அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவனே சிவலிங்கம் என்பார் திருமூலர்.
அபிஷேகப் பிரியரான ஈஸ்வரனை ஐப்பசி பௌர்ணமியன்று அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும்
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆனது
வைணவத்தலங்களில் அன்னாபிஷேகம் திருப்பாவாடை என்று அழைக்கப்படுகின்றது.
கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது. அன்னம் ஔஷதம் என அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும்.
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு .... அளவாகச் சாப்பிட்டால் உடலில் வியாதிகள் அணுகாது.
ஆரோக்கியம் நிலைத்திருக்கும்."நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழலாம்.
அன்னத்தை வீணாக்கக்கூடாது, அது தெய்வசொரூபம் என்பதை மக்களுக்கு உணர்த்தவே அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
அரிசியின் வடிவம் நீள்வட்டம். சிவலிங்க பாணத்தின் நீள்வட்ட வடிவமானது, எல்லையற்ற ஒன்றைக் குறிக்கும். பிரபஞ்ச சக்தியை உணர்த்துவது.
ஆகாயத்தில் தோன்றும் காற்றின் துணையுடன் நெருப்பு எரிகிறது.
நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகி நீரில் மூழ்கி,
தீயில் வெந்து அன்னமாகிறது.
ஆக, அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது.
பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையாதவனை போதும் என்று சொல்ல வைப்பதும் அன்னம் மட்டுமே!
ஆக, உன்னதமானவருக்கு உன்னதமானதைச் சமர்ப்பிக்கும்
வாய்ப்பைத் தருவது ஐப்பசி அன்னாபிஷேகம்
அன்னாபிஷேக தினத்தில் ஈசனின் திருமேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம்.
எனவே, அன்னாபிஷேகமன்று சிவதரிசனம் செய்வது கோடி சிவ
தரிசனம் செய்வதற்கு சமம்.
கோடி சிவ தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம்
ஐப்பசி பவுர்ணமியன்று வெள்ளை அன்னத்தால் செய்யும் அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள்.
அன்னம் பரப்பிரம்ம சொரூபம் அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. இதையே சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதர் என்றும் சொல்வது உண்டு
அன்று லிங்கத்தின் மேல் சாற்றப்பட்ட அன்னம் ஐப்பசி பௌர்ணமி சந்திரனின் கிரணக்கதிவீச்சை ஈர்த்துக்கொள்வதால் வீரியம் மிக்க கதிர்வீச்சு கொண்டதாக இருக்கும் என்பது ஐதீகம்.
என்வே பாண லிங்கத்தின் மேலுள்ள அன்னம் தவிர்த்து, ஆவுடை மற்றும் பிரம்ம பாகத்தின் மேலுள்ள அன்னம், மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தயிர் கலந்து கொடுப்பதும் வழக்கத்தில் உண்டு.
பிறகு, அந்தப் பிரசாதத்தில் ஒரு பாகம், அருகிலுள்ள திருக்குளத்தில் கரைக்கப்படும்.
யானை முதல் எறும்புவரையான உயிர்களுக்கும்
கல்லினுள் தேரைக்கும் ,கருப்பையில் உயிருக்கும்
அளவற்ற சராசரப்பொருட்களுக்கும் கணிமைத்தலில்லாத தேவர்களுக்கும் மும்மூர்த்திகளுக்கும் ,யாவருக்கும் இறைவனது பிரசாதம் எறும்பில் தொடங்கி நீர்வாழ் உயிரிகள், மனிதர்கள் என சகல ஜீவராசிகளுக்கும் சென்றடைகிறது.
இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்குகிறது. இறையருள் என்னும் வட்டியைப் பெற, பாதுகாப்பான முதலீடு .தர்மம் தலைகாக்கும்
தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில்
சிவபெருமான் உயிர்களுக்கெல்லாம் ஈசன், மிகவும் பெரிய லிங்க வடிவுள்ள பெருமான் (பிருஹத்- மிகப்பெரிய) என்றெல்லாம் பொருள்படும் பிரகதீஸ்வரர் என்ற பெயரில் அருள் பொழிகிறார்..
சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அபிஷேக அன்னத்தை எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் அளிப்பர்.
