Tuesday, October 1, 2013

திருவேங்கடத்தின் ஆனந்த பூந்தோட்டம் ..!







மலர்களிலே பல நிறம் கண்டேன் - திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன். அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்

பச்சை நிறம் அவன் திருமேனி பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவி முகம் வெள்ளை நிறம் அவன் திரு உள்ளம்

பக்தி உள்ளம் என்னும் மலர்தொடுத்து பாசமென்னும் சிறுநூலெடுத்து
சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான் சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு

நாநிலம் நாரணன் விளையாட்டு நாயகன் பெயரில் திருபாட்டு
ஆயர்குல பிள்ளை விளையாட்டு... இந்த அடியவர்க்கொன்றும் அருள் கூட்டு
[3d.jpg]
ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் அனந்தாழ்வார் இராமனுசரின் தலையாய சீடராகத்திகழ்ந்தார்..

அக்காலத்தில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருமலைக் கோயிலும், சுற்றுப்புறமும் மிகவும் பாழ்பட்டுக் கிடந்ததைக் கண்ட ராமானுஜர், தனது சீடர்களை அழைத்து, திருமலைக் கோவிலையும், சுற்றுப்புறத்தையும் சீர்படுத்தி பராமரிக்கும் பொறுப்பை எவர் ஏற்க விரும்புவதாக வினாவெழுப்பினார். 

கடினமான வாழ்க்கைச் சூழலுக்கு அஞ்சி, பலரும் வாய் மூடி இருந்தபோது, , தான் திருமலை சென்று உபயம் செய்ய ஒப்புக் கொண்டார் அனந்தாழ்வார்.

ராமானுஜர், "அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!" என்று கூறவே. அன்றிலிருந்து, அவர் திருமலை 'அனந்தாண்பிள்ளை' என்று போற்றப்பட்டார். 

ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தாழ்வார், அங்கு ஒரு பூவனத்தை நிறுவி, பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்த தோடு, 
ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார். 
திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு, அனந்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றார்

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல்  அனந்தனுக்கு தனிப்பற்று!

இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்! 
அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது. அத்தோட்டம், இப்போது 'அனந்தாழ்வான்' தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.
கொஞ்சம் கோபக்காரரான  அனந்தாழ்வார் ஒரு முறை தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு தோட்டத்தில் உதவி செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவனை (தான் மட்டுமே திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அதீத விருப்பத்தில் ஏற்பட்ட சினத்தால்) கடப்பாரையால் தாடையில் அடித்து விட்டார். 

அச்சிறுவனைத் அவர் துரத்திச் சென்றபோது, அவன் கோயிலுக்குள் நுழைந்து மாயமாய் மறைந்து விட்டான். 

கோயில் அர்ச்சகர்கள், மூலவப் பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதைக் கண்டு, அனந்தாழ்வாரிடம் கூறினர். 

சிறுவனாக வந்தவர் பெருமாளே என்பதை உணர்ந்து  அடிபட்ட தாடையில் பச்சைக் கற்பூரம் வைத்து, தன்னை மன்னித்தருளுமாறு மனமுருக வேண்டினார்! இரத்தம் வருவதும் நின்றது! 

இன்றும், திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், 'அந்தக்' கடப்பாரையைக் காணலாம்! 

 அனந்தாழ்வார் நினைவாக, இன்றும், மூலவரின் தாடையில், பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது. அது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.




தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான், குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்! 

உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் நரசிம்மருக்கு அருகில் .அனந்தன் நிறுவினார். . 

திருமலையில் ராமானுஜருக்கு அமைத்த சிலை மற்றைய தலங்களில் அமைந் துள்ளதுபோல் அஞ்சலி ஹஸ்தத்துடன் (கூப்பிய கரங்கள்) காட்சியளிக்காமல், உபதேசம் செய்யும் பாவனையில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, 'அனந்தாழ்வான்' என்றே அழைக்கப்படுகிறது.

