Wednesday, October 30, 2013

காசியில் தீபாவளி






தீபாவளியன்று ஒவ்வொரு இல்லத்தி லும் "கங்கா ஸ்நானம் ஆச்சா?'என்று விசாரித்து கங்கையை அனைத்து இடங்களிலும் பிரவகிக்கவைக்கிறோம்..!

காவிரியானாலும் தாமிரபரணியானாலும் கிணற்று நீரானாலும் குழாய்த் தண்ணீரானாலும் அன்று அது கங்கைதான்!

அன்று வைகறை வேளையில் கங்கை நம் மனத்தில் ஞானப் பெருக்காக ஓடுகிறாள்.

மானசீகமாக  தீபாவளி நேரத்தில் காசியில் கங்கையில் நீராடி, 
காசி விசுவநாதரையும் காசி விசாலாட்சியையும் அன்னபூரணியையும் தரிசனம் செய்கிறோம்.
"அன்னபூர்ணே சதாபூர்ணேசங்கரப்ராண வல்லபே!
ஞானவைராக்ய வித்யர்த்தம் பிட்சாம் தேஹி ச பார்வதி'
என்கிறார் ஆதிசங்கரர்.

"மக்கள் அஞ்ஞானத்தில் மூழ்கி உன்னிடம் உலக சம்பத்துகளையும் சுகங்களையும் வேண்டலாம். ஆனால், ஜகன்மாதாவான அன்னபூரணி! நீ உன் குழந்தைகளுக்கு முக்தியடைய உதவும் பேரறிவையும் வைராக்கியத்தையும் தந்து அருள்பாலிக்க வேண்டும் தாயே' என்று ஆதிசங்கரர் காசி அன்னபூரணியைத் துதிக்கிறார்.

நீராடும் போது அனைவரும் அந்த சுலோகத்தைச் சொல்லிக் கொள்ளவேண்டும்..!
காசியில் தீபாவளி  தினத்தில் கங்கை நீரில் மெய்யாகவே நீராடி, உடலும் உள்ளமும் குளிர்ந்து, ஈசனையும் பார்வதியையும் தந்தையாகவும் தாயாகவும் தீபாவளி தினத் தன்று தரிசிக்கும் அனுபவம் அருமையானது..!
புனித கங்கை நதி அலங்காரத் தோற்றம் அளிக்கிறது.
பெண்கள் கங்கைப் படித்துறையில் தீபங்கள் ஏற்றி வைத்து, 
தீர்க்க சுமங்கலிகளாக இருக்க கங்கையை வேண்டி 
பூஜை செய்கிறார்கள்.

காசி கங்கை நதியில் யமுனை, சரசுவதி, தூத்பாபா, கீர்னா ஆகிய புண்ணிய நதிகளும் கலந்து ஓடுவதாக ஐதீகம் ..எனவே காசியில் ஓடும் கங்கையைப் "பஞ்சகங்கா' என்று அழைக்கிறார்கள்.
இந்துக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு முறையேனும் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

கங்கையின் மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி, விசுவேசுவரரைத் தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
.அஸி நதி கங்கை யில் சங்கமமாகும் கட்டம்; தசாசுவமேத கட்டம்- பத்து அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் கட்டம்;

கங்கையில் மணி கர்ணிகாவில் நீராடி, மணிகர்ணிகாஅஷ்டகத்தைப் பாராயணம் செய்தால், பிறவிக் கடலைக் கடந்து விடலாம் என்கிறார் சங்கரர்.

பண்டாக்கள் அமர்ந்து, தீபாவளி ஸ்நானம் முடித்து வருபவர்களுக்குப் பூஜைகளைச் செய்து வைக்கிறார்கள். 

உயர்ந்து நிற்கும் மூங்கிற் கழிகளின் முடியில் தொங்குகின்ற கூடைகளில் தீபாவளியை ஒட்டி  தீபங்களை ஏற்றி வைத்து 
ஆகாச தீபங்கள் என்று வணங்கப்படுகின்றன

கங்கைக்கரை ஓரம் உண்மையாகவே தீப-ஆவளி 
(தீபங்களின் வரிசை) தரிசனமாகக் கிடைக்கிறது.
[varanasi042-v.jpg]
கங்கை நீரை எடுத்துக் கொண்டு வந்து, காசி விசுவநாதருக்கு அபிஷேகம் செய்வது முறை. நாமே லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, கையால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளலாம்.
தீபாவளியன்று கிடைக்கும் மிக  அபூர்வமான அனுபவம் இது.

