ஐப்பசி மாதம் பௌர்ணமி திதியில் பிறப்பதால்
மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது.
துலா ஸ்நானமும், அன்னாபிஷேகமும் ஒரே நாளில் நடைபெறும் வைபவங்கள் என்பதால், ஐப்பசி மாதத்திற்கு மேலும் சிறப்பைக் கூட்டுகின்றன.
மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது.
துலா ஸ்நானமும், அன்னாபிஷேகமும் ஒரே நாளில் நடைபெறும் வைபவங்கள் என்பதால், ஐப்பசி மாதத்திற்கு மேலும் சிறப்பைக் கூட்டுகின்றன.
ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை
துலா ஸ்நானம் என்பர்.
துலா ஸ்நானம் என்பர்.
துலா மாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும்.
அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன.
துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள்.
துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்.
அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டு மென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.
ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் இறைவன் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது.
தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.
காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்;
அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்பது புராணம்.
ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும்,
கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.
தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும்.
காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும்.
முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மகாவிஷ்ணுவிற்கு பற்றிய "வீரஹத்தி' தோஷம் போக்க, காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று துலா ஸ்நானம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றார் என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.
ஐப்பசி மாதம் துலா ஸ்நானம் போற்றப் படுவதுபோல், ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகமும் சிவாலயங்களில் சிறப்பிக்கப் படுகின்றன.
இதுவரை அறியாத துலா ஸ்நான மகிமை குறித்து
ReplyDeleteதங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்
படங்களுடன் பகிர்வு அருமை
வாழ்த்துக்கள்
காவிரியின் துலாக்கள மகிமைகள் சிறப்பு. கங்கையும் இந்த மாத அமாவாசையில் காவிரியில் நீராடி மக்களால் தனக்குச் சேர்ந்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்ற செய்தியும் இப்போதுதான் அறிந்தேன்.
ReplyDeleteநிறைய செய்திகள் தெரிந்துகொண்டேன்...
ReplyDeleteஅறியாத தகவல்கள் அறியத்தந்தமைக்கு
நன்றிகள் பல..
விளக்கம் மிகவும் அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதுலா ஸ்நானம் என்றால் என்ன என்பதனையும், துலாஸ்நானம் செய்ய வேண்டிய இடங்களையும் அழகாகச் சொன்னீர்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteஅறியாதன அறிந்தேன். ரீ புகைப்படம் அருமை, நன்றி சகோதரியாரே
ReplyDeleteஉலகிலுள்ள புன்னிய ந்திகள் எல்லாம் துலாமாத த்தில் காரியில் நீராடி மக்கள் தங்களிடம் கரைத்த பாவக்கறைகளை கழுவி புனிதமடைகின்றன்
ReplyDeleteஅப்பேற்பட்ட காவிரியில் ஸ்நானம் செய்வதால் எவ்வளவு புன்னியம் கிடைக்கும் என்பவற்றை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி
நல்ல தரிசனம் அம்மா!!
ReplyDeleteதெரியாத பல விடயங்களை தங்கள் பதிவினூடாக அறிந்து கொள்ள முடிகிறது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteதுலாதரிசன பகிர்வு,படங்கள் அனைத்தும் அருமை. நன்றி.
காவிரி வாழ் ஊர்க்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் .
ReplyDeleteநமக்கெல்லாம் இந்த பதிவே போதுமே .
துலா நீராடல் பற்றிய விளக்கம்
ReplyDeleteகாவேரியின் 12 மறு பெயர்களும் மிக அருமை அறிந்து மகிழ்ந்தேன்.
கட்டுரைகள் வாசிக்கும் போது இப் பெயர்கள் குளப்பம் தநதது எது எதுவென்று அறிய முடியாது..
இன்று தெளிவு கிடைத்தது. மறுபடியும்.
மிக மிக நன்றி. இறையருள் நிறையட்டும்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
என்னவெனச் சொல்வது... எத்தனை மகிமைகள்.. அறிந்தே இராத அற்புத தகவல்கள்.. படங்கள்...
ReplyDeleteபார்த்துக்கொண்டே இருக்க இந்த ஜென்மம் போதுமோ...
மிக மிக அருமை!
உங்கள் பணி மேலும் ஓங்க உங்கள் நலன் சிறப்பாக
என்றும் இருக்க வேண்டுகிறேன் சகோதரி!..
என் அன்பான நன்றியும் வாழ்த்துக்களும்!..
ஐப்பசி துலா ஸ்நான மகிமையைப் புட்டுபுட்டு வைத்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
ReplyDelete>>>>>
ஐப்பசி மாதம் முதல் தேதி,
ReplyDeleteவெள்ளிக்கிழமை,
துலா ஸ்நானம்,
அன்னாபிஷேகம்,
பெளர்ணமி திதி,
தங்களின் இந்தப்பதிவு
என எல்லாமே சேர்ந்து இன்றைய தினம் ’ஆயிரம் பெளர்ணமி நிலவுகள்’ சேர்ந்தது போல ஒரேயடியாக ஜொலிக்கின்றன. ;)))))
>>>>>
துலா ஸ்நானம் காவிரியில் செய்துவிட்டு, மூன்று கோடி முன்னோர்களையும் கடைத்தேற்றிவிட்டு வர தாமதமாகி விட்டது.
