மனக்குறையை தீர்த்து வைத்து, நல்லருள் தரும் நற்குணவானான பெருமாள் குணசீலத்தில் அருள்கிறார்.
பத்மசக்கரபட்டணம் என்கிற புராண பெயர் குணசீலற்கு உண்டு.
மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது.
திருப்பதி வேங்கடாசலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு "குணசீலம்' என்ற பெயர் ஏற்பட்டது.
வேங்கடாசலபதியின் அருளில் மூழ்கிப்போன குணசீல மகரிஷி, அவரை விட்டு அகல முடியாது.பிரிந்து வாழ முடியாது என்று எண்ணினார். தன் உள்ளக்கிடக்கையை எம்பெருமானிடம் கோரிக்கையாக கொட்டித்தீர்த்தார். தன் ஆசிரமத்துக்கு எழுந்தருளி, என்றென்றும் தனக்கும், மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும் என்று வரம் வேண்டினார்.
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பரமாத்மா, தாம் திருவேங்கடமலையில் அர்ச்சாவதாரமாக இருந்து குபேரனிடம்தான் வாங்கிய திருமண கடனை அடைத்துக் கொண்டிருப்பதாகவும், கடன் தீரும் வரை தாம் அங்கிருந்து வர முடியாது என்றும் கூறினார்.
மேலும் குணசீலர் காவிரிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவம் புரிய வேண்டும் என்றும், வைகுண்டத்திலிருந்து ஸ்ரீவாசுதேவன்-ஸ்ரீலட்சுமியுடன் பிரசன்ன வெங்கடேசனாக தாம் அங்கு எழுந்தருளுவதாகவும் திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி குணசீல மகரிஷியும் காவிரி வடகரையில் ஆசிரமம் நிறுவி பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் எழுந்தருள கடும் தவம் புரிந்தார்.
அவரின் தவத்தை மெச்சி வேங்கடாசலபதி பெருமாளும் கிருதயுகம், புரட்டாசி மாதம், சனிக்கிழமை, சிரவண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், தனுர் லக்னத்தில், சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் வேளையில் எம்பெருமான் திவ்ய மங்கள சொரூபராக பிரசன்னம் ஆகி குடி கொண்டார்.
இவ்வாறு எழுந்தருளிய பிரசன்ன வேங்கடாசலபதியை குணசீல மகரிஷி 3 யுகங்கள் தன் ஆசிரமத்தில் பூஜை புனஸ்காரங்களுடன், எவ்வித குறைபாடும் இன்றி வழிபட்டு வந்தார். இந்நிலையில் குணசீல மகரிஷி குரு
ஸ்ரீதல்பிய முனிவர் பத்ரிகாசிரமம் சென்று தவம் புரிய விரும்பினார்.
ஸ்ரீதல்பிய முனிவர் பத்ரிகாசிரமம் சென்று தவம் புரிய விரும்பினார்.
தன் ஆத்மார்த்த சீடர் குணசீலரும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம். இதை தம் தவ வலிமையால் உணர்ந்த குணசீலருக்கு பெரும் குழப்பம். தவமிருந்து, கிடைத்தற்கரிய செல்வமாய் பெற்ற
பிரசன்ன வேங்கடாசலபதியை விட்டுப் பிரிவதா?
தன்னை இவ்வளவு தூரம் உயர்த்திய குருநாதன் ஸ்ரீதல்பிய முனிவரை விட்டுப் பிரிவதா என்று தெரியவில்லை.
பிரசன்ன வேங்கடாசலபதியை விட்டுப் பிரிவதா?
தன்னை இவ்வளவு தூரம் உயர்த்திய குருநாதன் ஸ்ரீதல்பிய முனிவரை விட்டுப் பிரிவதா என்று தெரியவில்லை.
விடை காணமுடியாமல் தவித்த குணசீலர், தனக்கு நல்லதொரு முடிவு தருமாறு எம்பெருமான் பிரசன்ன வேங்கடேசனையே வேண்டினார். பெருமாளும் குணசீலரே, பத்ரிகாசிரமத்திலும் யாமே குடிகொண்டுள்ளோம். குருபக்தி குறைய வேண்டாம். ஸ்ரீதல்பியருடன் சென்று உம் சேவை தொடரட்டும் என்று அருள்பாலித்தார்.
எம்பெருமானின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் புறப்படும் முன் குணசீலர் இறைவனிடம் ஒரு வாரம் வேண்டினார். `வேண்டிய வருக்கு வேண்டியதை அருளும் வேங்கடேசா! தங்கள் கட்டளைப்படியே தல்பிய முனிவருடன் பத்ரிகாசிரமம் சென்று குருசேவையை தொடருகிறேன்.
