சந்தன காப்பு அலங்காரத்தில் தபோவனம் ஞான வேணுகோபாலன்.
ஞானாம்பிகை, தபோவனம்,
ஞானத்திலும் பரமோனத்திலும் தனிச் சிறப்புடன் கோலோச்சி வருவது பாரத நாடு. பண்டைக்காலம் தொட்டு இன்றுவரை திருவருட் செல்வர்கள் பலர் அருந்தவம் இயற்றிச் சித்தி பெற்று மக்களைத் தெய்வீக வாழ்க்கை முறைக்கு அழைத்துச் சென்று வழிகாட்டிகளாகவும் அருள் துணையாகவும் திகழும் ஞான பூமி பாரதம்!
தபோவனத்திற்கு என்னை நாடி வருபவர்களின்
வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்ளுவேன்’. ‘
வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்ளுவேன்’. ‘
கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி,
பக்தி யோகமும், கர்ம யோகமும் தான்’. ’
கலியுகத்தில் நாம சங்கீர்தத்தனமே முக்திக்கு வழி’ –
இது போன்று பல்வேறு அமுத மொழிகளைத் தம்மை நாடி
வந்த பக்தர்களிடையே உபதேசித்து அவர்களை நல்வழிப்படுத்திய மகான்
ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள். .....
ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள். கபீர்தாஸ், ஷிர்டி சாயிபாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ராமலிங்க அடிகளார், சற்குரு சுவாமிகள், விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ அரவிந்தர் எனப் பல மகான்களைச் சந்தித்த பெருமைக்குரியவர்.
தபோவன பீடத்தின் தலைவராக சிலகாலம் விளங்கிய ஞானானந்தர் குருவின் மறைவிற்குப் பின் வேறு ஒருவருக்குப் பட்டம் சூட்டி, மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களபுரி என்னும் ஊரில் வெங்கோபா சாஸ்திரிகள்-சக்குபாய் தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஸ்ரீ சுவாமிகள். இயற்பெயர் சுப்ரமண்யம்.
சிறுவயது முதலே ஆன்மிக நாட்டமும் இறை நம்பிக்கை
உடையவராகவும் விளங்கினார்.
ஒருநாள் தியானத்தின் போது பேரொளியின் தரிசனம் கிட்டியது. அவ்வொளியின் வழிகாட்டலின் பேரில் தல யாத்திரை மேற்கொண்டவர், பண்டரிபுரத்திற்குச் சென்று அங்கேயே வசிக்கலானார்.
ஒரு முறை பண்டரிபுரம் வந்திருந்த காஷ்மீர் ஜோதிர்லிங்க பீடாதிபதிஸ்ரீ சிவரத்தின கிரி சுவாமிகள் சுப்ரமண்யத்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவரை தனது சீடனாக ஏற்றுக் கொண்டவர் வேத, வேதாந்தக் கருத்துக்களைக் கற்றுத் தந்து தீக்ஷை அளித்து ’ஞானானந்தர்’ என்ற நாமம் சூட்டி மடாதிபதியாக நியமித்தார்.
இமயமலைக்குச் சென்று பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்தார். அற்புத சித்துக்கள் கைவரப்பெற்றார்.
மூப்பையும், பிணியையும் அகற்றி நீண்ட காலம் வாழ வல்ல காய கல்ப மூலிகையை அம்முனிவர்களின் ஆசியோடு பெற்றுக் கொண்டார். பின்
இலங்கை உட்பட பல இடங்களுக்கும் சென்று இறுதியில் தமிழகம் வந்தடைந்தார்.
தமிழகத்தில் சேலம், கொல்லி மலை, போளூரில் உள்ள சம்பத் கிரி மலை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தங்கி தவம் செய்தார். பின் திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலையில் அமைந்திருந்த தபோவனத்தை தமது வாழ்விடமாகக் கொண்டார்.
ஞான ஒளியுடன் ஞானானந்தர்
எப்பொழுதும் சிரித்த முகம். எளிமையான காவி உடை. கருணை பொங்கும் கண்கள். அனைவரையும் அரவணைக்கும் தாய் உள்ளம் – என ஸ்ரீ சுவாமிகள் அன்பின் மறு உருவாய் இருந்தார்

தம்மை நாடி வருவோரின் மன இருளை நீக்கி அவர்களின் உள்ளத்தில் ஆன்ம ஜோதியை ஏற்றி வைத்தார்.வந்திருப்பவர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவர்களுக்கு நல்வழி காட்டினார்.
கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான் என சுவாமிகள் வலியுறுத்தினார். அகண்ட நாம பஜனை ஒருவனை ஆண்டவனிடம் கொண்டு சேர்க்கும் என்பதும், நான், எனது என்ற அபிலாஷைகளை விடுத்து ஒருவன் தன் கடமைகளைச் செய்யும் போது அதுவே யோகமும், தியானமும், தவமும் ஆகிறது என்பது சுவாமிகளின் அருள் வாக்காகும்.

சுவாமிகளிடம் பல்வேறு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இருந்தது.
ஆனால் அவற்றை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவை
ஆன்ம முன்னேற்றத்தின் படிநிலைகளில் ஒன்று என்பதே அவரது கருத்தாகும்.
ஆயினும் சமயங்களில் தம்மை நாடி வந்த் சிலருக்கு அவர்கள் எதிர்காலம் குறித்து, வேலை, தொழில், திருமணம், குழந்தைகள் குறித்து, பின்னால் நடப்பதை முன்னரே தனது ஞான திருஷ்டியால் கணித்து சுவாமிகள் கூறியிருக்கிறார்.
சுவாமிகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது.
அவருக்கு பல முறை பற்கள் முளைத்துக் கீழே விழுந்தது என்றும்,
ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சி அளித்திருக்கிறார் என்றும்
அவரது வரலாறு தெரிவிக்கிறது.
ஞானாந்த சுவாமிகளின் தபோவனம்! அனைவருக்கும் முறம் சோறு, படிக் குழம்பு விருந்து செய்த மகான்...ஆனால் அவற்றை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவை
ஆன்ம முன்னேற்றத்தின் படிநிலைகளில் ஒன்று என்பதே அவரது கருத்தாகும்.
ஆயினும் சமயங்களில் தம்மை நாடி வந்த் சிலருக்கு அவர்கள் எதிர்காலம் குறித்து, வேலை, தொழில், திருமணம், குழந்தைகள் குறித்து, பின்னால் நடப்பதை முன்னரே தனது ஞான திருஷ்டியால் கணித்து சுவாமிகள் கூறியிருக்கிறார்.
சுவாமிகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது.
அவருக்கு பல முறை பற்கள் முளைத்துக் கீழே விழுந்தது என்றும்,
ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சி அளித்திருக்கிறார் என்றும்
அவரது வரலாறு தெரிவிக்கிறது.
. திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனத்தில் அவரது சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இன்றளவும் ஆன்ம ஞானம் தேடி வருவோர்க்கு அமுதூட்டும் அருள் ஆலயமாய் விளங்கி வருகிறது.
OM TAT SAT OM TAT SAT OM TAT SAT
மகாராஷ்டிராவிலுள்ள பண்டரிபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இங்கு ரகுமாயீ சமேத பாண்டுரங்கனை தரிசிக்கலாம்.
ஞானானந்த சுவாமிகளின் சீடர் ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில், நாமாநந்த கிரி சுவாமிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
யந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள் அனைத்தும் இங்கு இருப்பது விசேஷம்.
பாண்டுரங்கன் சுமார் 12 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால்
மிக அழகாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயிலில் யந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும், ஸ்ரீசக்ரத்தின் அதி தேவதைகள் "மஹாசோடஷி' என்ற திருநாமத்தில் ஒரே வடிவில் அருள்பாலிக்கின்றனர்.
யந்திர வழிபாடான ஸ்ரீசக்ரத்திற்கு "மகா மேரு' அமைப்பை ஏற்படுத்தி பூஜை செய்வது மாபெரும் பலன் தரக்கூடியது.
இந்த மகா மேரு தான் மகா சோடஷியாக இத்தலத்தில் விளங்குகிறது.
ஸ்ரீ சக்ரத்தில் எத்தனை பிரிவு உள்ளதோ அத்தனை பிரிவிற்கும் உள்ள தெய்வங்களான "மகாசோடஷி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, லட்சுமி, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசுவரன், விநாயகர், பாலா, அன்னபூரணி, அச்வாரூடா, ராஜமாதங்கி, வராஹி, பிரத்யங்கிரா, சரபேஸ்வரர், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், அகோரமூர்த்தி, வனதுர்க்கை, பராசரஸ்வதி, மேதாதட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிமகாலட்சுமி, பிராஹ்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, மாகேந்திரி, சாமுண்டா,மகாலட்சுமி ஆகியோர் இத்தலத்தில் விக்ரக வடிவில் இருப்பது மிகவும் விசேஷம்..
