ஓம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய
தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே
தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!
யட்சராஜனே,குபேரனே,விச்ரவசின் புதல்வனே,செல்வங்களின்
அதிபதியே என் அவசியமான தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள
தேவையான செல்வத்தை எனக்கு அருளச் செய்வீராக.
என்னும் குபேர மந்திரம் தினம் தோறும் பாராயணம் செய்து
குபேர அருளை பெறலாம் .
குபேர காயத்ரி :
ஒம் யஷேசாய வித்மஹே
வைஸ்ரவனாய தீமஹி
த்ந்நோ ஸ்ரீத: ப்ரசோதயாத்
குபேரன் புகைப்படம் வாங்கி பூஜைஅறையில் வைத்து
தினமும் 27 முறை காயத்ரி மந்திரம் ஜபிக்க வேண்டும் ..!
.குறையாத செல்வம் தரும் குபேர காயத்ரி
ஓம் யக்ஷராஜாய வித்மஹ
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்
மூல மந்திரம்;
ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம:
து தி :
ஒம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்
குபேரனே,நர வாகனனே, வடதிசைக்கதிபனே,கதாயுதனே,விருப்பங்கள்
அனைத்தையும் அளிப்பவனே உன்னைத் தியானிக்கிறேன்.
ஓம் க்லீம் ல்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே
மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா!!
பொருள்; ஸ்ரீ மகாலஷ்மியின் பூரண அருள் பெற்ற குபேரனே,எனது
வறுமை நீங்கிட தேவையான செல்வத்தை அளிப்பீராக.
குபேரன் தியான சுலோகம் சொல்லி மந்திரஜபம் செய்தால் நல்லது..
லட்சுமி குபேர வழிபாட்டால் திடீர் பணவரவு,வீடு,
வாகனங்கள் உண்டாகும்.தன லாபம் உண்டாகும்..
குபேரனின் தியானம்;
மநு ஜவாஹ்ய விமாந வரஸ்திரம் கருடரத்ந
நிபம் நிதி தாயகம் சிவசகம் முகுடாதி விபூஷதம்
வரகம் தந்தம் பஜ துந்திலம்
மனிதர்களால் தாங்கப்படும் விமானத்தில் வருபவரும், கருடன் கண்
போன்ற ரத்னம் அணிந்தவரும், நிதிகளின் தலைவரும்
சிவபெருமானின் தோழருமான குபேரனை துதிக்கின்றேன்.
பெரும் ராஜயோகத்தை தரக்கூடிய குபேரன் சிவபூஜையில் விருப்பம்
கொண்டவராக இருந்தாலும் , ராஜராஜேஸ்வரியின் பஞ்சதசீ மந்திரத்தைத்தான் செபித்த வண்ணம் இருப்பார் என்கிறது சிற்ப சாஸ்திரம்.
செல்வதை தரும் தரும் தனலக்ஷ்மியும், முன்பு இல்லாமல் போன தைரியத்தை தரும், வீர லக்ஷ்மியும் குபேரனிடம் வாசம் செய்கிறார்கள்.
குபேரனின் கருணை பார்வை கிட்டினால் ஏழை பணக்காரனாகலாம்.
எதுவும் இல்லாதவனை எல்லாவற்றையும் பெறலாம்.
செல்வச் செழிப்போடு வாழலாம்.
எந்த பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதி ராஜனாகிய குபேரனை வணங்கினால் தான் அப்போது செய்த பூஜையின் பலன் கிட்டும்.
லஷ்மி குபேர பூஜை தீபாவளி , அட்சய திரிதியை போன்ற விஷேச தினங்களில் செய்து வந்தால் வீட்டில் பணத் தட்டுப்பாடு இருக்காது
எந்த பணப் பிரச்சனைக்காக வேண்டுதலோ அதை கூறி விட்டு நாணயம் மற்றும் பூக்களைக்கொண்டு அன்னையில் திருமுன்பு பக்திபூர்வமான கோரிக்கைதான்.தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் அமைதி நிலவும். பணப் பிரச்சனை இருக்காது. செல்வம் நிலைக்கும்.
பூஜையின்போது நாம் கூற வேண்டிய த்யான சுலோகம் '' அம்மா, மகாலஷ்மித் தாயே , நீ எங்களுடைய வீட்டில் நிரந்தரமாகத் தங்கி எங்களைக் காத்தருள வேண்டும் என்பதாகும் ..!
மற்ற துதிகளைச்சொல்லி அர்ச்சிக்கலாம் ..!
திரேதா யுகத்தில் ஸ்ரீமுக ஆண்டு, ஐப்பசி மாதம், செவ்வாய்கிழமையில், பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்த குபேரனின். தந்தை விச்ரவசு தாயார் சுவேதாதேவி.
குபேரன் சிறந்த சிவபக்தன். தேவேந்திரனுக்கு இணையாக புஷ்பக விமானத்தில் பயணம் செய்த பெருமை பெற்றவர் குபேரன் ..!