இந்த புண்ணியஸ்தலம் இனி என் பெயரால் விளங்க வேண்டும். தங்களை நாடிவந்து வேண்டுவோரின் முன் `வினைப்பயன்கள் அனைத்தும் நீங்க வேண்டும். தீராத நோய்கள் எல்லாம் தீர வேண்டும். குறிப்பாக சித்தப்பிரமை உடையவர்கள் இங்கு வந்தால் தெளிவு பெற்றுச் செல்ல வேண்டும்.
கேட்டது கிடைக்க வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும். தென்திருப்பதி என்று மக்கள் போற்றி, பிரார்த்தனை தலமாக விளங்க வேண்டும்
என்று கேட்டார். தனக்காக வேண்டாமல், தரணியில் உள்ள மக்களுக்காக வேண்டிய குணசீலரின் எண்ணத்தை எம்பெருமான் பாராட்டினார்.
என்று கேட்டார். தனக்காக வேண்டாமல், தரணியில் உள்ள மக்களுக்காக வேண்டிய குணசீலரின் எண்ணத்தை எம்பெருமான் பாராட்டினார்.
`நீர் வேண்டிய படியே நடக்கும். யாம் சங்கு-சக்கரம் தரித்து, செங்கோலுடன் இங்கு காட்சி தருவோம். சகல நோய்களும் தீரும்' என்று அருள்பாலிக்க, குணசீல மகரிஷி பத்ரிகாசிரமம் புறப்பட்டு சென்றார். குணசீலர் போகும்முன்பு எம்பெருமானுக்கு சேவை செய்ய தன்சீடர்களில் ஒருவரை நியமித்து சென்றார்.
ஆற்றில் வெள்ளம் அடிக்கடி வந்ததாலும், வன விலங்குகள் சீடன் இருந்த பகுதியை முற்றுகையிட்டதாலும் பயந்துபோன சீடர் வெங்கடேசப்பெருமாளை தனியே விட்டு, விட்டு ஓடி விட்டார். எம்பெருமானோ தன்னைச் சுற்றி ஒரு புற்றை உண்டாக்கி அதனுள் குடி கொண்டார்.
. ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனைப் பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன. ஒருசமயம் தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் இந்த அதிசயத்தைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி, புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்த்தியது. மன்னன் சிலையை கண்டெடுத்து கோயில் எழுப்பினான். "பிரசன்ன வேங்கடாசலபதி' எனப் பெயர் சூட்டப்பட்டது.இவர் சுயம்பு மூர்த்தி ஆவார்.
பன்னிரு கருடசேவை: கோயிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதியும், பரிவார மூர்த்திகளும் கிடையாது. பெருமாளின் மார்பில் தாயார் அலமேலுமங்கை அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
திரிதளம் விமானம்
உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது. சன்னதிக்கு இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன.
கொடிமரம் ஆஞ்சநேயர்
நவநீத கிருஷ்ணர்
கோயில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். கொடிமரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நவநீதகிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர் உள்ளனர். வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸருக்கும் சன்னதி இருக்கிறது. ஆவணி திருவோணத்தன்று நடக்கும் குருபூஜையின்போது இவர் புறப்பாடாவார்.
வைகானஸர்
புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும். . ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருடசேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு.
சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி.
சிம்ம வாகனம்,அனுமந்த வாகனம், வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்ப வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனத்தில் சுவாமி புறப்பாடு ந்டைபெறும்.
மனக்குழப்பத்திற்கு தீர்வு: மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்திக்காக வழிபடும் தலம் இது. மனநோயாளிகள் இலவசமாக தங்கியிருக்க மறுவாழ்வு மையம் ஒன்று செயல்படுகிறது. காலை, மாலையில் நடக்கும் பூஜையின்போது இவர்களுக்கு தீர்த்தம் தருவர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சன்னதியில் அமரச்செய்து பூஜை செய்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளிக்கிறார்கள்.
பிரார்த்தனை தலம்:
கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன்,
கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாசுரமும் பாடியுள்ளான். பார்வைக்கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் மன நிம்மதிக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.
கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன்,
கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாசுரமும் பாடியுள்ளான். பார்வைக்கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் மன நிம்மதிக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.
