








விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளைக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான் கழல் மேவலுமாமே”



அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்துகொள்ளுங்கள். இறையருளால் உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
மெய்ப்பொருள் தத்துவத்தை, தகுந்த குருநாதர் விளக்கிச் சொன்னால்,
அது தெளிவாக விளங்கும்’ என்கிறார் திருமூலர்.

நம் அகத்தையும் புறத்தையும் நன்கு புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப் பட்டவையே, பண்டிகைகள்!
தீபாவளி என்றால், தீபங்களின் வரிசை!
தீபாவளியன்று கார்த்திகை மாதத்தைப் போல, வரிசையாக விளக்கேற்றி வழிபடும் வழக்கம் காலப்போக்கில் மாறிவிட்டது.
தீபாவளி அன்று, வரிசையாக தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவதே உத்தமம்! '



'தனக்குப் பாழ்அற்றறிவு இல்லாத உடம்பு’ என்கிறது நான்மணிக் கடிகை. மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம்
கண்ணன் நரகாசுரனை வதம் செய்தார். 'என்னுடைய இறந்த நாளை அனைவரும் கொண்டாட வேண்டும்’ என நரகாசுரன், ஸ்ரீகிருஷ்ணரிடம் வேண்டினான் ...
அதனால்தான் பட்டாசு வெடித்து, தீபாவளி கொண்டாடுகிறோம்.
பேராசை, பெருங்கோபம், பொருட்பற்று, பகுத்தறிவின்மை, கர்வம், பொறாமை ஆகிய தீய குணங்கள், அரக்கர்களுக்கு இணையானவை. பட்டாசைப்போல் இவை பொசுங்கி, நாம் நற்குணங்களுடன் திகழவேண்டும் என்கிற தத்துவமும் இதில் அடங்கியிருக்கிறது.

நல்லெண்ணெய்யில், ஸ்ரீமகாலட்சுமி சிறந்து திகழ்கிறாள்;
நீராம்டப் பயன்படுத்தும் வெந்நீரில், கங்காதேவி வாசம் செய்கிறாள் .
'ஜலே கங்கா, தைலே லக்ஷ்மீ’ என்பார்கள்.
அதனால்தான், தீபாவளி நாளில், ''கங்கா ஸ்நானம் ஆச்சா?'' என்று விசாரித்துக் கொள்கிறோம்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், உடலில் இருக்கிற மாசு களைகிறது. உள்ளத்து மாசுகளையும் களைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இதனை சம்ஸ்கிருதத்தில் 'தோஷ அபநயநம்’ என்பார்கள். அதாவது, குறைகளை நீக்குவது என்று அர்த்தம்.
தீய குணங்களைத் தள்ளி நற்குணங்களைக் கொள்வதை மனதில் கொண்டு புத்தாடை உடுத்தி, அவரவர் களுக்குரிய சமயச் சின்னங்களை அணிந்து நற்குணங்களை வளர்க்க, சங்கல்பம் செய்கிறோம்.
.எல்லோரும் இன்புற்று வாழ் வதற்கே பிறந்திருக்கிறோம். இன்பத்தை நாம் உணர்ந்து, பிறருக்கும் அந்த இன்பத்தை வழங்க வேண்டும். அதனை வலியுறுத்தவே, இனிப்பு வழங்குகிறோம். இந்தச் செயலால், அன்பு நிறைந்ததாக மாறிவிடும் இந்த உலகம்!




ஸ்ரீமகாலட்சுமி , ஸ்ரீகுபேர பூஜைகளைச் செய்து வழிபடுகிறோம்..!
எதைச் செய்தாலும், அதன் தத்துவத்தை அறிந்து, உணர்ந்து செய்யுங்கள். இல்லையெனில், வருங்காலத் தலைமுறையினர் இதனை அர்த்தமற்றது என்று ஒதுக்கிவிடுவர்.
குழந்தைகளுக்கு இவற்றை எடுத்துச் சொல்லி, தீபாவளித் திருநாளை, மனம் தித்திக்கக் கொண்டாடுங்கள்
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்..
அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாள் என்றும்,


திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலியை வதம் செய்த நாள் என்றும், தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

