Sunday, November 27, 2011

மிஞ்சிய பலன் தரும் இஞ்சி




கலியாண சுபுத்திர னாக
குறமாது தனக்கு வி நோத
கவினாரு புயத்திலு லாவி விளையாடிக்
களிகூரு முனைத்துணை தேடு
மடியேனை சுகப்பட வே வை
கடனாகு மிதுக் கன மாகு முருகோனே.....முருகா..

Ginger name graphics
தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகை இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து ..
ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும்.

இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று

இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம்,
எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல்..


விண்டுவி டாமல் முருகன் பதமேவு
விஞ்சையர் போல அனைவரும்
இஞ்சியினால் நலம் பல பெற்லாம்..

பித்தம், பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

இஞ்சியின் நற்குணங்கள் அனைவரும் அறிந்ததுதான். எனினும், சளி, இருமல், அஜீரணம் ஆகியவற்றை இஞ்சி சரி செய்யும் என்பது பொதுவான மருத்துவ பயன்கள்.

இஞ்சியின் செயல்பாடு பற்றி பல்கலைக்கழக உணவியல் பிரிவு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி இஞ்சியின் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரூபிக்கப்பட்டவை. உடல் எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்றும் ஆற்றலும் இஞ்சிக்கு உள்ளதை சமீபத்தில் எலிகளிடம் நடத்திய சோதனையில் அறிவித்தனர். 

 உணவில் சேர்த்து கொதிக்க வைக்கப்படும் இஞ்சியால் உடல் வலிகளைக் குறைக்க முடியும் என தெரிய வந்துள்ளது.

இஞ்சியை பச்சையாக உணவில் சேர்த்து சிலருக்கு 11 நாட்கள் அளித்தும். இன்னொரு குழுவினருக்கு கொதிக்க வைத்த இஞ்சியை அதே 11 நாட்கள் கொடுத்தும். அதன் பிறகு நடத்திய சோதனையில் சூடுபடுத்தப்பட்ட இஞ்சியை உணவில் சேர்த்தவர்களது உடல் வலிகளுக்கு நிவாரணம் கிடைத்தது தெரிய வந்ததாம்..

குறிப்பாக கடினமான வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏற்படும் தசை வலிகளை இஞ்சி குறைப்பது ஆய்வில் உறுதியானது. தினமும் உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வோருக்கு உடல் வலிகளை 25 சதவீதம் குறைக்க முடியும் என்கிறது ஆய்வு..

இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.

இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.

இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.

முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.

200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.

இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.

உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' ..இதன் மேன்மையை 
"சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம்.

மாங்காய் இஞ்சியும் பல மருத்துவக் குணங்கள் கொண்டது..
ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று மாங்காய் இஞ்சியின் தாயகமும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாங்காயைப் போன்று வாசனையும், இலேசான இஞ்சிச்சுவையும், இஞ்சியைப் போன்று உருவமும் கொண்டதால், தாவர இயல் நிபுணர்கள் தமிழில் இதற்கு ‘மாங்காய்இஞ்சி’ என்று மிகப் பொருத்தமாக பெயர் சூட்டியுள்ளார்கள்.

நாம் சாப்பிடும் மாங்காய் இஞ்சியில் புரதம், மாவுப் பொருட்கள், கொழுப்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ப்பொருட்கள், வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ அடங்கியுள்ளன.

மாங்காய் இஞ்சி’ புதுமொழிகள்
  மாதா ஊட்டாத சோறை மாங்காய் இஞ்சி ஊட்டும்.
வாய்ப்புண்ணிற்கு தேங்காய் வயிற்றுக்கோளாறுக்கு மாங்காய் இஞ்சி!
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பாங்கான மருந்து மாங்காய் இஞ்சி!

மருத்துவப் பயன்கள் ஏதாவது ஒருவகையில் மாங்காய் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும். இயற்கையிலேயே கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர் களுக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டமாக நறுக்கி சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது சாலச்சிறந்தது.

வயிற்றிலுள்ள தீமைதரும் பூச்சிகளை அழித்து வயிறு, குடல் பகுதிகளில் பூசணங்களை அறவே ஒழிக்கும். மாங்காய் இஞ்சி ஒரு சிறந்த இயற்கை வயிற்றுக் கழுவி ஆகும்.

மாங்காய் இஞ்சியை துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லையை வேரறுக்கும். உணவு செரியாமையை சீர்செய்யும். நன்கு பசி ருசி ஏற்படுத்தும்.

குண்டான உடல்வாகு உள்ளவர்கள் மாங்காய் இஞ்சியை தொடர்ந்து சமையலில் சேர்த்து வர, உடல் எடை கணிசமாகக் குறையும் என ஜெர்மனியில் மேற்கொண்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.

வயிற்று உப்புசத்திற்கு ஒரு எளிய இயற்கை மருந்து மாங்காய் இஞ்சி. சரும நோய் வராது காக்கும் குணமுடையது. சிலவகை டானிக்கு களில் இதன் சாறு ஒரு உபபொருளாகச் சேர்க்கப்படுகிறது.