காசியில் இருப்பது ஜோதிலிங்கம். மகா விஷ்ணு ஈசனை ஒளிவடிவமான லிங்க ரூபத்தில் வழிபட்ட காசி விசுவநாதர் உருவில் சிவபெருமான் என்றென்றும் இங்கே சாந்நித்யம் கொண்டிருக்கிறார்

அவிமுக்த க்ஷேத்திரமான காசி ஸ்தலத்தில்  காசி விசுவநாதர் அவிமுக்தேசுவரராக விளங்குகிறார். விசுவநாதரை தீபாவளி தினத்தன்று வழிபடுவது விசேஷம். 

காசி விசுவநாதர் ஆலயத்தில் விடியற் காலை மூன்று மணிக்கு உக்ஷத்கால பூஜையும், பன்னிரண்டு மணியை ஒட்டி உச்சி கால பூஜையும், மாலையில் சந்தியா பூஜையை ஒட்டி சப்தரிஷி பூஜையும் நடக்கின்றன. நள்ளிரவில் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது.
சப்தரிஷி பூஜை மிக விசேஷமானது.

ஏழு அந்தணர்கள் சுமார் ஒரு மணி நேரம் 
சிவ ஸ்தோத்திரம் சொல்லுகிறார்கள்.

படிப் படியாக சுவாமிக்கு அலங்காரம் செய்கிறார்கள். 

முதலில் கங்கை நீர், பிறகு பால், சந்தனம், தேன் ஆகியவற்றினால் அபிஷேகம் நடக்கிறது.  பலவகை மலர்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.

வளையங்களாக மலர் மாலை அலங்காரம். நாகாபரணம் சிவலிங்கத்தின் முடியை அலங்கரிக்கிறது.
ஐந்துமுக விளக்குகளைக் காட்டி, முடிவில் கற்பூர ஆரத்தி எடுக்கிறார்கள்.

ஏழு அந்தணர்கள் வாழ்க்கையின் ஏழு நிலை களையும்,
பஞ்சமுக தீபம் ஐம்புலன்களையும் உணர்த்துவதாக,
இந்த பூஜையின் தாத்பரியம் சொல்லப்படுகிறது.

காசி விசுவநாதரின் பூஜைகளிலேயே இதுதான் மிகவும் முக்கியமானது. தீபாவளியன்று விசுவேசுவரருக்குப் பஞ்சமுக அலங்காரம் செய்து, கவசமாகச் சாற்றுகிறார்கள்.
தீபாவளியின்போதும் மகா சிவராத்திரியன்றும் தங்க விசாலாட்சி அம்மனைத் தரிசிக்கலாம்.நாதசுர இசை மங்களகரமாக முழங்குகிறது. அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வதுண்டு.

காசியில் தீபாவளியன்று விசேஷமான அலங்காரங்களுடன் எழுந்தருளும் அன்னபூரணி. காசி விசுவநாதர் ஆலயத்துக்கு இணையாக மிகச் சிறப்புடன் விளங்குகிறது ..
சாதாரண நாட்களில் கருவறையில் அன்னபூரணி அம்மனின் தரிசனம் கதவின் துவாரம் வழியாகவே பக்தர்களுக்குக் கிட்டுகிறது.

கருவறைக்கு எதிரே எண்கோண வடிவம் கொண்ட மண்டபம் இருக்கிறது. அங்கே அமர்ந்து பக்தர்கள் பஜனை செய்கிறார்கள். பூஜை நேரத்தில் ஆலயமணி முழங்குகிறது. பசுவின் முகம் கொண்ட இந்த ஆலயமணியின் நாதத் தில் பக்தர்களின் கோஷம் கலந்து ஒலிக்கிறது. கற்பூர ஆரத்தி காட்டி குங்குமப் பிரசாதம் அளிக்கிறார்கள்.


அன்னபூரணி அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் செல்வங்களையும் அளிக்கும் தேவி.

