பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை.
பத்திரப்படுத்தி வைப்பதும் இல்லை'
அவற்றுக்கான உணவு விளைநிலங்களிலேயே
கிடைத்துவிடச்செய்பவன் இறைவன்
பத்திரப்படுத்தி வைப்பதும் இல்லை'
அவற்றுக்கான உணவு விளைநிலங்களிலேயே
கிடைத்துவிடச்செய்பவன் இறைவன்
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிட்டு, பிறகு பொரித்த குஞ்சுகளும் அந்த ஏமாந்த பறவை மூலமாகவே பராமரிக்கப்படும் முறைக்கு
"Brood Parasitism" என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள்.
"Brood Parasitism" என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள்.
இப்படி ஏமாற்றங்களை தவிர்க்க ஆஸ்திரேலியாவில் வசிக்கும்
Fairy-wren என்னும் ஒரு வகை மயில் கழுத்து குருவி - Fairy-wren- தன் குஞ்சுகளுக்கு அவை முட்டையின் உள்ளே இருக்கும் போதே ஒரு பாட்டை சொல்லிக் கொடுத்து விடுகிறது.
எத்தனை சினிமாவில் "குடும்பப் பாட்டை" பாடி க்தாசிரியர் உடன்பிறப்புக்கள் ஒன்றாக சேர்ந்து எங்கவீட்டுப்பிளையாகி நாளை நமதே என்று பாடி வில்லனை விரட்டி அடிப்பதை!
ஒரு வேளை அந்த Fairy-wren குருவிகள் நம்மூர் சினிமாவைப் பார்த்துத்தான் இந்த ஐடியாவை கற்றுக்கொண்டு செயல்படுத்துகிறதோ என்னவோ ..
அவர்களுக்கு என்ன பாஸ்போட்டா , விசாவா , விமானப்பயணமா !!
எங்கெல்லாம் நம்ம திரைப்படங்கள் திரைய்டப்படுகின்றனவோ ,, வீடுகளில் ஹோம் தியேட்டர்களில் ஓடும் படங்களை தங்கள் கூடுகளிலிருந்தே ஹாயாயாகப் பார்த்துப் பாடம் கற்றுக்கொண்டு பாட்டுச்சொல்லிக்கொடுத்து தம் வம்சத்தை கண்டுபிடிக்கும் டெக்னாலஜியை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொண்ட்னவோ என்னவோ ..!
Fairy-wren என்னும் ஒரு வகை மயில் கழுத்து குருவி - Fairy-wren- தன் குஞ்சுகளுக்கு அவை முட்டையின் உள்ளே இருக்கும் போதே ஒரு பாட்டை சொல்லிக் கொடுத்து விடுகிறது.
எத்தனை சினிமாவில் "குடும்பப் பாட்டை" பாடி க்தாசிரியர் உடன்பிறப்புக்கள் ஒன்றாக சேர்ந்து எங்கவீட்டுப்பிளையாகி நாளை நமதே என்று பாடி வில்லனை விரட்டி அடிப்பதை!
ஒரு வேளை அந்த Fairy-wren குருவிகள் நம்மூர் சினிமாவைப் பார்த்துத்தான் இந்த ஐடியாவை கற்றுக்கொண்டு செயல்படுத்துகிறதோ என்னவோ ..
அவர்களுக்கு என்ன பாஸ்போட்டா , விசாவா , விமானப்பயணமா !!
எங்கெல்லாம் நம்ம திரைப்படங்கள் திரைய்டப்படுகின்றனவோ ,, வீடுகளில் ஹோம் தியேட்டர்களில் ஓடும் படங்களை தங்கள் கூடுகளிலிருந்தே ஹாயாயாகப் பார்த்துப் பாடம் கற்றுக்கொண்டு பாட்டுச்சொல்லிக்கொடுத்து தம் வம்சத்தை கண்டுபிடிக்கும் டெக்னாலஜியை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொண்ட்னவோ என்னவோ ..!
முட்டையிட்டதும் ஒரு ராகத்தை பாட ஆரம்பிக்கைன்றன ...
அதே மெட்டை மீண்டும் மீண்டும் கூவி குஞ்சுகளுக்கு
மனப்பாடம் ஆகச் செய்கிறது.
