Tuesday, October 8, 2013

நகரேஷு காஞ்சியில் நவராத்திரி அலங்காரம்




சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி சோதியாய் நின்ற உமையே,
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி யனாத ரட்சகியும் நீயே,

சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீச்வரி அழகான காஞ்சியில் 
புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி யுமையே .

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமதுபாடகந் தண்டை கொலுசும்,
பச்சை வைடூரியம் மிச்சையா இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒலியும்,

முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன மாலை யழகும்,
முழுதும் வைடூரியம் புஷ்ப ராகத்தினால் முடிந்திட்ட தாலி யழகும்,

சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ் செங்கையிற் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற சிறுகாது கொப்பினழகும் ,

அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை யடியனால் சொல்ல திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி யுமையே

ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்த என் அம்மை ஏகாம்பரி நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி யுமையே.
அன்னை காமாட்சியின் விருத்தம் பாட வருத்தமெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல - தீயில் பட்ட தூசு போல - மறைவதைக் காணலாம் ..
அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களைஎல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி.
காமாக்ஷி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த 
கண்களையுடையவள் என்று பொருள்.
காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.
காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் முப்பெரும் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரின் ஒரே வடிவமாக கொண்டு குழந்தை வடிவில் அருள்பாலிப்பதால்  நவராத்திரி காலத்தில் காமாட்சியம்மனை தரிசனம் செய்வது மிகவும் விஷேசம். 
ஒவ்வொரு ஆண்டும் காமாட்சியம்மன் கோயிலில் ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோற்சவம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

தினமும் காமாட்சியம்மனுக்கு விஷேச அபிஷேக, அலங்காரம், ஆராதனைகளும்   கன்யா பூஜை, ஸூவாஸினி  பூஜைகளும், லட்சார்ச்சனையும் நடைபெறும்.
இரவில் ஸ்ரீ காமாட்சியம்மனை கொலு மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சூரசம்ஹார உற்சவம் நடைபெறும். சங்கீத கச்சேரி, தீபாராதனை நடைபெறும்.
காமாட்சி அம்மன்  கையில் கரும்பு வில், தாமரை கிளி  ஆகியவற்றை ஏந்தி , இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பான அம்சம். 
மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர்  ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினார் 
அன்னை காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்று உணரலாம்..

அன்னை காமாட்சி ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள். 

காமகோடி காமாட்சி - ( ஸ்தூல வடிவம் ) - (மூல விக்கிரக உருவில் )

அஞ்சன காமாட்சி ( அரூப லக்ஷ்மி ) - ( சூட்சும வடிவம் )

காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் - ( காரண வடிவம் )




2013-10-07 20.09.11.jpg2013-10-07 20.05.31.jpg2013-10-07 20.05.46.jpg


Indian devotees hold earthen lamps as they take part in the Maha Aarti ritual at Hindu deity Umiya Mata temple on the eighth night of Navratri or nine nights festival in Surat, 
Gujarat state, India,  Every year thousands of devotees participate in this ritual
APTOPIX India Hindu Festival Pictures & Photos

24 comments:

  1. அதிகாலை எழுந்தவுடன் காணும் முதற் பதிவு தங்களுடையதுதான். நவராத்திரி சிறப்பு. நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அற்புதம்... வாழ்த்துக்கள்... நன்றி அம்மா...

    ReplyDelete
  3. superb pictures about kamakshi amman

    ReplyDelete
  4. மூன்று வகை வடிவங்களின் தகவல் புதிது.
    அறிந்து தெளிந்தோம். நன்றி !

    ReplyDelete
  5. அன்னை காமாட்சியின் அருமையான தகவல்களை,அழகான படங்களுடன் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. காஞ்சி காமாட்சியின் விருத்தம் பாட வருத்தங்கள் மறையும். அருமையான விளக்கம். படங்கள்! பார்க்க பக்தி பரவசம்!

    ReplyDelete
  7. அம்மனின் தரிசனம் அருமை. கொலு பொம்மைகளில் அம்பாள் யானை மீது வரும் பவனி அழகோ அழகு. நன்றி அம்மா.

