Sunday, April 7, 2013

பரவசம் தரும் பச்சைக்கிளிகள்..







படிமம்:Alexandrine Parakeet (Psittacula eupatria) pair -2pc.jpg
எதையும் கொடுக்க வேண்டியதில்லை. 
எதையும் பெறத்தேவையில்லை. 
வேறு ஏதும் செய்யத் தேவையில்லை. 
அன்பான சொற்களே அனைவரையும் 
இந்த ஜகத்தையே - நம் வசப்படுத்தும்.
பெரிய பச்சைக்கிளி (Alexandrine Parakeet, Psittacula eupatria) என்பது கிளி இன வகைளில் ஒன்று ஆகும். 

மாவீரன் அலெக்சாந்தர் பஞ்சாப் பகுதி முதல் ஜரோப்பா மற்றும் மத்தியதரைக்கடல் பிரதேசங்களிலிருந்து சில இனப் பறவைகளை ஏற்றுமதி செய்தததால்  கிளிகள் பேரரசன் அலெக்சாந்தரின் பெயரைக் கொண்டு ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டன. 

‘அலெக்சாண்ட்ரினா இனக் கிளிகள் உயர்தரம் மற்றும் அரச முக்கியத்துவம் என்பவற்றுக்கான விலை மதிப்பானவையாகக் கருதப்பட்டனவாம் ...
Posted Image
கோவை வஉசி உயிரியல் பூங்காவில் ‘அலெக்சாண்ட்ரினா’ 
என்ற அபூர்வ வகை பச்சைக்கிளிகள் உள்ளன. 

சாதாரண கிளியைவிட நீளமாக இருக்கும். 
அடர்ந்த காடுகளில் மட்டுமே வசிக்கும். 
அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் உள்ள அலெக்சாண்ட்ரினா 
வகை கிளிகள் குஞ்சு பொரிப்பது அபூர்வம்.  

வடமாநிலங்களில் இருந்து இவற்றை பிடித்துவந்து கோவையில் 
ஒரு கிளி ரூ.2 ஆயிரம் வரை விற்கிறார்கள். 
அரசின் அனுமதி பெற்றுதான் இவற்றை வீடுகளில் வளர்க்க வேண்டும்’ ..




Crazy Parrot.

24 comments:

  1. ரசித்தேன், பரவசமடைந்தேன்.

    ReplyDelete
  2. ‘கிளி கொஞ்சும்’ கட்டுரை, போங்கள்!

    ReplyDelete
  3. Aha......................
    I love birds......
    The green parrot.......
    It is reading....
    It is operating computer.....
    Why one parrot on that pair turned her head away?
    OOOdal??????
    Fine post dear. You made my day happy by showing the pretty birds.Thanks.
    viji

    ReplyDelete
  4. பச்சை நிறமே பரவசம் தருதே.அருமையான கிளிகள்

    ReplyDelete

  5. பதிவு கிளி கொஞ்சுகிறது. ! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஓ... அழகான கிளிகள்!
    பார்க்கவே பரவசம் பற்றிக்கொள்கிறதே!அருமை!

    நாம் வாழும் ஜேர்மனி நாட்டு அதிபரையும் கிளியோடு கொத்திக்கொண்டுவந்து காட்டிவிட்டீர்கள்...:)

    அனைத்துப் படங்களும் அழகோஅழகுதான்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  7. பரவசம் தரும் பச்சைக்கிளிகள்..

    மிகவும் அழகான கிளிகொஞ்சும் பதிவாக உள்ளதே!

    இந்தக்கிளிகளைப்பார்த்து எவ்ளோ நாளாச்சு!!

    மீண்டும் இன்று பார்த்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    நீண்ட நேரம் பார்த்துப்பார்த்து, பரவஸமாகிப்போய், பிரமித்துப்போய், மயங்கிப்போய் இருந்ததில் பின்னூட்டமிட நேரமாகிப்போய்விட்டது. .

    பைங்கிளி என்னைக் கோபித்துக்கொள்ளக்கூடாது.

