பார்வதி மயில் வடிவில் இருந்த காலத்தில், பரமன் பூவுலகைச் சுற்றிப் பார்க்க எண்ணி ரிஷபத்தில் ஏறிப் புறப்படும்போது, மற்ற தேவர்களும் தங்கள் வாகனங்களிலேறிப்பின்தொடர்ந்தார்கள்.
அனைவரையும் முந்திக் கொண்டு வேகமாகச் சென்று காவேரியின் நடுவில் நின்ற ரிஷபம், “சிவபெருமானைச் சுமக்கும் நான்தான் பெரிய வாகனம்’ என்ற கர்வத்துடன் மற்ற வாகனங்களைப் பார்த்ததை கவனித்த இறைவன் நந்தியின் கர்வத்தை அடக்க சிறிது அழுத்தம் தரவே,
ரிஷபம் பாதாளத்தில் சென்று துன்பப்பட்டது.
உடனே ரிஷபம் பரமனிடம் மன்னிப்புக் கேட்க, காவúரி நதியின் நடுவே மேற்கு முகமாய் இருந்து இங்கு நீராட வருபவர்களுக்கு வேண்டியதை அளிப்பாய்’ என்று ஆசி தந்து, ரிஷபம் மேலே வர அருளினார்.
தென்னாட்டின் காசி எனப் புகழ் பெற்ற இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலாஸ்னானமும், மாதம் முழுதும் மயூர நாதசுவாமி நகர்வலம் வந்து 'தீர்த்தம்' வழங்கும் விழாவும் இனிமையானவை.
அம்பாள் மயிலாக இருந்து தவம் புரிந்ததாகக் கூறுவதால், அந்த மயில் ஆடும் காவிரிக் கரை என்பதால் இவ்வூர் மயிலாடுதுறை என வழங்கப் படுகிறது.
ஐப்பசி மாதத்தில் இவ்வூர் காவிரியில் கங்கையும் சேர்ந்து வருவதாக புராணங்கள் சொல்வதால் அந்த மாதம் முழுவதும் காவிரி ஸ்னானம் புனிதமானது."ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது"
இதனால் மயிலாடுதுறையிலுள்ள துறை ரிஷபத்துறை என்று பெயர் பெற்றது.

மக்கள் திணித்த பாவ மூட்டைகளின் விளைவால், உருமாறி கறுமை நிறத்துடன் பார்க்க அருவருப்பாகத் தோற்றமளித்த கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூவரும் மீண்டும் பழைய நிலைக்கு வர, ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மயிலாடுதுறை தலத்தில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாதத்தில் நீராடுமாறு அதிலும் ஐப்பசி அமாவாசை மிகவும் சிறப்பானது’ என்று பிரம்மன் ஆலோசனை அருளினார்.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் மயிலாடுதுறைக்கு வந்து காவேரியில் ரிஷப கட்டத்தில் நீராடி தங்கள்மீது மக்கள் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறார்கள் என்று புராணம் கூறுகிறது.
தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசையைப்போல் ஐப்பசி மாத அமாவாசை மிகவும் சிறப்பாகக் புனித நீராடல், சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய நீர்க்கடன்களை அளித்து, தம் முன்னோர்களின் பாவங்களையும் போக்க சிறப்பு பூஜை செய்து புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள்.
ஐப்பசி அமாவாசையன்று காவேரி ரிஷபக் கட்டம் விழாக் கோலம் காணும். அன்று கங்கையை விட மிக உயர்ந்தவளாகக் காவேரி திகழ்கிறாள்.
மயூர நாதர் கோவிலில் உற்சவமும் நடைபெறுவதால், சுற்று வட்டாரத்திலுள்ள கோவில்களிலிருந்து உற்சவமூர்த்திகள் ரிஷபக் கட்டத்திற்கு வந்து தீர்த்தவாரி காண்பார்கள்.
மயூரநாதர் கோவிலில் ஐப்பசி முதல் தேதி தீர்த்தவாரியுடன் உற்சவம் ஆரம்பமாகும்.
அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி முப்பதாம் தேதி துலா உற்சவமும், கடைமுகத் தீர்த்த வாரியும் மிகச்சிறப்பாக நடைபெறும்.
தீர்த்தவாரியை முன்னிட்டு
அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமி,
அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்ப சுவாமி,
விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சுவாமி,
ஞானாம்பிகை சமேத வதானேஸ்வர சுவாமி,
மாயூரம் பரிமள ரங்கநாத சுவாமி
ஆகிய பஞ்ச மூர்த்திகளும் காவேரி துலாக் கட்டத்தில் எழுந்தருளியதும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவேரியில் நீராடி புனிதம் பெறுகிறார்கள்.

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் முழு வதும்
துலா ஸ்நானம் மிகவும் விசேஷம்.
ஐப்பசி கடை முழுக்கு, கார்த்திகை முடவன் முழுக்கு ஆகிய நாட்களில் காவேரி நதியில் நீராடினால் அற்புதப் பலன்கள் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.
துலா ஸ்நானம் மிகவும் விசேஷம்.
ஐப்பசி கடை முழுக்கு, கார்த்திகை முடவன் முழுக்கு ஆகிய நாட்களில் காவேரி நதியில் நீராடினால் அற்புதப் பலன்கள் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.
