

![]() | |||||||

மரகதவல்லி மீனாட்சி மதுரை நகரை ஆளுகிறாள்
கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில்வைத்து
அஞ்சுக மொழி உமையாள் சிம்மாசனத்தில் வீற்றிருந்தாள்
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் ஆனந்தமாய்
மாணிக்க தேரினில் தேனாள் மரகதப்பாவை வந்தாள் ...
வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்
வானவர் பூமாரி பொழிந்திடவே
சிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்
அழகிய மாநகர் மதுரையிலே.மீனாட்சி வந்தாள்
தேனமர் சோலையாம் கதம்பவனம்
அங்கு வானளாவும் தங்க கோபுரம் எங்கும் காணும்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி கலை விழா கொலு கண்காட்சி 108 சிவதாண்டவ சிலைகள் ,மதுரையின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், "தச தத்துவம் விளக்கும் பொம்மைகளும் வைக்கப்படுகின்றன.
பூஜை காலங்களில், தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள், மூலஸ்தான அம்மனுக்கு செய்யப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்குதான் அர்ச்சனை செய்யப்படும்.

நவராத்திரி விழாவின்போது அன்னை மீனாட்சி விஷேச சக்தி வாய்ந்து திகழ்வதால் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

கொலு அரங்கில் சிறப்பு அலங்காரத்துடன்அன்னையின்
அருட்கோலம் கண்கொள்ளாக்காட்சியாகத்திகழ்கிறது..

ராஜராஜேஸ்வரி அலங்காரம் .

முருகனுக்கு வேல் வழங்குதல் அலங்காரம்

தட்சிணாமூர்த்தி அலங்காரம்,
ஊஞ்சல் அலங்காரம்
மீனாட்சி திருக்கோலம்,

சிவசக்தி அலங்காரம்,
மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்,
சிவ பூஜை அலங்காரம்,

விஜயதசமி அலங்காரம்

என அன்னை அருட்காட்சி அளிக்கிறார்.
கொலு காட்சி பொம்மைகளை கொண்டு திருக்கோயிலில் அம்மன் சன்னதி, வெளிப் பிரகார பகுதிகளில் கொலு காட்சிக்கு வைக்கப்படும்.

அம்மன் சன்னதி வெளிப்பிரகார மேற்பகுதி கலை வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டு , மூலவர் அறையில் பிரதான கொலு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்கும் வகையில் அமைக்கப்படும்.
கொலுவில் 3 அங்குலம் முதல் 3 அடி வரையிலான சுவாமி சிலைகள்
இடம் பெறும்.
காட்சியில் நடுநாயகமாக அருள்மிகு மீனாட்சி அம்மன், சொக்கநாதர், அதிகார நந்தி இடம் பெறுகின்றனர்.
பெரிய அளவிலான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, சப்த் கன்னியர்,
ரிஷப வாகனர், தட்சிணாமூர்த்தி, பூதகணங்கள், தத்தாத்ரேயர், தசாவதாரம், அஷ்டலட்சுமி, விஷ்ணு, விஷ்வரூபம் என பல கடவுளர் திருவுருவ பொம்மைகளும் கொலுவில் இடம் பெறும்..
திருக்கோயில் திருவிழாக்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி பவனி வரும் தங்க, வெள்ளி முலாம் பூசப்பட்ட வாகனங்களும் கொலுவில் இடம் பெறும்..


கோயில் பிரகாரங்கள், பொற்றாமரைக்குளம், கோபுரங்கள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிந்தை கவரும் ...
கொலு மண்டபத்தில் 12 அடிக்கு 12 அடி என்ற அளவில் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள பொற்றாமரைக் குள வடிவமைப்பு சிறப்பு..!


