Monday, October 14, 2013

ஜயம் தரும் விஜயதசமி





வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம்/
வ்ருஷாரூடாம் சூலதராம் சைலபுத்ரீம் யசஸ்விநீம்//

"நவதுர்க்கா ஸ்துதி'யை தினமும் ஜெபித்தால் எண்ணிய காரியம் நிறைவேறும்.

 வடமாநிலங்களின் முக்கிய நகரங்களில் துர்கா பூஜையாகவும் 
விஜயதசமி கொண்டாடப்படுகிறது. 

தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அன்னையை ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழக்கம்  இருந்து வருகிறது.
 

 














வில்லுக்கு விஜயன் எனப் போற்றப்படும் அர்ஜுனனுக்கு 
வெற்றி நல்கிய திருநாள்... 

துவங்கும் நல்ல காரியங்கள் வெற்றி பெற துணையாக நிற்கும் திருநாளும் . 

எனவேதான், நம் முன்னோர் ஆலைகளையும், கலாசாலைகளையும் இந்த நாளிலேயே தொடங்கினார்கள். 

 புதிய கலைகளைத் துவக்கவும், வித்யையில் சிறந்து விளங்கிட அக்ஷராப்யாஸம் ஆரம்பிக்கவும் சிறந்த நாள் விஜய தசமி


பத்து தலைகளை உடைய ராவணனை வதம் செய்ததால் இந்த நவராத்திரியின் கடைசி நாளான விஜய தசமி’ 'தசரா’ என்றும் அழைக்கப்படுகிறது (தச ஹரா - தசரா). , வட மாநிலங்களில் ராம்லீலா வைபவம் நிகழும்.
நவராத்திரியுடன் விஜயதசமியும் சேர்த்துக் கொண்டாடப்படும் பத்து நாள் விழாவை தசரா என்பர்.

மகிஷாசுரனை சாமுண்டீஸ்வரிதேவி அழித்த தினமே விஜயதசமியாகக் கொண்டா டப்படுகிறது. 
மகிஷனின் பெயராலேயே மைசூர் என பெயர் பெற்றது. 

மகிஷ மலை என்று வழங்கப்பட்டு தற்போது சாமுண்டீஸ்வரி மலை எனப்படும் மலையின் மீது சாமுண்டீஸ்வரி கோவிலைக் கட்டியவர் விக்கிரமாதித்த மகாராஜா என்கின்றனர்

இந்த பத்து நாட்களும் சாமுண்டீஸ்வரி சாதாரண நாட்களைவிட அதிக பொன்னாபரணங்களுடன் காட்சி தருவாள். 
தினம் ஒரு அலங்காரத்துடன் அம்மன் ஊர்வலம் நடைபெறும். 

ஊர்வலத்தின் முதலில் ஒருவர் அரசரின் வாளை ஏந்தி வர, அரசு சின்னமும் உடன் வரும். அதைத் தொடர்ந்து யானைப்படை, குதிரைப்படை, ஒட்டகப் படை, காலாட் படை போன்றவை அணிவகுத்து வரும். 

இந்த ஊர்வலத்தின் மையமாக அன்னை சாமுண்டீஸ்வரி தங்க மகுடம்சூடி யானைமீது பவனி வருவாள்.


பிற இடங்களைப் போன்று கொலுவில் மண் பொம்மைகளை அடுக்காமல், விதவித மான அலங்காரத்துடன் கூடிய மரப்பாச்சி பொம்மைகளை வைத்துப் பூஜிப்பர்.
குலசேகரன்பட்டினம் தசரா கிராமியக் கலைத் திருவிழாவாக  தசரா 12 நாட்கள் நடைபெறும். குலசேகரன்பட்டினத்தில் அருள்பாலிக்க்கும் முத்தாலம்மன்- ஞானமூர்த்தீஸ்வரர் இருவருமே சுயம்புத் திருவுருவங்கள் என்பது சிறப்பாகும்.
 தசரா ஊர்வலத்தில் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து, ஏதேனும் ஒரு தெய்வ வேடத்தில் பவனி வருவதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். 
கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தாரை- தப்பட்டை, பம்பை, உடுக்கை, நாதஸ்வரம், மேளதாளத்துடன் கோலாகலமாக சுவாமி ஊர்வலம் நடைபெறும்.
கடைசி நாளன்று சிறப்பு அபிஷேக ஆராதனையும் பூஜையும் முடிந்தபின், அம்மன் பூரண அலங்காரத்துடன் கடற்கரைக்கு எழுந்தருளி, இரவு சுமார் 12.00 மணியளவில் மகிஷாசுர வதத்தை நிறைவு செய்வாள். அத்து டன் விழா நிறைவுபெறும்.
வைணவத் திருத்தலங்களில் பெருமாளுக்கு  நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது பெருமாளுக்கு தினம் ஒரு அலங்காரம் செய்வார்கள். 

