாவத்தைப் போக்குவார்
ஹயக்ரீவர் - கலை , படிப்பு ,வாக்கு சாதுர்த்தியம் தருபவர்

ராவணனுக்கு மயில் இராவணன் என்ற ஒரு சகோதரன் இருந்தான் .
அவன் ஒரு சமயம் ராம இலக்குவரைக் கவர்ந்து சென்று அடைத்தான் .
மயில் ராவணனின் உயிர் ஐந்து வண்டுகளிடம் குடிகொண்டு இருந்தது .
அந்த ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் அழித்தால் மட்டுமே அவனுக்கு அழிவு ஏற்படும் .
எனவே மயில் ராவணனை அழிப்பதற்காக ,அனுமன் ஒரே நேரத்தில் ஐந்து முகங்களையும் பெற்று , ஐந்து வண்டுகளையும் பிடித்துக் கொன்றார் .
ஒரு காரியத்தை எவ்வாறு சித்தியாக்குவது , எவ்வாறு வெற்றி கொள்வது என்பதை வாழ்ந்துக் காட்டியவர் ஸ்ரீ ராமபக்த அனுமன் .
ராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டத்தில் அனுமன் , ராமனை சீதையுடன் சேர்த்துவைக்க அவர் உதவும் நிகழ்வு உள்ளது .
சுந்தரக் காண்டத்தைப் படித்தால் கணவன் மனைவி இடையே சண்டைகள் வராது , ,பிரிந்தவர்கள் சேர்வார்கள் ..
துன்பநேரங்களில் பாராயணம் செய்து வாழ்வில் வெற்றி பெறலாம்
சுந்தரக் காண்டத்தைப் படித்தால் கணவன் மனைவி இடையே சண்டைகள் வராது , ,பிரிந்தவர்கள் சேர்வார்கள் ..
துன்பநேரங்களில் பாராயணம் செய்து வாழ்வில் வெற்றி பெறலாம்

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வா பத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்ஆஞ்சநேய நமாம்யஹம்
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதம்குமாரம் ப்ருஹ்மசாரிணம்
துஷ்டக்ருஹ வினாஸாயஹனுமந்த முபாஸ்மஹே
ஸ்ரீ ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய சமுத்பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயு புத்திர நமோஸ்துதே
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்அஸாத்யம் தவ கிம்தவ
ராம தூத இக்ருபாஷிந்தோமத்கார்யம் ஸாதய ப்ரபோ
புத்திர் பலம் யசோதைர்யம்நிற்பயத்வம் அரோகதாஅஜாட்யம்
வாக்படுத்வம்சஹனுமத் ஸரணாத் /ஸ்மரணாத் பவேத்




ரசித்தேன்.
ReplyDeleteஜெய் ஆஞ்சநேய...
ReplyDeleteஅஞ்சனை புத்திரனின்
பஞ்சமுக அவதார விளக்கம் மிக அருமை...
ஸ்ரீ ஆஞ்சனேய புகழ் மாலையை
ReplyDeleteபோற்றி மகிழ்ந்தேன்.
பாடுகிறேன்.
நன்றி.
சுப்பு தாத்தா.
ஜெய் மாருதி சுப மாருதி.
ReplyDeleteசுந்தர மாருதி சர்வமங்கள மாருதி.
அபூர்வப் படங்களையும் அரிய ஸ்லோகங்களையும்
அளித்து வழிகாட்டு திருமதி இராஜராஜேஸ்வரிக்கு மிக நன்றி.
pictures of lord hanuman are so good
ReplyDeletearumai, arumai, ohm anjenya namha, valarttum thangal thondu
ReplyDeletek. arumugam
ஜெய் ஸ்ரீ ஆங்சநேய!
ReplyDeleteஆங்சநேயரின் அழகிய அற்புதப் படங்களும் அவரின் பெருமைகள் கூறும் பதிவும்.
மிகுந்த மகிழ்வாயிருக்கிரது சகோதரி!
மிக்க நன்றி!
கோலஹல பஞ்சமுக ஆஞ்சநேயர் தரிஸனம் கிடைக்கப்பெற்றோம்.
ReplyDeleteஇன்று ஸ்திரவார சனிக்கிழமைக்கு ஏற்ற நல்ல பதிவு. சந்தோஷம்.
>>>>>
படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
ReplyDeleteபஞ்சமுக தரிஸனத்தின் பலன்கள் கொடுத்துள்ளது தனிச்சிறப்பு.
>>>>>>
ReplyDeleteசுந்தரகாண்ட பாராயண மஹிமைகளை எடுத்துரைத்துள்ளதும் மனதுக்கு மகிழ்வளிப்பதாக உள்ளது.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்
ooooo 892 ooooo
கோலஹல பஞ்சமுக ஆஞ்சநேயர் பற்றிய செய்திகள் அருமை. , படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
ReplyDeleteஅருமை. படங்கள் வெகு சிறப்பு.
ReplyDeleteபஞ்ச முக ஆஞ்சநேயர் சிற்பத்தை முதன் முதலில் புதுகை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் பார்த்து வியந்துபோனேன்.
ஸ்லோகங்களை கொடுத்தற்கு மிக்க நன்றி சகோதரி அனுமன் பகிர்வு மிக அருமை
ReplyDeleteஅனைத்தும் படங்களும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபஞ்சமுக ஆஞ்சநேயனின் படங்களும், தகவல்களும் அருமை.
ReplyDelete