பிறகு தாய்க் குருவி கூட்டை நெருங்கு முன்னரே அதை
கூவிக் கொண்டே இருக்கும்.
கூவிக் கொண்டே இருக்கும்.
குஞ்சுகள் பதிலுக்கு அதே மெட்டை இசைத்தால்தான்
கூட்டுக்குள் வந்து இரை கொடுக்கும்.
கூட்டுக்குள் வந்து இரை கொடுக்கும்.
நாமெல்லாம் பாஸ்வேர்டு கொடுத்து கணிணிக்குள் நுழைந்து பதிவெழுதுவதையும் மோப்பம் பிடித்து பயன்படுத்தும் நுண்ணறிவுகொண்டவையாக பரிணமிப்பது எத்தனை வியப்பு ..!
ஆனால் அந்த பாஸ்வோர்ட் பாடலை குயிலின் குஞ்சும் முட்டையின் உள்ளிருந்து செவி மடுக்குமே?
அங்குதான் இருக்கிறது சிக்கல் (குயில் குஞ்சுக்கு).
குயில் குஞ்சு தன் உடனுறை குருவிக் குஞ்சுகளைவிட சீக்கிரமே முட்டையிலிருந்து பொரித்து வெளி வந்து விடுவதால் அந்த மெட்டை உள்வாங்கி மனப்பாடம் செய்ய அதற்கு நேரம் போதாமல் போய் விடுவதுதான் குயிலின் போதா காலமோ ..!
அந்த சங்கேதக் குறியீட்டு கூவல் தெரியாமல், அது தன் இயல்புப்படி கத்தத் தொடங்குவதால் சுலபமாக அடையாளம் காணப்பட்டு புறக்கணிக்கப்படுகிறது ...
அந்த சங்கேதக் குறியீட்டு கூவல் தெரியாமல், அது தன் இயல்புப்படி கத்தத் தொடங்குவதால் சுலபமாக அடையாளம் காணப்பட்டு புறக்கணிக்கப்படுகிறது ...
தேர்வுக்காலங்களில் யோசித்து பதிலெழுத நேரம் கிடைக்காமல் தேர்ச்சியுறாமல் கலங்கும் மாணவர்கள் போல் சரியாகப் பாட்டு
வராமல் கூட்டைவிட்டு துரத்தியடிக்கப்படுகின்றன ..!
அடுத்தவர் உழைப்ப்பில் எத்தனைநாட்கள்தான் வாழமுடியும்..!
இனி குயில்களும் தாங்களே பொறுப்பாக அடைக்காகுமா...!!!
அருமையான படங்கள்.
ReplyDeleteபாட்டுபாடும் மயில் கழுத்து குருவி மிக அருமை.
ReplyDeleteஇறைவன் தான் ஒவ்வொரு உயிருக்கும் எத்தனை வித்தைகள் கற்றுக் கொடுத்து இருக்கிறார்!
முட்டையாக இருக்கும் போதே குடும்பபாட்டை கற்றுக் கொடுப்பது நல்லது தான், தன் குழந்தைகளை எப்படி கண்டு பிடிப்பது? எல்லாம் ஒரே மாதிரி இல்ல இருக்கும்.
குயிலின் சோம்பேறி தனத்தை அழகாய் சொன்னீர்கள். அடுத்தவர் உழைப்பில் வாழக்கூடாது என்று குயில் மூலம் பாடம் கற்றுக் கொள்ள இறைவன் அதை அப்படி படைத்து இருக்கிறார் போலும்.
குயிலின் படங்களை கவிதை வடிவில் சொல்லியமை நன்று. வாழ்த்துக்கள்
ReplyDelete"பாட்டுப் பாடும் மயில் கழுத்துக்குருவி" என்ற தலைப்பில் எழுதியுள்ள இன்றைய தங்களின் இந்தப்பதிவு பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது. ;)
ReplyDelete>>>>>
//பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை.
ReplyDeleteபத்திரப்படுத்தி வைப்பதும் இல்லை' //
மனிதர்களை விட மகத்தானவை. சுதந்திரமானவை.
