




ஸ்ரீராஜ கணபதியின் பேரருளால் வாழ்வில் சகல ஐஸ்வரியங்களையும் பெற்று, வாழ்வில் உயர்ந்து இன்புறலாம்.அற்புதமாக, அழகுறத் திகழும். ராஜகணபதியை மனதாரப் பிரார்த்தித்தால், கல்யாண மாலை விரைவில் கிடைக்கும்; சீரும் சிறப்புமாக வாழலாம்’ என்பது நம்பிக்கை.

விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து





ஸ்ரீராஜகணபதிக்கு தினமும் பாலபிஷேகம் செய்து பிரார்த்திக்கும் பக்தர்கள் ஏராளம். அமாவாசை மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களில், இவருக்கு விசேஷ அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாளில், ஸ்ரீராஜகணபதிக்கு நைவேத்தியம் படைத்து வணங்கினால், வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்; உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமாம்.

திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், இங்கு வந்து ஸ்ரீராஜகணபதிக்கு மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தித்தால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும்; இல்லறம் சிறக் கும் என்பது நம்பிக்கை. இதனால் இவருக்கு கல்யாண கணபதி என்றும் திருநாமம் உண்டாம்!


வாக்கு உண்டாம்: நல்ல மணமுண்டாம்: மாமலரரள்
நோக்கு உண்டாம்: மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
இந்தக் கோயிலில் ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபால முருகன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இங்கேயுள்ள ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு ராகுகால சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இவளை வணங்கித் தொழுதால், எதிரிகளின் தொல்லை ஒழியும்; வீண் பயத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

வியாழக்கிழமை களில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விசேஷ வழிபாடு சிறப்புற நடைபெறுகிறது. இவரை வணங்கினால், கல்வி-கேள்வி களில் சிறந்து விளங்கலாம்; ஞாபக சக்தி அதிகரிக்கும்!

வியாழக்கிழமை களில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விசேஷ வழிபாடு சிறப்புற நடைபெறுகிறது. இவரை வணங்கினால், கல்வி-கேள்வி களில் சிறந்து விளங்கலாம்; ஞாபக சக்தி அதிகரிக்கும்!
ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி திருநாளில், சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீராஜ கணபதியைக் காணக் கண்கோடி வேண்டும். எண்ணற்ற பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதால், கொழுக்கட்டைகளை நைவேத்தியம் செய்து, ஸ்ரீராஜகணபதியை வணங்கிச் செல்வார்கள். இந்த நாளில் மகா கணபதி ஹோமம், பிரமாண்டமாக நடைபெறும். இந்த யாகத்தில் பங்கேற்று ஸ்ரீராஜகணபதியைத் தரிசித் தால், ராஜயோகம் கூடி வரும்; நல்லன வெல்லாம் நம்மைத் தேடி வரும்,....
அதேபோல், தைத் திருநாளுக்கு மறுநாள், ஸ்ரீகணபதிக்கு விசேஷ அலங்காரமும் ஹோமமும் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் படையலிட்டு வழிபடுவார்கள். அப்போது வைக்கும் கோரிக்கைகள் யாவற்றையும் தட்டாமல் நிறைவேற்றித் தந்தருள்வாராம் ஸ்ரீராஜகணபதி.

ஈரோடு மாவட்டத்தில் உள்ளது பெருந்துறை. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஆசிரியர் குடியிருப்புப் பகுதியில் ராஜபரிபாலனம் செய்தபடி, அனைவருக்கும் அருளும் பொருளும் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீராஜகணபதி





இந்த வழியே செல்லும் பேருந்துகள் அனைத் தும் கோயில் வாசலுக்கு அருகிலேயே நின்று ராஜயோகம் அருளும் ஸ்ரீராஜ கணபதியின் தரிசனம் பெற்றுச் செல்வது வசதியாக உள்ளது




![[god-shiva-dance-with-god-ganesha-snap.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixmjdA0CT6qQ-TtJlDyjiR4oya81kTcFN6ss66TIjiHRXXskU0hIuzm1lYxWVYHXqyy4loTSvj-6A8topIMFKnrkF_1NnOvZDEe7pgVR20KXqlp_mPkFAZoDkzHLz97aydKCjuZCtp08g/s1600/god-shiva-dance-with-god-ganesha-snap.jpg)