ஆகவே உலகத்தில் மக்கள் எதனால் உயிர் வாழ்கிறார்களோ, 
எந்த சௌக்கியங்களை அடைய ஆசைப்படுகிறார்களோ- அவ்வளவையும் தரும் செல்வியாக அன்னபூரணி விளங்குகிறாள். 
அன்னபூரணியைப் பூஜை செய்து வழிபடும் முதல் நாள் தன திரயோதசி. அன்று தங்க அன்னபூரணிக்குப் பூஜைகள் உண்டு.

ஆனால் முழு தரிசனம் கிடைக்காது. திரை போட்டு மறைத்து விடுகிறார்கள்.

அடுத்த நாள் சோடி தீபாவளி. அன்று தரிசனத்துக்காக சந்நிதியைத் திறந்து வைக்கிறார்கள்.

தீபாவளியன்று ஐசுவரியங்களை அளிக்கும் தேவியாக விளங்கும் அன்னபூரணிக்கு குபேர பூஜை நடக்கிறது.

அன்று கங்கா ஸ்நானம் செய்துவிட்டு ஏராளமான மக்கள்- குறிப்பாக சுமங்கலிகள் தரிசனம் செய்கிறார்கள்.

அடுத்த நாள் சகலவிதமான தன, தான்ய, சம்பத்துகளை அளிக்கும் தேவிக்கு லட்சுமி பூஜை நடைபெறுகிறது.

இப்படி தீபாவளியை ஒட்டி மூன்று நாட்கள் விசேஷமாக தரிசனம் கிடைக்கிறது.

"கிருபாவலம்பநகரீ காசிபுராதீச்வரி
மாதா அன்னபூர்ணேசுவரி பிஷாம்தேஹி!'

என்று "அன்னபூர்ணாஷ்டக'த்தில் ஆதிசங்கரர் அன்னையை வேண்டுகிறார். உலகத்தில் ஒரு மனிதன் அடையக் கூடிய சகல பாக்கியங்களையும் அடைந்து கரை கண்ட அவதார புருஷரான சங்கரர் அன்னையிடம் பிச்சை கேட்கிறார்.

காசியின் எஜமானியாக விளங்கும் தேவியை அன்னம் அளிப்பவளாகவும், முக்தியைத் தருபவளாகவும், சகலசம்பத்துகளையும் அருளுபவளாகவும், வெற்றியை அளித்து வாழ்த்தும் மாதாவாகவும், கருணையின் வடிவமாக விளங்கும் உலகத் தாயாகவும் வைத்து வழிபடுகிறார் சங்கரர்.

உலகத்தாய் தீபாவளியன்று ஒளி வடிவமாகப் பிரகாசிக்கிறாள்.

நவரத்தினங்களும் இழைத்த அணிகலன்கள் தவழ்கின்றன; அருள்பாலிக்கும் கரங்களை அலங்கரிக்கின்றன; தண்ணொளி வீசும் மணிமகுடமாகத் திகழ்கின்றன. பொன்னும் மணியும் நவரத்தினங்களும் பூட்டி, பொன் உருவிலேயே ஜகன்மாதாவை வைத்துப் பூஜிக்கிறார்கள்.
ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை தங்கக் கிண்ணமும் தங்கக் கரண்டியுமாகக் கொலுவிருக்கிறாள்.

உலகத்தையே ஆளும் மகேசுவரன் அங்கே பிச்சை கேட்டு, உலகத்தாரில் முதல்வனாய் உணவருந்த திருவோடு ஏந்தி நிற்கும் காட்சியைக் காண்கிறோம்.

ஆலகாலத்தையும் அமுதமாய் விழுங்கிய எம்பிரானுக்கு அப்படி ஓர் எளிய தோற்றமா? அத்தனை பசியா? "உலகக் குழந்தைகளைக் காப்பாற்று; அதற்கு ஒரு பாவனையாக எனக்கு உணவு கொடு!' என்று கேட்கிறார் கைலாசபதி.

அன்னபூரணியின் இருபுறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் தங்கத்தில் செய்த விக்கிரகங்களாகத் தரிசனம் தருகிறார்கள்.

அந்தத் தோற்றம், கையை உயர்த்தி அபயமளித்து ஆசீர்வாதம் கூறும் விதமாகவே இருக்கிறது.

