சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் கல்யாண முருகா சுப்ரமண்யம்
வேதங்கள் முருகனை "சுப்ரமண்யோஹம்" "சுப்ரமண்யோஹம்" "சுப்ரமண்யோஹம்" என மும்முறை சொல்லி ஆராதிக்கின்றது.
அந்த வேதத்தையே, அவற்றின் பொருளையே தன் தகப்பனுக்குப் போதிக்கின்றான் அந்தத் தகப்பன் சாமி.
மூலவர் முருகன் ஓவியம்
தீராத வினைகள் யாவையும் தீர்க்கும் கந்தவேள் நம் சொந்தவேள்
என்பார் வாரியார் ஸ்வாமிகள்.
அவன் கைவேலோ துள்ளி வந்து
நம் தீராத வினைகள் யாவையும் தீர்க்கும்.
அதைத் தான் பாரதியும்,
" சுற்றி நில்லாதே போ!பகையே
"துள்ளி வருகுது வேல்!என்று பாடினார்.
ஸ்ரீ சுப்ரமண்யா!
ஷடானணம் சந்டனளிப்த கதரம் - -
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம் |
ருத்ரஷ்ய சூனும் சூரலோக நாதம் -
பிராமணிய தேவம் சரணம் ப்ரபத்யே
கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் "குக்கி சுப்ரமண்யா' கோயில்
பல யுகம் கண்ட பிரபலமான கோயிலாகும்.
சமஸ்கிருதத்தில் இத்தலம் "குக்ஷி' என அழைக்கப்படுகிறது.
பேச்சு வழக்கில் "குக்கி சுப்ரமண்யா' என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது.
கந்தபுராணத்தில் "தீர்த்த ஷேத்ரா மகிமணிரூபணா' அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது.
முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன.
9 கால பூஜை நடக்கிறது. காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர்.
மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர்.
கால பைரவர் சன்னதி உள்ளது.
நாகர் பிரகார ஈசான மூலையில் உள்ளது.
குறிப்பிடத்தக்க நாக தோஷ பரிகார ஸ்தலம் ..
நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அபயம் அளித்துள்ளதால், ராகு, கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள்.
பிரம்மஹத்திதோஷம் (கொலை பாவம்), முன் ஜென்ம பாவங்கள், பித்ரு கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.
வயிற்று வலி, தோல் நோய், மன நோயால் பாதிக்ப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள குமாரமலைப் பகுதியில் குமாரதாரா நதித்தீரத்தில்,இயற்கை காட்சிகளை தன்னகத்தே அடக்கி அமைந்துள்ளது.
முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின், தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.
பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார்.
ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் வழிபட்ட திருத்தலம்...
காஷ்யப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது.
இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர்.
முடிவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில், கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின.
வினதாவின் குழந்தையான கருடன், நாகங்களை துன்புறுத்தி வந்தது.
வருந்திய நாகங்கள், வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின.
அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின.
சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி,
""எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான்,'' என்றார்.
அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபாடு செய்ததனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றியதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது.
கர்நாடகத்தில் ஓடும் குமார தாரா நதிக்கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. ஊரின் பெயரே
"சுப்ரமண்யா' என்பது தான்.
சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன், "குக்குட த்வஜ கந்தஸ்வாமி' என அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில்,
சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர்.
கோவிலில் சுப்ரமண்யரே பிரதான தெய்வம்.வாசுகி,
சேஷம்,காலபைரவர் ஆகியோர்களது சிலைகளும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றன.
ஆண்கள் மேல்சட்டை இன்றிதான் அனுமதிக்கப் படுகிறார்கள்
தரைக்குக் கீழே தவழ்ந்து மட்டுமே செல்லக் கூடிய சிறிய குகை ஒன்று காட்சிப்பட்டது..
தரைக்கு மேல் நடந்து குகையின் இன்னொரு முடிவுப்பக்க வாயிலில் பாம்பைக் கொத்த வரும் கருடனைத் தடுக்கும் தத்ரூபமான முனிவர் சிலையுடன் ஸ்தல புராணக்கதையை விளக்கியது..