இன்று எனக்கு ராஜ யோகம் தான்.
ReplyDeleteமீண்டும் வருவேன். vgk
அழகழகான நம் இஷ்டதெய்வமான தொந்திப்பிள்ளையார்கள்! அடடா அருமையோ அருமை.
ReplyDeleteராஜகணபதியை மனதாரப் பிரார்த்தித்தால், கல்யாணமாலை விரைவில் கிடைக்கும்.
ஆஹா! கிடைக்கட்டும்; கிடைக்கட்டும்;
”சீரும் சிறப்புமாக வாழலாம்” என்பது நம்பிக்கை.
அப்படியே நம்பிக்கையுடன் வாழ்வோம்!
அதற்கு அந்த தும்பிக்கையான் துணை புரியட்டும்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅழகழகான நம் இஷ்டதெய்வமான தொந்திப்பிள்ளையார்கள்! அடடா அருமையோ அருமை.
ராஜகணபதியை மனதாரப் பிரார்த்தித்தால், கல்யாணமாலை விரைவில் கிடைக்கும்.
ஆஹா! கிடைக்கட்டும்; கிடைக்கட்டும்;
”சீரும் சிறப்புமாக வாழலாம்” என்பது நம்பிக்கை.
அப்படியே நம்பிக்கையுடன் வாழ்வோம்!
அதற்கு அந்த தும்பிக்கையான் துணை புரியட்டும்./
ராஜயோகமாய் கருத்துரை வழங்கி பதிவைச் சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..
கல்யாண கணபதி என்ற பெயரிலேயே அவரின் கல்யாண குணங்கள் தெரிகின்றதே! மகிழ்ச்சி ;)))))
ReplyDeleteமீண்டும் இந்தப்பதிவிலும் காட்டியுள்ள இரட்டை வேட நர்த்தன கணபதி அழகோ அழகு! திகட்டாததோர் தித்திக்கும் படம். )))))
திண்டு மீது தலைவைத்து ராயசமாகப் படுத்திருக்கும் பிள்ளையார், தட்டு நிறைய லட்டுகள் வேறு சூப்பர்.
கவிழ்ந்த நிலையில் உடலைக்குறுக்கி குப்புறப்படுத்திருக்கும் குழந்தைப் பிள்ளையார் - ஜாலியான போஸ் )))) தான்.
அமைதியைப் பரப்புவோம் என்ற [சோப்பு போன்ற] நம்பிக்கை வரிகளை தும்பிக்கையால் அனைத்த வண்ணம் உள்ள கடற்கரை மணல் கணபதி எவ்ளோ சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.
ReplyDeleteஅந்த சம்பந்தப்பட்ட பெண் கலைஞர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
;)))))
விநாயகர் அருள் உங்களுக்கு மிக மிக மிக மிக அதிகமாக உள்ளது.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி நாளில், இனிய கொழுக்கட்டையை தின்ற பிறகு, ஒரு தாய்க்கு குழந்தையொன்று பிறந்தால் மட்டுமே, அந்தக்குழந்தைக்கு இத்தகைய பரிபூரண அருள் ”பூர்ணம்” ஆக சித்திக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஒருவேளை தாங்களும் அதுபோல பிறந்திருப்பீர்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.
மிகவும் அருமையான, அசத்தலான, அழகான படங்களுடன்+விளக்கங்களுடன் கூடிய அரியதோர் பதிவுக்கும் பகிர்வுக்கும் என் நன்றிகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
படித்து முடித்ததும் தேங்காய் + வெல்லம் + ஏலக்காய் போட்ட பூர்ணம் ஒரு வெள்ளிக்கிண்ணம் நிறைய எடுத்துக்கொண்டு வெள்ளி ஸ்பூன் போட்டு துளித்துளியாக ரசித்து சுவைத்து சாப்பிடுவது போல கற்பனை செய்து கொண்டேன்.
ருசியோ ருசியாகவே உள்ளது.
பிரியத்துடன் vgk
விநாயகர் பற்றி உங்கள் வலைப்பதிவில் படிப்பதை விட, விநாயகரின் புகைப்பட தொகுப்புகளை பார்ப்பதற்காகவே வரலாம் உங்கள் வலைதளத்திற்கு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅழகோ அழகு அத்தனை அழகு!.வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteமிக்க நன்றி பகிர்வுக்கு ...