குஜராத்தில் இது புது வருடமாகக் கொண்டாடப்படுகிறது.
தீபாவளியின் போது பசுவும் கன்றும் சேர்ந்து பூஜிக்கின்றனர்,

இவர்களது தீபாவளி ஸ்பெஷல் கராஞ்சி லாடு, சங்கர்பாலே, சேவ் சிவ்டா,


![[Chakli+-+Diwali+Sweets+2.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcZs0ANzf1xLwOBGhDVvre93D96Bdq3tEv5qBFyqa_EyhyphenhyphenCOW6XXg7zEwrQQ4jQmcKL1VFhtQaxZAyStI72Q4XnXh1iWsDmg3jTx1R0J0W2IApcEokjNcIAHKIAvhj0nr9wnJF2sj47CE/s200/Chakli+-+Diwali+Sweets+2.jpg)
அமாவாசையன்று லட்சுமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது.

இவர்களும் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்ற்னர்.
பின் "பாவுபீஜ்" என்று சகோதர நலத்திற்காகப் பிரார்த்தனை செய்கின்ற்னர்,
சகோதரர்களும் சகோதரிகளுக்குப் பரிசுகள் வழங்குகின்றனர்.
ராஜஸ்தானிலும் உத்தர்பிரதேசத்திலும் கோவர்தன பூஜையும் நடக்கிறது.

கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்ததைக் குறித்து "அன்னகுட்" என்று சாதம் வடித்து அதை ஒரு பெரிய மலை போல் பிடித்து கிருஷ்ணர் தூக்குவதைப் போல் செய்கிறார்கள்.


கிருஷ்ணர் இந்திரனை ஜெயித்ததையும் கொண்டாடுகிறார்கள்

பெங்காலிகள் காளி பூஜை செய்கிறார்கள்.

சகோதர சகோதரிகளின் நலனுக்குப் பிரார்த்தனையும் "பாய் போலே" என்ற பெயரில் நடக்கிறது. ( நம் தமிழ் நாட்டில் பொங்கலுக்கு அடுத்த நாள் 'கனு' அன்று கூடப்பிறந்த சகோதரர்களுக்காக 'கன்னுப்பிடி' வைப்போமே அது போல அவர்கள் இப்ப கொண்டாடுகிறார்கள் )

ஜைனமத ஸ்தாபகர் குரு மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். தீபங்கள் ஏற்றி மகாவீரரின் ஐந்துபிரவசனங்கள் படிக்கின்றனர்.
மொத்தத்தில் தீபாவளி என்பது நமக்குள் இருக்கும்
அக்ஞான இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும்.
சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசிங் மிகப் புகழ் அடைந்து வரும் போது முகல் அர்சர் ஜஹாங்கீருக்கு இது பிடிக்காமல் அவரைக் கைது செய்து குவாலியர் கோட்டையில் அடைத்தார். அவருடன் அவரைச் சார்ந்த 21 சீக்கியர்களும் உள்ளே அடைக்கப்பட்டனர். பின் ஜஹாங்கீரே அவர்களைத் தீபாவளியன்று சிறையிலிருந்து விடுவித்தார், ஆகையால் இந்நாளை "பந்தி சோர்ரா" என்று கொண்டாடுகின்றனர்.

சந்திர தரிசனம்’ என்பது ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லிய தொரு கீற்றாக கிழக்கில் அடிவானத்தில் தெரியும்.
சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்படாது.
ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்க வேண்டும். சந்திரனைக் காண முடியும்.
தீபாவளியன்று காலையில் ‘சந்திர தரிசனம்’ காணவும் , சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் ..
நலன்கள் நல்கும் அருமையான சந்திர தரிசனம் ...







