"அருணாச்சல சிவ அருணாச்சல சிவ
அருணாச்சல சிவ அருணாச்சலா!"
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.
கயிலாயத்திலும் மேருவிலும் இருந்தாலும்திருவண்ணாமலை மலையில் சிவன் மலையாகவே இருப்பதால் அருணாசலம் கைலாயத்தையும், மேருவையும் விட உயர்ந்தது.
ஆராத இன்பம் அருளும் மலை அண்ணாமலை..
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடராய்
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் திகழ்ந்து
மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காவாய் கனகக் குன்றே போற்றி!போற்றி!!
சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை..
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..
- என்றெல்லாம் அண்ணாமலை வெண்பாவில் குரு நமசியர் திருவண்ணாமலையைப் போற்றுகிறார்.
யுகம் யுகமாய் வாழும் மலை....
கிருத யுகத்தில் இது நெருப்பு மலை....
திரேதா யுகத்தில் இது மாணிக்க மலை....
துவாபர யுகத்தில் இது பொன் மலை..
தற்போது கலியுகத்தில் இது கல் மலை..
ஈசனிடம் இடப்பாகத்தில் இடம் வாங்கி.. மாதொரு பாகனாய்..
.பாகம் பிரியாளாய் நின்ற மந்திர மாமலை.திருவண்ணாமலை
.பாகம் பிரியாளாய் நின்ற மந்திர மாமலை.திருவண்ணாமலை
திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
.உத்தமோத்தம தலங்கள் நான்கு. அவை
திருவாரூரில் பிறக்க முக்தி
சிதம்பரத்தில் இருக்க முக்தி
காசியில் இறக்க முக்தி
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி
நந்திபகவான், மார்க்கண்டேய முனிவருக்குச் சொன்ன சிவ ரகசியம் இது.
பஞ்ச பூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. அம்மலையின் மூன்று யோசனை தூரத்தில் (சுமார் முப்பது மைல்) உள்ள அனைவருக்கும் ஆசரு தீக்ஷையின்றி சாயுஜ்யம் பயக்கும் என்பது சிவன் வாக்கு.
நில நடுக்கங்களால் மற்றப் பகுதிகள் பாதிக்கப் படுவதுபோல் தட்சிணப் பீடபூமி பாதிக்கப் படுவதில்லை என்பதற்கும் அண்ணாமலையின் பழமையே காரணம் என்று கூறப்படுகின்றது. நம்முடைய புராணங்களும் இம்மலையை உலகின் மத்திய பாகமாகக் குறிப்பிடுகின்றது.
வல்லாள மன்னன் நினைவு நாளில் மாசி மாதத்தில் அவன் இறப்பு பற்றிய செய்தி இறைவன் முன் படிக்கப்பட்டு கோயில் மூர்த்திகள் பள்ளிகொண்டாபட்டு என்ற ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மன்னனுக்குத் திதி கொடுக்கப்படுகிறது. ஆண்டவனே மகனாக இருந்து மன்னனுக்கு திதி கொடுப்பதாக கூறி இன்றும் இவ்விழா ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.
வினையை நீக்கும் மலை உருவில் விளங்குவதால் இம்மலைக்கு அ + ருணன் அதாவது வினையை நீக்குபவன் இங்கு அசலனாக விளங்குகிறான் என்று பொருள்.
ஞானசம்பந்தர் - தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாவது பாடலில் அண்ணாமலையாரைக் குறிப்பிடுகிறார்.
'
தீப மங்கள ஜோதி நமோநம' என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
ஆடி மாதம் திருவாடிபூரத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தீ மிதித்தல் நடைபெறும். இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க இயலாது.
மாசி மகா சிவராத்திரியில் இரண்டாம் காலம் லிங்கோத்பவராய் காட்சியளித்து அபிஷேகம் ஏற்கும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.
கோயிலின் மூலவரான அண்ணாமலையார் லிங்கத் திருமேனியில் இங்கு காட்சி தருகிறார். பொதுவாகக் கோயில்களில் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்யும் போது அஷ்டபந்தனம் செய்வது வழக்கம். ஆனால் இக்கோயிலில்
தங்கத்தைக் கொண்டு சொர்ணபந்தனம் செய்யப் பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா உலக சிறப்பு வாய்ந்தது.
