Tuesday, November 22, 2011

தங்கிய தங்கக் குமரையா



எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ!
சிந்தா குலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா! கதிர் வேலவனே! உமையாள்
மைந்தா! குமரா! மறை நாயகனே!





அசுரன் சூரபதுமனை அழிப்பதற்காகவே சேனாதிபதியாக முருகப் பெருமானின் அவதாரம் நிகழ்ந்தது. 

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஜோதியாகத் தோன்றி, ஆறு முகம் கொண்ட குழந்தையாகி, குமரனாகி, தேவர்களின் சேனைக்கு அதிபதியாகி, அன்னை பராசக்தியிடம் இருந்து சக்தி ஆயுதமாக வேல் பெற்று அதன் துணை கொண்டு அசுரனை வதம் செய்தார் குமரப் பெருமான்.
[muruga-muruga.jpg]
  
இது கந்த புராணம் கூறும் கந்தனின் கதை. 

ஆனால், மேலக்கொடுமலூரில் உள்ள ஓர் ஆலயத்தில், தல புராணமாக வித்தியாசமான ஒரு கதை சொல்லப்படுகிறது. 

இதுவே இந்த ஊருக்கு பெயர் வந்ததன் காரணத்தையும் கூறுகிறது.
[SAKTIDHARAR_cute-pictures.blogspot.com.JPG]
மேலக்கொடுமலூர் ஸ்ரீகுமரய்யா திருக்கோயில்

 முருகப் பெருமான், அன்னையிடம் வேல் பெற்றுக்கொண்டு மட்டும் போருக்குச் செல்லவில்லை. 

இன்னும் பல சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் பெற்றார். 

அதில் ஒன்று மழு என்ற ஆயுதம். 

இந்த ஆயுதத்தால் அசுரனின் தலையைக் கொய்து, அதை எடுத்து வரும் வழியில், மாலை வெகு நேரம் ஆனதால், ஓர் இடத்தில் தங்க நேர்ந்தது. அங்கே முனிவர்கள் தவம் செய்துவந்தனர். 

அவர்களுக்கு காட்சி தந்து அருளினார் குமரப் பெருமான். 
 சூரியன் மேற்கில் மறைந்த பின்னே முனிவர்களுக்கு மேற்கு முகமாக நின்று காட்சி அளித்தார்.

இவ்வாறு, அசுரனை அழிக்க அன்னையிடம் மழு என்ற ஆயுதத்தைக் கேட்டுப் பெற்றதை நினைவுகூரும் வகையில் "கொடுமழு ஊர்' என்று அழைக்கப்பட்டது இந்த ஊர்.  மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருந்ததால், மேலக் கொடு மழூர் என்று ஆனது.

இதுவே பின்னாளில் மேலக்கொடுமலூர் என்று மருவி வழங்கப்படுகிறது. 
இத்தல இறைவன் குமரனை, பாம்பன் சுவாமிகள், திருவேகம்பத்தூர் கவிராஜ பண்டிதர், எமனேசுவரம் ஜவ்வாதுப்புலவர் உள்ளிட்ட பலரும் பாடியுள்ளனர்.
சூர்யாஸ்தமனத்தில் அபிஷேகம்:

மாலை நேரத்தில் சூரியன் மேற்கே மறைந்த பிறகே இந்தத் திருக்கோயிலில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

வார நாட்களில் திங்கள், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் மாதக் கார்த்திகை நாட்களிலும் சம்பந்தப்பட்ட நட்சத்திரம் இரவு நேரத்தில் வருவதை அனுசரித்து அனைத்து அபிஷே ஆராதனைகளும் நடக்கின்றன. இந்தத் திருத்தலத்தில் நடைபெறும் 33 அபிஷேகங்களையும் இரவு நேரத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

பகலில் அபிஷேகம் எதுவும் நடப்பதில்லை.

மா, பலா, வாழை இவை மூன்றும் இணைந்த முக்கனிகளால் ஆன முப்பழ பூஜை வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும்.
ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரத் திருவிழா ஆகியவற்றின் போது ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார்கள்.

பாத யாத்திரைக் குழுக்கள், மாத கார்த்திகை அபிஷேகத்துக்கு பாத யாத்திரையாகவே வந்து 33 அபிஷேகங்களையும் செய்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

சுவாமிக்கு அன்ன நைவேத்தியம் கிடையாது என்பதால் இக்கோயிலில் யாரும் பொங்கல் வைப்பதில்லை.

பழங்கள், தேன் கலந்த தினைமாவு, வெல்லம் கலந்த பாசிப் பருப்பு, கைக்குத்தல் அரிசி ஆகியவையே நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
தல விருட்சம்:
 குமரக் கடவுளால் பல் துலக்கி வலதுபுறம் வீசப்பட்ட குச்சியே பெரிய அளவில் தல விருட்சமாக(உடைமரமாக)விளங்குகிறதாம்.