சிறப்பான தகவல்கள்....
ReplyDeleteவடக்கில் கூட பாய் தூஜ் எனக் கொண்டாடுவார்கள்....
வணக்கம் .. கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Deleteதங்களுக்கும் இனிய குடும்பத்தாருக்கும்
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!
மனத்தைக் கொள்ளை கொள்ளும் படங்கள்... இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் .. கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Deleteதங்களுக்கும் இனிய குடும்பத்தாருக்கும்
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!
விரிவான தகவல்களுடன் அழகான பதிவு. நாம் கொண்டாடும் பண்டிகைகளில் பொருளினை உணரவேண்டியது அவசியம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteவிரிவான தகவல்களுடன் அழகான பதிவு. நாம் கொண்டாடும் பண்டிகைகளில் பொருளினை உணரவேண்டியது அவசியம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteவணக்கம் ..
Deleteஅழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
தங்களுக்கும் இனிய குடும்பத்தாருக்கும்
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!
விதவிதமான படங்களுடன் விளக்கமும் தந்து தீபாவளியைத் தொடங்கி வைத்து விட்டீர்கள்.நன்றி
ReplyDeleteவணக்கம் ..
Deleteகருத்துரைக்கு இனிய நன்றிகள்..
தங்களுக்கும் இனிய குடும்பத்தாருக்கும்
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!
தீபாவளி அன்று, வரிசையாக தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவதே உத்தமம்!//
ReplyDeleteபார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.
அனைத்து தகவல்களும் அருமை. படங்கள் மினுமினுகின்றன. இனிய நல்வாழ்த்துகள்.
வணக்கம் ..
Deleteமகிழ்ச்சியான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
தங்களுக்கும் இனிய குடும்பத்தாருக்கும்
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!
அன்புள்ள இராஜேஸ்வரி,
ReplyDeleteமிகமிக அருமையான பதிவு
தற்காலத்து இளைய சந்ததிகள் கேட்க்கும் கேள்விகளுக்கு விடை சொல்ல முதலில் நமக்கு விடை தெரிய வேண்டும்.
அப்படிப்பட்ட நிறைய விளக்கங்கள் உங்கள் பதிவில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது
இங்கே இந்த பதிவிலேயே நான் நிறைய தெரிந்து கொண்டேன்
எப்போதும் போல படங்கள் மிக மிக அருமை நண்பியே
படங்கள் பேசுகின்றன.
படங்கள் பார்த்த உற்சாகத்தில் இதோ நானும் கிளம்பிவிட்டேன்.
அழகு அகல்களுக்கு வர்ணம் தீட்ட
என் வீட்டிலும் தீபாவளி தீபங்களின் வரிசை வரட்டும்.
ஒளிவெள்ளத்தில் மன இருள் அகன்று வெளிச்சம் பரவட்டும்.
எங்கும் தீமை என்ற இருள் நீங்கி நன்மை என்ற வெளிச்சம் படரட்டும்.உலகமெல்லாம் ஒளிவெள்ளம் பரவட்டும்.
நன்றி நண்பியே
விஜி
ஆஹா ..வாங்க விஜி ..வாங்க..
Deleteசில பதிவுகளாக தங்கள் தமிழ் கருத்துரைகள்
கண்டு சந்தோஷம் பொங்குகிறது
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Deleteதங்களுக்கும் இனிய குடும்பத்தாருக்கும்
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!
சிறப்பான தகவல்கள்.இப்போதே தீபாவளி வந்துவிட்டது போல் இருக்கிறது!
ReplyDeleteவணக்கம் ..
Deleteசிறப்பான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
தங்களுக்கும் இனிய குடும்பத்தாருக்கும்
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!