திருவண்ணாமலை ஜோதிக்கு நிகர் வேறெதுவும் இல்லை. பஞ்சபூத லிங்கத்தில் அக்னி லிங்கமாய் முதன்மையாய் விளங்குவது திருவண்ணாமலையாம் அருணாசலமே.
திருக்கார்த்திகை தீபம் அண்ட சராசரங்களுக்குமே, ஒளிவிளக்கான திருவண்ணாமலை ஜோதி ஏற்றப்படுகிறது.
ஒரே ஒருமுறை திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனம் செய்தால் போதும், அது நம் 21 தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும் என்று கூறுகிறது, தலபுராணப் பாடல்.
முத்தாய்பாய் கார்த்திகை தீப திருநாள் விளங்குகிறது. சுமார் ஆறு அடி உயர தாமிர கொப்பரையில் ஏற்றப்படும் மகாதீபம் மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு மாலை ஆறு மணிக்கு ஏற்றப்படும். பத்து நாட்கள் திருவிழாவிற்கு மகுடமாக விளங்கும் இத்தீபம் ஒரு வாரம் வரை எரியும்.
வருடத்திற்கு இருமுறை - ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். அம்மனுடன் கொண்ட கோபத்தைத் தணித்த திரு ஊடல் உற்சவம் நிகழும் தலமிது.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை செல்லுவது தொன்றுதொட்ட குடும்ப வழக்கம்....
கிரிவலம் வர விரும்பி நானும் சிலமுறைகள் பயணத்தில் பங்குபெற்றேன்..
திருவண்ணாமலையில் தீபம் உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை "இறைவன் ஒருவனே!' என்னும் தத்துவ விளக்கம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் முன்னிலையில் திருக்கார்த்திகையன்று அதிகாலை வேளையில் பெரிய கற்பூரக்கட்டியில் ஜோதியை ஏற்றி தீபாராதனை செய்வர். இத்தீபம் " பரணி தீபம்' என்று பெயர்பெறும்.
கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு முந்தைய பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படுவதால் இந்த தீபத்தை "பரணி தீபம்' என்கிறார்கள். பிறகு அந்த கற்பூரச்சுடரொளி ஒரு பெரிய ஒற்றைத் திரியில் பொருத்தப்பட்டு, நந்தீஸ்வரர் முன்னிலையில் ஐந்து பெரிய அகல் விளக்குகளில் ஏற்றப்படும்.
ஒற்றை தீபம் ஒன்றாக இருக்கும் கடவுளையும், ஐந்து தீபங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்து தொழில்களையும் அவர் மேற்கொள்ள பஞ்சமூர்த்திகளாகப் பிரிவதையும் காட்டும்.
இவர்கள் தங்கள் பஞ்ச சக்திகளுடன் இணைந்து செயல்படுவதைக் குறிக்கும் வகையில் அம்மன் சன்னதியில் ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.
காலை 11 மணி வரை கால பைரவர் சன்னதியில் வைக்கப்பட்டு இருந்த பரணி தீபம் பின்னர் பர்வத ராஜகுலத்தினரால் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்..
மாலையில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பஞ்சமூர்த்திகளை சன்னதியில் இருந்து வெளியே கொண்டு வந்து மண்டபத்தில் வைத்து. மாலை 5.59 மணிக்கு சன்னதியில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து 6 மணிக்கு கோவில் வளாகத்தில் அகண்ட தீபம் ஏற்பட்டது. அதே நேரம் 2,668 அடி உயர மலை உச்சியில் தயாராக நெய் ஊற்றி வைக்கப்பட்டு இருந்த ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது கோவில் வளாகத்திலும், வெளியேயும் கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். அப்போது கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நின்ற இடத்திலேயே தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வணங்கினார்கள். மலை உச்சியில் தீப ஜோதி தெரிந்தவுடன் திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகள், கடைகளிலும் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வணங்கினார்கள்.. உணர்ந்து சிலிர்த்த அருமையான தரிசனம்...
விசிறி சாமியாரின் சீடர்கள் ஒருமுறை எங்கள் இல்லத்தில்
பஜனையும் பூஜையும் நடத்தினார்கள்..
குழுவினர் இசையுடன் அருமையாய் பாடல் பாடினார்கள்..
குழுவினர் இசையுடன் அருமையாய் பாடல் பாடினார்கள்..
