Lord Sahasralingamurthy in Silver Kavacham after Annabhishekam
தஞ்சாவூர். பெருவுடையார், அன்னாபிஷேகம்,
கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஒலித்த சாமவேதத்தை உன்னிப்பாக ஒருமுகப்பட்ட மனதுடன் கவனித்தேன்.
"அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்ட மந்திரம் மனதைக்கவர்ந்தது.
நம் உடல் ஆதாரமான அன்னத்தால் ஆக்கப்பட்ட அன்னமயகோசம்..எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி.
அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.
காசியிலே அன்னபூரணியாக அருட்காட்சி தந்து சிவனுக்கும் சகல் ஜீவராசிகளுக்கும் அன்னமளிக்கிறாள்.
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவனே சிவலிங்கம் என்பார் திருமூலர்.
ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்ப்டுகிறது.
THIRUVANAIKOIL KUBERA LINGAM ANNABHISHEKAM *"அன்னம் பரபிரம்ம சொரூபம் என்று சொல்வது மரபு. அதாவது, அன்னம் வேறு; ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்று தான் இதையே "சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் என்றும் குறிப்பிடுவர்.
அன்னம் இட்ட கை சின்னம் கெட்டுப் போகாது.
ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.
.
அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம்.
சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம்.
ஐப்பசி பௌர்ணமியன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான்.
அறுவடையான புது நெல்லைக் கொண்டு அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.
அறுவடையான புது நெல்லைக் கொண்டு அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பிக்கப்படும் தில்லையிலே அனுதினமும் காலை பதினோரு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர் வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம் என்வே பாண லிங்கத்தின் மேல் பட்ட அன்னம் பிரசாதத்தில் தவிர்க்கப்பட்டு ஆவுடை மற்றும் பிரம்மபாகத்தின் மேல் உள்ள அன்னம் விநியோகம் செய்யப்படுகின்றது.
அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சகல் ஜீவராசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.
ஒரு முறை கொட்டும்மழையில் கங்கைகொண்ட சோழ்புரத்தில் நடைபெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சி தரிசிக்கும் பாக்கியம் கிடைததது.
தஞ்சை பெரிய கோவிலைப் போலவே காட்சி தரும் சிவலிங்கம் பதிமூன்றரை அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். ஒரே கல்லால் ஆன ஆவுடையாரின் சுற்றளவு அறுபதடி. அவருக்கு எதிரில் அமர்ந்துள்ள மிகப்பெரிய நந்தி மிகுந்த கலைநுட்பத்துடன் அமைந்துள்ளது.
அம்மன் பிரஹந்நாயகி. பிரகாரத்தில் அனுக்கிரக சண்டேஸ்வரர், கஜசம்ஹாரமூர்த்தி, நடன கணபதி, ஞான சரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
பால் சுனை கண்ட சிவபெருமான், அன்னாபிஷேகம், திருப்பரங்குன்றம்
BRAHADEESW
தஞ்சாவூர் மூலை ஆஞ்சநேயர், தேங்காய் அலங்காரம்.
அன்னபிஷேகப் படங்கள் யாவும் அருமையோ அருமை. மீண்டும் வருவேன்.
ReplyDeleteவரும் 10.11.2011 வியாழக்கிழமை அன்று, எல்லா சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் என்பதையும் தெரிவித்து விடலாம். அன்று தான் ஐப்பசி மாத பெளர்ணமி வருகிறது.
ReplyDeleteநேரத்திற்குத் தகுந்த அருமையான பதிவு.
//அன்னம் இட்ட கை சின்னம் கெட்டுப்போகாது//
ReplyDeleteஅன்னமிட்ட கைகளை விட இந்த அன்னாபிஷேகத்தின் விசேஷம் பற்றியும், ஜீவாதாரமான அன்னத்தின் மகிமை பற்றியும், ஒவ்வொரு பருக்கையிலும் சிவனே இருக்கிறார் என்ற உண்மையைப்பற்றியும், எடுத்த்ரைத்துள்ள உங்கள் கை தான் எங்களுக்கு இன்று அன்னமிட்ட கை. அதை வணங்கி வாழ்த்துகிறோம்.
அன்னபிஷேகத்திற்குப் பிறகு காட்டப்பட்டுள்ள சஹஸ்ரலிங்க மூர்த்தி வெகு அழகாக உள்ளது.
ReplyDeleteஎங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஸ்ரீ நாகநாதஸ்வாமி கோயிலில் உள்ள சிவனுக்கும் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாகச் செய்வார்கள்.
ஒரு வாரம் முன்பே அங்கு வைத்துள்ள 3 தனித்தனி பாத்திரங்களில், அரிசி, பருப்பு, வெல்லம் முதலியன போட்டுவிட்டு வருவதுண்டு.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சிவனுக்கும் மூட்டை மூட்டையாக அன்னம் வடித்து, அன்னாபிஷேகம் செய்து, பிறகு பிரஸாதமாக அனைவருக்கும் அன்னதானம் போல மிகச்சிறப்பாகச் செய்து வருவதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.
ReplyDeleteரத்னபுரீஸ்வரர் கோயில் அன்னாபிஷேகம் வித்யாசமான முறையில் அழகழகான காய்கறி, பழங்களுடன் கலர்ஃபுல்லாகக் காட்டப்பட்டுள்ளதே.
ReplyDeleteமற்ற வெறும் அன்னாபிஷேகம் ஆண்களின் வேஷ்டி போலவும், அது மட்டும் பெண்மணிகளின் பட்டுப்புடவைகள் போலவும், ஜொலிக்கிறது.
தஞ்சை பெரியகோயில் பிரஹதீஸ்வரர் அன்னாபிஷேகம் பெரியதாக, நல்ல பிரும்மாண்டமாக, கம்பீரமாகக் காட்டப்பட்டுள்ளது.
ReplyDeleteஆஞ்சனேயருக்கான தேங்காய் அலங்காரமும், தேங்காய் மூடிகளின் அணிவகுப்பும் அருமை.
தினமும் எப்படித்தான் இவ்வளவு படங்களுடன், விளக்கங்களுடன் பதிவுகள் தருகிறீர்களோ!
இந்த ஒரு வாரத்தில் 27 பதிவுகள் தருவதாக ஒத்துக்கொண்டு விட்ட எனக்குத் தான் அதன் கஷ்டத்தை நன்கு உணர முடிகிறது.
ஆனால் தாங்கள் தெய்வாம்சம் பொருந்தியவராக இருப்பதால் உங்களுக்கு அதில் ஒன்றும் கஷ்டமிருக்காது தான். அதையும் ஒத்துக்கொள்கிறேன்.
இன்றும் நல்லதொரு பதிவு கொடுத்து, ஆச்சர்யப்பட வைத்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள். பிரியமுள்ள vgk
பார்த்து ரசித்தேன்.
ReplyDeleteதங்கள் பதிவுகளால் நாங்கள்
ReplyDeleteபெறுகிற அருளும் ஆனந்தமும் அதிகம்
அதைச் சொல்லில் வடிக்க இயலாது
படங்களும் பதிவும் மிக மிக அருமை
பதிவாக்கித் தந்தமைக்கு நனறி
தொடர வாழ்த்துக்கள்
இன்று "ப்ரதோஷம்". ஐப்பசி பௌர்ணமியன்று வரும் அன்னாபிஷெகத்தினை இன்றே தரிசிக்க வைத்தமிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்னாபிஷேகம் பார்க்கவும் படிக்கவும் நல்லாயிருக்குங்க!
ReplyDeleteவழக்கம்போல படங்களும் பதிவும் அருமை.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது
ReplyDeleteஇன்று உங்கள் புண்ணியத்தில் எங்களுக்கு ஐயன் தரிசனம்
ReplyDeleteஅழகிய கண்ணை கவரும் படங்களுடன் அருமையான பதிவு.நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteபடங்கள் அழகாக உள்ளது ,விளக்கங்களும் அருமை ,ஒரு படத்தில் மட்டும் லிங்கத்தின் இடது புறம் வந்துள்ளது வித்தியாசமாக உள்ளது
ReplyDeleteஎங்களூர் சிவன் கோவிலில் அன்னாபிசேகம் செய்து வைத்த நினை வந்துவிட்டது. அப்போது சொந்தமாக நிலம் இருந்தபடியால் முதல் அறுவடை நெல்லை அன்னாபிசேகத்திற்கு தந்துவிடுவோம். அதன் பிறகு பிரகதீஸ்வரர் கோவில் அன்னாபிசேகம் பார்த்திருக்கிறேன். அன்னாபிசேகம் அலங்காரத்தில் எத்தனை காட்சிகள். பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteஅழகு படங்களிலா, உங்கள் எழுத்துக்களிலா!! எப்படியோ, புண்ணியம் எங்களுக்கும்!
ReplyDeleteசூப்பர் படங்கள். எனக்கு சிவன், சிவலிங்கம் ரொம்பப் பிடிக்கும்.
ReplyDeleteகாய்கறிப் படம் பார்க்க பார்க்கப் ஆசையாக இருக்கு.
அன்னபிஷேகப் படங்கள் யாவும் அருமையோ அருமை
ReplyDeleteபடங்கள் ஒவ்வொன்றும் அருமை. அன்னாபிஷேகம் நேரில் பார்த்தது போல் இருந்தது.
ReplyDeleteபடங்கள் சிறப்பான தொகுப்பு! வியக்க வைக்கிறது.
ReplyDeleteஐயனின் அனந்த தோற்றம், காண கண் கோடி வேண்டும்
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றிங்க!!படங்கள் மிக அழகு...
ReplyDeleteஆச்சரியமாக உள்ளது இப்படி அன்னத்தோடு காட்சி (அன்னலிங்கம்)என் வாழ்நாளிலேயே நான் கண்டதே இல்லை . அருமை...அருமை...மிக்க நன்றி. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அம்மாடி உங்கபுண்ணியத்தில நெறயக்கோவில்ல அன்னாபிசேகம் பாத்தாச்சுப்பா!
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஇன்று அன்னாபிஷேக பிரசாதம் கிடைத்தது.
வாழ்த்துக்கள் அம்மா.
நான் டெல்லியில் இருக்கிறேன் இப்போது.
ReplyDeleteஇங்கு அன்னாபிஷேகம் பார்க்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தேன் உங்கள் பதிவில் அன்னாபிஷேகத்தை கண்குளிர கண்டேன்.
நன்றிகள் .
;) ஓம் விகடாய நம:
ReplyDelete;) ஓம் விக்ந ராஜாய நம:
;) ஓம் விநாயகாய நம:
;) ஓம் தூமகேதவே நம:
;) ஓம் கணாத்யக்ஷாய நம:
1290+8+1=1299
ReplyDeleteநோ பதில் அட் ஆல் ;(