Sunday, October 20, 2013

மகிழ்ச்சி முகிழ்க்கும் மகா அன்னாபிஷேகம்


 துலா மாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத் தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

.ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் பகவான் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது.

ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், 
இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், 
கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும்
முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.

தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும். மேலும், காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும்.

முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மகாவிஷ்ணுவிற்கு "வீரஹத்தி' தோஷம் பற்றியது. இதனைப் போக்க, காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று துலா ஸ்நானம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றார் என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் தினமும் காலை பதினோரு மணியளவில் ஸ்ரீரத்னசபாபதிக்கு அன்னாபிஷேக வைபவம் நடைபெறும்
பூஜைகள் முடிந்ததும் அந்த அன்னத்தைப்
பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவர்.
 கங்கை கொண்ட சோழபுரம் கோவில் விமானம் சற்று வளைந் திருப்பதுபோல் காட்சி தருவதால் பெண் அம்சம் என்றும் கூறப்படுகிறது. 
கங்கை கொண்ட சோழபுரம் மூலவர் பதிமூன்றரை அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்ட லிங்கத் திருவுருவத்தில் அருள்புரிகிறார். ஒரே கல்லாலான ஆவுடையாரின் சுற்றளவு அறுபது அடி. அவரை எதிர்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் பெரிய நந்தி கலையம்சம் நிறைந்தது. 
மூல ஸ்தானத்தின் உட்புற விதானத்தில் சந்திரகாந்தக்கல் பதித்திருப்பதால், நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர்த்திவலை சிவலிங்கத்தின்மேல் விழுந்தவண்ணமிருக்கும். இதனால் இக்கருவறை எந்தக் காலத்திலும் குளிர்ச்சியுடையதாகக் காணப்படுகிறது
ராஜராஜன் மைந்தனான ராஜேந்திரன் காலத்தில்
கோவில் கட்டப்பட்டது.
திருப்பட்டூரில் அருள்புரியும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கும், கோவில் வளாகத்திலுள்ள பதினோரு சிவலிங்கங்களுக்கும் ஒரே சமயத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். 
திருப்பட்டூரிலுள்ள 12 சிவலிங்கங்களையும் பிரம்மதேவன் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டார் என்று புராணத் தகவல் கூறுகிறது
ஒரே கோவிலில் அருள்புரியும் 12 சிவலிங்கத் திருமேனிகளின் அன்னாபிஷேகத்தை ஒரே சமயத்தில் தரிசித்தால் வாழ்நாள் முழுவதும் சுகமான வாழ்வு கிட்டும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். 
Clockwise from left: Manduganathar, Ekambareshwarar, Arunachaleshwarar, Kailasanathar, Jambukeshwarar, Kalathinathar, Saptharisheeswarar and the huge nandhi in front of Kailasanathar shrine
List of lingams outside the lingam complex
திருவண்ணாமலையில் அருள்புரியும் ஸ்ரீஅண்ணாமலையாருக்கும்- மலையைச் சுற்றியுள்ள அஷ்டலிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும். அன்று கிரிவலம் வரும் பக்தர்கள் இதனை தரிசித்து இரட்டைப் பலன்களைப் பெறுகிறார்கள். 
பௌர்ணமியன்று சந்திரன் முழுமையாகத் திகழ்கிறான். அன்று சந்திரனது கலை, அமிர்தகலையாகும். சிவன் பிம்பரூபி. அவரது மெய்யன்பர்கள் பிரதிபிம்பிரூபிகள். பிம்பம் திருப்தியடைந்தால் பிரதிபிம்பமும் திருப்தி பெறும். 
அனைவருக்கும் அன்னம் அருளும் அந்த அன்னபூரணியை தன் வாமபாகத்தில் கொண்ட இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது; நாடு செழுமையுடன் திகழும்.

31 comments:

  1. இதுவரை அறியாத
    பல அற்புதத் தகவல்கள்
    படங்களுடன் பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நம்ஸ்காரம் ...

      அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      Delete
  2. சிறப்பான தகவல்கள் + படங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நமஸ்காரம் ...

      சிறப்பான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      Delete
  3. அருமை!.. மீண்டும் ஒரு அழகான பதிவு!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நம்ஸ்காரம் ...

      அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!

      Delete
  4. அருமையான பகிர்வுகள்..!

    ReplyDelete
  5. அழகிய படங்களும் ஆச்சரியப்பட வைக்கும் தகவல்க
    ளும்! மிகமிகச் சிறப்பு!
    பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் இளமதி நமஸ்காரம் ...

      சிறப்பான கருத்துரைகளுக்கும் , வாழ்த்துரைகளுக்கும்
      இனிய நன்றிகள்..!

      Delete
  6. இன்று மீண்டும் ருசியான அன்னம் அளித்துள்ளதில் தங்களின் தாயுள்ளத்தைக் காணமுடிந்தது, மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  7. அருமையான படங்கள், அற்புதமான விளக்கங்கள். மனதுக்கு மிகவும் மகிழ்வளித்தன ..... மகிழ்ச்சி முகிழ்க்கும் தலைப்பு போலவே !