தீபாராதனைத்தட்டில் கற்பூர தீபம் ஏற்றி நைவேத்தியம் முடிந்து தட்டில் பார்த்தால் விசிறி சுவாமிகள் தலைப்பாகையுடன் இருகைகளையும் உயர்த்தி ஆசீர்வதிப்பது போன்ற தோற்றம் தட்டில் அச்சுபோல் பதிவாகி இருந்தது.. அதிசயமான அந்ததட்டை நீண்ட நாட்கள் பாதுகாத்து பூஜையில் வைத்திருந்தோம்....
கார்த்திகைதீபம் உயரமாக மலைமீது ஏற்றப்படுவத்ற்கு விஞ்ஞான விளக்கம் உண்டு..
சுழல் காற்றை சமன் செய்யும் குணம் அக்னிக்கு உண்டு.. தை மாதம் அறுவடையாக வேண்டிய பயிர்கள் பால்பிடிக்கும் பருவத்தில் காற்று சுழன்றடித்தால் விளைச்சல் பாதிக்கப்ப்டும்.. அதனைக்குறைத்து திசைதிருப்பவே மலைமீதான தீபமும், வீடுகள் தோறும் ஏற்றிவைக்கும் தீபமும் பல்வழிகளில் பயன்படுகின்றன்..
ஆன்மீகத் தேனில் குழைத்துத் தந்த அருமையான விழா.. பன்முகப்பயன்பாடு.. சந்திர ஒளிக்கிரணங்கள்,,,மலையின் ஆன்மீகக்கதிவீச்சு எல்லாம் கிடைக்கும் அரிய தத்துவ விளக்கம்...சகல ஜீவராசிகளும் பயன் பெறும் ஜீவகாருண்ய விழா.
ஐப்பசி பட்டாசு வெடிப்பும் வாணவேடிக்கைகளும் வெறும் விளையாட்டல்ல.. மழை அந்தப்பருவத்தில் பெய்தால் பயிர்கள் பாதிக்கப்படும் .பட்டாசுகளின் கந்தகப்புகை மழை மேகங்களை கலைத்து வானிலையை சமப்படுத்தச் செய்த அற்புதக்கொண்டாட்டம்! சமுதாயமாகசேர்ந்து பல கைகள் தட்டினால் ஓசை பெரு வெடிப்பாய் நிகழ்வதைப்போல வானிலை கால நிலையை மாற்றவே தீபத்திருநாட்கள் கொண்டாட்டம். பெரும் புயலைத் தடுக்கும் வெப்பம் ..
காற்றை திசைதிருப்பும் அழல்.
.உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம் நம் மெய்ஞானிகளை..
மலைக்கு மலையாய், மலையே சிவனாய், சிவனே மலையாய், மண்ணும் விண்ணும்
தொட்ட மலையே அக்னியின் ஆனந்த வடிவாய் நிற்கும் திருவண்ணாமலை
பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதரராய் சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாச்சலேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் வீதி உலா வரும் மகா தேரோட்டம் ..
தீப மங்கள ஜோதியை திவ்ய தரிஸனம் செய்து விட்டு மீண்டும் வருவேன்.
ReplyDeleteஸ்ரீ அண்ணாமலையாருக்கும், ஸ்ரீ உண்ணாமுலையம்மைக்கும்
ReplyDeleteஅரோஹரா!
அருணாசல சிவ!
அருணாசல சிவ!!
திருவண்ணாமலைப்பயணம் நினைவுக்கு வந்தது. மிகவும் மகிழ்ச்சியான நினைவலைகள் அவை.
வழக்கம்போல ”கோபுர தரிஸனம் கோடி புண்ணியம்” உங்களால் எனக்கும் இன்று.
நினைக்க முக்தி தரும் திருத்தலம்.
ReplyDelete..................
காஸ்யாந்த மரணம்
ஸ்மரனாத்து அருணாசலம்
அதவா புத்ர சந்நிதெள்!
என்று என் தந்தை அடிக்கடி தன் கடைசி நாட்களில் கூறி வருவார்.
காசியில் மரணம் அடைய வேண்டும்.
அல்லது
இறக்கும்போது அருணாசலம் என்று
கூற வேண்டும்
எதுவும் நடக்காத பக்ஷத்தில் (அதவா)
தான் பெற்ற புத்திரனின் மடியில் இறக்க வேண்டும்
என்பது அதன் பொருள்.
என் மடியில் தான் என் அப்பா இறந்தார். அருகே அவர் பெற்ற வேறு இரு புதல்வர்களும் கூட இருந்தனர். பிராயச்சித்த மந்திரத்தைத் தானும் கூடவே சொல்லி வந்தார்.