தவம் செய்து வடதிசைக்கு அதிபதியாகவும்,
சிவனின் அருளால் அளகாபுரிக்கு அரசனாகவும் திகழ்ந்தான் ..!
குபேரன் அத்தாணி மண்டபத்தில் திருமுத்து குடையின் கீழ்தாமரை மலர் மீதுள்ள ஆசனத்தில் ஒரு கை அபய முத்திரை காட்ட வீற்றிருக்கும் குபேரனுக்கு இருபுறமும் சங்கநிதி, பத்மநிதி என்ற தனதேவதைகள் இருக்கிறார்கள்.
குபேரனின் இடப்புறம் அவரது தர்மபத்தினி இடக்கையில் கருநெய்தல் மலர்கள் ஏந்திய நிலையில் வீற்றிருக்கிறார்.
.இரத்தினங்களை வாயிலிருந்து உதிரும் கீரிப்பிள்ளையை வைத்திருக்கிறார்.
கீரிப்பிள்ளை பேராசை மற்றும் பகைமையின் சின்னமான பாம்பின் எதி்ரியாகும். இரத்தினங்கள் உதிரும் செயல் தானத்தை குறிக்கிறது.
செல்வம் விரைவாக கிடைக்க லட்சுமி குபேர பூஜை தீபஒளி திருநாளான தீபாவளி நாளன்று கொண்டாடப்படுகிறது
லஷ்மி குபேரன் படத்துக்கு முன்பாக தலை வாழையிலை வைத்து, அதன்மேல் நவதானியங்களை தனித்தனியாக பரப்பிவைக்க வேண்டும்.
நடுவில் சுத்தமான தண்ணீர் நிரப்பின ஒரு சொம்பை வைத்து, தண்ணீருக்குள் மஞ்சள் தூள் போட்டுக் கலக்க வேண்டும்.
சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு மட்டைத் தேங்காயை மஞ்சள் பூசி நிறுத்தினவாக்கில் வைக்கவேண்டும்.
வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்ற நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக சில்லறை நாணயங்களையும் சேர்த்து கலசத்துக்கு முன்பாக வைக்கவேண்டும்.
மஞ்சள் தூளில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலதுபக்க ஓரமாக வைக்கவேண்டும்.
அவருக்குக் குங்குமம் இடவேண்டும்.
தெய்வங்கள், கலசம் எல்லாவற்றுக்கும் பூ வைத்து, ஊதுவத்தி
ஏற்றி வைக்கவேண்டும்.
ஏற்றி வைக்கவேண்டும்.
பிறகு, தெரிந்த பிள்ளையார் பாடல், பிள்ளையார் மந்திரம்,
அஷ்டோத்திரம் என எதையாவது சொல்லலாம்.
மகாலஷ்மிக்கும் குபேரனுக்கும் தாமரை மலர்கள் உகந்தவை..
எனவே லஷ்மி குபேர பூஜையின் போது குபேர அஷ்டோத்ர சத நாமாவளி சொல்லும் போது 108 தாமலை மலர்களையோ தாமரை இதழ்களையோ பயன் படுத்துதல் விஷேசம் ..
தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளியிலான் சின்ன சின்ன தாமரை மலர்களும் கிடைக்கின்றன.
பூஜைகுப் பயன்படுத்திவிட்டு பின்பு எடுத்து பத்திரப்படுத்திவைத்து எப்போதும் பயன் படுத்திப் பலன் அடையலாம் ..!
ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்யும் நெல்லிகனியையும், வில்வ இலையையும் குபேர படத்தின் முன் வைத்து வெள்ளிகிழமையில் பூஜித்தால், குபேரனின் ஆசியால் வற்றாத செல்வவளத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
குபேர ஸ்துதி சொல்லலாம்;
குபேராய நமஹ, தனபதியே நமஹ என துதித்து, உதிரிப்பூக்களை கலசத்தின் மீது போட்டபடி அர்ச்சனை முடிந்ததும் வாழைப்பழம், காய்ச்சின பசும்பால், பாயசம் போன்றவற்றை லட்சுமி குபேரனுக்கு நைவேத்யமாகக் காட்டி, கற்பூர தீபாராதனையோடு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.
தாம்பூலத்தில் தட்சணை வைத்து, யாராவது ஏழை சுமங்கலிப்
பெண்ணுக்குத் தந்தால் கூடுதல் விசேஷம்
பெண்ணுக்குத் தந்தால் கூடுதல் விசேஷம்
எளிமையாக லட்சுமி குபேர விரதத்தைக் கடைபிடித்தால் நிம்மதியாக வாழவும், நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் போதுமான செல்வத்தை அருள்வார்கள் லட்சுமியும் குபேரனும்!
நமது வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் அகலவும், காரியத்தடைகள் நீங்கவும், கடன் பிரச்னைகளிலிருந்து மீளவும், இல்லத்தில் வளம் கொழிக்கவும், செல்வம் செழிக்கவும் லட்சுமி குபேரன் ஆசி தருவான்!
பூஜையின் போது ஸ்ரீ ஸ்துதி மிகவும் விஷேசமானது ..!