காசி விசுவேசுவரர், வெண்ணீறணிந்த பெருமான்- வெள்ளி மலையமர்ந்த ஈசன் வெள்ளி விக்கிரகமாக ஜொலிக்கிறார்.

லட்டுகளால் செய்த தேரில் அன்னை பவனி வருகிறாள். அந்த இனிப்பையே பிரசாதமாகவும் வழங்குகிறார்கள். பக்தர்கள் அன்னபூரணிக்கு காணிக் கையை ரூபாய் நோட்டு களாக மழைபோலப் பொழிகிறார்கள்.
அன்னம் மலைபோலக் குவித்து வைக்கப்படுகிறது. வகை வகையான இனிய பணியாரங்கள் குவியல் குவியலாக வைக்கப்படுகின்றன.


எங்கும் பசியாற்றும் உணவு இறைவனின் அருளாகப் பொங்கி நிறைகிறது. காசியில் அன்ன விசாரமே இல்லை! அதுவும் தீபாவளித் திருநாளில் துளியும் இல்லை!

25 comments:

  1. காசிக்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். தீபாவளி பற்ற்ய தகவல்களும் சிறப்பு. படங்கள் அருமை

    ReplyDelete
  2. தீபாவளி ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான நாளே.

    ReplyDelete
  3. அபூர்வ படங்களுடன்
    அற்புதமான அரிய அழகிய விரிவான
    விளங்கங்களுடன் காசி தரிசனம்
    தங்கள் பதிவால் சாத்தியமானது
    மிக்க நன்றி
    தீபாவளித் திரு நாள் மீண்டும் ஒருமுறை
    தரிசித்து மகிழ்வோம்.வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  4. காசி விஸ்வநாதர் ஆலய தரிசனம் கண்டோம்.. மிக்க மகிழ்ச்சி.. அன்னை அன்னபூரணி அனைவரையும் காத்தருள்வாளாக!..

    ReplyDelete
  5. இத்தகு உன்னத அனுபவங்களுக்காக காசிப் பயணம் மூன்றாவது தடவையாக மாமியார் சென்றிருக்கிறார். எனக்கு தங்கள் பதிவால் வாய்த்தது அச்சுகானுபவம். நன்றி தோழி!

    ReplyDelete
  6. படங்கள் அனைத்தும் மிகவும் அற்புதம்... விளக்கங்களும் அருமை... நன்றி அம்மா...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. கங்கையில் தீபாவளி நிகழ்வும் படங்களும்
    நெஞ்சம் நிறைத்தது சகோதரி...

    ReplyDelete
  8. மகிழ்ச்சி தரும் செய்திகள் .

    ReplyDelete
  9. காசிக்குப் போக முடியாத குறை தீர்த்து விட்டீர்கள். காசியிலே வசிப்பவர்கள் பாக்கியவான்கள்தான்!

    ReplyDelete
  10. காசியில் தீபாவளிச் சிறப்பு மிக அருமை!

    படங்களும் பதிவும் மனதில் நிறைந்துகொண்டது.

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  11. முதல் படம் அன்னபூரணி மிக அழகாக இருக்கிறா.காசியில் தீபாவளிப்பகிர்வு அருமை .அழகான படங்கள்.நன்றி .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. ஒரு முறை காசி சென்று வந்தோம். இன்னும் ஒரு முறை பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது இந்தப்பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. wow! great description about ganges

    ReplyDelete
  14. இன்றைய ’காசியில் தீபாவளி’ அழகான மிகப்பொருத்தமான பதிவு.

    நான் குடும்பத்துடன் காசி யாத்திரை சென்ற நினைவலைகளை பல இடங்களிலும் உணர்ந்து மகிழ முடிந்தது.

    >>>>>

    ReplyDelete
  15. முதல் படமான ஸ்ரீ அன்னபூரணி அம்பாள் அற்புதம்.

    அம்பாளுக்கு அடியேனின் தீபாவளி நமஸ்காரங்கள்.

    >>>>>

    ReplyDelete
  16. தீபாவளியன்று வைகறை வேளையில் கங்காதேவி நம் மனதில் ஞானப்பெருக்காக ஓடுகிறாள் .....