மாங்காய் இஞ்சி ஒரு வலி நிவாரணி. குடல் வலிக்கு மிகவும் சிறந்த இயற்கை மருந்து. மூட்டுவலியைத் தணிக்கும். வெங்காயத்துடன் மாங்காய் இஞ்சியையும் சேர்த்து சாலட் ஆக சாப்பிட்டுவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் மாங்காய் இஞ்சியை தாராளமாய் உணவில் சேர்த்துக் கொண்டால் குளிர் உடம்பைப் பாதிக்காது காக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.

மாங்காய் இஞ்சியை சிறிய வட்டத் துண்டுகளாக நறுக்கி, சீரகத்தூள் தூவி சாலட்டாக சாப்பிட்டு, ஒரு தம்ளர் மோர் குடித்தால் பித்தம் குணமாகும்.

பதமாய் சுவையாய் உணவுக்கு மகுடம் சூட்டும்
பாங்கான மாங்காய் இஞ்சி ரெசிபீஸ்

 மாங்காய் இஞ்சி சாலட் :
மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டத்துண்டுகளாக நறுக்கி, சிறிது எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
 துவையல் :
மாங்காய் இஞ்சி, பச்சைமிளகாய், வெள்ளைப்பூண்டு, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
. மாங்காய் இஞ்சி சட்னி:
சட்னி செய்து இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பத்துடன் சேர்த்து உண்ண சுவையோ சுவை.
 மாங்காய் இஞ்சி தயிர்ப் பச்சடி :
தயிர்ப் பச்சடி தயாரித்து, சைட்டிஸ் ஆக பயன்படுத்தலாம்.
 மாங்காய் இஞ்சி கறி :
மாங்காய் இஞ்சியை துண்டுகளாக நறுக்கி, சிறிது நல்லெண்ணெயில் வதக்கி எடுத்து, அத்துடன் சீரகம், வத்தல், வெள்ளைப் பூண்டு, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இத்துடன் சிறிது புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். இந்தக் கறியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவைக்கு சுவை, சத்துக்கு சத்து.
 மாங்காய் இஞ்சி ஊறுகாய் :
நறுக்கிய மாங்காய் இஞ்சியுடன் மிளகாய்த்தூள், எலுமிச்சைசாறு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊறுகாய் செய்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.
 மாங்காய் இஞ்சி தொக்கு :
சிறு சிறு துண்டுகளாக்கிய மாங்காய் இஞ்சியை மிக்ஸியிலிட்டு தொக்கு பதத்தில் அரைத்து எடுக்கவும். இத்துடன் சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய் வத்தல்கள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் சேர்த்து வேகவைத்து இறக்கவும். மாங்காய் இஞ்சி தொக்கு ரெடி. எல்லாவகை சாதத்துடனும் தொட்டுக் கொள்ள சுவையோ சுவை.
 மாங்காய் இஞ்சி புலவு :
பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்து எடுத்து, துருவிய மாங்காய் இஞ்சி, நெய், உப்பு சேர்த்து புலவு செய்து, வெங்காய தயிர்ப் பச்சடி சேர்த்து சாப்பிட, சூப்பர் சுவைதான்.

 மாங்காய் இஞ்சி, வத்தக்குழம்பு :
மிளகாய் வத்தல், மாங்காய் இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும். தேவையான புளிக் கரைசலில் இவற்றைச் சேர்த்து வத்தக்குழம்பு செய்து இறக்கவும். நன்கு சுவையானது இக்குழம்பு.
 மாங்காய் இஞ்சி பக்கோடா :
சாதாரணமாக நாம் பக்கோடாவுக்கு மாவு சேர்க்கும்போது, மாங்காய் இஞ்சியைத் துருவி இட்டு நன்கு கலந்து பின்னர் பக்கோடா பொரித்து எடுக்கவும். இது சூப்பர் சுவையான பக்கோடா.


இஞ்சி லேகியம்

இஞ்சியை தோல் சீவி வெட்டி 1/2 கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டி சிறிது நேரம் வைக்கவும்.
தெளிந்ததும் மேலாக எடுத்து அதில் திராட்சை, பாதாம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அரைத்த விழுது, நெய், வெல்லம் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி காற்று புகாத ஜாடியில் போட்டு மூடி வைக்கவும்.
வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கு நல்ல மருந்து பித்தத்திற்கும் நல்ல மருந்து

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்
இஞ்சி துவையல்
Indian Medicinal Recipe: Ginger chutney - Cooking Recipes in Tamil


இஞ்சி பொங்கல் சுவையில் மிகவும் சிறந்தது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஏற்படும் உபாதைகள் வயிற்று போக்கு, வயிற்று வலி, அஜீரண கோளாறு போன்ற அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் டாக்டர் இஞ்சி பொங்கல் .....

குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பு, துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், உப்பு, தண்ணீ­ர் 5 டம்ளர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவேண்டும்.
* வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், முந்திரி மற்றும் மிளகு சீரகப் பொடி போட்டு வறுத்தெடுத்து கறிவேப்பிலையை கடைசியாகச் சேர்க்கவும்.
* பத்தே நிமிடத்தில் இஞ்சி பொங்கல் ரெடி.
மணி மகுடமாய் சுவையும் மணமும் மகிழ்வுடன் அனைத்து உஅணவுகளுக்கும் அளிக்கும் இஞ்சி... இஞ்சிக்குப் பதில் சுக்குப் பொடி இருந்தாலும் உபயோகிக்கலாம்.