**தொடர்புடைய சென்ற ஆண்டு பதிவுகள்....
அன்னாபிசேகப் படங்களும் தகவல்களும் அருமை. நன்றி சகோதரியாரே
ReplyDeleteபாதுகாப்பான முதலீடு.... படங்கள் அனைத்தும் அற்புதம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
பதிவு அருமை கருத்துக்களும் நன்று படங்களம் அழகு வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இறைவனுக்கு அன்ன அபிசேகம். படங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி! இப்பொழுதே தீபாவளி பதிவுகளுக்கு ரெடி செய்து கொண்டு இருப்பீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅற்புதமான அன்னாபிஷேகக்காட்சிகளைக்கண்டு களித்தேன்.தகவல்கள் மிக அருமை.நன்றி.
ReplyDeleteவலையில் தாங்கள் செய்துவரும் பணி மிகவும் மேன்மையான ஒன்று. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅற்புதமான காணக்கிடைக்குமோ இப்பேறென எத்தனை படங்கள், அன்னாபிஷேக மகிமைகள்..... வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள்!.
ReplyDeleteசொல்லும் வழக்கு மொழிகளின் அர்த்தம்... அபாரம்!
அருமை அத்தனையும்!...
பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
அற்புதமான படங்கள. இதுவரை அன்னாபிஷேகத்தை கண்டதில்லை. தங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்து கொண்டேன்.
ReplyDeleteசோறு கண்ட இடம் சொர்க்கம் என்றதின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள முடிந்தது.
அன்ன அபிஷேகம் பற்றி சகல விவரங்களும் கொடுத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஎல்லா பாடும் இந்த எண் சாண் வயிற்றுக்கும் அதன் அன்னத்திற்கும் தானே ...
ReplyDeleteஅன்னாபிஷேகம் அன்று சிவாலயம் சென்று சிறப்பு பெறுவோம்.
சிவனும் பார்வதியும் ஒரே படத்தில் ஈர்க்கின்றனர். இறுதியில்
ஜிகினா வேலைப்பாடுடன் கூடிய அன்ன லிங்கமும் வெகு அழகு.
அன்னாபிஷேக லிங்கங்களின் ஆனந்த தரிசனம்!.. அற்புதம்!..
ReplyDeleteஅழகான படங்களுடன் அமிர்தமான அன்னாபிஷேக தரிசனம்.
ReplyDeleteசிறப்பான பல நல்ல தகவல்கள். நன்றி அம்மா.
’ஆனந்தம் அளிக்கும் அன்னாபிஷேகம்’ பதிவில் உள்ள அன்னாபிஷேகக்காட்சிகள் அனைத்தும் ஆனந்தம் அளித்தன. ;)
ReplyDelete>>>>>
திருப்பாவடை பற்றிய தகவல் அருமை ;)
ReplyDeleteஅன்னம் தெய்வ ஸ்வரூபம், வீணாக்கக்கூடாது ;)
அரிசியே சிவலிங்க பாண வடிவம் ;)
>>>>>
கோடி சிவ தரிஸனப்பலன் ஓர் அன்னாபிஷேக தர்ஸனம் ;)
ReplyDeleteஅன்னாபிஷேகத்தை தர்ஸிப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம்.
’சோறு கண்ட இடமே சொர்க்கம்’
’சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதர்’
VERY SWEET ! VERY VERY SWEET WORDS !!
ஆஹா இதுவே தங்கள் தனித்திறமை. ;)))))
என்னைத் தலைவணங்க வைக்கிறது.
>>>>>
யானை முதல் எறும்பு வரை .......
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2013/10/65-4-4.html
கல்லினுள் இருக்கும் தேரைக்கும் பிரஸாதமாக உணவு வழங்கப்படுகிறது.
அச்சா, பஹூத் அச்சா !
என்னவொரு அலசல் கட்டுரை !!!!!
யாரால் இதுபோலெல்லாம் கோர்வையாக அன்னமாக பிரஸாதமாக எடுத்துச் சொல்லி அசத்த முடியும் ?
அன்னமிட்ட கைகள் தங்களுடையதே.
தங்கமே தங்கம் தான்.
கொங்கு நாட்டுக் கோவைத்தங்கம்.
சொக்கத்தங்கம் நீடூழி வாழ்க வாழ்கவே !.
>>>>>
இறையருள் என்னும் வட்டியைப்பெற பாதுகாப்பான முதலீடு தர்மம்.
ReplyDeleteஅந்த தர்மமே என்றும் தலை காக்கும்.
சூப்பர் !
>>>>>
இதில் கங்கை கொண்ட சோழபுரம் தான் அன்னாபிஷேகத்திற்கு மிகவும் பிரசித்தமானது.
ReplyDeleteஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இருந்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீமடத்தின் சார்பில் அரிசி மூட்டைகள் அனுப்பி வைத்து ஒருசில பிரதிநிதிகளையும் அனுப்பி வைத்து, இந்த கங்கைகொண்ட சோழபுரம் அன்னாபிஷேகத்திற்கு தனிச்சிறப்புகள் கொடுத்ததுண்டு.
>>>>>
ஆனந்தமயமான பகிர்வுக்கு அடியேனின் நன்றிகள்.
ReplyDeleteஸ்பெஷல் பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
அன்னபூர்ணி அம்பாளாக அடிக்கடி இதுபோன்ற சிறப்புக்களை அனைவருக்கும் எடுத்துச்சொல்லும் தங்களின் தங்கமான இறைபணி என்றும் தொடர்க ! என வாழ்த்தி விடைபெறுறேன்.
-oOo-
வணக்கம் ..சிறப்பான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..
Deleteசோழர் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்து போனது
ஒருமுறை ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மகாபெரியவர் யாத்திரையாக கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தபோது இந்த பிரம்மாண்டமான கோவிலின் நிலை கண்டு வருந்தினார்.
கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெற ஆவன செய்தார். அத்துடன் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேக வைபவங்கள் மறுபடியும் நடைபெற வழிசெய்தார்.
Aha arumai mika arumai.....
ReplyDeletenandriamma.
viji
அன்னா அபிஷேக வைபவ படங்கள் மூலம் அன்னாபிஷேக சிவ தரிசனம் செய்வித்து கோடி சிவ தரிசனம் பெற வைத்தீர்கள்.
ReplyDeleteஉங்களுக்கு கோடி புண்ணியம்.
சோறு கண்ட இடம் சொர்க்கம், சோத்துக்குள் இருக்கார் சொக்கநாதர்,
அன்னம் பஞ்ச பூதங்களின் சேர்க்கை ,, இறையருள் என்ற வட்டியை பெற பக்தி எனும் பாதுகாப்பு முதலீடு அவசியம் என்பவை எல்லாம் அருமையான விளக்கங்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றி.
கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு முறை அன்னாபிஷகம் பார்த்து இருக்கிறேன்.
ReplyDeleteஅப்புறம் ஒவ்வொரு ஐப்பசி அன்னாபிஷகமும் தவறாது எங்கள் ஊர் புனுகீஸ்வரர் கோவிலில் பார்த்து விடுவேன். இந்த முறை நியூஜெர்சியில் இருப்பதால் பார்க்க முடியாத குறையை போக்கியது உங்கள் பதிவு..
உங்கள் பதிவின் மூலம் அன்னாபிஷக வைபவங்களை கண்டு களித்தேன். நன்றி.
thanks mam for sharing about annabhisegam
ReplyDeleteஅன்னாபிஷேகத் தகவல்கள் படங்கள் அரியது! சிறப்பாய் தொகுத்து பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅற்புதமான படங்கள்...
ReplyDeleteஅருமையான பகிர்வு.
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பதின் மறை பொருள் விளங்கியது.
ReplyDeleteசுப்பு தாத்தா.
உங்களின் தயவில் இன்று அன்னாபிஷேகம் தரிசனம் செய்து, கோடி சிவலிங்க தரிசனம் செய்த புண்ணியமும் பெற்றோம். நன்றி!
ReplyDeleteஅன்னாபிஷேக தகவல்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteதெரியாதன பல தெரிந்து கொண்டேன்.
அன்னாபிசேகம் பற்றி தங்கள் மூலமே இன்று அறிந்துள்ளேன். படங்கள் அனைத்தும் வழக்கம் போல் அருமை அம்மா. நிறைய தகவல்களை படங்களெ சொல்லி விடுகின்றன. அன்னாபிசேகம் பற்றிய செய்தி தொகுப்பிற்கு நன்றீங்க அம்மா.
ReplyDeleteதஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோவோல்களில் நடைபெற்ற அன்னாபிஷேகக் காட்சிகளைப் படங்கள் மூலம் நாங்களும் தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டீர்கள். நன்றி
ReplyDeleteஅன்னாபிஷேகமன்று சிவதரிசனம் செய்வது கோடி சிவ
ReplyDeleteதரிசனம் செய்வதற்கு சமம்.
அன்னதானம் பற்றி பல அறிந்து கொண்டேன்..
நன்றி...
அன்னாபிசேகம் அருமை. படங்களும் சிறப்பு
ReplyDeleteமிக மிக நன்றி. இறையருள் நிறையட்டும்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.