உள்ளம் கொள்ளை கொண்டு போகும் அற்புத அழ்குடன் படங்கள் கண்கொள்ளாக் காட்சி. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅழகான கருத்துரைக்கும் பாராட்டுரைகளுக்கும்
Deleteமனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...!
அற்புதமான படங்கள்... அன்னை மீனாட்சியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்...!
Deleteகண்கள் மதுரை மீனாட்சி அம்மனின் படங்களை விட்டு அகல மறுக்கின்றன. அவ்வளவும் அற்புதமான அழகு அம்மனின் படங்கள்.அழகான படங்களுடன் பகிர்வினைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.
ReplyDeleteஅன்னை மீனாட்சியின் அழகைக் கண்டுகளித்து அளித்த அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்...!
Deleteஅன்னை மீனாட்சியின் தரிசனம் மெய் சிலிர்க்க வைக்கிறது. நன்றி அம்மா
ReplyDeleteஅருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்...!
Deleteexcellent pictures thanks for sharing info about meenakshi amman alangaram
ReplyDeleteஅருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்...!
Deleteநேரில் சென்று தரிசித்து போல
ReplyDeleteஅற்புதமான படங்கள். ஊஞ்சல் அலங்காரப் படம்
கொள்ளை அழகு.
அருமையான அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்...!
Deleteஅழகிய வண்ணப்படங்களின் அணிவகுப்பு அதிஅற்புதம். பாராட்டுக்கள்,
ReplyDeleteஅழகான கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் இனிய நன்றிகள்...!
Deleteஅழகான படங்கள். சிறப்பான தகவல்கள். மீனாட்சியை தரிசித்து பல வருடங்கள் ஆகி விட்டது. வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
ReplyDeleteஅழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்...!
Deleteவிரைவில் தரிசனம் கிட்ட பிரார்த்தனைகள்..!
பார்த்திட்ட பேரழகுப் படங்களினால்
ReplyDeleteவார்த்தைகள் வசமிழந்து நிற்கின்றேன்...
பகிர்வினுக்கு மிக்க நன்றியும் வாழ்த்தும் சகோதரி!
கருத்துரைக்கும்,வாழ்த்துரைக்கும்
Deleteமனம் நிறைந்த இனிய நன்றிகள் சகோதரி ...!
நவராத்திரி நாயகி என் அன்னை மீனாக்ஷிக்கு அடியேனின் வந்தனங்கள்.
ReplyDelete>>>>>
கருத்துரைக்கு இனிய நன்றிகள்...!
Deleteபடங்களில் நான்கு இதுவரை திறக்கவே இல்லை.
ReplyDeleteதிறந்துள்ளவற்றில் கடைசி மூன்று படங்களும் + தங்க வெள்ளி முலாம் பூசப்பட்ட யானையும் நல்ல அழகோ அழகு.
கீழிருந்து இரண்டாவது படம் பியூட்டிஃபுல் கவரேஜ். ;)))))
>>>>>
அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்...!
Deleteமேலிருந்து கீழ் ஐந்தாவது படத்தில் வைரமுடியும், தங்கக்கிளியும், மாதுளை முத்துக்கள் கலரில் காதுகளின் தாடங்கமும் அதற்கேற்ற பாடலும் அருமையோ அருமையாகக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்...!
Deleteகீழிருந்து நாலாவது படத்தில் உள்ள ரிஷபத்தின் முகத்தில் உயிரூட்டம் உள்ளது. படத்தேர்வு + பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி ;)
ReplyDelete>>>>>
உயிரோட்டமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
Deleteஅருமையான பதிவுக்கும், படங்களுக்கும், விளக்கங்களுக்கும் நன்றியோ நன்றிகள்.
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
சகல செளபாக்யங்களுடன் நீடூழி வாழ அம்பாள் மீனாக்ஷி என்றும் நமக்கு அருள் புரியட்டும்.
-oOo-
பாராட்டுக்களுக்கும் ,நல்வாழ்த்துகளுக்கும்
Deleteமனம் நிறைந்த நன்றிகள்..!
நவராத்திரி நாயகி ஸ்ரீ மீனாட்சி அம்மனின் விதவிதமான திருக்கோலங்கள் மிகவும் அற்புதம். தங்கம், வெள்ளி முலாம் பூசிய யானை கண்ணைக் கவர்ந்து, மனதையும் கவர்ந்தது.
ReplyDeleteமனம் கவரும் கருத்துரைக்கு இனிய நன்றிகள்....
Deleteஇனிமேல் உங்களைக் கோபித்தே தீருவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பின்னே? என்ன சொல்லித்தான் பாராட்டுவது என்றே புரியாத அளவுக்கு எங்களைப் பிரமையில் ஆழ்த்திவிடுகிறீர்களே! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
ReplyDeleteநன்றி..! நன்றி...!! ஆழ்ந்த கருத்துரைகளுக்கு
Deleteமன்ம நிறைந்த இனிய நன்றிகள்..!
மீண்டும் அன்னை மீனாட்சியைத் தரிசிக்கச் செய்த தங்களுக்கு மனம் உவந்த நன்றிகள்!..
ReplyDeleteபடங்களாகத் தோன்றவில்லை. நேரில் பார்ப்பது போல என்ன அற்புதமாக இருக்கிறது. நவராத்திரி தரிசனம். மிக்க நன்றியம்மா. அன்புடன்
ReplyDeleteAha......
ReplyDeleteEthanai alagu....
eathani alagu....
Ullam kollai kollum katchikal.
Thanks dear.