வேதம் ஓதும் கிளி:
முருகன் என்னும் ஒரு அழகன்அவன் பழகும் அழகில் மிக இனியன்
தந்தை நுதல் தந்த கனல் தன்னில் மணம் வீசும் மலராய் அவன்
தந்தை நுதல் தந்த கனல் தன்னில் மணம் வீசும் மலராய் அவன்
உதித்தான் இதழ் விரித்தான் சிரித்தான் அவன் மணத்தான்
சரவணப் பொய்கையில் பிறந்தான்
சரவணப் பொய்கையில் பிறந்தான்
முருகன் பிறக்க காரணமான, அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரி ய தலமானது.
பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறைபோக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது.
அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின.
முருகன் பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது.
தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரி ய தலமானது.
கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.
கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் புண்ணிய நதிகளின் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
வேதம் ஓதும் கிளி: மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ் தானம்பிகையின் கையில் கிளி இருக்கிறது.
இதற்கு வேதாமிர்த் கீரம் என்று பெயர். மற்ற கரங்களில் நீலோத்பவ மலர், சங்கு, சக்கரம் வைத்திருக்கிறாள். சிவனே வேத சக்தியாக கிளி வடிவில் அம்மனின் இடதுதோளில் அமர்ந்திருப்பது சிறப்பு.
இது வேதமோதும் கிளியாகும்.
இது வேதமோதும் கிளியாகும்.
துங்கபாலஸ் தானம்பிகை அம்மனை வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்தக் கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும்.
மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் இரவு சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
கோயில் பிரகாரத்தில் செல்வ விநாயகர், நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், மேதா தட்சிணாமூர்த்தி, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வள்ளலார் கோயில், திருஇந்தளூர், பல்லவனீஸ்வரர் ஆகிய கோயில்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.
மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வள்ளலார் கோயில், திருஇந்தளூர், பல்லவனீஸ்வரர் ஆகிய கோயில்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.
கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் பிடிப்புடன் திகழ்வர். கலைகளை ஆர்வமுடன் கற்கும் சுபாவமிருக்கும். மனதில் மென்மை குடி கொண்டிருக்கும். பெண்களிடம் நட்புடன் பழகும் இயல்பைப் பெற்றிருப்பர். கல்வியில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்குத் தேவையான தகுதிகள் யாவும் இவர்களிடம் இருக்கும்.
சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். 63 நாயன்மார்களில் மானக்ஞ்சார நாயனார் இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்தி அடைந்துள்ளார்.
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
திறக்கும் நேரம் : காலை 10 - 11 மணி, மாலை 4 - 5 மணி
மனம் கவர்ந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்..
madurai meenakshi amman in navaratri.
Some beautiful carvings(painted)
Kind Regards,
RajaRajeshwari Jaghamani
என் கணனியில் எதுவுமே டிஸ்பிளே ஆகவில்லை
ReplyDeleteகிளிதான் வேதம் ஒதுகிறதா?
ReplyDeleteமற்றுமோர் அருமையான படைப்பு...
கிளி படங்கள் அருமை.ஸ்தல புராணம் முழுமையாக இருக்கிறது.புகைப்படங்களும் சூப்பர்.
ReplyDeleteவேதம் ஓதும் கிளிகளா?
ReplyDeleteதலைப்பே கிளி கொஞ்சுவதாக உள்ளதே!
பார்த்துப் படித்துவிட்டு, கிளியுடன் கொஞ்சிவிட்டு, மீண்டும் வருகிறேன்.
ஆரம்பத்தில் காட்டியுள்ள அனைத்துக் கிளிகளும் நல்ல அழகாக உள்ளன.
ReplyDeleteகடைசியில் காட்டப்பட்டுள்ள யானையை யாரோ முதுகின் மீது ஒரே குத்தாகக்குத்தி சற்றே குட்டையாக்கி, குறுக்கே படர்ந்தாற்போல ஆக்கியது போல படம் அமைந்துள்ளது.
கீழிருந்து மூணாவது கோபுரம் பிரைட்டோ பிரைட் அழகோ அழகு ! அற்புதக்காட்சி ;)))))
கீழிருந்து 2 வது படம் கோபுர தரிஸனம் இன்றும் மேலும் ஒரு கோடி புண்ணியம் தருவதாக!! ;)))) ஜோர்.
புறப்பாட்டு அம்மன்களும் அந்த புடவைக் கட்டுகளும், விசிறி மடிப்புத் தலைப்புக்களும் அட்டகாசம் போங்க!;))))
ReplyDeleteSome Beautiful carvings (Painted)
ReplyDeleteஎன்பதன் கீழே காட்டியுள்ளது மிகவும் கலைக்கண்ணோடு பார்த்து ரஸிக்க வேண்டிய ஒன்று தான். சபாஷ்! ;))))
அதிலும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ரிஷபத்தின் மீது உள்ள பார்வதி பரமேஸ்வரரும் மிகச்சிறப்பாகவே உள்ளன.
மொத்தத்தில் கிளிகொஞ்சிடும் அழகான பதிவு. அருமையான படங்கள். அரிய பெரிய விளக்கங்கள். அனைத்துமே அருமை தான். பதிவைப் பகிர்ந்த கிளிக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.
ReplyDeleteபிரியமுள்ள vgk
ரெவெரி said...
ReplyDeleteகிளிதான் வேதம் ஒதுகிறதா?