எப்படியும் அனந்தாழ்வானைச் சீண்டி  விளையாட வேண்டும் என்று விரும்பி  இரவு வேளை களில் அனந்தாழ்வாரின் நந்தவனத்துக்கு அரசன்- அரசி வேடத்தில் தன் பிராட்டியுடன் சென்று, பூக்களைப் பறித்து விளையாடிவிட்டு அப்படியே போட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டது திருமலை தெய்வம..!

காலையில் நந்தவனத்துக்கு வந்த அனந்தாழ்வார்  பூக்கள் பறித்துப் போடப்பட்டி ருப்பதையும் தோட்டம் பாழாக்கப்பட்டது போலுள்ள நிலையையும் கண்டு, இப்படிச் செய்த வர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என நினைத்து, அன்றிரவு நந்தவனத்தின் ஒரு பகுதியில் ஒளிந்திருந்தார்.

வழக்கம்போல்  வந்த பெருமானும் பிராட்டியைம் கையும் களவுமாகப் பிடிக்க நினைத்தபோது, அரசனாக இருந்த வன் தப்பியோடிவிட, அகப்பட்டுக் கொண்ட அரசகுமாரியைத் தேடி அரசன் வருவான் என்று நினைத்து அவளை ஒரு மரத்தில் கட்டிப் போட்டார் அவர்கள் பெருமானும் பிராட்டியும்தான் என்று தெரியாமல்...!

மறுநாள் காலை திருவேங்கடமுடையானின் சந்நிதியைத் திறந்த அர்ச்சகர்கள் பிராட்டியைக் காணாமல் தவிக்க, பெருமாளே அவர்களிடம் நடந்தவற்றைக் கூறி அனந்தாழ்வாரையும் பிராட்டியையும் அழைத்து வரச் சொன்னதன்படி அனந்தாழ்வார் சந்நிதிக்கு வந்த போது, உடன் வந்த பிராட்டி பெருமாளின் திருமார்பினில் ஒன்றிவிட்டதைக் கண்டு பதறி தன் தவறுக்கு வருந்திட, பெருமாளோ அர்ச்சகர்களைக் கொண்டு அனந்தாழ்வானுக்கு மாமனாருக்குரிய சகல மரியாதைகளையும் செய்து அனுக்கிரகித்தார்.

பெருமாளுடன் பிராட்டியைச் சேர்த்து வைத்ததால், குருவருளால் தனக்கு இந்த பாக்கியம் கிடைத்தது என்று மகிழ்ந்தார் ஆழ்வார்..!

அனந்தாழ்வார்  பரமபதம் அடைந்தபோது ஏழுமலையானே அவருக்கு இறுதிக்கடன்களைச் செய்தருள, அனந்தாழ்வார் ஒரு மகிழ மரமாய் மாறி இன்றும் நந்தவனத்தில் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். 
[magilam3.jpg]
இன்றும் வருடத்திற்கு ஒருமுறை ஏழுமலையான் அந்த நந்தவனத்துக்கு எழுந்தருளி ஆழ்வானுக்கு அருள்புரிந்து வருகிறார்.

அனந்தாழ்வார்அமைத்த ஏரி, நந்தவனம் ஆகிய வற்றையும் இன்றும் திருமலையில் தரிசிக்கலாம். 

ஆழ்வார் மலையப்பன்மீது வீசிய கடப்பாரையையும் பிரதான கோபுர வாயிலில் இடது பக்கம் உட்புறத்தில் மாட்டி வைத்துள்ளதையும் காணலாம்.

மலர்க் கைங்கர்யம் செய்து பூமாலையும் பாமாலையும் சூட்டி மகிழ்ந்த ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நன்னாளில் அனந்தாழ்வார் ஏழுமலையானோடு இணைந்தார்.


அனந்தாழ்வானுக்கு குரு பக்தியும் , வைராக்கியமும் அதிகம்.