//அவற்றுக்கான உணவு விளை நிலங்களிலேயே
கிடைத்துவிடச்செய்பவன் இறைவன்//
கல்லுக்குள் உள்ள தேரைக்கும் அல்லவா உணவை அளிக்கிறான்! ;)
//பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்//
ஆம். அழகான பாடல். அதே அதே !!
>>>>>
/இப்படி ஏமாற்றங்களை தவிர்க்க ஆஸ்திரேலியாவில் வசிக்கும்
ReplyDeleteFairy-wren என்னும் ஒரு வகை மயில் கழுத்து குருவி - Fairy-wren- தன் குஞ்சுகளுக்கு அவை முட்டையின் உள்ளே இருக்கும் போதே ஒரு பாட்டை சொல்லிக் கொடுத்து விடுகிறது. //
எவ்ளோ அறிவு பாருங்கோ! ;))))) கேட்கவே சந்தோஷமாக உள்ளது.
சீமந்தம் என்ற வைபவம் நடக்கும் போது, அந்த கர்பிணிப்பெண்ணின் வயிற்றுக்குள் உள்ள சிசு கேட்க வேண்டும் என்பதற்காக, இன்றும் சில ஆஸ்திகர்கள் வீடுகளில், சாஸ்திர சம்ப்ரதாயப்படி வீணாகானம் இசைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. எனக்கு அந்த ஞாபகம் வருகிறது.
>>>>>
//எத்தனை சினிமாவில் "குடும்பப் பாட்டை" பாடிக் கதாசிரியர் உடன்பிறப்புக்கள் ஒன்றாக சேர்ந்து ’எங்கவீட்டுப்பிள்ளை’யாகி ’நாளை நமதே’ என்று பாடி வில்லனை விரட்டி அடிப்பதை!
ReplyDeleteஒரு வேளை அந்த Fairy-wren குருவிகள் நம்மூர் சினிமாவைப் பார்த்துத்தான் இந்த ஐடியாவை கற்றுக்கொண்டு செயல்படுத்துகிறதோ என்னவோ ..
அவர்களுக்கு என்ன பாஸ்போட்டா , விசாவா , விமானப்பயணமா !!
எங்கெல்லாம் நம்ம திரைப்படங்கள் திரைய்டப்படுகின்றனவோ ,, வீடுகளில் ஹோம் தியேட்டர்களில் ஓடும் படங்களை தங்கள் கூடுகளிலிருந்தே ஹாயாயாகப் பார்த்துப் பாடம் கற்றுக்கொண்டு பாட்டுச்சொல்லிக்கொடுத்து தம் வம்சத்தை கண்டுபிடிக்கும் டெக்னாலஜியை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொண்ட்னவோ என்னவோ ..!//
தங்களின் இந்தக் குறும்புத்தனமான எழுத்துக்கள்தான் தங்களின் மிகச்சிறந்த ப்ளஸ் பாயிண்ட். படித்ததும் சிரித்து மகிழ்ந்தேன். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
>>>>>>
//முட்டையிட்டதும் ஒரு ராகத்தை பாட ஆரம்பிக்கைன்றன ... அதே மெட்டை மீண்டும் மீண்டும் கூவி குஞ்சுகளுக்கு மனப்பாடம் ஆகச் செய்கிறது.//
ReplyDeleteஹைய்யோ ! சூப்பர் !!
//பிறகு தாய்க் குருவி கூட்டை நெருங்கு முன்னரே அதை கூவிக் கொண்டே இருக்கும். குஞ்சுகள் பதிலுக்கு அதே மெட்டை இசைத்தால்தான் கூட்டுக்குள் வந்து இரை கொடுக்கும்.//
இயற்கையின் விந்தையான அதிசயம் தான்.
பசு புதிய கன்று ஒன்றை ஈன்றதும், அந்தப் புது ’கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி’க்கு, பசுவின் மடியின் இருப்பிடத்தை யார் சொன்னார்கள் / அடையாளம் காட்டினார்கள்? என நான் அடிக்கடி எண்ணி வியப்பது உண்டு.