    ReplyDelete
  8. சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  9. நேற்று மதுரை!.. இன்று காஞ்சி!.. அழகோவியமான படங்களுடன் அருமையான தகவல்கள்!..

    ReplyDelete
  10. எத்தனை தகவல்கள் எத்தனையெத்தனை படங்கள்.அனைத்தும் அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. நேற்று மதுரை!.. இன்று காஞ்சி!.. அழகோவியமான படங்களுடன் அருமையான பதிவு!..

    ReplyDelete
  12. அருமையான அம்மனின் செய்திகள். படிக்கப் பரவசமூட்டுகிறது. படங்கள் என்னவென்று வர்ணிப்பது. எல்லாமே அருட் ப்ரகாசம்தான்.
    நவராத்ரி. காணக்கண் கோடி போதாது. காமாக்ஷிஅம்மன் விருத்தம்,வடிவுடைய அம்மன் விருத்தங்கள் தமிழில் சொல்லும் போதுஅஸாத்தியமான உருக்கவும்,பக்தியும் ஏற்படுவதை வார்த்தைகளில் சொல்லி முடியாது. பதிவை ரஸித்தேன். அருமை

    ReplyDelete
  13. அனைத்தும் அருமை. நவதானியக் கோலம் சூப்பரோ சூப்பர். குயிலிங் செய்யலாம்போல இருக்கு அப்படியே.

    ReplyDelete
  14. மறுபடியும் அழகான படங்களுடனும் விளக்கங்களுடனும் ஒரு அருமையான பதிவு பகிர்வு.

    ReplyDelete
  15. ”நகரேஷு காஞ்சியில்
    நவராத்திரி அலங்காரம்”

    ஆஹா! மனதை வருடிடும், தங்கமான மணம் மிக்க தலைப்”பூ”.

    ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  16. படங்கள் அத்தனையும், பொறுமையாக, அருமையாக மிக அழகாகத் தேர்ந்தெடுத்துக்கொடுத்துள்ளீர்கள்.

    மேலிருந்து மூன்றாவது படத்தில் பத்மாஸன யோக நிலையில் உள்ள அன்னை காமாக்ஷி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    ஸர்வ லக்ஷணங்களும் அமைந்துள்ள ஸாந்த ஸ்வரூபமான அழகான படம், அது. ;)

    >>>>>

    ReplyDelete
  17. ஸ்ரீ காமாக்ஷி தேவிக்கான இதர நாமாவளிகள் படித்து மகிழ்ந்தேன். எல்லாமே அழகோ அழகு தான். ;)

    >>>>>

    ReplyDelete
  18. ஸ்தூல, சூட்சும, காரண வடிவில் உள்ள காமாக்ஷியின் மூன்று வடிவுகள் பற்றியும், கண் சிமிட்டிடும் காமாக்ஷி பற்றியும் சொல்லியுள்ளது, நல்ல சுவாரஸ்யமான இனிக்கும் தகவல்கள். ;)

    >>>>>

    ReplyDelete
  19. நவ தான்யங்களில் சிலவற்றைப் பயன்படுத்தி அமைத்துள்ள கோலப்படமும், பிரஸாதங்கள் படங்களும் நல்லாயிருக்கின்றன. ;)

    >>>>>

    ReplyDelete

  20. கீழிருந்து ஆறாவது படம் - கொலு - அருமை, புதுமை. மகிழ்ச்சி. ;)

    காஞ்சி காமாக்ஷி + மதுரை மீனாக்ஷி பற்றி அனைத்தும் அறிந்து கொண்டோம்.

    அடுத்து வருபவர் காசி விசாலாக்ஷியாக இருக்குமோ என்னவோ!

    பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    -oOo-

    ReplyDelete
  21. சிறப்பான பகிர்வு! அன்னை காமாட்சி பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை! நன்றி!

    ReplyDelete
  22. நேற்று மீனாட்சி அம்மனின் கண்கொள்ளாக் காட்சி. இன்று காமாட்சியின் ஆட்சி உங்கள் பதிவில். அருமை! அருமை! நவராத்திரி நாயகியரின் உலா பார்க்க காத்திருக்கிறோம். நன்றி!

    ReplyDelete
  23. Ahahahhha
    Sitting at home you making visit kolus.
    Thanks Thanks thanks alot dear,
    viji

    ReplyDelete