இஞ்சி – மிளகு டீ



சீரகத்தை இஞ்சி சாற்றில் ஊறவைத்து சூரணம் செய்து சர்க்கரை சேர்த்து  அருந்திவர வாந்தி குறையும்.
மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல், பொரியலில் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.





Ginger Ice Cream Might Change Your Life

Ginger Ice Cream

மலபார் இஞ்சி முரபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும்.

candied ginger



Ginger Beet Drink


Citrus – Beet Smoothie


Citrus – Beet Smoothie


பித்தமது அடங்கியனால் பேசதே போய்விடு
எத்திய ஐயம் எழும்பிடில் கிட்டாதே
எத்திய வாதம் எழும்பினால் மருந்து செய்
இது சித்தர் நாடி கூறும் இலக்கணம். இதன் பொருள் வாத நாடி நடக்கும்போது தான் மருந்து தர வேண்டுமாம்! வாதத்தை நடுநிலையாகக் கொண்ட இயற்கை மூலிகைகள் சிலவே. 

இதில் இந்த சுக்கு சுப்பிரமணியரைப்போல் முதன்மை வகிக்கக்கூடியது. சுக்கு இதற்குத்தான் உபயோகிக்கலாம்; இதற்கு கூடாது என்ற வரம்பே இல்லை. எந்த காலத்துக்கும், எதற்கு வேண்டுமானாலும் யாவரும் பயன்படுத்தக் கூடிய எளிய ஆனால் உயர்ந்த வஸ்து. 

அகத்தியர் இதனை ‘ஈதுக்குதவும் தீதுக்குதவா தென்றோரு விதியிலை நவசுறு குணமிதுவே’ என்றார் நவசுறு எனில் சுக்கு.

பெரிய குடும்பத்தில் தலைவன் ஒரு தந்தையாக இருந்த போதிலும் முதல் மருமகளாக வாய்க்கும் பெண்ணுக்கு எவ்வளவு பெருமையும், பொறுப்பும் உள்ளதோ? அத்தகைய மதிப்பினை மக்கள் சமுதாயத்தில் இந்த சுக்கு பெற்றுள்ளது.

தேவர்கள் சேனாபதியாய், தனிப்பெரும் தமிழ்க்கடவுளாய் போற்றும் முருகனைப் போலவே இஞ்சியும் சுக்கும் நம் பாரம்பர்ய உணவும் மருந்தும்..

வாதரோக சம்பந்தப்பட்ட கீல்வாய்வு, பிடிப்பு, வீக்கல், மூட்டுக்களில் வலி இவை உடம்பின் எந்த மூட்டுக்களில் வந்த போதிலும் சரி ஒரு துண்டு சுக்கு, ஒரு துண்டு உயர்ந்த பெருங்காயம் பால் விட்டு அரைத்து சேர்ந்த விழுதியை வலியும் வீக்கமுள்ள இடங்களில் தடவி வெய்யில் அல்லது நெருப்பனல் காட்ட குணமாகும். 

பல்வலி தாங்க முடியாதபோது எகிறுகள் வீங்கி ஊசி குத்துதல் போன்று வலிக்கும்போது, ஒரு துண்டு சுக்கு எடுத்து நறுக்கி அதை அப்படியே வலிகண்ட இடத்தில் வைக்க சாந்தப்படும்

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் உலர்த்தி சுத்தம் செய்து சம எடை எடுத்து இடித்து துல்லியமாக தூள் செய்து வைத்துக் கொள்வது தான் ‘முக்குணத்துணை மருந்து’ என்பது. 

இதை நோய்த் தடுப்பு மருந்தாக சிறுவர் முதல் பெரியவர் வரை உபயோகிக்கலாம். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுடைய தொழில் ஆக்கம், காத்தல், அழித்தல் என்பன போன்று இந்த முக்குண துணை மருந்தும் உடலுக்குத் தேவைகளை ஆக்கி, தேவையற்றவைகளை அழித்து வெளியேற்றி உடலைக்காக்கும் தன்மையது.

நம் முன்னோர்கள் சிறு வயதில் அடங்காது அட்டகாசம் செய்யும் முரட்டுப் பிள்ளைகளை ஒரே சுக்குத் துண்டால் சாதுவாகச் செய்து விடுவார்கள்!
சுக்கு ஒரு பழங்கால பெனிசிலின் என்று சொன்னால் மிகையல்ல.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.


காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றி நடந்தோர் கோலை விட்டு குலாவி நடப்பாரே! என்பது பண்டைய தமிழ்மொழி.

சுக்கு – சித்தர்கள் கண்டுபிடித்த பென்சிலின் ..
சுக்கு தீவிர நோய்களை குணப்படுத்துவது போல நாட்பட்ட நோயால் மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்கும் கொடுக்கலாம் என்பதனை ‘திரிபலா சுக்கு டோக்க தெரித்து உயிர் போமுன்’ என்ற திருப்புகழ் பாடலால் அறியலாம்.

அறியாமையும், நோயுடைய வாழ்க்கையும் இருண்டுபோன இரவுக்கு சமமானவைகளே! எனவே இருள் என்ற அறியாமை, பிணி யாவும் சுப்பிரமணி (சுக்கு) எனும் முருகன் அருளால் நீங்கிவிடும்.

திரிகடுகம் ,ஏலாதி போன்ற தமிழ் நூல்களும் நமக்கு அறியாமையையும், நோய்களையும் ஒருங்கே அகற்றும் பெருமைகொண்டவை.

