தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம்
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் கலசோபிகௌஸ்துபம்
பீதாம்பரம் ஸாந்த்ரபயோதஸௌபகம்
தாமரைக்கண்கள் கொண்ட அற்புத வடிவம்.
வசுதேவர் கண்ணிமைக்காமல் பார்த்த அந்த அற்புதம் மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் அக அழகினையும், புற அழகினையும் அருளி பேரழகன் என்ற சிறப்பு பெயரும் கொண்டு .
நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார்.
வசுதேவர் கண்ணிமைக்காமல் பார்த்த அந்த அற்புதம் மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் அக அழகினையும், புற அழகினையும் அருளி பேரழகன் என்ற சிறப்பு பெயரும் கொண்டு .
நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார்.
தாயார் அலமேலு மங்கை. தாயாரின் சிறப்பு பெயர் அழகுத்தாயார்.
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், விஷ்வக்சேனர், மத்வாச்சாரியார், ராமானுஜர், மகாதேசிகன் ஆகியோருக்கும் சன்னதி இருக்கிறது.
கொடிமரத்தின் அருகே கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் அருள்கின்றனர்..
கொடிமரத்தின் அருகே கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் அருள்கின்றனர்..
மகான்கள் ஐக்கியமான தலங்கள் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும்.
வேதம் படிக்க விரும்புபவர்கள், கல்வியறிவு பெருக, தொழில் மேன்மையடைய, நோய்கள் குணமாக பிருந்தாவனத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
வேதம் படிக்க விரும்புபவர்கள், கல்வியறிவு பெருக, தொழில் மேன்மையடைய, நோய்கள் குணமாக பிருந்தாவனத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
அதில் ராமானுஜர் ஐக்கியமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விசேஷமான தலமாக இருக்கிறது.
அதேபோல்இக்கோயிலில் அஹோபில மடத்தின் 36வது பட்டம் ஜீயர் அழகியசிங்கர், வண்சடகோப ஸ்ரீனிவாச மஹாதேசிகன் சுவாமிகளின் ஜீவ பிருந்தாவனம் உள்ளது.
ஆவணி 7 முதல் 12 வரை சூரிய ஒளிக்கதிர் பெருமாளின்
பாதத்தில் பட்டு சூரிய வழிபாடு நடக்கிறது.
அதேபோல்இக்கோயிலில் அஹோபில மடத்தின் 36வது பட்டம் ஜீயர் அழகியசிங்கர், வண்சடகோப ஸ்ரீனிவாச மஹாதேசிகன் சுவாமிகளின் ஜீவ பிருந்தாவனம் உள்ளது.
ஆவணி 7 முதல் 12 வரை சூரிய ஒளிக்கதிர் பெருமாளின்
பாதத்தில் பட்டு சூரிய வழிபாடு நடக்கிறது.
அழகுக்கலை பயில்பவர்களும், அழகு நிலையம் நடத்துபவர்களும் கலையில் சிறந்து திகழ இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
மன்னன் மனைவியின் வியாதியை நீக்கி அவளுக்கு அழகு தந்தும், மன்னனின் தவறான எண்ணத்தை போக்கி அவனது உள்ளம் அழகாக இருக்கும்படியும் அருளியதால் இத்தலத்து பெருமாள் "அழகர்' என்று பெயர் பெற்றார். தாயாரும் "அழகுத்தாயார்' எனப்படுகிறார்.
அழகர் இங்கு உற்சவராக இருக்கிறார்.
அழகில்லை என வருந்துபவர்கள், பெருமாள் மற்றும் தாயாருக்கு வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம்,
குங்கும அர்ச்சனை நடக்கிறது.
அழகில்லை என வருந்துபவர்கள், பெருமாள் மற்றும் தாயாருக்கு வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம்,
குங்கும அர்ச்சனை நடக்கிறது.
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தைபாக்கியம் வேண்டுபவர்கள், பிரிந்த தம்பதியினர் அப்போது தாயாரை தரிசித்தால் அவர்களது வேண்டுதல் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனின் மனைவி தன் முன்வினைப்பயனால், தீராத தோல் வியாதியால் பாதிக்கப் பட்டாள். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் வியாதி குணமாகவில்லை.