    >>>>>

    ReplyDelete
  8. பிரும்மாண்ட மஹா நந்தியுடன் கூடிய கங்கை கொண்ட சோழபுரம் கோயில் படங்கள் மூன்றும், கடைசியாகக் காட்டப்பட்டுள்ள படமும் மிகவும் அருமையாக உள்ளன. ;)

    >>>>>

    ReplyDelete
  9. //மேற்படி கோயில் விமானம் சற்றே வளைந்திருப்பதுபோல காட்சி தருவதால் பெண் அம்சம் எனக்கூறப்படுகிறது//

    இதை என்னால் ஏனோ ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதெல்லாம் அந்தக்கால வழக்கம்.

    இன்று பெண்கள் எதற்குமே வளைந்து கொடுப்பதே இல்லை. இருப்பினும் அவர்களின் இந்த [அசட்டுத்] துணிச்சலைப் பாராட்டுகிறேன்.

    என்னைப்போன்ற ஒருசில ஆண்கள் மட்டுமே மிகவும் அட்ஜஸ்டு செய்து, வளைந்து கொடுத்து, எல்லாவற்றையுமே ஜீரணித்துக்கொண்டு, செல்ல வேண்டியதாக உள்ளது.

    “புதுமைப்பெண்களடீ ..... பூமிக்குக் கண்களடீ” நான் சொல்லவில்லை. மஹாகவி பாரதியாரே சொல்லியுள்ளது.

    >>>>>

    ReplyDelete
  10. திருப்பட்டூர் கோயில் 12 சிவலிங்கங்கள் பற்றிய செய்திகளும் அவற்றின் பெயர்களும் இனிமை.

    >>>>>

    ReplyDelete
  11. அன்னபூரணியாய் இன்று மீண்டும் அருளியுள்ள அனைத்துத் தகவலுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    -oOo-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நம்ஸ்காரம் ...

      அருமையான கருத்துகளுக்கும் , பாராட்டுக்களுக்கும் (!)
      இனிய் நன்றிகள்..!

      Delete
  12. காவேரியின் தகவல்களும், சிவாலய அன்னாபிஷேக தகவல்களும் படங்களும் அருமை. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள். நன்றி அம்மா

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நம்ஸ்காரம் ...

      அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      Delete

  13. [This is a repeated Comment as the original one is not yet published.]

    திருப்பட்டூர் கோயில் 12 சிவலிங்கங்கள் பற்றிய செய்திகளும் அவற்றின் பெயர்களும் அளித்துள்ளது இனிமை.

    >>>>>

    ReplyDelete
  14. ஒரே கல்லில் ஆன ஆவுடையாரின் சுற்றளவு அறுபதி அடி என்பன பல தகவல்கள் புதியன..பகிர்வுக்கு நன்றங்க.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தென்றலே நமஸ்காரம் ...

      அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      Delete
  15. தெரியாத தகவல்கள்
    அழகான புகைப்படங்கள்
    சிறப்பான பதிவு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நமஸ்காரம் ...

      அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      Delete
  16. காவேரியின் நீராடல் அறியாத தகவல்கள்,படங்களுடன் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நமஸ்காரம் ...

      அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      Delete
  17. நிறையத் தெரியாத தகவல்களை அறிந்து கொண்டேன்.அறிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நமஸ்காரம் ...

      அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      Delete
  18. ஐப்பசிமாதம் துலாக்காவேரியாட அட்டாளதேசரும் வருகிரார் அங்கம் புளகித்து பொங்கி மகிழ்திட அத்தனைபேரும் வருகிரார்.
    கோதானம்,பூதானம், கோடிகன்னிகாதானம் கொடுக்கலாம் மனஸாலே
    வாருங்கள்.
    ஸந்தர்ப்பணை செய்து ஸாம்ராஜ்யம் அடைந்தபின்
    ஸகலருமங்கு வருகிறார் பாருங்கள்.
    கவலை தீருங்கள்.
    இந்த பாட்டு காலையில் குளத்திற்கு ஸ்நானம் செய்யப் போகு முன்னர் உதயராகமாக பெரியவர்கள் பாடக் கேட்டிருக்கிறேன்.
    உங்கள் தகவல்கள் படங்களுடன் அருமை.
    எப்போதோ கேட்ட பாடல் இது ஞாபகம் வந்தது., இது எப்படி. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா நம்ஸ்காரம் ...

      பொங்கும் புதுவெள்ளமாய் மகிழ்ச்சி ததும்பும் பாடல் வரிகளை தங்கிடும் மலரும் நினைவுகளாய் பகிர்ந்தமைக்கு இனிய நன்றிகள்..

      Delete
  19. அழகிய படங்களுடன் அருமையானதொரு பகிர்வு அம்மா...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. அறியாத அற்புத தகவல்கள். நன்றி சகோதரியாரே

    ReplyDelete