//நாமெல்லாம் பாஸ்வேர்டு கொடுத்து கணிணிக்குள் நுழைந்து பதிவெழுதுவதையும் மோப்பம் பிடித்து பயன்படுத்தும் நுண்ணறிவு கொண்டவையாக பரிணமிப்பது எத்தனை வியப்பு ..! ஆனால் அந்த பாஸ்வோர்ட் பாடலை குயிலின் குஞ்சும் முட்டையின் உள்ளிருந்து செவி மடுக்குமே? //
இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ற, மிகச்சரியான அருமையான உதாரணம் சொல்லி அசத்தியுள்ளீர்கள். ;)))))
[தலை முழுக்க மூளை தான் தங்களுக்கு]
//அங்குதான் இருக்கிறது சிக்கல் (குயில் குஞ்சுக்கு). //
ஆஹா, அட்டா என்ன சிக்கல் அந்தக் குயில் குஞ்சுக்கு ?
//குயில் குஞ்சு தன் உடனுறை குருவிக் குஞ்சுகளைவிட சீக்கிரமே முட்டையிலிருந்து பொரித்து வெளி வந்து விடுவதால் அந்த மெட்டை உள்வாங்கி மனப்பாடம் செய்ய அதற்கு நேரம் போதாமல் போய் விடுவதுதான் குயிலின் போதா காலமோ ..!//
அச்சச்சோ ! அப்படியா சங்கிதி ! ;(
>>>>>>
// அந்த சங்கேதக் குறியீட்டு கூவல் தெரியாமல், அது தன் இயல்புப்படி கத்தத் தொடங்குவதால் சுலபமாக அடையாளம் காணப்பட்டு புறக்கணிக்கப்படுகிறது//.
ReplyDelete//தேர்வுக்காலங்களில் யோசித்து பதிலெழுத நேரம் கிடைக்காமல் தேர்ச்சியுறாமல் கலங்கும் மாணவர்கள் போல் சரியாகப் பாட்டு வராமல் கூட்டைவிட்டு துரத்தியடிக்கப்படுகின்றன ..! //
இந்த உதாரணமும் சூப்பரோ சூப்பர் தான் - மக்கு மாணவனான என்னைப்போல!
//அடுத்தவர் உழைப்பில் எத்தனை நாட்கள்தான் வாழமுடியும்..!//
அதுவும் சரிதான். அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
//இனி குயில்களும் தாங்களே பொறுப்பாக அடைக்காகுமா...!!!//
யாருக்குத்தெரியும்?
அனைத்தும் அறிந்த தாங்களே இதற்கும் பதில் சொல்ல வேண்டுமாக்கும். ஹுக்க்க்கும் ! ;)
>>>>>
படங்கள் எல்லாம் அழகோ அழகு.
ReplyDeleteஅசத்தலான மாறுபட்ட அழகான திவ்யமான பதிவு.
மனம் நிறைந்த பாராட்டுக்க்ள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
ooooo 893 ooooo
வணக்கம்
ReplyDeleteவலையுலக பதிவின் நாயகியே
வாசக உள்ளங்களுக்கு
வானளவு உயர்ந்துபறக்கும்
பறவையினத்தின் வாழ்வை
வியக்கதக்க-வகையில்
எழுதி விருந்தளித்த,உங்களுக்கு
வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எனக்கு மேலிருந்து கீழ் மூன்றாவது வரிசையில் காட்டியுள்ள அனிமேஷன் படம் மிகவும் பிடித்துள்ளது.
ReplyDeleteஒருவர் காஃபியில் சர்க்கரையை போட்டு ஸ்பூனால் கலக்க, அந்தப்பறவை எவ்ளோ வேகமாக அப்பிரதக்ஷணமாக அந்தக் கோப்பையைச் சுற்றிச்சுற்றி வலம் வந்துகொண்டிருக்கிறது.
இதில் எனக்கோர் சொந்த அனுபவம் உண்டு.
அதை விரிவாகச்சொல்ல இன்று எனக்கு நேரம் இல்லை.
எனக்கு டவரா டம்ளரில் நுரை பொங்க சூடாக காஃபி கொண்டு வந்து வைத்ததும், அதில் ஒரு சின்ன ட்ராப் கூட கீழே சிந்தக்கூடாது, சிதறக்கூடாது என்ற எண்ணம் உண்டு.