அவளது நோய் அதிகமாகி, அழகு மங்கியது.
மன்னனுக்கு மனைவி மீதிருந்த அன்பு கொஞ்சம், கொஞ்சமாக மறையத்துவங்கி வெறுத்து ஒதுக்கிய அவன், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்தான்.
கணவனின் எண்ணத்தை அறிந்த மனைவி மிகவும் வருந்தினாள்.
மன்னனுக்கு மனைவி மீதிருந்த அன்பு கொஞ்சம், கொஞ்சமாக மறையத்துவங்கி வெறுத்து ஒதுக்கிய அவன், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்தான்.
கணவனின் எண்ணத்தை அறிந்த மனைவி மிகவும் வருந்தினாள்.
தனது நோய் நீங்கவும், கணவனின் எண்ணத்தை மாற்றவும் வேண்டி இத்தலத்தில் பெருமாளை வேண்டினாள்.
அவளது பக்தியில் மகிழ்ந்த பெருமாள் வியாதியை நீக்கி அருளியதோடு, அவளை முன்பிருந்ததைவிட மேலும் அழகாக மாற்றினார்.
அவளது பக்தியில் மகிழ்ந்த பெருமாள் வியாதியை நீக்கி அருளியதோடு, அவளை முன்பிருந்ததைவிட மேலும் அழகாக மாற்றினார்.
மன்னனுக்கும் நற்புத்தி கொடுத்தார்.
மன்னனும், வேறு திருமணம் முடிக்கும் எண்ணத்தை
விட்டு, தன் மனைவியுடன் இல்லறம் நடத்தினான்.
மன்னனும், வேறு திருமணம் முடிக்கும் எண்ணத்தை
விட்டு, தன் மனைவியுடன் இல்லறம் நடத்தினான்.
ஆஹா! வெள்ளிக்கிழமைக்கு அழகுத்தாயார் அலமேலு மங்கையா!
ReplyDeleteசந்தோஷம். தரிஸித்து வருவேன்.
வழக்கம்போல் அழகழகான படங்கள். புறப்பாட்டு அம்மன்களின் காசு மாலை ஜொலிக்கிறது. புடவைக்கட்டு விசிறி மடிப்புடன் அழகோ அழகு, வைத்தகண் வாங்காமல் ஒவ்வொன்றையும் நெடுநேரம் உற்று நோக்க வேண்டியுள்ளது.
ReplyDeleteமுதல் படத்தில் ஜொலிக்கும் லக்ஷ்மி அதுவும் இரட்டை வேடத்தில்!)))
ReplyDeleteஇரண்டாவது படத்தில் அந்த கஜலக்ஷ்மி அதுவும் தாமரைமலர் குவியலில். ஒரே ஒரு தாமரையைக்கண்டாலே அதன் அழகில் நான் சொக்கிப்போவதுண்டு. இது தாயாரின் பாதூர் அல்லவா! கேட்கவா வேண்டும்! ))))
படங்கள் அனைத்தும் என்னே நேர்த்தி. கூடவே எத்தனை விவரங்கள். அழகுத் தாயாரின் அனுக்கிரகம் தங்களுக்கு அமோகமாக கிட்டியுள்ளது.
ReplyDeleteஎன் அருட்கவிக்கு வருகை தாருங்கள் அம்மா.
ReplyDeleteஅம்பாளின் பின்னலங்காரம் (பின்னல் அலங்காரம்) சூப்பரோ சூப்பர். அதன் நீளமும், அதைத்தாங்கும் மிகப்பெரிய திண்டும், அதில் சங்குச்சக்கரமும், அதையும் தாண்டித்தொங்கும் குஞ்சலமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
ReplyDeleteபின்னல் அலங்காரத்தைக்காட்டி, பதிவைப்பின்னி எடுத்து விட்டீர்கள்! மிக்க மகிழ்ச்சி ;))))))
பல்லக்கில் அம்மன் படு ஜோர்.