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
Ginger name graphicsGinger name graphics
இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்..
squirrel ginger clipart picturesquirrel ginger clipart picturesquirrel ginger clipart picturesquirrel ginger clipart picture
 நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிஉலர்த்தப்பட்டு சுக்கு என செல்லமாக அழைப்பது நம் நாட்டு பழக்கமாயிற்றே!
படிமம்:Ginger dry.JPG
சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான்.
ஆயுளை நீடிக்கச் செய்யும். கொழுப்பைக் கரைக்கும். பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் ஏதுமின்றி இஞ்சி மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன.

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லைசுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லைஎன்பது பழமொழி அல்லவா?

நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.


Butterfly Ginger


Butterfly Ginger


Qingdao Renhe Ginger Industry
Qingdao Renhe Ginger Industry Development Co., Ltd.
Gingers are one of the most beautiful and colorful flowers in the world of flowers.
Pink Ginger


மஞ்சளும் இஞ்சியும் கொஞ்சி பிணைந்து மங்களகரமாக விளையும் பூமி பார்க்க கண்கோடி வேண்டும்..
Life Cycle of Ginger



Please wait while images are being loaded.....by Wowmailz
 சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.

peeling-ginger2
இஞ்சியின் மேல்தோல் முழுவதுமாக நீக்கப்ப்டவேண்டும்..இஞ்சிச்சாறிலும் அடியில் தங்கும் கசடு நீக்கப்படவேண்டும்..

இஞ்சியின் குணமேதென்றால்
இயல்புடன் உரைக்க கேளீர்
அஞ்சிடும் கன்னியாவும் 
அகன்றிடும்பித்ததோடம்நெஞ்சினில் 
இருமல் கோழைநெகிழ்ந்திடும்
கபங்கள் தன்னைமிஞ்சினி 
வருமேவென்றும் விளம்பிடும்வேதநூலே (ஓலைச் சுவடி)

சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீதம் இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். 

ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! 
ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். 

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும்.

இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும்.

இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!

ஆஸ்துமா இருமலுக்குஇஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம்.(இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.
Coconut Monkey Mix
அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

மணி என்றால் செவியால் கேட்கும் ஒலி மட்டும் அல்ல! கண்களால் பார்க்கும் ஒளிக்கும் மணி என்றுதான் பொருள்.சுப்பிரமணி என்னும் நம் தமிழ்க்கடவுளுடன் இணைத்து வழங்கப்படும் இஞ்சி பலவகையிலும் வாழ்விற்கு வளமும் ஒளியும் தரும் குணமுடையது...

Ginger Cat loves Cheetos

Animated cat and mouse line
Ginger Domestic Cat Running with Litter of Five Kittens  

Ornament (Round) Merry Catmas
A golden snub nosed monkey eats
A golden snub nosed monkey eats while sitting on an ice block
இஞ்சி தின்ன குரங்கு....



Free Animations

Mr Monkey

Animated MonkeysAnimated Monkeys

Wild Ginger


43 comments:

  1. இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல்...
    அறிந்துகொண்டேன் சகோதரி...

    ReplyDelete
  2. இஞ்சியின் மிஞ்சிய பலன்களை
    அழகுற விளக்கியமைக்கு நன்றிகள் பல சகோதரி..

    ReplyDelete
  3. அழகிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்...

    ReplyDelete
  4. இஞ்சியைப்பற்றி
    ரயில் இஞ்சின் + பெட்டிகள் போன்ற மிகப்பெரிய பதிவு கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    ஒன்றையுமே விட்டு வைக்கவில்லை.

    எனக்கு மிகவும் பிடித்த மாங்கா இஞ்சியை மறந்து விடுவீர்களோ என்று பார்த்தால் அதனைப்பற்றி அத்தனை விபரங்கள். ஆஹா! அருமை.

    சரி “இஞ்சி தின்னக்குரங்கு போல” என்பார்களே அதை விட்டு விடுவீர்களோ என்று பார்த்தால் அதனையும் காட்டி பயமுறுத்தி விட்டீர்கள்.

    இவ்வளவு விபரங்களுடன் இவ்வளவு படங்களுடன் ஒரு மிகப்பெரிய மிகப்பயனுள்ள பதிவை, ஒன்று விடாமல் மிக அழகாக விளக்கியுள்ளது அருமையோ அருமை.

    அதிலும் ஆன்மீகம் கலந்து கொடுத்துள்ளது தங்களின் தனிச்சிறப்பு தான்.

    இஞ்சி+மிளகு+சுக்கு+கடுக்காய் என எல்லாவற்றையும் சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

    படங்கள் யாவும் வெகு அருமை.

    கடும் உழைப்புக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும்.

    முழுவதும் மிகவும் ரஸித்துப்படித்தேன்.

    இதில் புளீஞ்சியும், மாங்கா இஞ்சியும் எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய்கள்.
    நானே ரவுண்டாக மாங்கா இஞ்சியை நறுக்காமல், தோல்சீவி, மிகவும் பொடிப்பொடியாக நறுக்கித்தந்து விடுவேன். எலுமிச்சம்பழம் ஒரு மூடி பிழிந்து, கடுகு தாளித்து, உப்புப்போட்டு விட்டால் போதும்.

    அதன் மாங்காய் மணத்திற்கும், இஞ்சி வாசனைக்கும், நல்ல தயிர் சாதம் நிறைய சாப்பிடமுடியுமே!