இன்பம் பொங்க இனிதே வாழ்வமைய
ReplyDeleteதுன்பம் தொலைந்தே ஓடட்டுமென
பொங்கிவரும் பேரழகுக் காட்சியுடன்
புரியவைத்த பதிவுகண்டு கண்கள்
சொரிய கரங்குவித்தேன் நன்றியென்றே!
அத்தனையும் அருமை! விளக்கம் அற்புதம்!
மிக்க நன்றி!
அனைவருக்கும் துயர் நீங்கி இன்பம் பெருகிட
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!
வணக்கம் ..
Deleteஇளைய நிலவாய் இனிமை பொழிந்த
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
தங்களுக்கும் இனிய குடும்பத்தாருக்கும்
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!
தீபக்கோலங்கள் எல்லாமே அழகோ அழகாக கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக உள்ளன.
ReplyDelete1] சம்ஸ்கிருத மொழியில் ஓம் - ஓங்காரமாய் ! ;)
2] Happy Deepavali என்று சொல்லும் நம் தொந்திப்பிள்ளையாருக்கு முன் துடிக்கும் ஐந்து தீபச் சுடர்கள். அதையே கீழிருந்து ஐந்தாவது படத்தில் குட்டியூண்டாக ’தீபாவளி கீ சுபகாமநாயேம் ! என ஹிந்தியில் பிள்ளையார் சொல்வது ! ;)
3] தீப ஒளியாய்க் காட்டப்பட்டுள்ள கடைசி நான்கு படங்களில் மூன்று கோலங்களும் அழகோ அழகாக.
அதுவும் கடைசி படம் மனதைக் கொள்ளை கொள்வதாக ;)
>>>>>
வணக்கம் ..சிரத்தையான ,சிறப்பான கருத்துரைகள் அனைத்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!
Deleteதங்களுக்கும் இனிய குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..!
தீபக்கோலங்கள் எல்லாமே அழகோ அழகாக கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக உள்ளன.
ReplyDelete1] சம்ஸ்கிருத மொழியில் ஓம் - ஓங்காரமாய் ! ;)
2] Happy Deepavali என்று சொல்லும் நம் தொந்திப்பிள்ளையாருக்கு முன் துடிக்கும் ஐந்து தீபச் சுடர்கள். அதையே கீழிருந்து ஐந்தாவது படத்தில் குட்டியூண்டாக ’தீபாவளி கீ சுபகாமநாயேம் ! என ஹிந்தியில் பிள்ளையார் சொல்வது ! ;)
3] தீப ஒளியாய்க் காட்டப்பட்டுள்ள கடைசி நான்கு - ஐந்து படங்களில் மூன்று கோலங்களும் அழகோ அழகாக.
அதுவும் கடைசி படமும், இப்போது புதிதாகச் சேர்த்துள்ள ஒளிரும் இந்தியாவும் மனதைக் கொள்ளை கொள்வதாக ;)
>>>>>தீபக்கோலங்கள் எல்லாமே அழகோ அழகாக கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக உள்ளன.
1] சம்ஸ்கிருத மொழியில் ஓம் - ஓங்காரமாய் ! ;)
2] Happy Deepavali என்று சொல்லும் நம் தொந்திப்பிள்ளையாருக்கு முன் துடிக்கும் ஐந்து தீபச் சுடர்கள். அதையே கீழிருந்து ஐந்தாவது படத்தில் குட்டியூண்டாக ’தீபாவளி கீ சுபகாமநாயேம் ! என ஹிந்தியில் பிள்ளையார் சொல்வது ! ;)
3] தீப ஒளியாய்க் காட்டப்பட்டுள்ள கடைசி நான்கு - ஐந்து படங்களில் மூன்று கோலங்களும் அழகோ அழகாக.
அதுவும் கடைசி படமும், இப்போது புதிதாகச் சேர்த்துள்ள ஒளிரும் இந்தியாவும் மனதைக் கொள்ளை கொள்வதாக ;)
>>>>>
மேற்படி கமெண்ட்ஸ்களை அனுப்புவதற்குள் நெட்டில் ஏற்பட்ட பல்வேறு கோளாறுகளால் பொறுமை இழந்து வெறுத்துப் போனேன்.
Deleteஅதனால் போச்சா போகவில்லையா என்றே தெரியாமல் இருந்தது.
இரண்டு மூன்று முறை Repeat ஆகிப் போய் உள்ளது. ;(
தாங்கள் காட்டியுள்ள, தங்கள் பக்ஷணங்கள் ருசியோ ருசியாக இருந்தன.
ReplyDeleteமுள்ளு முருக்குகளை நிறைய எடுத்துக்கொண்டேன்.
>>>>>
முருக்கை முறுக்காக்கிப் படித்துக் கொள்ளவும்.
Delete’முருக்கோ’ அல்லது ‘முறுக்கோ’ எதுவாகவே இருப்பினும் தாங்கள் கைப்படத் தந்ததால் முறுக்கிக் கொள்ளாமல் முழுவதுமாகச் சாப்பிட்டு முடித்து விட்டேன்.