வேண்டியதை வேண்டியவாறு கொடுக்கும் வள்ளல் வேங்கடாசலபதிக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை செலுத்த திருப்பதிக்கு சென்று வணங்கினால் கிடைக்கும் சுவாமியின் அருள் குணசீலம் பெருமாள் கோவிலை வணங்கினால் கிடைக்கும் என்று கருதப்படுவதால் இது தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிரவாகமாக பெருக்கெடுத்து வரும் காவிரி அன்னையின் மடியில், திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள திருத்தலம்.
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.
நிறைந்த நன்றிகள்
gunaseelamtemple.com
ஆஹா! இன்று எங்கள் குலதெய்வமாம் குணசீலம் பெருமாள் தரிஸனம்.நன்றி. பொறுமையாகப்படித்து விட்டு வருகிறேன்.
ReplyDelete[1] குணசீலம் [2] மாந்துறை [3] சமயபுரம் மூன்றும் எங்கள் குலதெய்வம் / கிராம தேவை / இஷ்ட தெய்வம்.
ReplyDeleteகுழந்தை பிறந்தால் இதே வரிசைப்படி குழந்தைக்கு 3 முடி எடுப்போம்.
ஏற்கனவே [3] & [2] பற்றி எழுதிருந்தீர்கள். இப்போது மீதி இருந்த ஒன்றையும் பதிவிட்டு விட்டீர்கள்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
திருப்பதிக்கு வந்து செய்வதாய் வேண்டிக்கொண்டதை இந்த குணசீலம் பெருமாளுக்குச் செய்தாலே போதுமாம்.
ReplyDeleteதிருப்பதி வரை போய் வந்த பலன் கிட்டுமாம்.
ஆனால் குணசீலம் பெருமாளுக்கு வேண்டிக்கொண்ட பிரார்த்தனைகளை திருப்பதிக்குச் சென்று செய்வதால், எந்தப்பயனும் இல்லை என்று என் முன்னோர்களும், இங்குள்ள மற்ற பெரியவர்களும் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன்.
மிகப்பெரிய சாலிக்கிராம மாலையுடன் இந்தப்பெருமாளை தரிஸிக்கும்போது, எவ்வளவு அழகாக, அமைதியாக இருக்கும் தெரியுமா! பலமுறை சென்று தரிஸித்துள்ளேன்.
ReplyDeleteமுதல் நாள் இரவு சந்தனக்காப்புக்கும், மறுநாள் காலை பெரிய அல்லது சிறிய திருமஞ்சனத்திற்கும் பணம் கட்டி விட்டால் போதும். குடும்பத்துடன் குதூகலமாகத் தங்கி, அதிகாலை விஸ்வரூப தரிஸனம் உள்பட அனைத்தையும் கண் குளிரக் கண்டு களித்து வரலாம். சர்க்கரைப்பொங்கல் வடை, புளியோதரை போன்ற பிரஸாதங்களும் அவர்களே செய்து த்ந்து விடுவார்கள்.
மதியம் 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள், அங்கு செல்லும் அனைவருக்குமே, முகத்தில் தீர்த்தம் தெளிப்பார்கள். நல்ல புத்தித் தெளிவு ஏற்படுத்து இது மிகச்சிறப்பானதொரு ஏற்பாடாகும்.
வருடாவருடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலரும் சேர்ந்து காவிரி ஆற்றில் குளித்து விட்டு, பால் குடம் எடுத்துப்போய் மூலவருக்கு அபிஷேகம் செய்வித்து வருவதும் உண்டு. பணம் கட்டிவிட்டால் போதும். அந்த சின்னஞ்சிறிய புத்தம்புதிய பித்தளைப் பால்குடத்தை பிரஸாதத்துடன் நமக்கே திரும்பத்தந்து விடுவார்கள்.
ReplyDeleteஸ்ரீ விஷ்ணுசஹஸ்ரநாம அகண்ட பாராயணம் [லக்ஷம் ஆவர்த்தி] வருடம் ஒரு முறை நடத்துவார்கள்.
அதிலெல்லாம் ஒரு காலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் BHEL இளைஞர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டதுண்டு.
பசுமையான நினைவலைகள் நினைவுக்கு வந்தன.
குணசீலம் தேரும், தெப்பமும் மிகவும் அருமையாக விமரிசையாக நடைபெறும். தேர் அன்று வந்து கூடும் அனைவருக்கும் அன்னதானம் நடைபெறும். கூட்டமான கூட்டமாக இருக்கும்.
ReplyDeleteஅழகான மனதிற்குப்பிடித்த அமைதியானதொரு கோயிலைப்பற்றி, அழகழகான படங்களுடன், விபரித்துள்ள தங்களுக்கு, என் நன்றி கலந்த வணக்கங்கள்.