பெருமாளின் மார்பில் தாயார் இருப்பதால், பெருமாளுக்குச் செய்யும் அலங்காரம் தாயாருக்கும் சேர்த்தே செய்வது போலாகும். 
[ramas.jpg]
எனவே தாயாருக்கு வழக்கமான பூ அலங்காரம் மட்டுமே செய்யப்படும்.

நவராத்திரியின் முதல் நாள் வெண்ணெய்த்தாழி கண்ணன், 
இரண்டாம் நாள் காளிங்க நர்த்தனம், 
[v7.jpg]
மூன்றாம் நாள் வேணுகோபாலன், 
நான்காம் நாள் வைகுண்டநாதன், 
[DSC01118a.JPG]
ஐந்தாம் நாள் நாச்சியார் திருக்கோலம், 
[v8.jpg]
ஆறாம் நாள் சாரங்கபாணி, 
ஏழாம் நாள் ராஜராஜேஸ்வரி, 
எட்டாம் நாள் அரங்கநாதன்,
 ஒன்பதாம் நாள் ராமர் பட்டாபிஷேகம் 
என நாளுக்கொரு  அலங்காரத்தில் அருளுவார்..!

26 comments:

  1. VERY GOOD MORNING !

    HAVE A VERY NICE DAY !!`

    [ஏதோ ஒரு பழக்கதோஷம்]

    >>>>>

    ReplyDelete
  2. வைணவ திருக்கோயில்களில் நவரத்திரியின் போது பெருமாளுக்கு நடைபெறும் பல்வேறு அலங்காரங்களில் ஏழாம் நாள் அலங்காரம் ... அதுவும் பெண் தெய்வமான ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அலங்காரம் வித்யாசமாக உள்ளது.

    கேட்கவே சந்தோஷமாகவும் உள்ளது.


    >>>>>

    ReplyDelete
  3. திரு. N. சுப்பா நாயுடு என்ற ஓவியர் 1884 இல் வரைந்துள்ள அந்த கடைசி படம் மிகவும் அற்புதமாக உள்ளது.

    வரையப்பட்டு 129 ஆண்டுகள் ஆகியும் இன்றும் பார்க்க எவ்ளோ ஜோராக இருக்கிறது!!!!!

    முன்பே எப்போதோ தாங்கள் காட்டிய ஞாபகம் உள்ளது.

    மீண்டும் காட்டியதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    நீண்ட நேரம் அதையே நான் மிகவும் ரஸித்துப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

    >>>>>

    ReplyDelete
  4. வணக்கம்
    அம்மா
    விஜயதசமி பற்றியவிரிவான விளக்கம் அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  5. மரப்பாச்சி பொம்மைகளை மட்டும் வைத்து கொலுவில் பூஜிப்பர் என்பதைப்படித்ததும், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்தது.

    எங்க அம்மா இருந்தபோது, எங்கள் இல்லத்தில் கொலு வைத்தபோது, நிறைய மரப்பாச்சி பொம்மைகள் இருந்தன.

    நான் சின்னப்பையனாக இருந்தபோது பிறர் வீடுகளிலும் இவற்றைப் பார்த்துள்ளேன்.

    பெரிய பெரிய சைஸ்களில் ஆண், பெண் உருவங்கள் மரப்பாச்சியில் இருக்கும். அவற்றிற்கு, புடவை, வேஷ்டியெல்லாம் சுற்றி கொலுவில் வைப்பார்கள். ;)))))

    >>>>>

    ReplyDelete

  6. அந்த ஒரு ஜோடி யானை பொம்மைகள், கலை நயத்துடன் வெகு அழகாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete

  7. ’ஜயம் தரும் விஜய தஸமி’ என்ற அழகான தலைப்பில் அசத்தலான படங்களுடன் நிறைய விஷயங்களைக் குறிப்பாக மைசூர் பெயர்க் காரணம், சாமுண்டீஸ்வரி கோயில், வடமாநிலங்களில் நடைபெறும் ராம்லீலா வைபவம், பத்து தலைகள் கொண்ட இராவணனை வதம் செய்ததால் ’தஸ....ரா’ அடேங்கப்பா எவ்ளோ அழகா கோர்வையா ஒவ்வொன்றையும் புட்டுப்புட்டு வைக்கிறீங்கோ!