ReplyDeleteஅதற்கு அடுத்தபடத்தில் அம்பாள் கொண்டைக்கும், புடவைத்தலைப்பின் விசிறி மடிப்புக்கும், முரட்டு மாலைக்கும் 100 க்கு 100 மார்க் தரலாம், அலங்காரம் செய்தவருக்கு மட்டுமல்லாமல், அதை எங்களையும் தரிஸிக்கச் செய்த உங்களுக்கும் தான்! ;)))))
அதற்கு அடுத்த படம் பெருமாளின் முத்தங்கி சேவையா? ;)))))
ReplyDeleteஅடடா! கையினால் கஷ்டப்பட்டு சேவை நாழியில் பிழிந்து செய்த தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, பருப்பு சேவை முதலியவற்றை, வறுத்த முந்திரி போட்டு, கணிசமான அளவு ஒரு பிடி பிடித்ததால் நாக்குக்கும், வயிற்றுக்கும், மனதுக்கும் எவ்வளவு ருசியாகவும், நிறைவாகவும் இருக்குமோ அதுபோல கண்ணுக்கு நிறைவாக உள்ளதே! ;))))))
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமுதல் படத்தில் ஜொலிக்கும் லக்ஷ்மி அதுவும் இரட்டை வேடத்தில்!)))
இரண்டாவது படத்தில் அந்த கஜலக்ஷ்மி அதுவும் தாமரைமலர் குவியலில். ஒரே ஒரு தாமரையைக்கண்டாலே அதன் அழகில் நான் சொக்கிப்போவதுண்டு. இது தாயாரின் பாதூர் அல்லவா! கேட்கவா வேண்டும்! )))).......
ஒவ்வொரு கருத்துரையிலும் பதிவைப் பெருமைபடுத்திய அனைத்து கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
அனைத்தும் அருமையாக, அசத்தலாக, அழகாகவே [வழக்கம்போலவே] கொடுத்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷம்.
ReplyDeleteவாழ்க, வாழ்க, வாழ்கவே!
பிரியமுள்ள vgk
சிவகுமாரன் said...
ReplyDeleteபடங்கள் அனைத்தும் என்னே நேர்த்தி. கூடவே எத்தனை விவரங்கள். அழகுத் தாயாரின் அனுக்கிரகம் தங்களுக்கு அமோகமாக கிட்டியுள்ளது./
என் அருட்கவிக்கு வருகை தாருங்கள் அம்மா.//
அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..
அமுத கவி நான் தவற்விடாத தளமல்லவா!! அருமையான சிவகுமரனின் கவிதைக்குப் பாராட்டுக்கள்..
அன்னை மீனாட்சியின் சக்தியளிக்கும் சிறந்த கவிதைக்கும் நன்றிகள்..
தாயாரின் அழகும்,கண்ணாடி சேவையும்,குதிரை வாகனமும்,கருட வாகனமும் கண்ணைக் கவர்ந்து மனதில்
ReplyDeleteநெகிழ்வையும் உருக்கத்தையும் உண்டு பண்ணுகின்றன்.
இந்த படங்கள் எல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது மேடம்?எல்லாமே நீங்களே எடுத்ததா?மிகவும் அற்புதமாக இருக்கின்றன.சொல்லி மாளாது.
படங்கள் பிரமாதம்.. இத்தனை அருகில் படம்பிடிக்க அனுமதிக்கிறார்களா?
ReplyDeleteஅம்பிகையின் அழகைக் காண கண் கோடி வேண்டும்... அவ்வளவு அழகு. அந்த ஜடை அழகு காணக்கிடைக்கா காட்சி.
ReplyDeleteநீங்கள் ஒவ்வொரு தளத்தைப் பற்றியும் எழுத எழுத எங்கள் ஊர் வல்வை முத்துமாரியை நீங்கள் வர்ணிக்கக் கேட்க வேண்டும் போல் உள்ளது.
அருமை அருமை
ReplyDeleteநாங்கள் நேரடியாகப் போய் தரிசனம் செய்த போது கூட
இப்படி அருமையாக அழகாக தரிசிக்க முடியவில்லை
எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அருமை.
