Tuesday, October 15, 2013

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..!


 நேரடியாக திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம். 
ஒரு தனி மரபே இருக்கிறது. 

முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாளை சேவிக்க வேண்டும், 
பிறகு அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும், 

அதற்குப் பிறகு திருமலையேறி, வராக தீர்த்தக் கரையில் கோயில் கொண்டிருக்கும் வராகரை தரிசிக்க வேண்டும், 

அதற்குப் பிறகுதான் மலையப்பன் என்று சொல்லப்படும், ஏழுமலையானை, கோவிந்தனை, வேங்கடவனை சேவிக்க வேண்டும்!

 ராமானுஜர் காலத்திலிருந்து அவர் தொடங்கி, பின்னால் வந்த அனைத்து ஆசார்யார்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம். 

கோவிந்தராஜப் பெருமாள் வேங்கடவனின் அண்ணன் என்று போற்றப்படுகிறார். 

சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் தில்லை திருச்சித்திரகூடத்தானான கோவிந்தராஜனே இவர் என்று புராணம் சொல்கிறது. 

 தில்லை கோவிந்தராஜன் இந்தப் பகுதிக்கு வந்திருந்தபோது, இந்த இடத்தின் எழிலில் மனதைப் பறிகொடுத்து இங்கேயே தங்கிவிட்டதாகவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவருக்காக ஒரு கோயில் எழுப்பப்பட்டதாகவும் சொல்கிறார்கள். 

அதே சயன கோலத்தில் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளும். அற்புதமாக தரிசனம் தருகிறார், 

இவருடைய கோயில் மிகப் பெரியதாக விளங்குகிறது. 

பளபளக்கும் கலசங்களுடன் மின்னும் ராஜகோபுரத்தினுள் சென்றால் வலது பக்கத்தில் நரசிம்மர் நமக்கு ஆசியளிக்கிறார். 

அடுத்து இரு புறங்களிலும் மணவாள மாமுனிகள், ரங்கநாத சுவாமி, சக்கரத்தாழ்வார், கோதண்டராமர் ஆகியோர் சந்நதிகள் நம்மை வாழ்த்தி மூலவர் அருளாசி பெற அன்புடன் உள்ளே அனுப்பி வைக்கின்றன. 

கோதண்டராமர் வித்தியாசமான கோலத்தில் அருள்கிறார். கண்கள் இரண்டும் ஜொலிக்கின்றன. வட இந்தியப் பாணியில் காட்சிதரும் இவரை அயோத்தியின் சக்கரவர்த்தி என்று விவரிக்கிறார்கள். 

காசியைச் சேர்ந்த பைராகி மடம் எனப்படும் பூகா மடத்தின் ஆதரவில் இந்த ராமர் கோயில் துலங்குகிறது. இவருக்கு எதிரே ராமர் அபிஷேகத்துக்கு  நீரெடுத்துச் செல்லும். பூகா தீர்த்தம் அமைந்துள்ளது. 

 புண்டரீகவல்லித் தாயார் அருள் பொழிகிறாள். தாயாரின் உற்சவ விக்ரகம் மஹாலக்ஷ்மியாக வணங்கப்படுகிறது. தாயாரின் கருணை ததும்பும் விழிகள் பரிவுடன் நோக்குவதிலேயே வேங்கடவனின் தரிசனம் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கை வலுப்பெறுகிறது. 

அனந்தாழ்வார், மதுரகவி ஆழ்வார், கூரத்தாழ்வார், ராமானுஜர், கல்யாண வெங்கடேஸ்வரர் ஆகியோர் அடுத்தடுத்து கொலுவிருந்து தாயாரின் அருளை மேலும் உறுதிப்படுத்துகிறார்கள். பின்னால் யாகசாலை. 

கருவறையை வலம் வந்தால் சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் கருடாழ்வாரும் பலம் தருகிறார்கள்..

கருவறையில் கோவிந்தராஜப் பெருமாள் சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். 

 தில்லை கோவிந்தராஜனை தரிசித்தவர்கள், இந்தத் திருவுருவைக் காணும்போது, சிதம்பரத்தில்தான் இருக்கிறோமோ என்று வியக்கும் வகையில் அதே தத்ரூப அமைப்பு. 