நாலாவதாக எங்கள் இஷ்ட தெய்வம் வைதீஸ்வரன் கோயில். அதைப்பற்றியும் என்றாவது ஒரு நாள் வெளியிடுவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.
அன்புடன் vgk
பசுமையான நினைவலைகள் நினைவுகளுடன் , பயனுள்ள தகவல்களும், இனிய ,அருமையாக கருத்துரைகள் அளித்து உற்சாகப்படுத்தும் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..
ReplyDeleteபெருமானே....சாமி கும்பிட வைக்கிறீங்க !
ReplyDeleteஅழகான கடவுள் அருள் புரியாட்டும் அனைவருக்கும்
ReplyDeleteபார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.
ReplyDeleteஉங்கள் ஆக்கங்களைப் பார்க்கும்போது எனக்கு இந்தியாவில் உள்ள
ReplyDeleteகோவில்களை சுற்றிப் பார்க்க வேண்டும்போல் ஆசை மேலெழுகின்றது சகோ .அருமை !......வாழ்த்துக்கள் .ஒரு சின்ன வேண்டுகோள் சகோ என் ஆரம்பகாலக் கவிதைகளை தமிழ் 10 ல் இன்று தொடர்ந்து வெளிடிட்டுள்ளேன் .
பாடல் பிரிவில் காத்திருக்கும் பகுதியில் உள்ள இக் கவிதைகள் என் கனவுக்களும்கூட .தாங்கள் முடிந்தவரை இக் கவிதைகளைப் படித்து இக் கவிதைகள் உங்களுக்கும்
பிடித்திருந்தால் இது அனைவரையும் சென்றடைய உதவுமாறு மிக பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ தங்கள் ஒத்துளைப்புகளிற்கு ........
கோவில் டைரக்டரி ஏதாவது வச்சிருக்கீங்களா? ஒண்ணு மாத்தி ஒண்ணு கேள்விப்படாத சாமி கோவிலா வருதே! உங்கள் தேடலும் பகிர்வும் பிரமிப்பா இருக்குங்க!
ReplyDeleteஎப்படிப் போவது என்ற விவரங்களுக்கு நன்றி. ஓ.. முதல் ஐந்து படங்களும் அபாரம்.
அழகிய தரிசனம்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள் சகோ..
ReplyDeleteமுதலில் இருக்கும் மூன்று படங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன
ReplyDeleteWhat a nice post Rajeswari.
ReplyDeleteI enjoyed well along with pictures.
Thiru.Gopalakrishnan sirs, comments are also so informative.
Keep doing dear.
viji
என் கல்யாணம் குணசீலத்தில் தான் நடந்தது! (திருப்பதி இரு வீட்டாரின் குலதெய்வம் என்பதால்) இன்னும் இரு நாளில் எங்கள் கல்யாண நாள்; இறைவனின் ஆசியே போல் உங்கள் பதிவை உணர்கிறேன். நன்றி!
ReplyDeleteதிரு வை. கோபாலகிருஷ்ணன் பகிர்ந்த கருத்துக்களும் ஃப்ளாஷ் பேக்குக்குத் துணை போயின! அவருக்கும் நன்றி!
middleclassmadhavi said...
ReplyDeleteஎன் கல்யாணம் குணசீலத்தில் தான் நடந்தது! (திருப்பதி இரு வீட்டாரின் குலதெய்வம் என்பதால்) இன்னும் இரு நாளில் எங்கள் கல்யாண நாள்; இறைவனின் ஆசியே போல் உங்கள் பதிவை உணர்கிறேன். நன்றி!
திரு வை. கோபாலகிருஷ்ணன் பகிர்ந்த கருத்துக்களும் ஃப்ளாஷ் பேக்குக்குத் துணை போயின! அவருக்கும் நன்றி!//
மண நாள் இனிய வாழ்த்துகள் தோழி..
கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.
viji said...
ReplyDeleteWhat a nice post Rajeswari.
I enjoyed well along with pictures.
Thiru.Gopalakrishnan sirs, comments are also so informative.
Keep doing dear.
viji/
ஆதமார்த்தமான இனிய கருத்துரைகளுக்கு நன்றி தோழி..
பாலா said...
ReplyDeleteமுதலில் இருக்கும் மூன்று படங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன/
இனிய கருத்துரைகளுக்கு நன்றி
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள் சகோ../
கருத்துரைக்கு நன்றி
K.s.s.Rajh said...
ReplyDeleteஅழகிய தரிசனம்/
கருத்துரைக்கு நன்றி
அப்பாதுரை said...