ஒரு நாள் அவரை நாகம் ஒன்று தீண்டி விட்டது. இருந்தபோதிலும் அதைக் கருத்தில் கொள்ளாது வேங்கடவனின் கைங்கர் யத்திலேயே
ஒன்றியிருந்ததைக் கண்ட வேங்கடவன் அனந்தாழ்வானிடம், ""பாம்புக் கடிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லையே- ஏன்?'' என்று கேட்டார்.
Cover art
ஆழ்வாரோ, ""எளியேனுக்கு உமக்கு கைங்கர்யம் செய்வதிலேயே விருப்பம். பாம்பு வீரியமுடையதாயின் அடியேன் மரணத்தைத் தழுவினாலும் தங்களருளால் பரமபதம் சென்று அங்கு கைங்கர்யத்தைச் செய்வேன். 
கடித்த பாம் பினால் அடியேனுக்கு ஆபத்து ஏற்படவில்லை யாயினும் இத்திருமலையில் இருந்து கொண்டே உமக்குத் தொண்டு புரிவேன். எனக்கு இரண்டும் ஒன்றே'' என்று கூறிவிட்டார்.
Pray Lord Balaji - screenshot
ஆனால் திருவேங்கடமுடையான் அருளால்
ஆழ்வாருக்கு பாம்புக் கடியால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

[12.jpg]





இந்த இணைப்பில் திருவேங்கடவன் பூஜை காணதவறாதீர்கள்...!

https://play.google.com/store/apps/details?id=com.relizen.lordbalaji&hl=hr

25 comments:

  1. விடிந்தும் விடியாத புலர்காலைப் பொழுதில் திருவேங்கடவன் தரிசனம் கிடைத்தது, இராஜராஜேஸ்வரியின் தயவால்! மிக்க நன்றி! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    ReplyDelete
  2. அனந்தாழ்வார் பற்றிய செய்தியெல்லாம் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  3. ஆனந்தப் பூந்தோட்டம் அற்புதம்

    ReplyDelete
  4. அனந்தாழ்வாரைப் பற்றி அறிய அறிய ஆனந்தம்!

    வேங்கடவன் பூஜை காலைவேளையில் என் மாமியாரை மகிழ்வூட்ட... நன்றி தோழி!

    ReplyDelete
  5. அனந்தாழ்வான் கதை தெரிந்து கொண்டோம்.....

    சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள்.... மிக்க நன்றி.

    ReplyDelete
  6. அனைத்தும் அற்புதம்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அனந்தாழ்வாரின் பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.
    பூஜை அழகு. ஐக்கியமாக வைக்கிறது.

    ReplyDelete
  8. பாசமென்னும் நூலெடுத்து ... அருமையான வரிகள் . படங்களும் சிறப்புங்க.

    ReplyDelete
  9. அனந்தாழ்வாரைப் பற்றி அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. மனதை இதமாக்கும் அழகிய பதிவுகள் பவிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

  11. “திருவேங்கடத்தின் ஆனந்தப்பூந்தோட்டம்”

    என்ற தங்களின் தலைப்பே ஆனந்தம் அளிப்பதாக உள்ளது.

    என் ஆருயிர் நண்பர் ஒருவர் குடியிருக்கும் 'திருவேங்கடசாமி ரோடு' என்ற ஞாபகமும் உடனே வந்தது ;)))))


    >>>>>

    ReplyDelete
  12. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    கடைசியில் மீண்டும் இன்று காட்டியுள்ள தேர் வெகு ஜோர். காணக்கண்கோடி வேண்டும் தான்.

    'ஆண்டாள்' தெருவிலே குடியிருந்து கொண்டு உங்கள் பதிவுகளின் மூலம் 'ஆண்டாள்' படத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை எப்படி எடுத்துரைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. ;)

    >>>>>

    ReplyDelete
  13. PRAY LORD BALAJI பூஜையைக்கண்டு மகிழ்ந்தேன்.

    பிரஸாத லாடு தரமாட்டீங்களா ? ;(

    >>>>>

    ReplyDelete
  14. அனந்தாழ்வார் கதையை தங்கள் பாணியில் அழகாகத் தாலாட்டாகச் சொல்லி மகிழ்வித்துள்ளீர்கள்.