விளக்கைப் பிளந்து .......
ReplyDeleteவி யில் ஆரம்பித்து வி யிலேயே தொடர்ந்து வி யிலேயே முடித்த பாடலும் விளக்கங்களும் வீ...........ஜீ க்கு வியப்பளித்தன.
>>>>>
.. வியப்பளித்த கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Deleteதீபாவளி பற்றிய விளக்கங்கள் யாவும் அழகோ அழகு.
ReplyDeleteஇது நமக்கு [நம் நட்புக்கு] மூன்றாம் தீபாவளியே ஆயினும், தலை தீபாவளி போன்றே திகட்டாமல் இனிமையாவும் குதூகலமாகவும் உணரப்படுகிறது. ;)
>>>>>
ஸ்ரீராம பட்டாபிஷேகப்படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
ReplyDelete>>>>>
நேற்று நள்ளிரவே எனக்கு ஞான தீபம் ஒளியாக ஏற்றப்பட்டு விட்டதால், இன்று என் மனதுக்கு எதிலும் நாட்டமில்லாமல் போய் விட்டது. ;(
ReplyDeleteஉலக யதார்த்தங்களையும், மனித இயல்புகளையும் நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது.
>>>>>
’தத்துவத் தீபாவளி’ என்ற தலைப்பில்,
ReplyDeleteஇன்றைய எங்களின் ஆன்மிக தத்துவப் பேராசியையான தங்கமான தங்களால் வரையப்பட்டுள்ள இந்தக் கட்டுரை,
தீபமாகப் பிரகாஸித்து, அக்ஞானம் என்ற இருளையும் அகற்றி, ஞானத்தை தந்து, உதவியுள்ளது.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
-oOo-
’பேராசிரியையான’ என மாற்றிப்படிக்கவும்.
Delete[எழுத்துப்பிழையாகி விட்டது]
வணக்கம் ....
Deleteசிறப்பான கருத்துரைகளால் பதிவுக்கு விளக்கம்
அளித்து நிறைவாக்கியமைக்கு இனிய நன்றிகள்..
தீபத்திருநாளான தீபாவளி தகவல்கள் அழகழகான படங்களுடன் அருமை.
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வாங்க ..வணக்கம் ..
Deleteகருத்துரைக்கு இனிய நன்றிகள்..
இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..!
தீபாவளிப் பற்றி அனேக தகவல்கள் அறிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம் ..
Deleteகருத்துரைக்கு இனிய நன்றிகள்..
தங்களுக்கும் இனிய குடும்பத்தாருக்கும்
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!
இப்பொழுதுதான் உங்களது இந்த பதிவை பொறுமையாகப் படித்தேன். நரகாசுரன் வதம் நடந்த நாள் தீபாவளி. அது மட்டுமல்லாது மற்றைய காரணங்களையும் தொகுத்து தந்தமைக்கு நன்றி! வீட்டிற்கு வெளியே இப்போதே பிள்ளைகள் வெடி வெடித்து தீபாவளியை வரவேற்கத் தொடங்கி விட்டார்கள். எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் ...
Deleteதீபாவளியை வரவேற்று
கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு இனிய நன்றிகள்..!
தங்களுக்கும் இனிய குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..!
Deleteதீபாவளியன்று சந்திர தரிசனம்! அறியாத தகவல்! படங்களும் பகிர்வும் வெகு சிறப்பு! நன்றி!
ReplyDeleteதீபாவளி பல விளக்கங்கள்.
ReplyDelete2ம் திகதி தீபாவளி.
இதற்கு வாழ்த்துக் கூற இன்னும் நாட்கள் உண்டன்றோ!
மீண்டும் சந்திப்:போம்.
வேதா. இலங்காதிலகம்.
தீபாவளி விளக்கங்களுடன் அருமையான அழகான படங்கள்... அருமை அம்மா.
ReplyDeleteஇந்த 2013ம் ஆண்டின் வெற்றிகரமான 300வது பதிவுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteதீபாவளி அன்று சந்திர தரிசனம் ! மிக அருமை.
ReplyDeleteபதிவு மிக அழகாய் ஒளிர்கிறது.
படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.
வாழ்த்துக்கள்.