 இவர் காலடியில் மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் தம் அகங்காரத்தை சமர்ப்பித்து சரணடைந்திருக்கிறார்கள். திருப்பாற்கடல் காட்சியாக, ஆதிசேஷன் மீது, நான்கு திருக்கரங்களுடன் சயனித்திருக்கிறார் பெருமாள்.  
திருமலையில் வேங்கடவன் கோயில் கொள்வதற்கு முன்னாலேயே இவர் இங்கே, திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டதால் இவரை ஏழுமலையானுக்கு அண்ணன் என்று சொல்கிறார்கள். 

 மலைமீது தம்பிக்கு வசூலாகும் காணிக்கைகளை தினமும் பல்லக்கு மூலமாக சுமந்து வந்து இந்த அண்ணனிடம் சமர்ப்பிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. 

தம்பியின் வருமானத்தை முறைப்படுத்திப் பாதுகாக்கும் ஆடிட்டர், இந்த அண்ணன்! மொத்தப் பணம், நகைகள், பிற காணிக்கைகளைக் கொண்டுவரும் அந்த சம்பிரதாயம் இப்போது மாறி, கணக்கு மட்டும் சமர்ப்பிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். 
இதனாலேயே முதலில் இவரை தரிசித்து வேங்கடவரை தரிசிக்க அனுமதி பெற வேண்டும் என்பது சம்பிரதாயமாம்.

இந்த கோவிந்தராஜர் 1500 ஆண்டுகளுக்கு முந்தி இங்கு கோயில் கொண்டவர் என்கிறார்கள். 

கோயிலில் ருக்மிணி, சத்யபாமா சமேதராக பார்த்தசாரதிப் பெருமாளை அமர்ந்த கோலத்தில் தரிசிக்கலாம். 

கையில் செங்கழுநீர் புஷ்பத்துடன் ஆண்டாள், வித்தியாசமாக கோவிந்தராஜருக்கு வலது பக்கத்தில் சந்நதி கொண்டிருப்பதும் தனி விசேஷம் 

கோவிந்தராஜரை தரிசனம் பண்ணிவிட்டு, அடுத்ததாக திருச்சானூரில் கோலோச்சும் அலர்மேல்மங்கைத் தாயாரை சேவிக்கலாம். 

தனித்திருந்து, திருமாலின் பெருமைகளை விளங்க வைத்துக் கொண்டிருக்கிறார், அலர்மேல்மங்கை என்னும் பத்மாவதி தாயார்
பத்மஸரோவரம் என்ற பத்மாவதி தீர்த்தத்திலிருந்து புறப்பட்டு வந்து,  குளிர்விக்கும் தென்றல் இனிமையானது..

சற்றுத் தொலைவிலுள்ள ஸ்வர்ணமுகி ஆற்றிலிருந்து இந்த தீர்த்தத்துக்கு நீர் வருவதாகச் சொல்கிறார்கள். 

கார்த்திகை மாதம் சுக்ல பட்ச பஞ்சமி நாளன்று தாயார் பிரம்மோத்ஸவ கொண்டாட்டத்தின்போது இங்கே தீர்த்தவாரி நடக்கிறது.
அத்தாணி மண்டபம். உள்ளே தாயார் திவ்ய தரிசனம் தருகிறார். 

உற்சவரின் சிரசின் மீது தங்கத் தாமரை கவிழ்த்து வைத்து அலங்காரம் செய்திருக்கிறார்கள். 
வெண் பட்டாடை அணிவித்து வைரப் பதக்கமும் மங்கலத் தாலியும் நகைகளும் பூட்டி பேரழகு செய்திருக்கிறார்கள்.  

இந்த அன்னை மேளதாளங்கள் முழங்க, தீவட்டி ஒளி வழிகாட்ட, பிராகார வலம் வருகிறாள். 
தாயாருக்கு வெள்ளிக்கிழமைகள் விசேஷம். 
தை வெள்ளிக்கிழமைகள் அதி விசேஷம். 

திருமணம், பிள்ளைப்பேறு வேண்டும் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாயாருக்கு சமர்ப்பிக்கிறார்கள். 