குக்கே சுப்ரமண்யா கோவில் குமாரதாரா நதியின் கரையில் வீடு கட்ட நேர்ந்து கொள்வோர் அடுக்கி வைத்திருந்த கற்கள் அந்த நதிக்கு ஒரு புது அழகைச்சேர்க்கின்றன.
மனமே முருகனின் மயில் வாகனம்
மனமே முருகனின் மயில் வாகனம்
ReplyDeleteகடைசியில் காட்டப்பட்டுள்ள மயில்
[16 வயதினிலே படத்தில் வரும் மயிலு போலவே] ரொம்ப அழகாக உள்ளது.
தேர் சக்கரங்களுக்கு மேல் உள்ள தேரின் நடுப்பகுதி எவ்ளோ கலையுணர்வுடன், அழகாக மரத்தில் செய்யப்பட்டுள்ளது பாருங்கள். ரொம்ப ஜோர்.
ReplyDeleteகல்லிலே கலைவண்ணம் கண்டேன்
ReplyDelete[நதிக்கரையிலே வீடு கட்ட நேர்ந்து கொள்வோரால் அந்த நதிக்கே அழகு சேர்க்கிறது.....] ஆஹா! அருமை
முனிவரை முகத்தை தாங்கள் மட்டும் சேவித்து விட்டு, எங்களுக்கு மிகப்பெரிய முதுகை மட்டும் காட்டியிருக்கிறீர்களே!
ReplyDeleteஅதனால் பரவாயில்லை. கருடனைக் கப்பென்று பிடித்து, பாம்பைக் காத்து விட்டாரே ..... அடடா, புராணக்கதைகளை நீங்கள் எழுதி நான் படிக்க, என்ன தவம் செய்தனை ... யசோதா ... பாட்டு தான் ஞாபகம் வருகிறது.
அந்த குகைக்குள் தவழ்ந்து சென்றீர்களா?
ReplyDeleteஅந்த அனுபவம் எப்படியிருந்தது?
சேவல் படம் வெகு அருமை.
ReplyDeleteசிவப்புக்கொண்டை, கண், மூக்கு, கால்கள், மூன்று கலர்களில் இறக்கைகள். அழகோ அழகு.
முருகனின் கொடியை அலங்கரிப்பவர் அன்றோ!
வேதம் கூறும் கருத்தினைத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளது தங்கள் தனித்தன்மைக்கு எடுத்துக் காட்டு.
ReplyDeleteநம் தொந்திப்பிள்ளையார் கருப்பாக இருப்பினும் நல்ல பளபளப்பாக உள்ளாரே! தொந்தியில் இருப்பவர் தம்பி சுப்ரஹ்ம்மண்யரோ!
குக்கே சுப்ரமணியர் விக்ரஹம் நாகருடன் காட்டியுள்ளது மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
மணியின் பிடியை கவனித்தீர்களா?
பொதுவாக சிவனுக்கு நந்தியோ, பெருமாளுக்கு ஸ்ரீ சக்ரமோதானே இருக்கும். இதில் மயில் போல உள்ளது பாருங்கள்
கோபுரங்கள் யாவும், வழக்கம் போல அழகாகக் காட்டியுள்ளீர்கள்.
அனைத்தும் அருமையோ அருமை!
அழகோ அழகு!! அசத்தலோ அசத்தல்!!!
நிறுத்தவே மனமில்லாமல் எழுதிக் கொண்டே போகலாம் போலத் தோன்றுகிறது, என் மனதுக்கு.
நான் நாளைக்கு நான்கு பதிவுகள் தர வேண்டுமே. அந்த வேலைகள் எல்லாம் அரைகுறையாக உள்ளன.
எனவே
“சுப்ரமண்யோஹம்”
“சுப்ரமண்யோஹம்”
“சுப்ரமண்யோஹம்”
கோபதாபமில்லாமல் எல்லோரையும் சந்தோஷமாக வைய்யப்பா என்று சொல்லி விடை பெற்றுக் கொள்கிறேன்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.
vgk
பார்த்து ரசித்தேன்.