    இப்படி கடப்பாறையால் தாடையில் அடித்து விட்டீர்களே!

    என் தாடையும் இப்போது வலிக்கிறது. ;)

    ”கடப்பாறையை விழுங்கிவிட்டு சுக்குக்கஷாயம் சாப்பிட்டால் அது ஜீரணமாகுமா” என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

    கடப்பாறையை விழுங்கியவன் கதை போலத்தான் என் கதையும் இப்போது உள்ளது.

    தங்களிடமிருந்து உடனடியாக எனக்குச் சுக்குக்கஷாயம் தேவைப்படுகிறது. ;)

    >>>>>

    ReplyDelete
  15. பிராட்டியை மரத்தில் கட்டிப்போட்ட கதையும் ........ ஆஹா, அருமையோ அருமை.

    மகிழமரமாய் மணக்கும் கதைகளாகச் சொல்லியுள்ளீர்கள். ஸ்பெஷல் நன்றிகள்.

    பாம்புக்கடி பட்டும் பதறாத மனிதரை நினைக்க மனது புல்லரிக்கிறது.

    பெருச்சாளி கடித்தாலே நம்மால் சகித்துக்கொள்ள முடிவது இல்லை. அதைசனியன் என்கிறோம்.

    23.02.2013 சனிக்கிழமை, இங்கு எனக்கு மிகவும் வேண்டியப்பட்ட ஒருவரின், இடது கால் நடு விரலை, பெருச்சாளி கடித்துவிட்டதில், நான் பட்டபாடும் வேதனைகளும், எனக்கு மட்டும்தான் தெரியும்.

    >>>>>

    ReplyDelete

  16. மொத்தத்தில் இன்றைய தங்களின் பதிவு கண்ணுக்கும் கருத்துக்கும் மிக நல்ல விருந்து தான்.

    திருப்பதி லட்டு போல திருப்தியாக உள்ளது.

    மனம் நிறைந்த இனிய அன்பான பாராட்டுக்கள்,

    நன்றியோ நன்றிகள்.

    நல்வாழ்த்துகள்.

    நீடூழி வாழ்க !

    -oOo-

    ReplyDelete
  17. படங்கள் அழகு. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  18. தங்களின் இன்றைய பதிவு, இந்த ஆண்டின் வெற்றிகரமான 275வது பதிவாகும்.

    அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அடுத்த பதிவு தங்களின் வெற்றிகரமான 1050வது பதிவாக அமைய உள்ளது.

    அதற்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  19. என்னே.. அனந்தாழ்வானின் தொண்டுள்ளமும் பக்தியும்!.. விரிவாக அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!..

    ReplyDelete
  20. புதுப் பொலிவுடன் பகிவு. எத்தனை கதைகள், எல்லாவற்றையும் சேர்த்துக் கோர்த்து பதிவிட்ட தற்கு நன்றி.

    ReplyDelete
  21. அனந்தாழ்வார் சரிதமும், படங்களும் பாடலும் வெகு சிறப்பு! தினம் தினம் இப்படி தெவிட்டாத செய்திகளை தரும் தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  22. பன்னிரண்டு ஆழ்வார்களுக்கு அடுத்து பாராட்டப்படும் அனந்தாழ்வார் பற்றிய குறிப்புகள் படிக்கப் படிக்க தெவிட்டாதவை. அரங்கம், வேங்கடம் என்றாலே மலர்கள் நிறைந்த நந்தவனம்தானே! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  23. 'நீரே ஆண்பிள்ளை' என்று ராமானுஜரால் வாழ்த்தப் பட்டவர் அனந்தாண் பிள்ளையின் சரித்திரம் வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றிபாராட்டுக்கள்!

    ReplyDelete
  24. குரு ரூப இராமானுஜரும், அனந்தாழ்வான் சரித்திரமும் அருமை.

    ReplyDelete