    இப்போதே எனக்கு நாக்கில் ஜலம் ஊறும்படிச் செய்து விட்டீர்களே!))))

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றிகள்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  5. இஞ்சி காய்ந்தால் அது தான் சுக்கு என்பது பலபேருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதையும் சொல்லி விட்டீர்கள்.

    அதே போல இஞ்சியின் மேல் தோலை சுத்தமாக நீக்கிவிட வேண்டும். அதில் விஷத்தன்மை அதிகம். அது ஒரு நச்சுப்பொருள். அதையும் சொல்லியிருக்கிறீர்கள். உள்ளே உள்ள சக்கை போன்றவற்றையும் பயன் படுத்துவது இல்லை தான்.

    இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி போன்றவை தினமும் புதியதாக வாங்கிவந்து, மண்போக நன்கு கழுவிவிட்டு,இஞ்சியை மட்டும் தோல் நீக்கிவிட்டு, தினமும் எங்கள் வீட்டில் பயன்படுத்துகிறோம்.

    தினமும் நிறைய காய்கறிகள், பசுமையாக புத்தம் புதியதாக வாங்கி வருவதும், அவற்றை அழகாகப் பொடிப்பொடியாக நறுக்கித்தருவதும் என் வேலையாக வைத்துக் கொண்டுள்ளேன்.

    மாங்கா இஞ்சி புத்தம்புதிதாக, பிஞ்சாக ஒடித்தால் பளிச்சென்று உள்ளே இருக்க வேண்டும். இஞ்சிபோலவோ, சுக்கு போல்வோ காய்ந்து போன மாங்கா இஞ்சியோ, முற்றிப்போன மாங்கா இஞ்சியோ ருசியாகவே இருக்காது.

    இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல்... என்பது இன்று புதிதாக தங்கள் பதிவிலிருந்து நான் அறிந்து கொண்டது. நன்றி.

    இஞ்சி ஐஸ்கிரீம் என்பதும் இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. சுவைத்ததும் இல்லை.

    என்னதான் தாங்கள் பக்கம்பக்கமாக இதன் மகத்துவத்தையெல்லாம் அருமையாக எழுதினாலும், இவற்றையெல்லாம் பக்குவமாகச் செய்து தந்து அசத்த

    “இஞ்சி இடுப்பழகி .... மஞ்சச்சிவப்பழகி ....” ஒருவள் பொறுப்பாக அமைய வேண்டும்.

    அதற்கும் ஒரு கொடுப்பிணை வேண்டும்.

    இந்தப் பதிவை எனக்கு

    “மறக்க மனம் கூடுதில்லையே!”

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  6. முதல் இரண்டு படங்களும், அடுத்த இரண்டு மயில்களும் அழகோ அழகு.

    மாங்கா இஞ்சி சாலட், துவையல், சட்னி, தயிர் பச்சட், கறி, ஊறுகாய், தொக்கு, புலவு, வற்றல்குழம்பு, பக்கோடா, இஞ்சி லேகியம், இஞ்சிப் பொங்கல், சுக்குப்பொடி என்று ஏதேதோ சொல்லி, படங்களையும் காட்டி என் பசியைக்கிளறி விட்டீர்கள். எல்லாவற்றையும் உடனடியாக டேஸ்ட் செய்யணும் போல ஆசை ஏற்பட்டது.

    என் favourite ஆன பஜ்ஜிகளை வேறு படத்தில் நிறையக் காட்டி என்னை சுண்டியிழுத்து விட்டீர்களே! நியாயமா? ))))

    நிறைந்த வயிற்றுக்கு நீர்மோர் பானகமாம என்பது போல, இஞ்சிட்டீ, இஞ்சி ஐஸ்கிரீம், மலபார் இஞ்சி முரபா, இஞ்சி கலந்த ரோஸ்மில்க் போன்ற பீட்ரூட் பழரஸம் எனக்காட்டி என் தூக்கத்தைக்கெடுத்து விட்டீர்கள்.

    மஞ்சளும் இஞ்சியும் கொஞ்சிப்பிணைத்து மங்களகரமாக விளையும் பூமியைப்பார்க்க கண் கோடி வேண்டும்.

    தங்களின் பதிவுகளைப்பார்க்கவும் அதுபோலவே தான் எனக்கு. இருக்கும் 2 கண்கள் போக மீதி 99,99,998 கண்களுக்கு நான் எங்கு செல்வேன்?

    ReplyDelete
  7. அந்த முரட்டுச்சேர் ஒன்றில், தர்பூஷணிக்குள் அமர்ந்து கொண்டு அதை நக்கிடும் பொடியனை அழகோ அழகாகக் காட்டியுள்ளீர்கள். எங்குதான் அவனை வலைவீசிப் பிடித்தீர்களோ?)))

    தாய்ப்பூனையும் அதன் ஐந்து குட்டிகளும் அடடா! தனக்கு ஐந்து குட்டிகள் என்ற பெருமையில் அதன் வால் நீண்டு ஆகாயத்தை நோக்கியல்லவா உயர்ந்துள்ளது!!