ReplyDeleteஅத்தனை படங்களும் அருமை; படங்கள் பேசுகின்றன.
வாழ்த்துகள்.
காலையில் அழகான தரிசனம்
ReplyDeleteபடங்கள் வழக்கம்போல கண்களை நிறைக்கின்றன
ReplyDeleteஅழகான தாயாரின் படங்கள். பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteகுதிரையில் வந்த ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள் மனதைக் கொள்ளை கொண்டார். உங்களால் தாயாரைத் தரிசித்து அருள் பெற்ற நிறைவைப் பெற்றேன். அருமை.
ReplyDeleteபடங்களைப் பார்த்துக் கொண்டி ருந்தாலே போதும்!படிக்கவே தோன்றாது.
ReplyDeleteஅழகு,அழகு.
பாதூர் அழகனையும்,தாயாரையும் நேரில் சென்று சேவித்த மாதிரி இருந்தது.
ReplyDeleteபடங்கள் அற்புதம்.நன்றி பகிர்வுக்கு.
தாயாரின் அருள் நிறைவாக கிடைக்கப் பெற்ற திருப்தியை மனம் அடைகிறது...
ReplyDeleteநேரில் பார்க்கும் உணர்வு... சகோ...
கடைசியில் கருட வாகனம் அட்டகாசமான ஃபோட்டோ! கண்ணாரக் கண்டேன். :-))
ReplyDeleteஎத்தனையெத்தனைஅழகழகான புகைப்படங்கள் அவற்றிற்கான விளக்கங்கள். அருமையிலும் அருமை.
ReplyDeleteபெருமாள், தாயாரின் அருமையான தரிசனம். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதாயே என்று கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.எப்போதும் உங்கள் பக்காத்தில் படங்கள்தான் பிரமிப்பு !
ReplyDeleteவழக்கம்போல் - அலமேலு தாயாரின் புகைப்படங்கள் தெய்வீக அருமை.
ReplyDeleteஅழகுப் பெற வேண்டுதலுக்கு ஒரு கோயிலா?? முதல் தடவை கேள்விப் படுகிறேன்.
ஆலயம் எங்கு அமைந்துள்ளது என்பது எனக்கு பதிவின்மூலம் அறிய முடியவில்லை.
naren said...//
ReplyDeleteஆலயம் எங்கு அமைந்துள்ளது என்பது எனக்கு பதிவின்மூலம் அறிய முடியவில்லை.//
விழுப்புரம் மாவட்டம் பாதூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசை தினத்தையொட்டி நிகும்பலா யாகம் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மற்றும் நெய், பழ வகைகள், பால் சேர்ப்பிக்கப்படும்.. தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோரி பக்தர்கள் எழுதி வைத்த வெற்றிலையை யாககுண்டத்தில் சேர்ப்பிப்பார்கள்..
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்,
பாதூர் - 606 115.
விழுப்புரம் மாவட்டம்
+91- 4149 - 209 789, 93626 20173.
தாயாரின் திவ்ய தரிசனம் கண்டேன்... மகிழ்ந்தேன்....
ReplyDeleteமிக்க நன்றி....
சிலகாலங்களுக்கு முன் திருப்பதி போன போது அலமேலு மங்கை அம்மனை தரிசிக்க போக ஒரே தள்ளு முள்ளு அப்பா சாமி போதுமடா என வந்தததுதான் இப்போது மிகவும் அவசரமில்லாமல் பொறுமையாக பார்த்தேன் பாரட்டுகள்
ReplyDeleteஉடல் அழகு தாயிக்கும்... மன்னனுக்கு உள்ளம் அழகாகவும் பெருமாள் மாற்றி அருள் புரிந்துள்ளார்... ஓம் அலமேலுமங்கை தாயே போற்றி
ReplyDelete;)
ReplyDeleteஹரே ராம, ஹரே ராம,
ராம ராம ஹரஹரே!
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரஹரே!!
1394+8+1=1403 ;)))))
ReplyDeleteஆத்மார்த்தமான ஒரே பதிலுக்கு நன்றி, சந்தோஷம்.