ReplyDeleteதேரின் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
ReplyDeleteஅருமையான படங்கள் விளக்கம். பணி நிமித்தமாக அடிக்கடி இப்பொழுது இந்தக்கோவிலுக்கு செல்லும் வாய்ய்ப்பு இப்போது.
ReplyDeleteதிருத்தணி முருகன் திருவருள் புரிவான். திருமால் மகிழும் அழகிய மருகன்
மிகவும் புகழ் பெற்ற குக்கே சுப்பிரமணியா கோவில் பற்றிய அருமையான பதிவு. படங்கள் மிக அழகு.நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteமிகவும் நல்ல பதிவு. நன்றி
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
கலக்கல் படங்களுடன் படைப்பான பதிவு சூப்பர் மேடம்
ReplyDeleteஅழகான பதிவும் படங்களும்!!
ReplyDeleteசுப்ரமணியம் சுப்ரமணியம் சண்முகநாதா.......
ReplyDeleteஉடுப்பியில் சில நாட்கள் இருந்தபோது சென்றிருக்கிறேன்.அதை மீண்டும் நினைவு படுத்தி விட்டீர்கள்.நன்றி.கால சர்ப்பதோஷம் இருந்தால் போக வேண்டிய தலம்.
ReplyDeleteமனதைக் கவர்ந்தது அருமை.
ReplyDeleteசுப்ரமண்யாவின் குளிரும், சுத்தமான காற்றும்கூட வர்ணனைக்கு அப்பாற்பட்டவை. பிராசாதமாக தரப்படும் சிவப்பு புற்று மண் நோய் தீர்க்கும் வல்லமை உள்ளது. பகிர்விற்கு நன்றி தோழி.
ReplyDeleteஒரு வித்தியாசமான கருத்தைப் பதிவிட முதலில் தயக்கம் இருந்தாலும் ஆண்டவன் முன் என நான் எழுதிய பதிவில் கண்ட , ஆனால் அதைவிட மனக்கிலேசம் அடைந்த இடம் இது. நீங்கள் பதிவிட்டதுபோல் எல்லாமே அழகுதான். ஆனால் அங்கு கடைபிடிக்கப் படும் சில நடை முறைகள் கண்டு வருந்தி உணவருந்தாமல் வந்துவிட்டேன். கர்னாடகாவில் அநேகமாக எல்லா பெரிய கோவில்களிலும் இலவச உணவு அளிக்கப்படும். ஆண்டவனின் பிரசாதம் என்று உணவருந்தப்போனால் எல்லோரும் சமமாக நடத்தப் படுவதில்லை. பிராமணர்க்கும் பிராமணர் அல்லாதாருக்கும்வேறு வெறு பந்திகள். பிறப்பால் பிராமணனாயிருந்தும் என்னால் அங்கு உணவு உட்கொள்ள முடியவில்லை.
ReplyDeleteG.M Balasubramaniam said...//
ReplyDeleteஎங்களால் வருத்தத்துடன் அனுசரித்துப் போவது எங்களுடன் வரும் சிலருக்கும் முடிவதில்லைதான்..ஆதங்கப்படுகிறார்கள்..
கண்ட ந்ல்லவற்றை மட்டுமே பகிர உறுதியாய் நினைக்கிறேன்..
http://muruganirukkabayamen.blogspot.com/
ReplyDeletehttp://omsaravanabhavasecurities.blogspot.com/
;) ஓம் ஸுமுகாய நம:
ReplyDelete;) ஓம் ஏகதந்தாய நம:
;) ஓம் கபிலாய நம:
;) ஓம் கஜகர்ணகாய நம:
;) ஓம் லம்போதராய நம:
1316+8+1=1325
ReplyDeleteஆயிரம் நிலவாக இல்லாவிட்டாலும் ஒரேயொரு
‘நிலவென ..... வா ரா யோ ..... ஒரு பதில் கூ றா யோ ?”