ஐப்பசியில் காவேரியில் ஒருமுறை நீராடினால்- காவேரியில் மூன்று முறை நீராடிய பலனும்; யமுனையில் ஐந்து முறை நீராடிய பலனும் கிட்டும்.
பாரதத்தில் உள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, தங்களிடம் மக்கள் கரைத்த பாவக் கறைகளைப் போக்கிக் கொள்வதால், காவிரி தன்னிடம் நதிகள், மக்கள் கரைத்த பாவச் சுமைகளை திருமங்கலக்குடி திருத் தலத்திலும் மாயூரத்திலும் உத்தரவாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்ந்து) போக்கிக் கொள்வதாக ஐதீகம்.
முதல் படமும் கடைசிப் படமும் கண்ணைக் கவர்கின்றன. முதல் படம் ஸ்டுடியோவில் போஸ் கொடுக்கும் குடும்ப ஃபோட்டோ போல இருக்கிறது!
ReplyDeleteமயிலாடுதுறை பற்றிய விவரங்கள் அருமை.
அருமையான படங்கள்... மயிலாடுதுறையின் சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDelete’ரிஷபத்துறை உற்சவம்’ என்ற தலைப்பில் மயிலாடுதுறையின் விசேஷங்கள் பற்றி பல்வேறு தகவல்கள் அறிந்து கொண்டோம்.
ReplyDelete>>>>>
ReplyDeleteபடங்களும் விளக்கங்களும் வழக்கம் போல அழகாக நேர்த்தியாக உள்ளன.
>>>>>
பஞ்சமூர்த்திகளும் காவிரி துலாக்கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி காணும் படம் மிகவும் அழகாக நேரில் தரிஸிப்பது போலக் காட்டியுள்ளது மிகவும் சிறப்பு.
ReplyDeleteபார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
>>>>>
ஐப்பசி இறுதி நாளில் கடைமுழுக்கு, கார்த்திகை முதல் நாளில் முடவன் முழுக்கு பற்றியும் சிறப்பாக சாஸ்திரம் சொல்வதை எடுத்துச் சொல்லியுள்ளது அருமை.
ReplyDelete>>>>>
இறுதிப்பத்தியில் [Blue Colour Paragraph at the end of the article] மூன்றாவது வரியில் இரண்டாவது வார்த்தை ‘காவே' என்று உள்ளது. அது காவிரி அல்லது காவேரி என மாற்றப்பட வேண்டுமோ?
ReplyDelete>>>>>
மனதுக்கு இனியமையான இன்றைய தங்களின் பதிவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ReplyDelete-oOo-
கீழிருந்து மேல் இரண்டாவது படத்தில் அந்த அழகான கோபுரமும், அதன் கீழ் ரிஷப வாகனத்தில் புஷ்ப அலங்காரங்களுடன் ஸ்வாமி புறப்பாடும், பக்தர்கள் கூட்டமும் மிகச்சிறப்பான போட்டோ கவரேஜ்.
ReplyDeleteசிவனின் குடும்பபடமும்.. கோபுரங்கள் தரிசனமும்... மற்ற படங்களும் அழகு...
ReplyDeleteமயிலாடுதுறை குறித்து அறியத்தந்த அரிய செய்திக்கு நன்றி அம்மா...
விரிவான தகவல்களுடன் அருமையான பதிவு!.. மகிழ்ச்சி!..
ReplyDeleteவிரிவான தகவல்களுடன் அழகான பதிவு!.. அருமை!.. மகிழ்ச்சி!..
ReplyDeleteரிஷபத்துறை உற்சவத்தின் கதையை அறிந்து கொண்டேன்! படங்கள் கொள்ளை அழகு! நன்றி!
ReplyDeleteரிஷபத்துறை என்னும் பெயரை அந்த ஊருக்கு சென்று இருந்தபோதிலும் நான் அறிந்தது இல்லை.
ReplyDeleteநன்றி.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
மயில் நடனத்தோடு அழகிய ஒரு உற்சவம்.
ReplyDeleteஅழகுமயில் கொள்ளை கொண்டது ..!
ReplyDeleteபடத்தோடு அழகாக விளக்கியுள்ளீர்கள் அம்மா. தங்கள் வலைத்தளத்தைப் படித்த பின்னால் தான் ஆன்மீக நாட்டம் என்னுள் அதிகரித்துள்ளது. பகிர்வுக்கு நன்றீங்க அம்மா,
ReplyDeleteமயிலாடுதுறையின் சிறப்பு பற்றி , கண்ணைக்கொள்ளைக்கொள்ளும் படங்களுடன் (1வது படம் மிக அழகு) தகவல்கள் தந்த உங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteரிஷபத்துறை பற்றிய தகவல்களுக்கு நன்றி. படங்கள் அருமை. உங்கள் பதிவு நாங்கள் மயூரநாதர் கோயிலில் சில மணிகள் ( மாலை) வாங்கியதை நினைக்க வைத்தது.
ReplyDeleteரிஷ்பத்துறை திருவிழாஅருமை.
ReplyDeleteபடங்கள் எல்லாம் மிக அருமை.
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பதில் அங்கு வசிக்கும் எனக்கு மகிழ்ச்சி.
ஐப்பசி மாதம் முழுவதும் , கார்த்திகை முதலும் ரிஷபத்துறை கோலாகலமாய் இருக்கும்.
வாழ்த்துக்கள்.