1..ஓம் நமோ லட்சுமியை மகாதேவ்யை பத்மாயை சததம் நம!
நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம!!
2.த்வம் சாட்சாத் ஹரி ஷஸ்தா சுரே ஜேஷ்டா வரோத்பவா!
பத்மாட்சீ பத்ம சம்சா தாநா பத்ம ஹஸ்தா பராமயீ!!
3.பரமானந்ததா அபாங்கீ ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி!
அருணா நந்தினீ லட்சுமி மகாலட்சுமி, திரி சக்திகள்!!
4.சாம்ராஜ்யா சர்வ சுகதா நிதிநாதா நிதிப்ரதா!
நிதீச பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோன்னதி:!!
5.ஸம்பத்தி சம்மதா சர்வசுபகா சமஸ்து தேஸ்வரி!
ரமா ரட்சாகரீ ரம்யா ரமணீ மண்ட லோத்தமா!!
காலையில் எழுந்தவுடன் வடக்கு திசையை பார்த்து குபேரனையும், ஸ்ரீமகாலஷ்மியையும் மனதால் வேண்டி வணங்கினால் நன்மைகள் தேடி வரும். இதனால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு திசை என்று சொல் உருவானது.
http://jaghamani.blogspot.com/2012/04/blog-post_23.html
வளம் வழங்கும் குபேரபூஜை
இந்த பதிவில் குபேர பூஜை பற்றிய விவரங்களை அறியலாம் ..
தவறாமல் பார்க்கவும் ...!
சீனாவின் சென்ஹோ மாகாணத்தில் மரத்தில் செதுக்கப்பட்ட
சுமார் 8,000 வரையான குபேர சிலைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது
ரசித்தேன்.
ReplyDeleteசீனாவில் குபேரச் சிலைகள் . ஆச்சரியம் சகோதரியாரே. நன்றி
ReplyDeleteகுபேரனின் அருள் பெற்று, பணப் பிரச்சனையில்லாமல் சௌகரியமாக வாழ வேண்டுமென்பதுதான் அனைவரின் விருப்பமக இருக்கும். குபேரனுக்குரிய மந்திரங்களுடன் உங்களின் வழிகாட்டும் பகிர்வு மிகவே பயனுள்ளது. வழமைபோல அழகிய, கண்ணைக் கவரும் படங்கள் ரசிக்க வைத்தன!
ReplyDeleteபடங்கள் சிறப்பாக ... தகவல்கள் அருமையாக...
ReplyDeleteநல்ல விளக்கம் அம்மா... தகவலும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரசித்தேன்.... லக்ஷ்மி குபேர பூஜை வடக்கில் மிகவும் பிரபலம்..
ReplyDeleteஅனைவருக்கும் நலம் விளையும் படிக்கு - நல்ல விஷயங்கள் நிறைந்த பதிவினைப் படிக்கும் போதே மனம் நிறைகின்றது.. மகிழ்ச்சி!..
ReplyDeletesuperb pictures thanks for sharing about gubera pooja
ReplyDeleteஎத்தனை மகத்துவம்! அத்தனையையும் அழகாகச் சொன்ன பதிவு அற்புதம் சகோதரி!
ReplyDeleteஅறியாத விடயமுடன் அழகான படங்களும் அருமை!
பகிர்வினுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
பயனுள்ள மந்திரங்கள் , துதிகள் , பூஜை முறைகள்.
ReplyDeleteபதிவைப் படிக்கும் எல்லோருக்கும் லக்ஷ்மி கடாட்சம்
கிடைப்பது திண்ணம்.
’ஸ்ரீ மஹாலக்ஷ்மி குபேர பூஜை’ என்ற இன்றைய தங்களின் பதிவு மிக அழகாக அற்புதமாக உள்ளது.
ReplyDeleteதங்களின் பதிவுகள், அந்தந்த பண்டிகைகாலங்களில் திரும்பத்திரும்ப நினைவூட்டி மனதை மகிழ்விப்பதாக உள்ளன.
>>>>>
படங்களும் விளக்கங்களும் வழக்கம்போல மிகவும் அழகாக அருமையாக உள்ளன.
ReplyDelete>>>>>
சீனாவின் 8000 குபேரச்சிலைகளின் அணிவகுப்பு புதுமையாகவும் அருமையாகவும் காட்டியுள்ளீர்கள். மகிழ்ச்சி.
ReplyDelete>>>>>
இன்றைய பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ReplyDelete-oOo-
குபேரனின் மகத்துவத்தை அழகான படங்கள், ஸ்தோத்திரங்களுடன் விளங்கப்படுத்தியது மிகவும் பயனுள்ளதாக இருக்கு. மிக்க நன்றிகள்.
ReplyDeleteHappy Lakshmy Pooja.
ரசிக்க வைத்த பகிர்வு... வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteபடங்கள் அழகு.
சிறப்பான தகவல்கள்.
ReplyDeleteசிறப்பான தகவல்கள்
ReplyDelete