இப்படி ஆயிரக்கணக்கில் சேரும் சரடுகளை தாயாரைச் சுற்றி வைத்து, வேறு அலங்காரங்களும் செய்து அர்ச்சனை, தீபாராதனை செய்கிறார்கள். இவ்வாறு சரடு சமர்ப்பிக்கும் பெண்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுகின்றன. 
இந்த தலம் கிருஷ்ணர், தாயார் கோயிலுக்காகத் தந்த இடம் என்கிறார்கள். இதற்கு சாட்சியாக கோபுரத்துக்கு நேராக கிருஷ்ணர் விக்ரகம் ஆசியளிக்கக் காணலாம். 
அண்ணன் பலராமருக்கு, ‘தவம் செய்ய சிறந்த தலம் இது’ என்று பூமியைச் சுட்டிக் காட்டியபடி கிருஷ்ணர் யோசனை சொல்ல, அதன்படி பலராமர் தவம் மேற்கொண்ட தலம். அதே கோலத்தில் கிருஷ்ணரை இங்கே தரிசிக்கலாம். பலராமர் பாதரட்சையுடன் காணப்படுகிறார். அதாவது யாத்திரைக்குக் கிளம்பி வரும் கோலம்.

  ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சௌந்திரராஜப் பெருமாளையும் தரிசிக்கலாம். தாயாரின் சந்நதியில் நித்ய கல்யாணப் பெருமாளாக ஸ்ரீநிவாசன் சேவை சாதிக்கிறார்.     
    
பத்மாவதி தாயாரை சுயம்பு வடிவம் .  தலம் ஸ்ரீபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

தாயாரை உளமாற சேவித்து திருமலையேற அனுமதியும் பெற்றுக் கொள்வோம். 


வல்லமை மின் இதழில் நேற்று  நமது தளத்திற்கு இந்த வார வல்லமையாளர் என்கிற விருதினை அகமகிழ்வுடன் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார்கள்..
அவர்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வேம் ..

நன்றி ...! நன்றி ...!! நன்றிகள்...!

http://www.vallamai.com/?p=39429&cpage=1#comment-9110


இந்த வார வல்லமையாளர்!

///திவாகர்
நவராத்திரி முடிந்து விஜயதசமியாக மலரும் இந்தப் பொன்னாளில் இந்த வார வல்லமையாளராக வலம் வரப்போவது ராஜராஜேஸ்வரி அவர்கள்.
ஆசிரியர் பவளசங்கரி அவர்கள் அனுப்பிய இந்த சுட்டியை http://jaghamani.blogspot.com/ பார்த்து அகமகிழ்ந்து போனதால் உடனடியாக வந்த விளைவுதான் அவருக்கு இந்த வல்லமையாளர் விருது.
படங்கள் கதை பேசவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கருத்துக்களைக் குறைத்து ஏராளமான படங்கள் மூலம் எளிய தகவல்கள் வழங்கி வரும் இவரது வலைப்பூ ஒரு படப்பெட்டகம்.
பெண்மையின் சக்தியைப் போற்றிப் புகழும் நாட்கள் நவராத்திரி நாட்கள். பெண்மையை தெய்வீகமாக்கும் நாட்கள் கூட இவைதான். பெண்மையை மதிப்போர்க்கு அவர் பெண்ணானாலும் ஆணானாலும் பெண்களால் தீங்கு நேரிடவே முடியாது.
தேவி மஹாத்யத்தில் மகாசக்தியானவள் தன் அத்தனை பெண் சமூகத்தையும் (துணைச் சக்திகள்) தன்னுள் அடக்கிக் கொண்டு மது-கைடபன், மகிஷாசுரன், கம்பன் முதலான அசுரரகளை வதைத்ததாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக பெண்ணுக்குப் பெண் அவ்வளவு எளிதாக உடன்படமாட்டாள் என்று உலக வழக்கு சொல்லும். ஆனால் பெண்கள் மட்டும் மகாசக்தியைப் போல ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டால் உலகத்தில் உள்ள அத்தனை அசுரசக்திகளையும் அவர்களால் ஒழித்துக்கட்டி நல்லதொரு வாழ்வாங்கு உலகை மக்கள் சமுதாயம் வாழ்வதற்காக உருவாக்கம் செய்ய முடியும். இதுதான் நவராத்திரி எனும் அற்புதப் பண்டிகையின் மூலக் கரு கூட. இதையேதான் ராஜராஜேஸ்வரியும் தன் வலைப்பூவொன்றில் எழுதியிருப்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
”நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனிச்சக்தியாக விளங்கும் ஜகன்மாதா பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி ‘சிவசக்தியாக, ஐக்கிய ரூபிணியாக, அர்த்தநாரீசுவரராக” மாறுகிறாள்
நீண்ட சிந்தனையுடன் நினைத்துப் பார்த்தால் இதுதான் நிதர்சனம் என்று தோன்றுகிறது. இத்தகு வலைப்பூக்களை தொடர்ந்து கொடுத்து வரும் 
இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.////

36 comments:

  1. வணக்கம்
    அம்மா

    ஏழுமலையான் பற்றிய பதிவில் பல விடயங்கள் அறியக் கிடைக்கபெற்றுள்ளது பதிவு நன்று படங்களும் நன்று வாழ்த்துக்கள் அம்மா.

    விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அதிகாலை வேளையில்
    வேங்கடவனின் தரிசனம்...

    ReplyDelete
  3. ஸ்ரீ ராமானுஜர் காலத்திலிருந்து நடக்கும் வழிபாட்டு வரிசை முறையை சில வரிகளில் விளக்கியமைக்கு நன்றி!

    தம்பிக்கு வசூலாகும் காணிக்கைகளை கணக்கு பார்க்கும் அண்ணனை ஆடிட்டராக சொல்லிய நகைச்சுவையை ரசித்தேன்.

    திருமால் பெருமைக்கு நிகரேது ... ...

    ReplyDelete
  4. வல்லமையாளர் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
    ( வல்லமை மின்னிதழ இப்போது ERROR CODE காட்டுகிறது. பிறகு சென்று பார்க்கிறேன். )

    ReplyDelete
  5. வல்லமையாளர் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே. விருது உரியவருக்குக், தகுதியானவருக்கு வழங்கப் பெற்றிருக்கிறது.

    ReplyDelete
  6. வல்லமையாளர் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் .
    திருப்பதியின் சிறப்பை விவரித்த விதமும் படங்களும் திருப்பதி போய் வந்த உணர்வை ஏற்படுத்து கிறது.

    ReplyDelete
  7. தமிழ் மண இணைப்புப் பட்டையை ஏன் எடுத்து விட்டீர்கள்?இணைக்கவும்

    ReplyDelete
  8. திருப்பதி ஏழுமலையானை முறையாக தரிசிக்க வழிகாட்டும் பதிவு அருமை. விருது பெற்றுள்ள உங்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இராஜராஜேஸ்வரிக்கு நல் வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்.
    மேலும், மேலும் சிறப்புகள் வந்து சேரட்டும்.
    வல்லமை மின் இதழில் இந்தவார வல்லமையாளராக இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி.
    படங்கள் எல்லாம் தெய்வீகம்.

    ReplyDelete
  10. கணணியை திறந்தவுடன் உங்கள் பதிவின் பக்கமே முதலில் வந்து படித்துவிட்டு பின்னர்தான் மற்றவைகள் என்ற பழக்கம் வந்துவிட்டது.அதுவே மனதுக்கும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!.. பதிவில் படங்கள் எல்லாம் அருமை!..

    ReplyDelete
  12. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!.. பதிவில் படங்கள் எல்லாம் அருமை!..

    ReplyDelete
  13. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோ
    http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_15.html?showComment=1381805945354#c5883931640388978152

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. வழிபடும் முறை உட்பட பல தகவல்களுடன், தரிசனம் கிடைத்தது... விருது பெற்றமைக்கு பாராட்டுக்கள் அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. அறிய தகவல்களுடன் அழகான படங்களுடன் அருமையான பதிவு. நன்றி அம்மா

    ReplyDelete
  16. வல்லமை மின் இதழில் இந்த வார வல்லமையாளர் விருது பெற்றதற்கு இனிய மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
    பாராட்டுக்கள்

    இது மணி மகுடமான தளத்திற்கு மேலும் ஒரு மணி மகுடம்.

    மேலும் மேலும் பல அறிய சாதனைகளை படைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. அன்புடையீர்!.. வணக்கம் .
    இன்று தங்களின் வலத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.
    வாழ்த்துக்கள்!
    http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_15.html?

    ReplyDelete
  18. ’விஜயதஸமி’ என்ற வெற்றித்திருநாளன்று வல்லமையில் இந்த வார [அதுவும் நவராத்திரி வார] வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ;)))))

    தங்களின் வல்லமையை இப்போதுதான் மிகத்தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் போலிருக்கு!

    எனினும்,

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    வெற்றித்திருமகளே!

    நீடூழி வாழ்க ! வாழ்க !!

    மேலும் மேலும் வெற்றிகள் பெற்று
    வளர்க ! வளர்க !!