இதன் பெருமையை ""விழுந்த உடை வேரூன்றி வெயில் முகம் காணாமல் தளிந்த உடைக்கீழிருக்கும் தங்கக் குமரையாவே'' என்று ஜவ்வாதுப் புலவர் பாடியுள்ளாராம்.

முழங்கால் வலி நீக்கும்  அற்புதம்:
 தீராத முழங்கால் வலி உடையவர்கள் இக்கோயிலுக்கு வந்து மஞ்சள் பூசப்பட்ட உடங்கால்களை (கவட்டையுடன் கூடிய உடைமரக் கால்கள்) வாங்கி, பக்தி பூர்வமாக குமரனை வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினால் முழங்கால் வலி நீங்கும்.

 வயிற்றுவலி, நெஞ்சுவலி உள்ளவர்கள் மாவிளக்கு வைக்கின்றனர். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் 48 நாள் தூய விரதமிருந்து தலவிருட்சமாக உள்ள உடைமரத்து இலையை சாப்பிட்டு, குமரனருளால் குழந்தைப்பேறு கிடைக்கப் பெறுகிறார்கள்.
இருப்பிடம்:
 ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள இத்திருக்கோயிலுக்கு மதுரையில் இருந்து வருபவர்கள் பரமக்குடியில் இறங்கி அங்கிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள நகரப் பேருந்துகள் மூலமாக செல்லலாம். பேருந்து வசதி நிறைய உண்டு. அபிராமத்தில் இருந்து 8 கி.மீ தொலைவு.
 தரிசன உதவிக்கு: அறங்காவலர்: ஆனந்த நடராஜன்- 98434-30230.

முருகா என்றால் செல்வம் பெருகும்
முருகா என்றால் முன்னை வினை தீரும்
முருகா என்றால் கவலை தீரும்

அதிருங் கழல்ப ணிந்துன் அடியேனுள் 

அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயந் தனிலிருந்து க்ருபையாகி 
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே முருகா!

[Karthikai02[7].jpg]
[MAYILPRIYA_cute-pictures.blogspot.com.JPG]

[GAJAVAHANA_cute-pictures.blogspot.com.JPG]

37 comments:

  1. முருகா முருகா நான்தான் முதல் வணக்கமா !

    ReplyDelete
  2. முதன்முதல் வணக்கம்! நன்றி!!

    ReplyDelete
  3. Peacock couple Dance is Very Nice.
    Similarly the animation of the very last designs are also so beautiful.

    Heading:"Thankiya Thangak Kumaraiah" manathil thanki vittathu.

    PaaraattukkaL, vaazhththukkaL. Thanks for sharing. Om Muruga !)))
    vgk

    ReplyDelete
  4. மேலக்கொடுமலூர் பெயர்க்காரணம் நல்லாயிருக்கு.முருகனின் அழகான படங்கள் அருமை.

    ReplyDelete
  5. தீர்த்த யாத்திரை செல்வதைப் போல ஒரு எண்ணம், உங்கள் பதிவுகளைப் படிக்கையில்! நன்று!

    ReplyDelete
  6. படங்களும் விரிவான பகிர்வும் மிக அருமை.

    ReplyDelete
  7. கார்த்திகைச் செவ்வாயில் அந்த கார்த்திகேயன்
    புகழ் விளம்பும் பதிவைக் கொடுத்துச் சிறப்பித்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. முருகக்கடவுளின் படங்கள் அருமை. அதிலும் அந்த காய்கறி அலங்காரம் மிக அருமை.

    ReplyDelete
  9. படங்கள் அனைத்தும் அருமை அதிலும் குறிப்பாக அந்த ஆடும் மயில் படம். பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. முருகு எனும் அழகனை
    வருக எம் மனததில்
    எனச் சொல்லும் அழகிய பதிவுக்கு
    மிக்க நன்றி சகோதரி...

    ReplyDelete
  11. வை.கோபாலகிருஷ்ணன் said.../
    Peacock couple Dance is Very Nice.
    Similarly the animation of the very last designs are also so beautiful.

    Heading:"Thankiya Thangak Kumaraiah" manathil thanki vittathu.

    PaaraattukkaL, vaazhththukkaL. Thanks for sharing. Om Muruga !)))
    vgk//

    பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா..

    ReplyDelete
  12. DrPKandaswamyPhD said...
    ரசித்தேன்.//

    நன்றி..