துளி சிந்தினாலும் துடித்துப்போய்விடும் குணம் உண்டு.
எனக்கு காஃபி கொண்டுவந்து வைத்ததும், என் பேரன் பேத்தியே ஆனாலும் என் அருகில் ஓடி வருவதை நான் விரும்ப மாட்டேன்.
ரூம் கதவை சாத்தி விடுவேன். காஃபியை ஒரு தடவை மட்டும் ஆற்றிவிட்டு, கொஞ்சமாக டம்ளரிலிருந்து டவராவில் ஊற்றி, சொட்டுச்சொட்டாக ரஸித்துக் குடிப்பேன்.
இந்தப்பறவை போலத்தான் என் பேரன் பேத்தியும் என்னைச் சுற்றிச்சுற்றி வருவார்கள். ஏனோ அதெல்லாம் இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது. ;)
வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteஅருமையாக பறவைகளை ரசித்து
அளித்த சிறப்பான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்...!
;))))) நன்றியோ நன்றிகள்.
Delete[8 மாதங்கள் கழித்தாவது, எட்டாத கனியாக, ஓர் கனிவான கனி கிடைத்துள்ளதில், மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.]
பாடி அழைத்தேன் இதோ தேடும் நெஞ்சம்....
ReplyDeleteபாடல்போல பாடி அழைகிறதோ மயில்கழுத்துக் குருவி...:)
அருமை. பார்த்துக்கொண்டே இருக்கத்தோணுகிறது. இறுதியில் பூனைக்குட்டியின் விளையாட்டும் சிரிக்க வைக்கிறது.
என்னுடைய மீராவும் இப்படித்தான்... இத்துனூண்டு இடைவெளியிக்குள் போய் மாட்டி இழுத்தெடுத்த கதையும் எனக்குண்டு.
நல்லபதிவு. றிலாக்ஸ் சண்டேயில் அழகான அமைதியான காட்சிப்பகிர்வு. மிக்க நன்றி சகோதரி...
ReplyDeleteநம்மூரில் இம்மாதிரிக் குருவிகள் என் கண்ணுக்குத் தென்படவில்லை.(ஏதோ எல்லாப் பறவைகளையும் தெரிந்து விட்டாற்போல....)
இந்தப் பறவைகளின் அழகை பார்க்கவும் அவற்றின் சுபாவத்தை கேட்கவும் எவ்வளவு ரம்யமாக இருக்கிறது!
ReplyDeleteநான் அறிந்திராத தகவல் மயில்கழுத்து குருவின் படங்கள் அருமை தகவலகளுக்கு நன்றி அதுவும் சங்கேத மொழியாக ஒரு குடும்ப பாட்டை வைத்திருக்கிறது இது சூப்பர் அதை கற்று கொடுத்தது நாமோ என்ற தகவல் பூனை யின் எந்த ஒரு கிரிப்பும் இல்லாமல் இறங்குவது வியப்பு ஒரு காஃபி கப்பை பறவை சுற்றி வருவது சூப்பர் மொத்தத்தில் இந்த பதிவு வித்யாசமான பதிவு எனக்கு பிடித்தது
ReplyDeleteமிக அழகான படங்கள் பறவைகள் ஆக்கம் போல.
ReplyDeleteமிக்க நன்றி. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
படங்கள் ஆச்சர்யம், எழுத்து ரசிப்பினை...!
ReplyDeleteஇயற்கை தன்னுள் எத்தனை எத்தனை ரகசியங்களைப் பொதிந்து வைத்திருக்கிறது.....
ReplyDeleteநல்ல பகிர்வு.
very interesting.
ReplyDeleteகுடும்பப் பாட்டு - தமிழ் சினிமா இவங்க கிட்டேயிருந்து கத்துட்டிருக்குமோ?
அழகான பகிர்வு. இயற்கையின் அழகே அழகு.
ReplyDeleteபறவைகள் இறைவனின்
ReplyDeleteஅற்புத படைப்புக்களில் ஒன்று.