ReplyDeleteகோவில் டைரக்டரி ஏதாவது வச்சிருக்கீங்களா? ஒண்ணு மாத்தி ஒண்ணு கேள்விப்படாத சாமி கோவிலா வருதே! உங்கள் தேடலும் பகிர்வும் பிரமிப்பா இருக்குங்க!
எப்படிப் போவது என்ற விவரங்களுக்கு நன்றி. ஓ.. முதல் ஐந்து படங்களும் அபாரம்./
பிரமிப்பான இனிய கருத்துரைகளுக்கு நன்றி..
பலமுறை சென்று தரிசித்த அருமையான கோவில்..
கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் சென்ற போது சாந்நித்யத்தை உணரமுடிந்த அருமையான திருத்தலம்..
அம்பாளடியாள் said...//
ReplyDeleteஅருமையான கருத்துரைக்கு நன்றி ச்கோதரி.
சிறப்பான மனம் கவர்ந்த தங்கள் கவிதைகளுக்கு வாக்களித்தேன்.
பகிர்வுக்கு நன்றி.
குணசீலப் பெருமாள் தரிசனமும்
ReplyDeleteகோவில் குறித்த அருமையான விளக்கமும் மிக மிக அருமை
படங்களுடன் விளக்கங்களும் நேரடியாக
தரிசிப்பதைப் போன்று இருந்தது நன்றி
தொடர வாழ்த்துக்கள்
DrPKandaswamyPhD said...
ReplyDeleteபார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.//
கருத்துரைக்கு மகிழ்ந்தேன். நன்றி..
கவி அழகன் said...
ReplyDeleteஅழகான கடவுள் அருள் புரியாட்டும் அனைவருக்கும்/
கருத்துரைக்கு நன்றி
ஹேமா said...
ReplyDeleteபெருமானே....சாமி கும்பிட வைக்கிறீங்க !//
கருத்துரைக்கு நன்றி
Ramani said...
ReplyDeleteகுணசீலப் பெருமாள் தரிசனமும்
கோவில் குறித்த அருமையான விளக்கமும் மிக மிக அருமை
படங்களுடன் விளக்கங்களும் நேரடியாக
தரிசிப்பதைப் போன்று இருந்தது நன்றி
தொடர வாழ்த்துக்கள்//
இனிய கருத்துரைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா.
இன்று சனிக்கிழமை குண்சீலப் பெருமாள் தரிசனம் கிடைத்தது உங்களால்.
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி.
படங்கள் எல்லாம் கண்ணில் ஒற்றிக் கொள்ள சொல்கிறது.
தெரியாத பல தகவல்களை பற்றி தெரிந்துக் கொண்டேன். நன்றி
ReplyDeleteகுணசீலம் பெருமாள் கோவில் பற்றிய உங்கள் இடுகை மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமிகவும் விசேஷமாக குணசீலம் பெருமாள் தரிசனம்.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் மிக அழகு.
ஸ்தல புராணகதை அற்புதமாக விவரித்துள்ளீர்கள்.
அருமையான பதிவு.நன்றி.
”நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி
ReplyDeleteதன்னோ விஷ்ணுப் பிரசோதயாத்”
நன்று.நன்றி.
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா.
நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.படங்களும் தகவலும் அருமை.
ReplyDeleteபடங்களும் பதிவும் நல்லா இருக்கு. கோபால் சாரின் விளக்கங்களும் நல்லா இருக்கு. இருவருக்கும் நன்றி.
ReplyDeleteமேடம் தங்களது ஆன்மீக பதிவுகளைப்பற்றி வலச்சரத்தில் அறிமுகம் கொடுத்திருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.
ReplyDelete;) ஓம் பாலசந்த்ராய நம:
ReplyDelete;) ஓம் ஸூர்பகர்ணாய நம:
;) ஓம் ஹேரம்பாய நம:
;) ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
;) ஓம் வரஸித்தி விநாயகாய நம:
Beautifully portrayed and the narration with eye.catching photos ... Words cannot express.
ReplyDeleteN.Paramasivam
1269+7+1=1277 ;)))))
ReplyDeleteஎன் குலதெய்வத்தைக்காட்டி என்னை மகிழ்வித்து ஓர் பதிலும் தந்துள்ளதற்கு நன்றிகள்.
‘குலதெய்வமே உன்னைக்கொண்டாடுவேன்’ ;)))))
அன்புடையீர்,
ReplyDeleteவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/3.html
அன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_05.html
குணக்குன்று குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி-4
http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_25.html
கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்-
http://jaghamani.blogspot.com/2011/09/blog-post_21.html
புதுமை புதுமை கொண்டாட்டம்-6
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE