
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
நம் உள் இறைவன் இருக்கிறான் என்றாலும்
அவனை அவன் துணையின்றி அறிய முடியாது.
சூரியனைச் சூரியனின் ஒளியைக் கொண்டுதான் தெரிந்து
கொள்ள முடியும் அதுபோல் இறைவனையும் அவன்
அருளினால்தான் தெரிந்துக் கொள்ள முடியும்.
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன் தாள் வணங்கி =சிவபுராணம்
இறைவனின் அருளினால் இறைவனைக் காணும் அறிவைப் பெறுவது
சித்து.! இந்த இறை அருளைப் பெற்றவர்கள் சித்தர்கள்.
இந்த உடம்புள்ளே தெய்வ தரிசனம் பெற்று இறை ஆற்றலை இந்த உடம்புனுள்ளே வளர்த்து, உலகிற்குத் தங்கள் யோக சாதனையினால் ஒளியூட்டி சமுதாயத்தைப் பாதுகாப்பதே சித்தர்களின் குறிக்கோள்”
” மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் ” - திருமூலர்
சித்தர்கள் இறவாவரம் பெற்றவர்கள். சித்தர் சுவாசமுறை இறை நிலைக்கு ஒப்பாகும். சித்தர்களின் சமாதிகளுக்கு சென்று அவர்களை வணங்கி ஏராளமான நன்மைகள் பெற்றவர்களும் உண்டு.
18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான
சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஓம் நமசிவய,யநமசிவ, சிவயநம, வயநமசி ,சிவயசிவ ஓம்
good place for meditation.

ரமணரை உலகுக்கு அடையாளம் காட்டி, அவரை ஸ்ரீரமண மகரிஷியாக்கிய பெருமை மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளையே சேரும்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அக்னி லிங்கத்தை அடுத்து ஸ்ரீரமணாச்ரமத்துக்கு முன்னால் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் மகா சமாதி , ஆசிரமம் உள்ளது.
சென்னை, மாடம்பாக்கத்தில் உள்ள 18 சித்தர் சக்திபீட பிருந்தாவனத்தில் மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

மாடம்பாக்கம் சபரிவார ஸ்ரீசக்ர மஹாமேரு 18 சித்தர் சக்திபீட பிருந்தாவனத்தில் நடைபெறும் ஜெயந்தி விழாவில், கணபதி ஹோமம், கோமாதா பூஜை, அகோராஸ்தர ஹோமம் (மரணத்தை ஜெயிக்கக்கூடிய வேத மந்திரத்தால் சிவபெருமானைக் குறித்து செய்யப்படும் புனித வேள்வி), அஷ்ட பைரவர் ஹோமம், சுவாசினி பூஜை, செüபாக்ய லட்சுமி பூஜை ஆகிய பூஜைகள் நடைபெறுகின்றன..

Sri-Agasthiar-Ananthasayanam Sri-Vallabhasiddhar-Madurai Sri-Vallabhasiddhar-Madurai



Sri-Bhogar-Pazhani Sri-Idaikkaadar-Tiruvannamalai Sri-Gorakkar-Tirukkonamalai



Sri-Gnaneswarar-Gujarath Sri-Kaalaangi-Kancheepuram Sri-Kamalamuni-Tiruvaaroor



Sri-Karuvooraar-Karuvoor-Thanjai Sri-Konganar-Thiruppathi Sri-Kuthambhaisiddhar-Mayavaram



Sri-Pulipaani-Pazhani SrPulasthiar-Aavudaiyaar-Koil Sri-PaambaattSiddhar-Tirugnaanam-Dwarakai



Sri-Macchamuni-Tirupparangunram
Sri-Thirumoolar-Tiruvaaduthurai Sri-Tirumazhisai-Sivavakkiyar-Kumbakonam



Sri-Ramadevar-Azhagarmalai Sri-Sirkaazhi-Sattainaathar-Tiruvarangam Sri-Theraiar-Pothigamalai



SRI KAGA BUJANDAR SIDDHAR Sri-Punnaakkeesar-Sangannacherry


ஸ்ரீசக்ர மகாமேரு 18 சித்தர்கள் பிருந்தாவன சக்தி பீடம்
தொடக்கத்தில் சிறிது விட்டு வரும் படம் - கோபுரமும் சில குடில்களும் இருக்கும் படம் - எந்த இடம்?
ReplyDeleteஇத்தனை சித்தர்கள் படம் இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.
சென்னை ..
Deleteசேலையூர் மெயின் ரோடில் இருந்து 4 கிலோமீட்டரில் இருக்கும் மாடம்பாக்கம் ....
சேஷாத்ரி ஸ்வாமிகள் நந்தவனம் மற்றும் பதினெட்டு சித்தர்களுக்கான சக்தி பீட கோவில்கள் அமைதியான இடத்தில் அமைந்துள்ளன
நல்ல படங்கள்....
ReplyDeleteதிருவண்ணாமலையில் எத்தனையோ விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன.....
வழக்கம் போல படமும் பதிவும் அருமை! நலமா! சகோதரி!
ReplyDelete
ReplyDeleteஸ்ரீ ரமணரை உலகுக்கு அடையாளம் காட்டி, அவர்களை ஸ்ரீ ரமண மஹரிஷியாக்கிய பெருமைக்குக் காரணமான, மஹான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் அவர்களுக்கு என் அனந்தகோடி நமஸ்காரங்கள்.
சித்தர்கள் பற்றி அறியத்தந்து சித்தம் குளிரவைத்த அற்புதமான பதிவு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ooooo 894 ooooo
அழகிய படங்களுடன் அருமையான பதிவு.
ReplyDeleteஉங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!
நல்லதொரு தொகுப்பு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteinformative post
ReplyDeleteவெகு நாட்கள் கழித்து வருகிறேன். அருள் மணம் மாறாமல் இருக்கிறது பதிவு
ReplyDeleteஅருமையான படங்களுடன் அற்புதமான பதிவு மிக்க நன்றி அம்மா...
ReplyDeleteஅருமையான படங்களும் விளக்கங்களும் நன்றிங்க.
ReplyDeleteஜெயா தொலைகாட்சியில் பிரந்தவனத்தை அடிக்கடி காட்டுவார்கள் பார்த்து இருக்கிறேன்.
ReplyDeleteசிறு வயதில் கோவையில் காந்திபுரத்தில் இருக்கும் போது டாடாபேட் சேஷாத்திரி சுவாமிகள் பஜனை மடத்திற்கு அடிக்கடி போவேன்.
திருவண்ணமலை சேஷாத்திரி ஆசிரமத்திற்கு போய் இருக்கிறேன்.
சமாதி அமைதி தவழும் இடம்.
சித்தர்கள் படம் அருமை. பழனியில் நடுவில் முருகனும் சுற்றி சித்தர்கள் உள்ள படம் வாங்கி வாந்தேன்.
சிவ சிவ என்றிடச் சிவகதிதானே.. கரீட்டு..
ReplyDeleteசித்தர்களுக்கான குட்டிக் குட்டி அறைகள் சூப்பர்.
அழகிய படங்கள்.. நல்ல பகிர்வு.
அரிய தொகுப்பு
ReplyDeleteரங்கோலி கோலம் அருமை.
ReplyDeleteசித்தர்கள் பற்றிய தகவல்கள், கோலம், படங்கள் என எல்லாமே அருமை.
ReplyDeleteசித்தர்களைப் பற்றிய படங்களும், கோவில் தகவல்கள் என்று நிறைய தெரிந்து கொண்டும் இந்த பதிவின் மூலம். அருமை.
ReplyDelete