    படிக்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    You are So Great ! ;)))))

    >>>>>

    ReplyDelete
  8. விஜய தசமி கொண்டாட்டங்கள் பலே.....

    படங்களும் தகவல்களும் மிக அருமை.

    ReplyDelete
  9. வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன்
    காளிங்க நர்த்தனம்
    வேணுகோபாலன்
    வைகுண்டநாதன்
    நாச்சியார்
    சாரங்கபாணி
    ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
    அரங்கநாதன்
    ராமபட்டாபிஷேகம்

    அனைத்து அலங்காரங்களுமே அருமையாக தரிஸிக்கத் தந்துள்ளதற்கு என் மனமர்ந்த இனிய நன்றிகள்.

    நிறைவான பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள்.

    செளக்யமா சந்தோஷமா தீர்காயுஷுடன் இருந்து, இதுபோல தினசரி தொடர்ந்து மேலும் ஆயிரக்கணக்கான பதிவுகள் தந்தருள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

    விஜயதஸமி எல்லோருக்கும் புத்துணர்ச்சி அளிக்கட்டும். புதிய நல்லெண்ணங்களை உருவாக்கட்டும்.

    எதிலும் நாம் எதிர்பார்க்கும் ஜயம் ஏற்படட்டும்.

    -oOo-

    ReplyDelete
  10. விஜயதசமி பற்றிய படங்களும் விளக்கங்களும் அருமை. நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  11. படங்கள் எல்லாமே அற்புதம்...

    தகவல்கள் மிகவும் அருமை... இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  12. Vijaya Dasami Greetings.
    subbu thatha

    ReplyDelete
  13. விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!.. அன்னை அனைவருக்கும் அனைத்து நலன்களையும் அருள்வாளாக!..

    ReplyDelete
  14. விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!.. அன்னை அனைவருக்கும் அனைத்து நலன்களையும் அருள்வாளாக!..

    ReplyDelete
  15. சாமுண்டீஸ்வரி தேவி, குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா தகவல்கள் அருமை. பெருமாளின் அலங்காரம் அழகோ அழகு.
    விஜயதசமி வாழ்த்துகள். நன்றி அம்மா.

    ReplyDelete
  16. விஜயதசமி/தசரா பண்டிகை பற்றிய முழு விவரங்களை வழக்கம் போல் ஆன்மீக மணம் கமழும அற்புதப் படங்களுடன் அறிந்தததில் மிகமிக மகிழ்வு. அந்த யானை பொம்மைகள்.... ரொம்ப ரொம்ப சூப்பர்!

    ReplyDelete
  17. விஜயதசமி பற்றி மேலும் அறிந்துகொண்டேன்...
    மிக அருமை! அனைவருக்கும் ஜெயம் உண்டாகட்டும்!

    இனிய வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  18. தச ஹரா பொருள் அறிந்து கொண்டேன் .
    படங்கள் அருமை.
    எங்கள் பாக்கியமே பாக்கியம்.

    ReplyDelete
  19. விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
    பெருமாளுக்கும் நவராத்திரி தினத்தில் நடைபெறும் அலங்காரங்கள் பற்றியும், மைசூர் பெயர் வரக்காரணமும் அறிந்து கொண்டேன் .தசரா,சாமுண்டீஸ்வரி அம்மன் பற்றிய தகவல்கள் சிறப்பு.நன்றி.

    ReplyDelete
  20. Vijiyadasami nal valthukkal.
    viji

    ReplyDelete
  21. படங்களுடன் பகிர்வு அருமை.
    வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  22. விஜய தசமி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. விஜயதசமி தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  24. இனிய விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  25. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோ
    http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_15.html?showComment=1381805945354#c5883931640388978152

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  26. பல்வேறு பணிகள் இருந்த போதிலும், இன்றைய வலைச்சரத்தில் எனது வலைப்பதிவின் அறிமுகம் பற்றிய தகவலை எனக்கு தெரிவித்த சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி! வலைச்சரத்தில் சகோதரர் குடந்தையூர் ஆர் வி சரவணன் அவர்களின் உங்களது பதிவின் அறிமுகமும் கண்டேன். http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_15.html வாழ்த்துக்கள்!

    ReplyDelete