    >>>>>

    ReplyDelete
  8. முதல் படத்தில் உள்ள அழுத்தமான, அழகான, அற்புதமான, அசத்தலான தொந்திப்பிள்ளையாருக்கு முதலில் என் வந்தனங்கள்.

    பிள்ளையாரப்பா நேற்று நீ என் கனவில் வந்தாய். மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் எதுவும் வாய்திறந்து சொல்லாமலேயே போய் விட்டாயே என வருத்தமாகவும் இருந்தது.

    ஏதோ தரிஸனம் தந்தாயே, அதுவே எனக்கும் போதும். பெரும் பாக்யமாக எண்ணி மகிழ்ந்தேனாக்கும் ..... ஹுக்க்க்க்க்க்கும் !.

    >>>>>

    ReplyDelete
  9. //எதையும் கொடுக்க வேண்டியதில்லை.
    எதையும் பெறத்தேவையில்லை.
    வேறு ஏதும் செய்யத் தேவையில்லை.
    அன்பான சொற்களே அனைவரையும்
    இந்த ஜகத்தையே - நம் வசப்படுத்தும்.//

    ஆம் பிள்ளையாரப்பா, அன்பான சொற்களையே அடியேனும் கேட்கிறேன். ஏன் எதுவும் சொல்லமாட்டேன் என்கிறாய்?

    உன் வாயில் என்ன கொழுக்கட்டையா?

    முதலில் வாய் திறந்து, உன் மீது தீவிர பக்தி கொண்டுள்ள என்னை வசப்படுத்தப்பார்.

    அதன் பிறகு ஜகத்தையே வசப்படுத்துவதைப்பற்றி யோசிக்கலாம்.

    >>>>>

    ReplyDelete
  10. //‘அலெக்சாண்ட்ரினா இனக் கிளிகள் உயர்தரம் மற்றும் அரச முக்கியத்துவம் என்பவற்றுக்கான விலை மதிப்பானவையாகக் கருதப்பட்டனவாம் ...//

    நல்ல தகவல். உயர்ந்த தரம் வாய்ந்த கிளியே தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    மயங்கச்செய்யும் அழகோ அழகு.

    அதைவிட இது மிகவும் புத்திசாலிக்கிளி வேறு. ! ;)))))

    >>>>>>

    ReplyDelete
  11. //கோவை வஉசி உயிரியல் பூங்காவில் ‘அலெக்சாண்ட்ரினா’
    என்ற அபூர்வ வகை பச்சைக்கிளிகள் உள்ளன.//

    கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா பற்றி அழகான படங்களுடன் இன்றைய திருச்சி தினமலர் பத்திரிகையில் 10ம் பக்கத்தில் செய்திகள் வந்துள்ளன.

    குரங்குக்குட்டி ஒன்றுக்கு ஒருவர் குச்சி ஐஸ் ஃப்ரூட் தருகிறார்.

    ஒட்டகத்துக்கு தர்பூசணிப்பழத்துண்டுகளை மற்றொருவர் தருகிறார்..

    கோவைக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளே. .

    நினைத்தால் தினமுமே பைங்கிளி போல பறந்து சென்று போய் பார்க்க முடியும் தானே. ;)

    எங்களைப்போலவா? ;(

    >>>>>

    ReplyDelete
  12. //அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் உள்ள அலெக்சாண்ட்ரினா வகை கிளிகள் குஞ்சு பொரிப்பது அபூர்வம். //

    அச்சச்சோ! ஏன் ஏன் ஏன் ஏன் ??????? ஓஹோ! அப்படியாகத்தான் இருக்கும்.

    //வடமாநிலங்களில் இருந்து இவற்றை பிடித்துவந்து கோவையில் ஒரு கிளி ரூ.2 ஆயிரம் வரை விற்கிறார்கள்.//

    எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் இந்தக்கிளிக்குத் தரலாம் தான்.