ReplyDeleteநேற்று தர்ப்பண தினமானதால் நேற்றும் மிகவும் தாமதமாகவே வர முடிந்தது.
>>>>>
காவிரியின் நீர்த்திவலைகள் அனைத்தும் புண்ணிய தீர்த்தமா !!!!!
ReplyDeleteஅங்குள்ள மணல்கள் அனைத்தும் தேவதைகளா !!!!!
கங்கை முதலான உலகிலுள்ள அனைத்து நதிகளும் காவிரியில் நீராடி தங்களிடம் சேர்ந்துள்ள பாபங்களைக் கழுவிக்கொள்கின்றனவா !!!!!
அடடா! எவ்ளோ விஷயங்களைக்கூறி ஆச்சர்யப்படுத்துகிறீர்கள் !!!!!!
காவிரிக்கரையிலிருந்துகொண்டு இவற்றையெல்லாம் தங்கள் மூலம் கேட்கவே ஆனந்தமாக உள்ளது. ;)
>>>>>
காவிரிக்கு தக்ஷிண கங்கை என்பது உள்பட 12 திருநாமங்களா !!!!!
ReplyDeleteவெரிகுட். நல்ல தகவல்கள் தான்.
>>>>>
சந்துனு மஹாராஜா பீஷ்மரைப் புத்திரனாக அடைந்தது மட்டுமா!
ReplyDeleteபீஷ்மரின் இளமையையும் அல்லவா வாங்கிக்கொண்டு, கடைசிவரை சந்துஷ்டியாக விளங்கியுள்ளார் ! ;)
அடேங்கப்பா, பீஷ்மர் என்பவர் சாதாரணமானவரா ? எவ்வளவு தியாகங்கள் செய்து, சத்திய பிரமாணங்கள் செய்தவர் !!!!!
அவரைப்போன்ற ஓர் ஸத் புத்திரனை அடைய காவிரியும், ஸ்ரீரங்கநாதரும் தான் காரணமா !!!!! அருமை.
அர்சுனனுக்கு சுபத்ரா கிடைத்ததும் காவிரி + ஸ்ரீரங்கநாதன் கிருபையினாலா !!!!! அழகோ அழகான தகவல்கள். ;)
>>>>>
கங்காதேவியே காவிரி துலா ஸ்நானம் செய்ய வருகிறாளா !!!!!
ReplyDeleteஅச்சா, பஹூத் அச்சா !
>>>>>
துலாக்காவேரி மஹாத்மியத்தை வெகு அழகாக தங்களுக்கே உரித்தான பாணியில் விளக்கியுள்ளது அருமை.
ReplyDelete‘முடவன் முழுக்கு’ பற்றி ஏனோ கூறாமல் விட்டு விட்டீர்கள்.
ஐப்பசி கடைசி நாள் தனிப்பதிவாக வருமோ என்னவோ !!!!!
>>>>>
மிக அழகான படங்களுடன் அற்புதமான தகவல்கள்.
ReplyDeleteஇறுதியில் காட்டியுள்ள ஸ்ரீரங்கம் இராஜகோபுரம் போல நாளுக்கு நாள் ஆன்மிகப் பதிவுகளில் நன்கு உயர்ந்து கம்பீரமாக நிற்கிறீர்கள்.
என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
திருஷ்டியாகிவிடுமோ என நான் என் பின்னூட்டங்களை மிகவும் அடக்கி வாசித்து வருகிறேனாக்கும்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
-oOo-
துலா ஸ்நான தகவல்கள் மிகவும் அருமை! கங்கையே காவிரியில் நீராடுகிறாள் என்றால் எத்தகைய புனிதம் மிக்கது காவேரி நதி! அருமையான தொகுப்பு நன்றி!
ReplyDeleteகாவிரிக்கு இருக்கும் பல பெயர்களைத் தெரிந்து கொண்டேன். காவிரி உற்பத்தியாகும் தலைக்காவேரியிலும் இந்த மாதம் காவிரி 'உத்பவ' நிகழ்ச்சி நடைபெறும்.
ReplyDeleteஅதைப்பற்றி தனிபதிவு போடுகிறீர்களா? அல்லது ஏற்கனவே போட்டுவிட்டீர்களா?
துலா ஸ்நான மகிமை மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!
ஐப்பசி துலா ஸ்நானம்! பல நல்ல தகவல்கள். காவேரியின் சிறப்பும், படங்களும் அழகு. பாராட்டுக்கள். நன்றி.
ReplyDeleteவணக்கம் அம்மா,
ReplyDeleteஇதுவரை அறியாத துலா ஸ்நானம் பற்றிய செய்திகளையும் காவிரியின் சிறப்பை புராணச் செய்திகளின் மூலமே விளக்கியுள்ளது சிறப்பு. பதிவைப் படித்தவுடனே திருவரங்கம் போக வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அருகில் என்பதால் விரைவில் சென்று வருவேன். பகிர்வுக்கு நன்றீங்க அம்மா.
நிறைந்த தகவல்களுடன் அழகிய பதிவு.. மகிழ்ச்சி!..
ReplyDeleteநல்ல தகவலுடன் அழகான படங்கள் என சிறப்பானதொரு பகிர்வு அம்மா,
ReplyDeleteappa....
ReplyDeleteNeril ponal kuda eppadillam parka mudimo ennvo...
Your pictures taking there directly/
.
thanks dear.
viji