இரவு 11 மணி முதல் நிறைய வேத வித்துக்கள் கூடி பிராயச்சித்தம் நடை பெற்றது. விடியற்காலம் 3.45 க்கு அது முடிந்தது. 3.55 க்கு உயிரும் பிரிந்தது.
அந்த நினவு வந்து சற்றே இப்போது கண் கலங்கினேன்.
திருவாரூர் சிதம்பரம் பற்றிய இரு வரிகளும் அப்பா சொன்னது நினைவுக்கு வராததால் கடைசி 3 வரிகளை மட்டும் ஞாபகம் வந்து எழுதினேன். முதல் 2 வரிகளுக்கு ......... கோடிட்டு விட்டேன்.
ReplyDeleteதங்களின் அடுத்த பாரா படித்ததும் அதுவும் லேசாக ஞாபகம் வந்தது.
வேத பர்வதம் என்று காஞ்சி மஹாபெரியவாளால் அழைக்கப்பட்டவர் என் தந்தை. வேதம் படித்த அவருக்கு மயானத்தில் ஏராளமான வேதம் படித்தவர்கள் முன்னிலையில் பிரும்மவேத சம்ஸ்காரம் நடத்தப்பட்டது. அதாவது பிரும்மாவால் அளிக்கப்பட்ட வேதம் என்ற ஒரு பெரிய மரம் சாய்ந்து விட்டதால், அதற்கே [வேதத்திற்கே] கர்மாக்கள் செய்வதாக அர்த்தம். மிகப்பிரபலமானவரும், என் தந்தைக்கு சிஷ்யனாக இருந்தவருமான ப்ரும்மஸ்ரீ பிரணதார்த்திஹர சாஸ்திரிகள் அவர்கள் தலைமையில் எல்லாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது (May 1975)
ReplyDeleteநால்வர் படம் நல்ல அழகு. இங்குள்ள எங்கள் ஸ்ரீ ஆனந்த வல்லீ ஸமேத ஸ்ரீ நாகநாதர் கோயிலிலும் நால்வருக்கு தனி சந்நதியும் அது தவிர 63 நாயன்மார்கள் சிலைகளும் மிகச் சிறப்பாகவே உள்ளன. போட்டோ எடுத்து வைத்துள்ளேன். பிறகு ஒரு நாள் வெளியிட உள்ளேன்.
ReplyDeleteஅண்ட சராசரங்களுக்கும் ஒளிவிளக்கான திருவண்ணாமலை ஜோதி தரிஸ்னம் இன்றே தங்கள் பதிவின் மூலம் கிடைக்கப்பெற்றது எங்கள் பாக்யம் தான்.
வை.கோபாலகிருஷ்ணன் said.../
ReplyDeleteஒளிவீசிய அத்தனை கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா...
புறப்பாட்டு ஸ்வாமி, கோயிலின் குளம் முதலியன வெகு அழகாகக் காட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteஎங்கெங்கும் என்ன உள்ளன என்ற கோயிலின் படவிளக்கம் மிக அருமை.
நடுவில் நகைச்சுவை ததும்ப அந்தக் குரங்கு சாமியையும் விட்டு விடாமல் காட்டியுள்ளீர்கள்.
கோயில் கோபுரங்களுடன் மொத்த ஊரையே அழகாகக் காட்டியுள்ளது அழகோ அழகு தான்.
தேர்கள் இன்றும் ஜோர் தான்.
அஷ்ட லிங்கங்களின் அட்டவணை... அடடா!)))))
கோயிலில் பிரகாரம் நல்ல அழகோ அழகு - கம்பீரமாக உள்ளது.
நடுவே மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் வேறு போனஸ் போல. அங்கும் போய் வந்துள்ளேனே!))))
யானைப்படம் நிறைவைத் தருகிறது.
அழகிய இழைகோலமிட்டு, விளக்குகளை அதில் எரியவிட்டு,
ReplyDeleteஒளிவீச செய்துள்ளது, பார்க்கவே பரவஸமாய் உள்ளதே !
நான் பிறந்ததும் இதே கார்த்திகை மாதமே, என்பதால் ஒரு தனிக் களிப்பு ஏற்படுகிறது, இந்தப்பதிவைப்படித்ததும் எனக்கு மட்டும்.