அவைகளை காண்பதும் அவைகள்
வித விதமாக எழப்பும் ஒலிகளும்,
கவனிப்பவர்களுக்கு பிரமிப்பும்,
மகிழ்ச்சியும் ஊட்டுபவை
ஆனால் இந்த உலகம் அசலை விட்டு
நகல் மீது(அனிமேஷன்)மோகம் கொண்டு
அலையும் நிலை
பரிதாபத்துக்குரியது.
படங்களை உயிரோட்டமாக
வலையில் உலவிடுவது அற்புதம் .
பாராட்டுக்கள்
பறவைகள் இறைவனின்
ReplyDeleteஅற்புத படைப்புக்களில் ஒன்று.
அவைகளை காண்பதும் அவைகள்
வித விதமாக எழப்பும் ஒலிகளும்,
கவனிப்பவர்களுக்கு பிரமிப்பும்,
மகிழ்ச்சியும் ஊட்டுபவை
ஆனால் இந்த உலகம்
அசலை விட்டு விட்டு
நகல் மீது(அனிமேஷன்)
மோகம் கொண்டு
அலையும் நிலை
பரிதாபத்துக்குரியது.
படங்களை உயிரோட்டமாக
வலையில் உலவிடுவது அற்புதம் .
பாராட்டுக்கள்
குயிலுக்கு இனிமையான குரலைக் கொடுத்த இறைவன் அதற்கு தன கூட்டை கட்டிக் கொள்ளும்
ReplyDeleteஅறிவைக் கொடுக்கவில்லை
ஆனால் அந்த குறையை ஈடு செய்யும்
வகையில் அதன் குஞ்சுகளுக்கு அது
தானாக பறந்து செல்லும் வரையில்
குரலைக் கொடுக்க வில்லை
.பறக்கும் முன் அது குயில் போல் கூவினால் காகம் அதை கொன்று விடும் என்று இறைவனுக்கு தெரியும்
ஒரு பெண் தாயாகி என்றோ பிறக்கப்போகும் குழந்தைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே அதன் உணவுக்காக பால் சுரக்கும் தனங்களை இறைவன் படைத்துள்ளான்
ஆனால் மனிதர்கள்சுகமாக வாழ வீடு கட்டிக் கொடுக்கும் கட்டிடத் தொழிலாளார்கள் பரிதாபமாக வீடின்றி நடைபாதைகளில் மழையிலும், குளிரிலும் ,வெய்யிலும் கிடக்கின்றனர். அவர்களுக்கு ஒரு
வாழ்விடம் அளிக்க சுயநலம் பிடித்த மனித சமூகத்தில் ஒருவரும் இல்லை. அதுதான் இறைவனுக்கும், அவன் படைப்புக்களுக்கும் உள்ள பெரும் வேறுபாடு. .
இதுதான் இறைவனின் கருணை.
குயிலுக்கு இனிமையான குரலைக் கொடுத்த இறைவன் அதற்கு தன கூட்டை கட்டிக் கொள்ளும்
ReplyDeleteஅறிவைக் கொடுக்கவில்லை
ஆனால் அந்த குறையை ஈடு செய்யும்
வகையில் அதன் குஞ்சுகளுக்கு அது
தானாக பறந்து செல்லும் வரையில்
குரலைக் கொடுக்க வில்லை
.பறக்கும் முன் அது குயில் போல் கூவினால் காகம் அதை கொன்று விடும் என்று இறைவனுக்கு தெரியும்
ஒரு பெண் தாயாகி என்றோ பிறக்கப்போகும் குழந்தைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே அதன் உணவுக்காக பால் சுரக்கும் தனங்களை இறைவன் படைத்துள்ளான்
ஆனால் மனிதர்கள்சுகமாக வாழ வீடு கட்டிக் கொடுக்கும் கட்டிடத் தொழிலாளார்கள் பரிதாபமாக வீடின்றி நடைபாதைகளில் மழையிலும், குளிரிலும் ,வெய்யிலும் கிடக்கின்றனர். அவர்களுக்கு ஒரு
வாழ்விடம் அளிக்க சுயநலம் பிடித்த மனித சமூகத்தில் ஒருவரும் இல்லை. அதுதான் இறைவனுக்கும், அவன் படைப்புக்களுக்கும் உள்ள பெரும் வேறுபாடு. .
இதுதான் இறைவனின் கருணை.