பறீ மன் நாராயணன் துளசிப்பிரியன் ..
குளத்தூரில் கோயில் கொண்டுள்ள இறைவனின் பெயர் துளசீஸ்வரர்.
அகத்தியர், கயிலாயத்திலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது, எங்கு பார்த்தாலும் துளசிச் செடிகள் நிறைந்த வனமாகக் காட்சி தந்த இந்த தலத்திற்கு வந்தார்.
சிவ வழிபாட்டிற்குரிய நேரம் ஆனதால், சுற்றும் முற்றும் பார்த்தார். எங்கும் கோயில் காணப்படவில்லை.
அப்போது, "அகத்தியரே, என்னைத் தேடி வேறெங்கும் அலைய வேண்டாம். நான் இங்கே துளசிச் செடிகள் சூழ மறைந்து இருக்கிறேன்" என்று அசரீரி ஒலித்தது.
ஒலி வந்த வடதிசையில் சுயம்பு லிங்கம் ஓன்று காணப்பட்டது.
துளசியையே இறைவனுக்கு சூட்டி, துளசி தளத்தாலேயே அர்ச்சனை
செய்தார்.
சிவபெருமான் தலையை சற்று சாய்த்து அவரது பூஜையை ஏற்று, சிவசக்தி வடிவான அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில் அவருக்கு காட்சி தந்தார்.
இன்றும் ஈஸ்வரனை துளசியில் அர்ச்சித்து, துளசியையும்
துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
இந்தப் பிரசாதம் உடல் நலத்திற்கு சிறந்தது, ஜுரம், இருமல்
போன்ற சுவாசக் கோளாறுகளை நீக்கும் ...
போன்ற சுவாசக் கோளாறுகளை நீக்கும் ...
துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால் துளசீஸ்வரர் என்று பெயர்.
அருள் புரியும் அம்பாளின் பெயர் ஆனந்தவல்லி.
துளசீஸ்வரரை திங்கட்கிழமைகளில் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால்
சிவனருள் கிட்டும்.
ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்து இருந்தாலும், சந்திர தோஷம் இருந்தாலும் திங்கட் கிழமைகளில் சந்திர ஹோரையில் இந்த ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் எல்லா தோஷங்களும் விலகும்.
பௌர்ணமி அன்று அர்த்த ஜாம வழிபாட்டின்போது
வெள்ளை அரளி மலர்கள் சாத்தி, துளசியால் அர்ச்சனை
செய்து வழிபட்டால், பௌர்ணமி நிலவின் குளுமையை
பக்தர்கள் வாழ்வில் அடைவர் என்பது ஐதீகம்.
Chengalput district,
படங்கள் அனைத்தும் அருமை! துளசீஸ்வரருக்கு என்னுடைய நமஸ்காரம். ஓம் நம சிவாய; சிவயா நம ஓம்.
ReplyDeleteதுளசி ஈஸ்வரர் இது வரை தெரியாது. இந்தக் கதையும் எனக்குப் புதிது.
ReplyDeleteஒம் நமச்சிவாய !ஓம் நமச்சிவாய!
துளசீஸ்வரர் பற்றி இன்றுதான் அறிந்துகொண்டேன். சிறப்பு.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி!
புதிய புதிய தகவல்கள் உங்களால் மட்டுமே பகிர முடியும் நன்றிங்க.
ReplyDelete//அப்போது, "அகத்தியரே, என்னைத் தேடி வேறெங்கும் அலைய வேண்டாம். நான் இங்கே துளசிச் செடிகள் சூழ மறைந்து இருக்கிறேன்" என்று அசரீரி ஒலித்தது. ஒலி வந்த வடதிசையில் சுயம்பு லிங்கம் ஓன்று காணப்பட்டது. //
ReplyDeleteஅசரீரி போல இந்தத்தகவலை இந்தப்பதிவினில் தந்துள்ளீர்கள். மகிழ்ச்சி.
>>>>>>>
//துளசியையே இறைவனுக்கு சூட்டி, துளசி தளத்தாலேயே அர்ச்சனை செய்தார். சிவபெருமான் தலையை சற்று சாய்த்து அவரது பூஜையை ஏற்று, சிவசக்தி வடிவான அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில் அவருக்கு காட்சி தந்தார். //
ReplyDeleteமிகவும் அருமையான நிகழ்ச்சி. சந்தோஷம்.
>>>>>>>
//இன்றும் ஈஸ்வரனை துளசியில் அர்ச்சித்து, துளசியையும் துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக கொடுக்கிறார்கள். இந்தப் பிரசாதம் உடல் நலத்திற்கு சிறந்தது, ஜுரம், இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளை நீக்கும் //
ReplyDeleteசிவன் கோயிலில் துளஸி அர்ச்சனை என்பது கேட்க மிகவும் வியப்பாகவே உள்ளது.
>>>>>>
//துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால் துளசீஸ்வரர் என்று பெயர்.
ReplyDeleteஅருள் புரியும் அம்பாளின் பெயர் ஆனந்தவல்லி. //
அம்பாள் பெயரே ஆனந்தம் தரும் அற்புதத்தகவலாக உள்ளது. ;)
>>>>>
//பௌர்ணமி அன்று அர்த்த ஜாம வழிபாட்டின்போது வெள்ளை அரளி மலர்கள் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால், பௌர்ணமி நிலவின் குளுமையை பக்தர்கள் வாழ்வில் அடைவர் என்பது ஐதீகம்.//
ReplyDeleteமிகவும் குளுமையான தகவலாக உள்ளது. இதைப் படிக்கும் பக்தர்கள் மனதினையும் குளிரச்செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
>>>>>>
இன்றைய பதிவு வழக்கம் போல அழகான படங்களுடன், அற்புதமான தகவல்களுடன், மிகச்சிறப்பாகவே உள்ளது.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
>>>>
நேற்றைய பதிவினில் பூனையிடம் அடிவாங்கிய முயல் குட்டி தப்பித்து விட்டதோ! அல்லது அடிவாங்கியே அது காலியாகி விட்டதோ!!. பூனையும் பிறகு ஓடிவிட்டதோ என்னவோ!!! அவை இர்ண்டையுமே இப்போது காணோம்.
ReplyDeleteநிம்மதியாப்போச்சு. நன்றி.
ooooo
துளசீஸ்வரர் மகிமை போற்றும் பகிர்வு.
ReplyDelete