    ஐந்து அழகான குட்டிகள் என்றால் சும்மாவா பின்னே! கொடுத்து வைத்த தாய்ப்பூனையல்லவா! )))))

    சுமங்கலிப்பிரார்த்தனை சமயம், வயிறு நிரம்ப சுமங்கலிகளுக்கு சாப்பாடுபோட்ட பின், அவர்களை அமரச்செய்து, நலங்கு மஞ்சள் பூசிவிட்டு, புத்தாடைகள் அணிய வைத்து, மஞ்சள் கிழங்கு, குங்குமச்சிமிழுடன் குங்குமம், வெற்றிலை பாக்கு தாம்பூலம், கண்ணாடி, சீப்பு, பொட்டு, வளையல், தக்ஷிணை முதலியன எல்லாம் கொடுத்து விட்டு, இளநீர், பானகம், நீர்மோர் எல்லாம் குடிக்கச்சொல்லி விட்டு, சுக்குவெல்லம் என்று ஒன்று சூப்பராகக் கொடுப்பார்களே, அதை மட்டும் ஏனோ எழுத மறந்து விட்டீர்கள்!

    ReplyDelete
  8. சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
    சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை

    என்பது பழமொழி [அது பழைய மொழி]

    ”எங்கள் தெய்வாம்சம் பொருந்திய தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரிக்கு மிஞ்சிய
    அருமை பெருமை வாய்ந்த பதிவர் யாருமில்லை”

    என்பதே என் புதுமொழி.

    மணியென்றால் செவியால் கேட்கும் ஒலி மட்டுமல்ல;

    கண்களால் பார்க்கும் ஒளிக்கும் மணி மட்டுமல்ல;

    மணி என்றாலே, நம் ’மணி’ராஜ் என்னும் பதிவராகிய ஜெகமணி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் மட்டுமே தான் என்பதை அறிந்து கொண்டோம்.

    இந்த ஜெகம் பூராவும் தேடினாலும் கிடைக்காத “ஜெகமணி” திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்ந்து இதுபோல எங்களுக்கு தினமும் பல்வேறு நல்ல பதிவுகள் தந்துகொண்டே இருக்க வேண்டும் என மனமார விரும்பி வாழ்த்துகிறேன்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  9. இஞ்சில இவ்வளவு விசயமா!!!

    ReplyDelete
  10. சுமங்கலிப்பிரார்த்தனை சமயம், வயிறு நிரம்ப சுமங்கலிகளுக்கு சாப்பாடுபோட்ட பின், அவர்களை அமரச்செய்து, நலங்கு மஞ்சள் பூசிவிட்டு, புத்தாடைகள் அணிய வைத்து, மஞ்சள் கிழங்கு, குங்குமச்சிமிழுடன் குங்குமம், வெற்றிலை பாக்கு தாம்பூலம், கண்ணாடி, சீப்பு, பொட்டு, வளையல், தக்ஷிணை முதலியன எல்லாம் கொடுத்து விட்டு, இளநீர், பானகம், நீர்மோர் எல்லாம் குடிக்கச்சொல்லி விட்டு, சுக்குவெல்லம் என்று ஒன்று சூப்பராகக் கொடுப்பார்களே, அதை மட்டும் ஏனோ எழுத மறந்து விட்டீர்கள்!//

    நிறைவாக்கித்தர தாங்கள் அருமையான கருத்துரைகளுடன் சந்துஷ்டியாய் இருக்கும் தைரியம் தான்...

    அருமையாய் ரசித்து அளித்த அத்தனை மணமான கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...

    ReplyDelete
  11. விச்சு said...
    இஞ்சில இவ்வளவு விசயமா!!!/

    கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  12. "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை"

    மிகவும் ரசித்து மனதில் நிறுத்திக்கொண்டேன்... அருமையான பழமொழி

    ReplyDelete
  13. இஞ்சியில் எவ்வளவு பயன்கள்... மலைத்துபோய்விட்டேன் சகோ! இதற்கான உழைப்பு மகத்தானது.... இனி எல்லா உணவுகளிலும் இஞ்சியை சேர்க்க வேண்டியது தான்... மிக உபயோகமான பதிவு... பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  14. இஞ்சி பற்றிய மிகவும் சுவையான மருத்துவ குணமிக்க பதிவைக் கண்டேன் அப்போது மாமி வீட்டுக்கு தாரளமாக வரலாம் இஞ்சி சமையல் கிடைக்குமில்லையா பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள்எனில் அத்தனை சிறப்பான பதிவு .

    ReplyDelete
  15. இஞ்சி பற்றி எத்தனை தகவல்கள்.. பிரமிக்க வைக்கிறது உங்கள் பதிவு. எதையும் மேம்போக்காய் எடுக்காமல் தீவிரமாய் முழுமையாய்த் தரும் உங்கள் ஈடுபாட்டிற்கு என் நமஸ்காரம்.

    ReplyDelete
  16. சிறந்த பதிவு

    ReplyDelete
  17. இஞ்சை பற்றிய பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  18. அப்பப்பா.... எத்தனை தகவல்கள்!! அபாரம்!

    ReplyDelete
  19. ம்ம்ம்ம் - எத்தனை தகவல்கள் - எத்தனை பட்ங்கள் - அத்தனையும் அருமை. பயனுள்ள இடுகை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. சூப்பர் பதிவு.தெளிவாக இஞ்சி பற்றிய எல்லா விவரங்களும் கூறி எல்லாரும் பதிவை இஞ்சிக்கும் படி செஞ்சுட்டீங்க.நன்றி.