அருமையான படங்களுடன் கூடிய அரியதோர் பதிவுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன் மனம் பிடித்த விநாயகரை இவ்வளவு அருமையாகக் காட்டியதற்கு கோடான கோடி நன்றிகள் ராஜேஸ்வரி...
ReplyDeleteகிடார் வாசிக்கும் பிள்ளையார் சூப்பர்.ராஜயோகம் கிடைச்சிருமா?
ReplyDeleteஅதிகாலையில் தங்கள் பதிவின் மூலம்
ReplyDeleteகணபதி தரிசன்ம் செய்யும் பாக்கியம் பெற்றேன்
படங்களும் பதிவும் அருமை
குறிப்பாக நர்த்தன கணப்தி மனதை
மிகவும் கொள்ளை கொண்டார்
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
காலையில் ராஜ கணபதியின் தரிசனம். இன்று உங்கள் வலைப்பக்கம் வரும் அனைவருக்கும் ராஜயோகம் தான்.!!
ReplyDeleteவிநாயகரின் ஸ்பெசாலிடியே அவர் பக்தர் பிரெண்ட்லி என்பதுதான். அவரை எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வணங்கலாம். படங்களை தேர்வு செய்து போடுவதற்கே உங்களுக்கே பெரிய சபாஷ் போடலாம். படங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteஅடாடா... அசையும் படங்கள் அனைத்திலும் கணபதி உள்ளத்தைக் கொள்ளை கொண்டார். விநாயகர் கிடார் வாசிப்பதை என் மனம் விரும்பவில்லை. ஈரோடு பக்கம் சென்றால் அவசியம் கணநாதனைக் கண்டு களிப்பேன். படங்களைத் தாண்டி வரவே மனம் இல்லாதபடி அவ்வளவு சிரத்தையுடன் தொகுத்துள்ளீர்கள். தும்பிக்கையான் அருளால் உ(எ)ங்களுக்கு ராஜயோகம் கிட்டட்டும்..!
ReplyDeleteThanks 4 sharing..
ReplyDeleteவிணை தீர்க்கும் விநாயகர் படங்கள் அருமை
ReplyDeleteபடங்கள் அருமை.. தாண்டியா ஆடும் புள்ளையாரும், பாக்குப் புள்ளையாரும் ஜூப்பர் :-)
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteஅத்தனை படங்களும் அருமை.
வாழ்த்துகள்.
மத்தளம் இசைத்து கோலாட்டம் ஆடும் கணபதியின்
ReplyDeleteபடம் மனதில் பதிந்துவிட்டது சகோதரி.....
விநாயகரின் தரிசனம் அருமை... சகோ...
ReplyDeleteமணல் பிள்ளையார் அருமை.
ReplyDelete“நமோ வ்ராதபதயே,நமோ கணபதயே,நம:ப்ரமத பதயே நமஸ்தோஸ்து லம்போதராயைக தந்தாய,விக்னநாசினே,சிவசுதாய ஸ்ரீ வரத மூர்த்தயே நமோ நம:”
அருமையான பிள்ளையார்களின் அணிவகுப்பு.
ReplyDeleteஅழகான கணபதிகள். என்னுடைய விருப்பமான பிள்ளையார் பற்றிய பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி கொண்டாடியதைப் போல ஒரு உணர்வு. பிள்ளையாரே உங்களுக்கு புகைப்படங்களை தந்திருப்பாரோ?? அவ்வளவு தெய்வீகமானது.
ReplyDeleteவியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுவது குரு பரிகாரம்.நல்ல படங்களுடன் அருமையான பதிவு.
ReplyDeleteஇன்னிக்கு நிறைய அழகழகான பிள்ளையார் தரிசனம் கிடைத்தது. நன்றி
ReplyDeleteஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கையே நமோ நம.. ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கையே போற்றி...
ReplyDeleteஓம் ஸ்ரீ ராஜ கணபதி போற்றி... தை திருநாளுக்கு அடுத்த நாள் மறவாமல் ராஜ கணபதியை தொழுவோம்.... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ!
ReplyDelete1380+6+1=1387 ;)))))
ReplyDeleteஎனக்கு மட்டும் எதோ ஒரு பதிலாவது கிடைத்துள்ளது. அதுவரை சந்தோஷமே. ;)