    >>>>>

    ReplyDelete
  19. இன்றைய வலைச்சரத்திலும் தங்கள் தளம் பாராட்டிப்பேசப்பட்டுள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  20. இன்றைய தங்களின் பதிவின் மூலம் ‘திருப்பதி ஏழுமலையான் தரிஸனம்’ கிடைக்கப் பெற்றோம்.

    வழக்கம் போல அருமையான படங்களும் எளிமையான விளக்கங்களும் பார்க்கவும் படிக்கவும் மனதுக்கு இதமாக இருந்தன.

    >>>>>

    ReplyDelete
  21. திருப்பதி ஏழுமலையானின் அன்றாட வருமான வசூல்களுக்கு ஆடிட்டராகப் பணியாற்றும் ’கோவிந்தராஜப் பெருமாள்’ பற்றிய செய்திகளைச், சிறப்பாகக் கொடுத்துள்ளது ....

    புதுமை, அருமை, இனிமை.

    >>>>>

    ReplyDelete
  22. அலர்மேல்மங்கை என்னும் பத்மாவதித்தாயார் பற்றி மிகச்சிறப்பாகக் கொடுத்துள்ள செய்திகள் யாவும் அழகோ அழகு தான்.

    >>>>>

    ReplyDelete
  23. முதலில் மலையடிவாரத்திலுள்ள கோவிந்தராஜப் பெருமாள் தரிஸனம்

    அதன் பிறகு பத்மாவதித்தாயார் தரிஸனம்

    அதன் பிறகு திருமலையேறி ’வராக நதிக்கரையோரம்’ குடிகொண்டுள்ள வராகமூர்த்தியின் தரிஸனம்

    அதன்பிறகு கடைசியாகவே ஏழுமலையானை தரிஸிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது அனைவருக்கும் பயனுள்ள தகவல்களாக இருக்கும்.

    >>>>>

    ReplyDelete
  24. மகிழ்ச்சியூட்டும் இன்றைய பதிவுக்கும், பகிர்வுக்கும், மற்றைய பாராட்டுக்குரிய இனிய செய்திகளுக்கும் என் நன்றியோ நன்றிகள்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    -oOo-

    ReplyDelete
  25. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கும், இந்த வார வல்லமையாளராக தேர்வு பெற்றதற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. திருமலையானின் திவ்விய தரிசனம்... மனதிற்கு மகிழ்வைத் தருகிறது சகோதரி!...

    அழகான படங்களும் அற்புதத் தகவல்களும்! மிகச் சிறப்பு!

    விருது பெற்றமைக்கும் இனிய வாழ்த்துக்கள் சகோதரி!


    ReplyDelete
  27. Aha arputha darisanam.
    Congragulations.
    viji

    ReplyDelete
  28. பதிவும் படங்களும் அழகோ அழகு!!. வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள். வலைச்சரத்தில் இடம்பெற்றமைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறையை தங்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.மிக விரிவாக,தெளிவாக அழகான படங்களுடன் எழுதியிருக்கிறீங்க. உங்களை பாராட்ட வார்த்தைகளில்லை.
    "வல்லமை" இதழில் விருது பெற்றமைக்கு, என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறைகள் பற்றிய விளக்கமான கட்டுரை படித்து மகிழ்ந்தோம்...
    வல்லமை விருது பெற்றமைக்கு வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  31. திருப்பதி சென்று ஏழுமலையானை எப்படி தரிசிக்க வேண்டும் என அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் அம்மா. படங்களும் அருமை.
    வல்லமையில் கிடைத்த விருதுக்கு வாழ்த்துக்கள் அருமை.

    ReplyDelete
  32. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. ''..நவராத்திரி வாரத்தில்

    ‘வல்லமை’ மின் இதழில்

    இந்த வார வல்லமையாளராக

    விருதளித்து கெளரவம்
    செய்யப்பட்டுள்ளார்கள்..''
    வல்லமை விருதிற்கு இனிய வாழ்த்து.
    மேலும் பல விருதுகள் கிடைக்கட்டும்.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  35. வணக்கம் அம்மா
    திருப்பதி ஏழுமலையானின் தரிசனத்துக்கு தாமதமான வருகை தான். இருந்தாலும் நிரம்ப விடயங்களை தெரிந்து கொண்ட மகிழ்ச்சி. படங்கள் அனைத்தும் அழகு.
    வல்லமை விருதுக்கு வாழ்த்துக்கள் அம்மா. பகிர்வுக்கு நன்றீங்க.

    ReplyDelete