    ஆனா நன்றி பதிவுக்கு மட்டும்தான்.உங்களுக்கும் சொல்லணும்னா ஒரு இஞ்சி ஐஸ்க்ரீம் பார்சல் ப்ளீஸ் .....

    ReplyDelete
  21. நான் தினமும் மாலையில் தேநீரில்
    இஞ்சி தட்டிப் போட்டு சாப்பிடுவேன்.அது என்ன இஞ்சி மிளகு டீ?அப்டின்னா அதுல மிளகையும் தட்டிப் போடணுமா?அதுக்கு பால் சேர்க்கக் கூடாதா?விளக்கினால் நன்றாக இருக்குமே

    ReplyDelete
  22. raji said...//
    இஞ்சிய கருத்துரைக்கு நன்றி..


    கொத்துமல்லி விதைகளையும், மிளகையும் லேசாக வாசம் வரும் வரை வறுத்துப்பொடித்து, அத்துடன் சுக்கும் தட்டிப்போட்டு இஞ்சியும் சுத்தமாக் தோல் நீக்கி தட்டிச் சேர்த்து, பனை வெல்லம் சேர்த்து தண்ணீரில் நன்கு கொதிக்கவைத்து தெளியவைத்து வடிகட்டிக் குடித்தால் நோய்த்தடுப்புடன் மிகவும் வாசனையாகவும் ருசியுடனும் இருக்கும். தலைவலி உடனே சரியாகும்..

    பனை வெல்லம் கிடைக்காவிட்டால் சர்க்கரை போட்டுக்கொள்ளலாம்..

    விரும்பினால் பால் சேர்க்கலாம்...

    படித்தகாலத்தில் விடுதியில் இந்தப்பானம் தான் காலையும் மாலையும்..காபிக்குப் பதிலாக..
    இப்போதும் அடிக்கடி விரும்பி பயன்படுத்துகிறோம்..

    ReplyDelete
  23. ஏ யப்பா இஞ்சியில இம்புட்டு மருத்துவ குணமா...!!!!

    இன்னைக்கே போயி தேன் வாங்கி வந்து இஞ்சியை வெட்டி உள்ளே போட்டு ரெடி பண்ணனும், சளி தொல்லையா இருக்கு, மிக்க நன்றி மேடம், சூப்பர் பதிவும், படங்களும்...

    மக்களுக்கு பிரயோசனமான பதிவு வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  24. ஆஹா...இஞ்சியைப் பற்றி இவ்வளவு தகவல்களா? அருமை.

    படங்கள் ரொம்ப அழகு.அதுவும் இஞ்சி தின்ன குரங்கையும் நீங்க விட்டு வைக்க வில்லை.அருமை.

    ReplyDelete
  25. ஹைய்யோ! வாய்ப்பேயில்லை.கலக்கலான பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  26. படிக்கப் படிக்க வந்துகிட்டே இருக்கே இஞ்சி? முடிவே இல்லாத பதிவோன்னு ஒரு செகன்ட் பயமாயிருச்சு. நீளமானாலும் சுவாரசியமா இருக்குதுங்க.

    'சுக்குக்கு மிஞ்சின மருந்தில்லே' என் தாத்தா அடிக்கடி சொல்வார். 'சுவாமிமலைக்கு மிஞ்சின கோவிலில்லே' என்று முடியும் அவருடைய வரிகள்.

    மேரதான் ஓடும் பொழுது ஒன்றிரண்டு பச்சை இஞ்சி எடுத்துப் போவது வழக்கம். ஐந்தாறு மைலுக்கு ஒரு இஞ்சியை அப்படியே மென்றபடி ஓடலாம். இஞ்சியின் காரமா இல்லை நிஜமாகவே புத்துணர்வா தெரியாது, வலிமறந்து ஓட முடியும். அனுபத்தில் சொல்கிறேன்.

    இஞ்சி ஐஸ்க்ரீம் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்பொழுதெல்லாம் ஒரு ஸ்பூன் தான் சாப்பிடுகிறேன், பிடித்தாலும்.

    இஞ்சி மொரப்பா உடலுக்கு மிகக் கெடுதல் என்று நினைக்கிறேன். இஞ்சியின் நன்மையை மொரப்பாவிலிருக்கும் சர்க்கரை அல்லது வெல்லம், வெண்ணெய் அல்லது டால்டா, உப்பு எல்லாமாகச் சேர்த்துக் கெடுத்துவிடும். இருந்தாலும் சுவையானது :) motion sickness அடக்க இஞ்சி மொரப்பா உதவும்.

    ரோஸ் கலரில் மெலிதாக சீவிய இஞ்சிக் காகிதங்கள் - சூஷிக்கு இதம். டோக்யோ நாட்களில் இஞ்சி டாக் (ginger dog) சாப்பிட்டிருக்கிறேன். உச்சந்தலை கண் மூக்கிலிருந்து நீர் வரும். இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு ஹா ஹா என்று நாக்கை ஆறப்போட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை.

    மாங்காய் இஞ்சி மறந்து போய் மாமாங்கம் இரண்டு ஆச்சுங்க!

    இஞ்சிக்கு எரிப்பு கொண்டாட்டம் - புரியவில்லையே?

    தமிழ்நாட்டுல ஜெயலலிதா ஆட்சியில் இஞ்சி விலை ஏறிடுச்சுனு யாராவது சொல்வாங்க பாருங்க.