    ReplyDelete
  13. விச்சு said...
    மேலக்கொடுமலூர் பெயர்க்காரணம் நல்லாயிருக்கு.முருகனின் அழகான படங்கள் அருமை/

    அருமையான கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  14. ரமேஷ் வெங்கடபதி said...
    தீர்த்த யாத்திரை செல்வதைப் போல ஒரு எண்ணம், உங்கள் பதிவுகளைப் படிக்கையில்! நன்று!/

    நிறைவான கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  15. FOOD said...
    முத்தமிழ்க் கடவுளின் முத்தான தரிசனம்.

    முத்தான கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  16. ராமலக்ஷ்மி said...
    படங்களும் விரிவான பகிர்வும் மிக அருமை//

    அருமையான கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  17. Ramani said...
    கார்த்திகைச் செவ்வாயில் அந்த கார்த்திகேயன்
    புகழ் விளம்பும் பதிவைக் கொடுத்துச் சிறப்பித்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்/

    சிறப்பான கருத்துரைக்கும்,
    மனமார்ந்த வாழ்த்துகளுக்கும்
    மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  18. பாலா said...
    முருகக்கடவுளின் படங்கள் அருமை. அதிலும் அந்த காய்கறி அலங்காரம் மிக அருமை./

    அருமையான கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  19. வியபதி said...
    படங்கள் அனைத்தும் அருமை அதிலும் குறிப்பாக அந்த ஆடும் மயில் படம். பாராட்டுக்கள்/

    அருமையான கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  20. மகேந்திரன் said...
    முருகு எனும் அழகனை
    வருக எம் மனததில்
    எனச் சொல்லும் அழகிய பதிவுக்கு
    மிக்க நன்றி சகோதரி.../

    அழகிய அருமையான கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  21. வேல் முருகா வேல்

    ReplyDelete
  22. திருத்தலம் பற்றிய அனைத்து விவரங்கள்,அழகிய புகைப்படங்களுடன் அருமையான பகிர்வு.

    ReplyDelete
  23. அடாடா... நேற்று நான் பதிவிட்டதும் குமரக் கடவுளைப் பற்றித்தான்... இன்று உங்கள் வலையில் படிப்பதும் அவன் புகழ்தான்... அருமை. படங்கள் மனதைக் கொள்ளை கொண்டன. ஆன்மீக ரசம் பொங்கும், அழகு கொஞ்சும் படங்கள்தான் உங்கள் தளத்தின் சிறப்பு. மிக ரசித்தேன். நன்றி...

    ReplyDelete
  24. இம்முறை நான் பார்க்காத புதிய கோவில் அறிமுகம். பார்க்க ஆவலை தூண்டும் செய்திகள். படங்கள் எல்லாம் அருமை.

    முருகன் அருள் பெற்றோம். நன்றி.

    ReplyDelete
  25. மேலக்கொடுமலூர் முருகன் பற்றி அருமையான தகவல்கள் திரட்டி கொடுத்திருக்கீங்க.
    வழக்கம் போல அழகிய படங்களுடன் அட்டகாசமான பதிவு.

    ReplyDelete
  26. முருகனின் படங்கள் அனைத்தும் மனதில் ஒருவித அமைதியை ஏற்படுத்துகிறது...
    தலத்தைப் பற்றிய தகவலும் தெரிந்து கொண்டேன்...

    பகிர்வுக்கு நன்றி... சகோ...

    ReplyDelete
  27. அழகு முருகனின் படங்கள் போட்டாலே பதிவும் அழகு தான்..

    ReplyDelete
  28. கொடு மழூர் பெயர் வந்ததன் காரணம் அருமையாக சொள்ளியுள்ளீர்... நன்றி.

    ReplyDelete
  29. அருமையான பகிர்வு.

    முருகா போற்றி! கந்தா போற்றி!

    ReplyDelete
  30. பதிவின் தன்மைக்கு ஏற்ப great pictures, great details about the temple and great post.

    பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  31. பகிர்வினை ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  32. அந்தப்பக்கம் போகும் வாய்ப்பு கிடைத்தால் போய் பார்க்கவேண்டும் .படங்களும் தகவல்களும் அருமை.

    ReplyDelete
  33. முருகன் அருள் பெற்றேன்.

    ReplyDelete
  34. அருமையான பதிவு.
    சொல்ல வார்த்தைகள் இல்லை.
    முருகப்பெருமான், மயில் நடனம் அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. 1926 ல் கும்பாபிசேகம் நடந்த விசயம் வரை அறிந்து பகிர்ந்துள்ளீர்கள்... ஆன்மீகத்தில் உங்களது ஆழமான ஈடுபாட்டை காண்பிக்கிறது.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. 1377+2+1=1380 ;)

    பதிலுக்கு நன்றி.

    ReplyDelete