உலகத்தின் நாயகியே எங்கள் முத்துமாரியம்மா!
உன் பாதங்களை சரணமாகப் பற்றுகின்றோம்.
உன் திருவடிகளே எமக்கு என்றும் நிலைபேறு தரும்
என்று எண்ணி சரணடைந்து விட்டோம் தாயே!
உலகத்திற்கு ஆதாரம் சக்தி என்று அருமறைகள் கூறுகின்றன. எந்த தொழில் புரிந்தாலும் எல்லாமே அன்னையின் தொழில்களே. இன்பத்தை வேண்டி நின்றால் அவள் மகிழ்ச்சியுடன் நமக்கு அருள்புரிவாள். தன்னை நம்பியவர்களுக்கு வரங்கள் பல தருவாள்.
வல்வெட்டித்துறைக்கு கோடியக் கரையில் இருந்து புறப்பட்ட தோணி ஒன்றில் உதவி கேட்டு வந்த வயோதிக மாது தன்னையும் வல்வையில் கொண்டு சென்று இறக்கும் படி கோர அவர்கள் அதன்படி ஏற்றி வந்து வல்வைக் கரையில் இறக்கியதும் வயோதிக மாது மறைந்து விட்டார்களாம்..
இது தான் முத்துமாரி அம்மன் கோயில் தோன்றிய வரலாறாக கூறப்படுகின்றது. 1796ல் அரசினர் அளித்த இடத்தில் 1796ல் இக்கோயில் கட்டப் பெற்றிருக்கின்றது..
1864ல் எழுதப் பெற்ற அரசினர் அறிக்கையிலும் புண்ணிய மணியகாரனால் அம்மன் கோயில் கல்லால் கட்டப் பெற்றதென்னும் சித்திரை மாதத்தில் 15 நாட்கள் திருவிழாக்கள் நடந்தது எனவும் குறிக்கப் பெற்றிருக்கின்றது.
அருளாளர்கள் பலர் திருப்பணிகளும் கும்பாபிஷேகம் செய்திருக்கின்றார்கள்..முத்துமாரி அம்மன் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்
கர்ப்பக்கிரகமும் அர்த்த மண்டபமும் –
. பிள்ளையார் –
முருகையா –
. காத்தலிங்கம் –
. சண்டிசுவரி –
. தீர்த்தக்கிணறு –
மின்வெளிச்ச அறை –
வசந்த மண்டபம் –
. யாகசாலை –
. திருச்சபை –
மகாமண்டபம், தரிசன மண்டபம் –
நந்திபலிபீடம்
ஆகியவை கற்கட்டிடங்களாக பொலிவாக அருளாளர்களால் கட்டப் பெற்றன.
சம்புரோட்சனம் ஆகமவிதிப் படி செய்யப்பெற்றது.
மணிக்கோபுரமும் மணியும் வல்வைப் பொதமக்களால் செய்யப்பெற்றன.
தேர்முட்டி ,பூங்காவன மண்டபம்,முத்துமாரி அம்மனுக்கும்,பிள்ளையாருக்கும் முருகனுக்கும் சித்திரத் தேர் சிறப்பாக செய்யப்ப்ட்டிருகிறது..
பூசைகள் திருவிழாக்கள் எல்லாம் மிகச் சிறப்பாகவும் அலங்காரமாகவும் நடைபெற்று வருகின்றன. தொன்று தொட்டே இக்கோயிலில் சைவக்குருக்கள்களே பிரதம குருக்களாக இருந்து வருகின்றார்கள்.
இராசகோபுரம் கீழ்ப்பகுதி வைரக் கருங்கற்களினால் கட்டப்பெற்று இராஜகோபுர மேல் பகுதியும் நல்ல அலங்கார முறையில் கட்டிமுடிக்கப் பெற்றது.
வல்வை மக்களின் கைவினை திறனையும் கலை ரசணையையும் காட்டப்படும் இன்னுமொரு அங்கம் இந்த தீர்த்த திருவிழாவில் வைக்கப்படும் அலங்கார வளைவு…
வரலாற்றுப் புகழ் மிக்க வல்லை முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற வைபவம் கண்டுகளிக்க....
//ஷர்மி said...
அம்பிகையின் அழகைக் காண கண் கோடி வேண்டும்... அவ்வளவு அழகு. அந்த ஜடை அழகு காணக்கிடைக்கா காட்சி.
நீங்கள் ஒவ்வொரு தளத்தைப் பற்றியும் எழுத எழுத எங்கள் ஊர் வல்வை முத்துமாரியை நீங்கள் வர்ணிக்கக் கேட்க வேண்டும் போல் உள்ளது.
November 25, 2011 2:11 AM//
இணைய தளங்களில் சேகரித்து தொகுத்து அளித்திருக்கிறேன்...
நேரில் பார்த்தவர்கள் சரியா என்று தெரிவிக்க வேண்டிக்கொள்கிறேன்..
நிறைந்த நன்றிகள்......
http://www.youtube.com/watch?gl=SG&feature=related&hl=en-GB&v=Ru2ktTrokKo
http://valvaialai.blogspot.com/
http://muthumari.blogspot.com/
நீங்கள் ஒவ்வொரு தளத்தைப் பற்றியும் எழுத எழுத எங்கள் ஊர் வல்வை முத்துமாரியை நீங்கள் வர்ணிக்கக் கேட்க வேண்டும் போல் உள்ளது.
November 25, 2011 2:11 AM//
இணைய தளங்களில் சேகரித்து தொகுத்து அளித்திருக்கிறேன்...
நேரில் பார்த்தவர்கள் சரியா என்று தெரிவிக்க வேண்டிக்கொள்கிறேன்..
நிறைந்த நன்றிகள்......
http://www.youtube.com/watch?gl=SG&feature=related&hl=en-GB&v=Ru2ktTrokKo
http://valvaialai.blogspot.com/
http://muthumari.blogspot.com/
வல்வை மக்களின் சிறப்புகளில் இந்த புகைக்குண்டு விடுதலையும் குறிப்பிடலாம்.
சிவன் கோயில் தீர்த்தமாகட்டும், அம்மன் கோவில் தீர்த்தமாகட்டும், பிள்ளையார் கோவில் தீர்த்தமாகட்டும் இந்த புகைக்குண்டு அன்று முன்னணியில் இருக்கும்.
‘புகைக்குண்டு’ என்பது ஒரு புனைப்பெயர்தான். சூடான காற்றினால் இயங்குபவை. Hot Air Balloon வகையைச் சார்ந்தவை.
இயற்கையாகவே முத்துமாரியின் அரவணைக்கும் கைகளை போலவே வல்வை மீன் பிடித்துறைமுகத்தின் வடிவமும் அமைந்தது. இதனால் இத்திட்டத்திற்கு "அன்னையின் அரவணப்பில்" எனும் பெயரையிட்டிருக்கிறார்களாம்..
செய்து முடிப்போம் என்னும் நம்பிக்கையில் திட்டமிட்டிருக்கும் அருமையான திட்டத்தை செயலாக்கித்தர அன்னை அரவணைக்க பிரார்த்திப்போம்...
வல்வை நலன்புரிச் சங்கம் அவுஸ்திரேலியா பிரிவு
வளமான வாழ்வு அருளும் வல்வை முத்துமாரி அம்மனை நன்கு தரிஸித்து விட்டு பொறுமையாக பின்பு மீண்டும் வருவேன்.
ReplyDeleteமுதல் 4 படங்களில் புலிமேல் அம்மனும், புறப்பாட்டு அம்மனும் அழகாகக் காட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteஓம் என்ற எழுத்தும் அருகே தீபமும்.
அதிலும் அந்த ஜொலிக்கும் அம்மன் நல்ல அழகு தான். அடுத்ததில் புலியின் கால் முதல் வால் வரை விளக்குகள் வரிசையாக .. ஆஹா அருமை.
வழக்கம்போல் அழகழகான கோபுர தரிஸனங்கள்.
ReplyDeleteஅந்த உயர்ந்த கலையரசியான
நாட்டியக்காரியின் சிலை எவ்வளவு உயரமாக ! )))))
தெவிட்டாத அந்தத்தேர்கள் யாவும் ஜோர்!
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமுதல் 4 படங்களில் புலிமேல் அம்மனும், புறப்பாட்டு அம்மனும் அழகாகக் காட்டியுள்ளீர்கள்.
ஓம் என்ற எழுத்தும் அருகே தீபமும்.
அதிலும் அந்த ஜொலிக்கும் அம்மன் நல்ல அழகு தான். அடுத்ததில் புலியின் கால் முதல் வால் வரை விளக்குகள் வரிசையாக .. ஆஹா அருமை./
அருமையான கருத்துரைகளால் பதிவைச்சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா,
தங்களை இதுபற்றி எழுதத்தூண்டிய ஷர்மி அவர்களுக்கு ஒரு ஜே !
ReplyDeleteவிளக்கொளியில் அந்தப்பிரதான நுழைவாயில் அதிகம் பிரகாசிக்கின்றன. கீழே இந்த மாய வாழ்வென்னும் இருளில் மூழ்கியுள்ள ஜனங்களை சிம்பாலிக்காகக் காட்டியுள்ளது போலத் தோன்றுகிறது. அம்மனை தரிஸித்தபின் அவர்கள் வாழ்வினிலும் ஒளி வீசும் என்ற நம்பிக்கை அளிக்கிறது.
சமுத்திரக்கரையில் தீர்த்தவாரிக்கு ஸ்வாமியை அழைத்துச்செல்லும் படம் நல்ல பளிச்சென்று உள்ளது.
ReplyDeleteஅடுத்த படமும் பக்தர்கள் நீரில் நிற்பது ஜோர். பிறவிப்பெருங்கடலை கடந்து அம்மனின் அருளைப்பெறத் துடிக்கிறார்கள் போல அல்லவா காட்டியுள்ளீர்கள்! ))))
மேள தாள நாயனக்கச்சேரி செய்யும் கலைஞர்களையும் விடாமல் காட்டியுள்ளீர்களே! தெரு விளக்குகளும் எரிவது அழகுக்கு அழகு சேர்க்கிறது.
புகைக்குண்டும், பலூன்களும் தனிச் சிறப்பாக அதிசயமாக உள்ளன.
அன்னையின் அரவணைப்பில் துறைமுகம் ..... ஆஹா! ))))
கடைசியில் காட்டியுள்ள மலர்த் தோட்டம் அழகான பதிவுக்கு அழகூட்டுவதாக அமைந்து விட்டது.
அனைத்துமே அருமை. அழகு.
விளக்கங்களும் பிரமாதம்.
பகிர்வுக்கு நன்றிகள். vgk
தேரும் திருவிழாவும் அருமை.அந்த புகைக் குண்டு ... நான் இதுவரை எங்கும் பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதுமில்லை.வித்தியாசமாக கவரும் வண்ணம் உள்ளது.
ReplyDeleteபடங்களும் அருமை.அம்மன் அருள் பாலிக்கும் வண்ணமாக பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி
புகைக்குண்டு ...
ReplyDeleteவித்தியாசமாக இருக்கிறது சகோதரி...
மகமாயி அருள்பெற்றோம் ....
சிறப்பான தகவல்களுடன் தங்களின் இப்பதிவு ஆன்மீக அன்பர்களுக்கு விருந்து! நன்றி!
ReplyDeleteபக்திக்கு வணக்கங்கள் .அருமை
ReplyDeleteஆத்தா முத்துமாரி அழகா பவனி வருவது பரவசம்...அழகிய படங்களுடன் பக்தி பகிர்வுக்கு நன்றிங்க மேடம்!
ReplyDeleteஅதிகாலை தரிசனம் அம்மன் அருளால் வாழ்வு நலம்பெறட்டும் அனைவருக்கும் ...
ReplyDeleteவல்வை முத்துமாரியம்மன் பற்றிய தகவல்கள் அருமை.படங்கள் அற்புதமாக இருக்கு. நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநீங்கள் கஷ்டப்பட்டு இவ்வளவு செய்திகள் சேகரித்ததற்கே பெரிய பாராட்டுக்கள்.
ReplyDeleteவல்வை முத்துமாரியின் அருள் கிடைத்தது.
ReplyDeleteபடங்கள் எல்லாம் மிக துல்லியமாய் இருக்கிறது. நேரே கண்டு களித்த உணர்வை தந்து விட்டது.
நன்றி.
நல்ல பகிர்வுங்க.
ReplyDeleteவல்வைக்கு செல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் புகைப்படங்கள் மூலம் அந்த ஆலயத்திற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள்.
ReplyDeleteபதிவிற்கு நன்றி.
பார்த்தேன், ரசித்தேன்.
ReplyDeleteஅறியத் தகு புகைப்படங்களுடன் அருமையான தகவல்கள் சேர்ந்த பதிவு .
ReplyDeleteஅறிந்து கொண்டேன்
பகிர்வுக்கு மிக்க நன்றி மேடம் .
ஊர்தோறும் குடி கொண்டுள்ள தெய்வம்.மாறி என்றால் மழை,மழை தெய்வத்தைப் பற்றிய பகிர்வு நன்று.
ReplyDeleteசிறப்பான தகவல்களுடன் ஆன்மீக பதிவு...ரசித்தேன்...
ReplyDeleteநல்ல பகிர்வு....
ReplyDeleteஅம்மனின் அலங்காரமும், உங்களின் அமர்க்களமான எழுத்து நடையும் மனதை ஆன்மீகத்தால் நிரப்பியது.
ReplyDeleteபக்தியால் தன்யனானேன்.
அருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
வாழ்த்துகள்.
அரிய தகவல்களைத் தந்த தங்கள் பதிவின் பகிவுக்கு நன்றி சகோதரி.
ReplyDeleteஎன் மனதை திருடிய பாடல்கள்
இக்கோயில் எனது பிறந்த ஊருக்கு அண்மையில் உள்ள கோயில். தர்சித்திருக்கின்றேன்.
ReplyDeleteதிருவிழாக்காலத்தில் அவ்வூரே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
அழகிய பகிர்வு.
;)
ReplyDeleteஹரே ராம, ஹரே ராம,
ராம ராம ஹரஹரே!
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரஹரே!!
1414+6+1=1421 ;)
ReplyDeleteஅடியேனுக்கு மட்டும் அளித்துள்ள ஒரே பதிலுக்கு நன்றிகள்.