    சூப்பர் !

    மானசீகமாக கங்கையில் நாம் நீராடுகிறோம்.

    அருமை !

    நீடாடும்போது சொல்ல வேண்டிய ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகம் ...

    ‘அன்னபூர்ணே ஸதா பூர்ணே .....’

    அசத்தல் !

    >>>>>

    ReplyDelete
  17. லட்டுக்களால் தேர், மலைபோல குவித்திருக்கும் அன்னங்கள் ..... என அனைத்தையும் ஒன்று விடாமல் சிரத்தையாகக்காட்டியுள்ளதும், எழுதியுள்ளதும் படிக்கப்படிக்க சுகமாகவும் சுவையாகவும், லட்டு சாப்பிட்டு மகிழ்வது போலவே உள்ளன. ;)

    >>>>>

    ReplyDelete
  18. கங்கையின் ஸ்நான கட்டங்களும், அடுக்கு தீபாராதனைப்படமும், ஆகாச தீபங்களும், கங்கைக்கரையில் செய்யும் திரு விளக்கு பூஜைகளும், கடைசியில் காட்டியுள்ள நீரில் மிதக்கும் தீபங்களும் மிகவும் ரஸிக்க வைத்தன.

    >>>>>

    ReplyDelete
  19. வாழ்க்கையின் ஏழு நிலைகளையும், ஐம்புலன்களையும் பற்றிச்சொல்லி அசத்தியுள்ள தங்களின் இந்தப்பதிவுக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

    இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    நல்லபடியாக கங்கா ஸ்நானம் செய்து அனைவரும் மன மகிழ்ச்சியுடன் இருக்கப் பிரார்த்திப்போம்.

    -oOo-

    ReplyDelete
  20. காசிக்கு போகாமலேயே காசிக்கு போனது போன்ற உணர்வு ஏற்பட்டது தங்களின் விரிவான பதிவை படித்ததும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. படங்களோடி பாங்காய் பகிர்ந்து எங்களையெல்லாம் காசிக்கே அழைத்து சென்று விட்டீர்கள் அம்மா. ஒவ்வொருவருக்கும் ஒரு தீபாவளி மகிழ்வை அள்ளிக் கொடுக்கிறது. வாழ்க்கையும் நிலைகளைப் பகிர்ந்து அறிய வைத்த தங்களுக்கு அன்பு நன்றிகள் அம்மா..

    ReplyDelete
  22. காசி பற்றி நிறைய தகவல், படங்களுடன் அருமையான கட்டுரை!

    ReplyDelete
  23. காசிக்கு பலமுறை போயிருக்கிறேன். இவ்வளவு,ஒழுங்காக,பார்த்தவைகளைச் சொல்லமுடியாது.,உங்கள்
    மெய்யுறை படித்தபின் இன்னுமொருமுறை போய்ப் பார்த்து தரிசிக்க மனம் விரும்புகிறது. என்ன அழகான படங்கள். என்ன தெவிட்டாத விஷயங்கள். வாராணஸி புரபதிம் பஜே விசுவநாதம். மனதில் பஜிக்கத் தோன்றுகிரது. அம்மன் விசாலாக்ஷியையும் தரிசிப்போம்.
    எங்கள் பாட்டி சொல்லுவார். விசாலாக்ஷி மட்டும் ஏழைபோலத் தோன்றுகிறது.. என்று. அதுவும் ஞாபகம் வந்தது. அன்புடன்

    ReplyDelete
  24. ஒவ்வொன்றும் இவ்வளவு அழகாக எழுதும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வார்த்தைகளே கிடைப்பதில்லை.படங்களெல்லாம் ஆஹா கண் முன்னாடியே நிற்கிறது
    நன்றி அன்புடன்.

    ReplyDelete
  25. கங்கா ஸ்நானம் ஆச்சா? – உங்கள் பதிவிலுள்ள இந்த வாசகம் , அந்தநாளைய கல்கி, ஆனந்த விகடன் தீபாவளிமலர்க் கட்டுரைகளில் படித்த நாளை நினைவூட்டியது. தீபாவளி அன்று எல்லா நதிகளுமே கங்கைதான் என்பதை அழகாகச் சொன்னீர்கள். நன்றி!

    ReplyDelete