கடைசிபடத்தில் அந்திவானம் அருமையாக இயற்கையாகப் படமாக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு நல்ல நல்ல படங்கள்.
எவ்வளவு ஆச்சர்யமான விஷயங்கள்.
எப்படித்தான் பொறுமையாக அத்தனையையும் அதுவும் தினமும் தருகிறீர்களோ!
வியப்புட்ன் vgk
திருவண்ணாமலை பற்றி நான் அறியாத பல தகவல்களை இன்று அறிந்து கொண்டேன்.கோபுர தரிசனம் கோடி பாப
ReplyDeleteவிமோசனம் என்பார்கள்.கோபுரத்துடன் கூடிய கோயில் குளமும் சேர்ந்து அற்புதக் காட்சிகளுடன் படங்களும் அரிய தகவல்களுமாக தந்தமைக்கு நன்றி.
கடைசிப் படம் தீப மயமாக இறை உணர்வைத் தூண்டி கை கூப்பும்படியே செய்கிறது
ReplyDeleteகார்த்திகை தீப திருநாள் முன்னரே தீப தரிசனம். தீப தரிசனதிற்கும் கிரிவலத்திற்கும் சென்று வந்த ஒரு feeling. அருமையான் தெய்வீக புகைப்படங்கள். கடைசி புகைப்படம் எந்த இடமோ??
ReplyDeleteபதிவிற்கு நன்றி.
படங்களும் விளக்கங்களும் அருமை.
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி
ReplyDeleteஅருமையான படங்கள் - பளிச்சென்று க்ண்ணில் ஒத்திக் கொள்ளலாம். விளக்கங்களோ அவர்றை விட அருமை. ஆன்மீகத்தில் நாளுக்கு ஒன்றாக கோவில்களையும் புண்ணிய ஸ்தலங்களையும் அறிமுகப் படுத்தும் செயல் நன்று. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் - அத்தனை புண்ணியங்க்ளையும் பெற கோபுர தரிசனம் செய்து வைக்கும் தங்கள் பணி மகத்தானது.
நண்பர் வை.கோபால கிருஷ்ணன் பதிவினைப் படித்து மனத்தில் பதித்து மறுமொழிகள் இடுவதற்கே ஒரு மணி நேரம் செலவிட்டிருக்கிறார்.
தங்கள் இறைப்பணி தொடர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மறுமொழிகள் தொடர்வதற்கு இம்மறுமொழி
ReplyDeleteதீபமங்கள ஜோதி நமோ நம!
ReplyDeleteதிருவண்ணாமலையை நினைக்க முக்தி! உங்கள் படங்கள் மூலம் திருவிழாவை நேரில் பார்த்த காட்சியினால் மேலும் புண்ணியம்.
கற்பூரத்தட்டில் விசிறி சுவாமிகள்! சிலிர்க்க வைத்தது.
திருவண்ணாமலை கோவில் பற்றிய சிறப்பான தகவல்கள் அறிந்து கொண்டேன்.
ReplyDeleteபடங்கள் மிக அற்புதமாக இருக்கு.
அண்ணாமலைக்கு அரோகரா!
ReplyDeleteகார்த்திகை சோம வாரத்தில் அண்ணாமலையார் பற்றிய அருமையான பதிவு.
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். உங்களின் இன்னொரு தளத்தை போலவே இந்த தளமும் அருமை. படங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. வாழ்த்துக்கள். நன்றி..!
ReplyDeleteநம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
கார்த்திகை தீபம் வரும் பின்னே..வலைப்பூ வந்தது முன்னே!
ReplyDeleteமேலதிக தகவல்! அங்கு கோவில் யானை ருக்குவிற்கு மிகவும் பிடித்த உணவு பேரிச்சம் பழம்!
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி
//நண்பர் வை.கோபால கிருஷ்ணன் பதிவினைப் படித்து மனத்தில் பதித்து மறுமொழிகள் இடுவதற்கே ஒரு மணி நேரம் செலவிட்டிருக்கிறார்.//
அன்புள்ள ஐயா, வ்ணக்கங்கள்.
எனக்கென்னவோ இவர்களின் பதிவினை ஒரு நாள் பார்க்காமலோ, படிக்காமலோ இருந்தால் கூட இரவினில் தூக்கமே வருவதில்லை.
படித்த பிறகும் [அதே நினைவலைகளில் நீண்ட நேரம் இருப்பதால்] தூக்கம் வருவதில்லை.