    //அரசின் அனுமதி பெற்றுதான் இவற்றை வீடுகளில் வளர்க்க வேண்டும்//

    அம்மாடியோ! இது வேறு புதிய தகவல், தகவல் களஞ்சியத்திடமிருந்து. ;))))))

    எதையாவது அள்ளித்தெளித்து அசத்தி வருகிறீர்களே! எப்பூடி எப்பூடி எப்பூடி ?

    >>>>>

    ReplyDelete
  13. அத்தனைக்கிளிகளையும் அழகழகாகக் காட்டி அசத்தோ அசத்தென அசத்தியுள்ள தாங்கள் சமத்தோ சமத்து தான்.

    அந்த பச்சை சட்டைக்காரரின் தலையில் அத்தனைக்கிளிகளும் கூடு கட்டியுள்ளனவா? குஞ்சு பொரித்துள்ளனவா? அல்லது அவர் தலையில் பேன் பார்க்கின்றனவா? ;))))))

    அவர் கையில் உள்ள குட்டியூண்டு கப்பில் என்ன இருக்கிறதோ? எல்லாக்கிளிகளும் மொய்க்கின்றனவே! ஜோர் ஜோர் !!

    >>>>>>>

    ReplyDelete
  14. கிளி போன்ற அழகான பதிவு.Alexandrina வகை கிளிகள் பற்றிய விஷயங்கள் தெரியாத தகவல்.அறிந்து கொண்டேன்.
    கொஞ்சும் கிளிகள் படங்களுடன் தகவல்களும் புதுமை, அழகும் கூட.

    ReplyDelete
  15. ரொம்ப ரொம்ப ஜோரான பதிவுங்கோ இன்று நீங்கள் கொடுத்துள்ளது.

    அந்த நாலாவது படத்தில் உள்ள நான்கு கிளிகளையும் பார்த்தால், பச்சைப்பாகற்காய்கள் நினைவு வருகின்றது எனக்கு..

    [மிது பாகற்காய் அல்ல; முதலைப்பாகற்காய்கள்]

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    பதிவை விட்டுக் கிளியை விட்டுச் செல்லவே என் மனம் மறுக்கிறதே!
    என் செய்வேன் .... பிள்ளையாரப்பா .... ஏன் இந்த சோதனை ?

    ooooo 872 ooooo ..

    ReplyDelete
  16. ??????????

    என்ன ஆச்சு???????

    மொத்தம் 8 அல்லது 9 கமெண்ட்ஸ் கொடுத்தேனே !

    மீதியெல்லாம் எங்கே எங்கே எங்கே ?????????????

    ;((((((

    ReplyDelete
  17. வெவ்வேறு வண்ணங்களில் கிளிகள் அழகோ அழகு!
    கம்ப்யூட்டர் பார்க்கும் கிளியும் (அதுவும் பதிவரோ?) புத்தகம் படிக்கும் கிளியும் டாப்!

    ReplyDelete
  18. கிளிகள் எல்லாம் அழகு.
    தண்ணீர் குடிக்கும் கிளிகள் அழகு.

    கோவை வ.உ.சி பூங்கா போய் இரண்டு மூன்று வருடங்கள் ஆகி விட்டது அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  19. லாப்டாப்பை உப‌யோக்கிக்கும் கிளி மிகுந்த ஆச்சரியம்! கிளிகளைத் தடவிக்கொடுக்கும் கைகளிலேயே எத்தனை அன்பும் அக்கறையும் தெரிகிறது!

    அழ‌கிய‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்!!

    ReplyDelete
  20. வாவ்! பச்சை கிளிகளைப் பார்த்து மனசே பரவசமாச்சு. அந்தத் தடவலை எவ்வளவு வாகாகத் தலைகுனிந்து அனுபவிக்கின்றன! 'பச்சைக்கிளி..
    முத்துச்சரம்...'

    ReplyDelete
  21. கிக்கி...கிக்கி.. வண்ணக்கிளிகள் மனத்தை அள்ளிச்செல்கின்றன.

    ReplyDelete