மற்றுமோர் அருமையான படைப்பு../
அருமையான கருத்துரைக்கு நன்றி...
shanmugavel said...
ReplyDeleteகிளி படங்கள் அருமை.ஸ்தல புராணம் முழுமையாக இருக்கிறது.புகைப்படங்களும் சூப்பர்./
அருமையான கருத்துரைக்கு நன்றி...
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமொத்தத்தில் கிளிகொஞ்சிடும் அழகான பதிவு. அருமையான படங்கள். அரிய பெரிய விளக்கங்கள். அனைத்துமே அருமை தான். பதிவைப் பகிர்ந்த கிளிக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்./
அருமையான கருத்துரைகளால் பதிவைப் பெருமைப்படுத்தியமைக்கு
நன்றி..
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
ReplyDeleteகாத்திகேயன் விளக்கமும்
கோபுர தரிசனமும் கண்டு மிக்க
மகிழ்ச்கி கொண்டேன்
தொடர வாழ்த்துக்கள்
என் பின்னூட்டம் கிடைத்துதோ தெரியவில்லை, ஏனெனில் எரர் காட்டியதே.... வெளிவராவிட்டால் மீண்டும் வருகிறேன்.
ReplyDeleteகோபுர தரிசனம் எவ்வளவு அழகு...
ReplyDeleteஎழிலரசி மீனாட்சியின் கையில் ஒயிலாக
இருக்கும் பறவை அல்லவா...
வேதம் ஓதுவதில் ஆச்சர்யம் இல்லைதான்....
படங்கள் நெஞ்சில் பதிந்தன சகோதரி....
படங்கள் அருமை.காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவிலைப் பற்றிய செய்திகளும் நன்று.
ReplyDeleteகிளி அதுவும் அம்மனுடன் அழகு...படங்களுடன் பதிவில் பல விஷயங்கள் ரசித்து அறிந்து கொண்டேன்...நன்றிங்க மேடம்!
ReplyDeleteImportant mainly
ReplyDeletedetails 5:29 AM (2 hours ago)
அன்பின் இராஜ இராஜேஸ்வரி
நுதல் தந்த கனல் - அருமையான சொற்றொடர்
நல் வாழ்த்துகள்
நட்புடன் சீனா//
நல் வாழ்த்துகள் தந்த தங்களுக்கு
நன்றி ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "ஞானச்சுடர் விளக்கு":
ReplyDeleteraji said...
//உங்க பதிவுல copy paste ஆக மாட்டேங்குது.என்ன பிரச்சனைன்னு பாருங்க மேடம்//
அவங்க அதெல்லாம் பார்க்கவே மாட்டாங்க! கடந்த 2 மாதங்களாகவே இந்தப்பிரச்சனை உள்ளது.//
எமது பதிவில் காப்பி பேஸ்ட் தடை செய்யப்பட்டுள்ளது.
கிளி படங்கள் எல்லாம் மிக அருமை. கஞ்சாநகரம் கோவில் பற்றி தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteஎங்கள் வீட்டில் இருவர் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்.
ReplyDeleteஉங்கள் பதிவுக்கு நன்றி!!
அடடா என் பின்னூட்டம் இடையிலே களவாடப்பட்டுவிட்டதே... அவ்வ்வ்வ்வ்:) கொப்பி பண்ணியும் வைக்கவில்லை.... சரி அது போகட்டும்.....
ReplyDeleteகிளிப்படங்கள் பார்த்ததும் “பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது”..
அழகான படங்கள் அனைத்தும் கண்ணைப் பறிக்கிறது... கூடவே நல்ல விளக்கங்களும்.
தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்டேன். என்ன இருந்தாலும் மதுரையின் அழகு வேறு எந்த ஊருக்கும் வராது...அருமை.
ReplyDeleteGreat Job.,
ReplyDeleteவேதம் ஓதும் கிளிகள். அருமையான பகிர்வு.
ReplyDeleteஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை. எல்லாமே அருமை சகோதரி! பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteநம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
மானாக்ஞார நாயனார் முக்தி அடைந்த ஸ்தலம் பற்றிய செய்தி தெரிந்துகொள்ள முடிந்தது...
ReplyDeleteமதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் படங்கள் மனதை கொள்ளைக்கொண்டன... மிக அருமை சகொ!
ReplyDeleteஆலயம் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் அருமை.
ReplyDeleteகிளி ஜோஸ்யம் சொல்லும் என்பார்கள் கிளி வேதம் ஒதுகிறது.
பதிவிற்கு நன்றி.
படங்களும் பதிவும் நல்லா இருக்கு.
ReplyDeleteஅழகிய படங்கள்;அருமையான பதிவு.
ReplyDeletefrom
ReplyDeleterathnavel.natarajan
important mainly
அருமை.//
நன்றி..
;)
ReplyDeleteஹரே ராம, ஹரே ராம,
ராம ராம ஹரஹரே!
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரஹரே!!
1448+6+1*+1=1456 ;)))))
ReplyDeleteநேரிடையாக இந்தப்பதிவுக்கு ஒரு பதில் கொடுத்துள்ளதற்கு நன்றி.
*சென்ற பதிவுக்கு திருமதி ராஜிக்கு நான் எழுதிய பதில், தாமரையுடன் இங்கு இந்தப்பதிவினில் வெளியிட்டுள்ளது. அதுவும் இப்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.