மைசூர் அரண்மனையின் பலராமா வாயிலில் நந்தி பூஜை செய்து கர்நாடக மக்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்து வழிபட்டு தசரா விழா ஆரம்பிக்கப்படும்..!.
மைசூரில் பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்..
அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரியைச் சுமந்து நின்றிருக்கும் யானை அர்ஜுனா தலைமையிலான யானை ஊர்வலத்தை மலர்தூவி பூஜை செய்து தொடங்கப்படும்..!
வரலாற்றுச் சிறப்புமிக்க தச்ரா விழாவில், நாகரஹோளே வனப்பகுதியிலிருக்கும் யானைகள் 70 கி.மீ. நடந்துவந்து பங்கேற்கும்.
பலராமன், அபிமன்யு, கஜேந்திரா, கங்கா, அர்ஜுனா, சரளா, மேரி என்ற பெயர் கொண்ட யானைகள் வழக்கமாக தசராவில் கலந்து கொள்ளும். யானைகளுக்கு மக்கள் மகத்தான வரவேற்பளிப்பர்.
எப்போதும் பொலிவுடன் திகழும் மைசூரின் தசரா திருவிழா கர்நாடக கலைஞர்களுக்கும் கலைகளுக்கும் முக்கியத்துவம் தரும் பெருவிழாவாக போற்றப்படுகிறது.
ஜம்புசவாரி எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவற்றின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுகளும் சிறப்பிடம் பெறுகின்றன..!
பலராமா எனும் மூத்த யானைக்கு தங்க முகபடாம் அணிவிக்கப்படும். 900 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் அணிந்து, பலராமா கம்பீரமாகக் காட்சியளிக்கும்.
தசரா வைபவத்திற்காக காட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட யானைகள் நகரத்தின் நெரிசல்களுக்கிடையே தினமும் 6 கி.மீ. பாகன்களின் கட்டளைக்கேற்ப நடந்துகொள்ளும். அப்போது மைசூர் வீதிகளில் ‘மைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா!’ (மைசூரின் தசராதான் எத்தனை அழகு!) என்ற பாடல் வீதிகளில் ஒலிக்கிறது.
தசரா துவங்கும் முன் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள்.
தசரா பண்டிகையின் போது மைசூர் அரண்மனையை அலங்கார விளக்குகளால் ஜொலிக்க செய்வார்கள்.
மொத்தம் 98,260 பல்புகள் அலங்கார ஒளிபரப்பி ஆனந்தப் பரவசப்படுகின்றன.
இதற்காக ஒரு மணிநேரத்திற்கு 1 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் மின் தட்டுப்பாடு நிலவுவதால், இந்த அலங்கார
பல்புகளை ஒளிர செய்ய ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
இதன்படி டைனமோக்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய, 10 சைக்கிள்கள் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிள்களை ஓட்டி, மின்சார உற்பத்திக்கு உதவுகிறார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் அரண்மனையில் உள்ள எல்லா அலங்கார பல்புகளையும் ஒளிர வைக்க முடியாதுதான். ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகளை ஒளிரச் செய்ய முடியும்.
மூன்று ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கும் பூஜாகுனிதா, தொல்லுகுனிதா, கோலாட்டம், கம்சாலே, கருடகொம்பே, நகரி, கேலுகுதிரே, லம்பானி நடனம் , கிராமிய, கலாசார நடனங்கள், ஆடல் பாடல்கள் மக்களை உற்சாகப்படுத்துகின்றன...
தசரா விழாவின் அங்கமாக நடைபெறும் யானைகள் ஊர்வலத்தைக் காண இந்தியா தவிர, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளமென மைசூரில் திரண்டுயானைகள் ஊர்வலத்தை கண்டு ரசிப்பார்கள்..!
இடம் கிடைக்காதவர்கள் மரக்கிளைகள், கம்பங்கள், உயரமான கட்டடங்கள், பஸ்கள் மீது நின்று பார்த்து மகிழ்வார்கள்..1
பன்னி மண்டபத்தில் நடைபெறும் தீப்பந்த ஊர்வலம் தசரா விழாவின்
நிறைவைக் குறிக்கும்
இணையத்தில் 360º வியூவில் கட்டிடக்கலையில் அசத்தும்
மைசூர் அரண்மனையின் 360º வியூ.மிகச் சிறந்த முறையில்
வடிவமைக்கப் பட்டுள்ளது.
வடிவமைக்கப் பட்டுள்ளது.
21 பணரோமிக் படங்களை உள்ளடக்கியது. சிறந்த ஆடியோ விளக்கமும் உண்டு..
ஆங்காங்கே உள்ள கேமராவை க்ளிக் செய்து மேலதிக விவரத்தை பார்க்கலாம்.
அரண்மனையின் உள்ளே உள்ள ஒவ்வொரு அறையும், அதன் விளக்கமும்
மிக அருமை.
மிக அருமை.
அசத்தலான ஆர்க்கிடேக்ச்சர்! நேரில் பலரும் பார்த்திருந்தாலும்,
இந்த தளத்தில் பொறுமையாக ரசிக்கலாம்.
இந்த தளத்தில் பொறுமையாக ரசிக்கலாம்.
அவசியம் பாருங்கள்..
.
ரஸித்தேன். அனைத்தும் அருமை.
ReplyDeleteதசரா கொண்டாட்டங்களை ரசித்தேன்.அரண்மனையின் பிரம்மாண்டம் நேரில் சென்றிருந்தபோது பார்த்து பிரமித்துவிட்டேன். அத்தனை அழகு.வாழ்த்துக்கள்.நன்றி.
ReplyDeleteகோலாகல தஸரா கொண்டாட்டத்தில் இன்று எங்களை மைசூருக்கு அழைத்துச்சென்றது மகிழ்வளிக்கிறது.
ReplyDeleteஎவ்வளவு வேலைகள் இருந்தாலும், எவ்வளவு மனக்கவலைகள் + வேதனைகள் இருந்தாலும், தங்களின் பதிவினைப் பார்க்காமல் என்னால் இருக்க முடிவது இல்லை.
பார்த்தால் மட்டுமே ஏதோ ஒரு ஆறுதல் கிடைப்பதாக உணர்கிறேன்.
>>>>>
மைசூர் அரண்மனைக்குள் நான் நேரில் சென்று சுற்றிப்பார்த்து மிகவும் வியந்து போய் உள்ளேன்.
ReplyDeleteஅதை இங்கு ஜகத்ஜோதியாக காட்டியுள்ளது மேலும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
>>>>>
மேலிருந்து கீழ் ஏழாவது வரிசையில் Black & White படத்தில், யானைகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக அழகாக அணிவகுத்துச்செல்லும் படம் மிகவும் சூப்பராக உள்ளது.
ReplyDeleteதும்பிக்கையால் முன்னே செல்லும் யானையாரின் வாலைப் பிடித்து இழுக்காமல் சமத்தாகச் செல்கிறது, பின்னே செல்லும் யானை.
அதுபோல பின்னே வரும் யானையாரிடம் வாலாட்டாமல் செல்கிறது முன்னே போகும் யானை.
எவ்வளவு ஒரு கட்டுப்பாடு!!!!!
சமத்தோ சமத்து .... கட்டிச் சமத்து தான்.
நூல் பிடித்தாற்போல அழகாக ரெளண்ட் ஆக வளைந்து செல்கின்றனவே ! ;)))))
>>>>>
ReplyDeleteபலராமா - 900 கிலோ தங்கக்கவசம் - கம்பீரம்.
பலராமா - பெயரிலேயே ஓர் கம்பீரமான பலம் - அதனால் தான் 900 கிலோ ஆபரணங்களைத் தாங்க முடிகிறது. ;)
>>>>>
சுற்றுலா பயணிகளையே சைக்கிள் ஓட்ட வைத்து மின் உற்பத்தி செய்வது நல்ல ஐடியா தான்.
ReplyDelete>>>>>
மைசூர் அரண்மனைப்படத்தை 360 டிகிரி படத்தில் ஏற்கனவே பார்த்துள்ளேன்.
ReplyDeleteஇப்போதும் காட்டியுள்ளதில் மகிழ்ச்சியே.
>>>>>
இன்றைய தங்களின் அற்புதமான பகிர்வுகள் அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ReplyDelete>>>>>
ரசிக்க வைக்கும் படங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் படங்களும் தகவல்களும் மைசூரின் தசராவுக்கே எங்களை அழைத்துச் சென்றது. பாராட்டுகள்.
ReplyDeleteஇத்தனை விரிவாக எவரும் சொன்னதில்லை!.. அருமை!..
ReplyDeleteபடங்களும் விவரங்களும் அருமை..அந்த ஜம்போசவாரி யானைகள் பார்க்க்க அலங்காரம் அழகு ஆனா அவைகளின் அவஸ்தைகள் சற்று மனதுக்கு வேதனைதான்
ReplyDelete15 வருடங்கள் முன்பு மைசூருக்கு வந்து அங்கு இவ் அரண்மணையைப் பார்த்து வியந்ததுண்டு. இப்போ இன்னும் மெருகாக்கி வைத்துள்ளனர் எனவும் அறிந்தேன்.
ReplyDeleteஉங்கள் படங்களும் பதிவும் வியக்கவைக்கின்றன... அருமை!
மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
சைக்கிள் டைனமோ மூலம் விளக்குகளை எரியச்செய்யும் விவரத்திலிருந்து பல பல தகவல்களை இப்பதிவில் தந்திருக்கிறீர்கள். பதிவிற்கு அழகு சேர்க்க பல படங்களையும் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. மொத்தத்தில் தசரா கொண்டாட்டத்தைப் போலவே இப்பதிவும் ஜொலிக்கிறது.
ReplyDeleteதஸரா கொண்டாட்ட தகவல்களும் படங்களும் அருமை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeletephotos are super
ReplyDeleteதசரா கொண்டாட்டமும் பதிவும் கோலாகலம். நன்றி அம்மா.
ReplyDeleteஇரண்டு வருடங்களுக்கு முன் எனக்கு வந்திருந்த மைசூர் பாலசின் 360deg வீடியோவை சில வலை நண்பர்களுடன் பகிர்ந்திருந்தேன். . அது இன்னும் இருக்கிறதா என்று தேடவேண்டும். வயதும் சக்தியும் இருக்கும் போதே இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். காலங் கடந்தால் முடியாது. இப்போதெல்லாம் டீவியில் காண்பதோடு சரி. படங்கள் அருமை. பகிர்வு அழகு. நன்றி.
ReplyDeleteமைசூர் தசரா விழாவை அருமையாக தொகுத்து வழங்கி விட்டீர்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி வாழ்த்துக்கள். வீடியோக்களை நிதானமாய் பார்த்து ரசிக்கிறேன்.
நன்றி..
அருமைப் படங்கள்
ReplyDelete- யானை ஊர்வலம் அழகு.
மிக்க நன்றி.
இறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
மைசூர் தசரா கொண்டாட்டங்கள் விவரமான செய்திகள். அழகான படங்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteMy sisters grand daughter newly married and went to Mysore. She explained via phone these kolakalam. Now I visuvalised here by you.
ReplyDeleteVery Very nice.
Thanks thanks a lot. I enjoyed.
thanks for sharing
ReplyDelete