    ReplyDelete
  27. மறந்து போச்சு. சென்னை அண்ணா சாலை மேம்பாலத்தை ஒட்டிய வளாகத்தில் ஒரு ரெஸ்ட்ராந்ட் - பெயர் மறந்து விட்டது - காலையில் மட்டும் இஞ்சிச் சட்னி தருவார்கள். அதற்காகவே தௌசன்ட் லைட்சில் இறங்கி, வெண்பொங்கல்-இஞ்சி சட்னி சாப்பிட்டுவிட்டு அடுத்த பஸ் பிடித்து வேலைக்குப் போன நாட்கள் நினைவுக்கு வந்தன.

    ReplyDelete
  28. மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று நினைப்பதுவே நல்ல எண்ணத்தைக் குறிக்கும். எனவே அதற்கேற்ப நீண்ட கட்டுரைப் பதிவு. தெளிவான படங்கள் பொருத்தமான குறிப்புகள். இஞசி குறித்த அழகாக காட்சிப்பதிவு. மிகமிகப் பயனுள்ள பதிவு. நான் கிரந்தப்பயிற்சி மேற்கொள்ளும்போது ஒரு கிரந்தச் சுவடியில் இஞ்சியைப் பற்றிய ஒரு குறிப்புக் கண்டேன். அது மணலோடு தொடர்புடையது. அதன்படி பயன்படுத்தினால் புற்றுநோயைக் குணப்படுத்தும் என்று. அதனை உறுதிச்செய்ய அந்த சுவடியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

    அருமையான கட்டுரை. இதெல்லர்ம்கூட மனிதகுலத்திற்கு நாம் செய்யும் தொண்டுதான். தெர்ண்டுசெயவோர் சாவதில்லை. வாழக வளமுடன்.

    ReplyDelete
  29. @அப்பாதுரை

    இஞ்சியை இஞ்ச் இஞ்ச்சா இஞ்சியிருப்பீங்க போலருக்கே :-)

    ReplyDelete
  30. தகவல்களுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  31. இஞ்சியின் மகிமைகள் அப்பப்பா!!! தகவல்களுக்கு நன்றி. இஞ்சி மகிமைகளை அறிந்து, புகைப்படத்தில் இஞ்சி தின்ற குரங்காக ஆகிவிட்டேன்.

    ReplyDelete
  32. சிறப்பு இஞ்சி மருத்துவமாகவும் கடவுளாகவும் சிறப்பான உணவு முறைகளாகவும் இன்னும் எப்படி எல்லாம் பயன்படுத்துவீர்கள் பாராட்டுகள் நன்றி நகல் எடுத்துக் கொண்டேன் பரவாயில்லையா ?

    ReplyDelete
  33. பார்கரத்துக்கு மனசெல்லாம் நோககரதொன்ன அந்த குழந்தையை என்ன பாடு படுத்தறேள் கொஞ்சம் தூக்கி வெளியில விடபடதா பாவமா தெரியலையா ?

    ReplyDelete
  34. அப்பாதுரை said.../

    அனுபவக் கருத்துரைகளால் பதிவைச் சிறப்பித்தமைக்கு மனம் நிரைந்த நன்றிகள்...

    ReplyDelete
  35. @raji

    அது வேறே ஒண்ணுமில்லீங்க..

    இராஜராஜேஸ்வரி சாமி கோவில்னு விவரமா எழுதுறாங்க எப்பவும்.. எனக்கோ அதப்பத்தி பின்னூட்டம் எழுத சுத்தமா எதுவும் தோணமாட்டேங்குது.
    இஞ்சி வசமா மாட்டிச்சு, அதான்.. :) போதாக்குறைக்கு எங்கப்பா எல்லாம் வேறே போட்டிருந்தாங்களா.. பாசம் பிச்சிக்கிச்சு.

    ReplyDelete
  36. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  37. நான் இப்பொழுது தான் கருத்துக்களில் கவனித்தேன்.சவால் கதையில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ! .

    ReplyDelete
  38. http://muruganirukkabayamen.blogspot.com/

    http://omsaravanabhavasecurities.blogspot.com/

    ReplyDelete
  39. எதையும் தெளிவாகவும் அழ‌காக‌வும் முழுமையாக‌வும் அக்க‌றையோடும் செய்யும் உங்க‌ளுக்கென் வ‌ந்த‌ன‌ம்! வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!
    இஞ்சியின் சுவை பிடிக்காத‌வ‌ர்க‌ளும் உங்க‌ள் ப‌திவைப் ப‌டித்த‌வுட‌ன் ம‌ன‌ம் மாறுவார்க‌ள்.

    ReplyDelete
  40. ;)
    ஹரே ராம, ஹரே ராம,
    ராம ராம ஹரஹரே!
    ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண ஹரஹரே!!

    ReplyDelete
  41. 1407+6+1=1414 ;)))))

    சந்துஷ்டியாக அளித்துள்ள ஒரே பதிலால் சுக்குவெல்லம் சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டது. ;)))))

    ReplyDelete
  42. கோபு சார் அவர்களின் இன்றைய வலைச்சர அறிமுகம் வழியே வந்தேன். வாசித்துப் பிரமித்தேன். இஞ்சியின் மகத்துவம் ஓரளவு தெரியும். முழுமையாக இன்று அறிந்தேன். நன்றி மேடம்.

    ReplyDelete