என்ன தவம் செய்தேனோ! எப்போது செய்தேனோ! இப்படியொரு தெய்வாம்சம் பொருந்திய தெய்வீகப் பதிவரின் நட்பு எனக்கு கடந்த 10 மாதங்களில் ஏற்பட்டுள்ளது.
கோயிலில் தெய்வங்கள் இல்லை. அங்கு நாம் பிரார்த்தனைக்காகப் போனாலும் நம்மால் இவ்வளவு தூரம் ஈடுபாட்டுடன் நிம்மதியாக தரிஸிக்கவோ, ஒவ்வொன்றையும் நுட்பமாக அறியவோ, முடியவே முடியாது.
நம் உடல்நிலையும், பொறுமையின்மையும், நேரமின்மையும் அவற்றிற்கெல்லாம் இடம் கொடுக்காது.
இவர்கள் தினமும் கொடுக்கும் படங்களை தரிஸித்து, விளக்கங்களை அறிந்து கொண்டாலே, எல்லாப்புண்யங்களும் நம்மை வந்தடைந்து விடும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இவர்களின் பதிவுடன் நான் ஒன்றிவிட்டதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை என்பதை தயவுசெய்து அனைவரும் அறிந்து கொள்ளவும்.
அவர்கள் நீடூழி வாழ்ந்து, எல்லா நலமும், வளமும் வாழ்க்கையில் பெற்று, இதுபோல ஆன்மீகத் தகவல்களை தினமும் அள்ளித் தந்து அதை நானும் படித்து மகிழ, என் சொச்ச வாழ்நாளில் என் கண்களும், விரல்களும் ஒத்துழைத்தால் அதுவே எனக்குப் போதும் என்ற முடிவுக்கே வந்து விட்டேன்.
என்றும் அன்புடன் தங்கள்
vgk
திருவண்ணாமலை...பற்றிய பல அறிய தகவல்கள்.. வழக்கம்போல படங்களுடன் பதிவு அசத்தல்..
ReplyDeleteநல்ல பகிர்வு. அண்ணாமலைக்கு அரோஹரா!
ReplyDeleteபடங்கள் எல்லாமே நன்றாக இருந்தது.
அண்ணாமலையாரும், தீபவிளக்கங்களும், படங்களும் நன்றாக இருக்கின்றன.
ReplyDeleteபலமுறை கோயிலுக்கு,கிரிவலம் போனதுண்டு.மூன்றரை வருடம் திருவண்ணாமலையில் இருந்தேன்.இப்போது வெகு நாளாகிவிட்டது.பதிவு நன்று
ReplyDeleteபடிப்புக் குறைவான காலத்திலேயே இன்றைய விஞ்ஞானம் சொல்வதைச் சொல்லியிருக்கிறார்கள்.எத்தனை அறிவு நம் முன்னையோர்களுக்கு !
ReplyDeleteதிருவண்ணாமலை கோவில் பற்றிய சிறப்பான தகவல்கள் அறிந்து கொண்டேன்.
ReplyDeleteபடங்கள் மிக அற்புதமாக இருக்கு.
இந்தப் பதிவைப் பார்த்ததும் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார் இவ்வளவு படங்களையும் வலையேற்ற என்று நினைத்தேன். தகவல் கொத்தாகவே உள்ளது . வாழ்த்துகள் சகோதரி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
படங்கள் பாத்துட்டே இருக்கலாம் போல இருந்ததுங்க... நான் இதுவரை திருவண்ணாமலை போனதில்லை... அடுத்த முறை ஊருக்கு வரும் போதேனும் போகணும்னு நெனச்சுட்டு இருக்கேன்... பார்ப்போம்...நன்றிங்க
ReplyDeleteஅண்ணாமலையானை உங்கள் மூலம் தரிசித்தேன் படங்கள் அருமை...
ReplyDelete;)
ReplyDeleteஹரே ராம, ஹரே ராம,
ராம ராம ஹரஹரே!
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரஹரே!!
1421+10+1=1432 ;)))))
ReplyDeleteதங்களின் குட்டியூண்டு பதிலுக்கு நன்றி. சீனா ஐயா அவர்களின் கருத்தும் அவரின் கருத்துக்கு அடியேன் எழுதியுள்ள பதிலும் மீண்டும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.
அவராவது Time Study செய்து நன்கு உணர்ந்து கொண்டுள்ளதில் ஓர் திருப்தியும் ஆறுதலுமாக உள்ளது.