கோயிலின் பின்பக்கம் ஞானானந்த சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது..
தல விருக்ஷம் தமால மரம்..
வட மாநிலங்களிலேயே காணப்படும் இந்த விருக்ஷம் அதிசயமாக தென்னாட்டில் இந்தத் தலத்தில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு..
கிருஷ்ணன் இம்மரத்தின் கீழ் நின்று புல்லாங்குழல் வாசிப்பான் எனவும், கோபிகைகள் மட்டுமின்றி ராதையும் அதைக் கேட்டு மயங்கியதாகவும் புராணங்கள் கூறுகின்றன்..
மதுரையை ஆண்ட மலயத்வஜ பாண்டியன் தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று யாகம் செய்தபோது தேர்ந்தெடுத்த இடம் இந்தத் தென்னாங்கூர் தான்.
இங்கே தான் யாகம் செய்கையில் யாக குண்டத்திலிருந்து மீனாக்ஷி தோன்றியதாகவும், அவளை அழைத்துக்கொண்டு மன்னன் மதுரை சென்றதாகவும் புராணங்கள் கூறுவதாய்த் தெரிய வருகிறது.
சப்தரிஷிகளின் மூலம் மீனாக்ஷி அவதரித்த இந்த இடத்தைக் காஞ்சி மகாமுனிவர் "மீனாக்ஷி தோன்றிய இடம்" என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கிறார்.
ஜெய் கணேஷ ஜெய் கணேஷ ஜெய் கணேஷ பாஹிமாம்,
ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ரக்ஷமாம்!!!
ஞானானந்த சுவாமிகள்
ஞானப்பேரொளியை கண்டு களித்து பின் மீண்டும் வருகிறேன். vgk
ReplyDeleteமுதல் படத்தில் ஞான தீபங்களும், இரண்டாவது படத்தில் ஞானப்பேரொளியும் பிரகாசிக்கின்றன.
ReplyDeleteதபோவன ஞான வேணுகோபாலன் சந்தனக்காப்பில், மனம் குளிர்ந்து போகுதே!
மனதிற்கு நிறைவைத் தரும் தபோவனம்.
ReplyDeleteநிறைவான பகிர்விற்கு நன்றி
சந்தன காப்பில் வேணு கோபாலன் மனதில் நிறைந்து நிற்கிறான்.நன்றி
ReplyDeleteதபோவன ஞானாம்பிகை ஜொலிக்கிறாளே!
ReplyDeleteபுல்லாங்குழல் பிடித்த கண்ணன் அடடா என்ன ஒரு அழகு!! )))))
ஞானானந்த ஸ்வாமிகள் பற்றிய செய்திகள் யாவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
அகண்ட நாம பஜனை பற்றி ஸ்வாமிகள் சொன்ன கருத்துக்கள் மிகச்சிறந்ததே! கடவுளை அடைய அதுவே shortest & easiest route என்பது புரிகிறது.
பாண்டுரங்கனைப்பற்றி பல கதைகள் கேட்டுள்ளேன். படித்துள்ளேன். நேரில் பண்டரிபுரமும் சென்றுள்ளேன்.
ReplyDelete“ரெங்கம்மா.... மாயீ ரெங்கம்மா”
என்ற பாடல் ஸ்ரீ விட்டல்தாஸ் ஜய கிருஷ்ண தீக்ஷிதர் பாடிக்கேட்டுள்ளீர்களா? ரொம்ப நல்லா இருக்கும். அந்த ஞாபகம் வந்தது.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதபோவன ஞானாம்பிகை ஜொலிக்கிறாளே!
புல்லாங்குழல் பிடித்த கண்ணன் அடடா என்ன ஒரு அழகு!! )))))
ஞானானந்த ஸ்வாமிகள் பற்றிய செய்திகள் யாவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
அகண்ட நாம பஜனை பற்றி ஸ்வாமிகள் சொன்ன கருத்துக்கள் மிகச்சிறந்ததே! கடவுளை அடைய அதுவே shortest & easiest route என்பது புரிகிறது/
அருமையான கருத்துரைகள் வழ்ங்கி பதிவை ஒளிவீசிப் பிரகாசிக்கச் செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..
raji said...
ReplyDeleteமனதிற்கு நிறைவைத் தரும் தபோவனம்.
நிறைவான பகிர்விற்கு நன்றி/
நிறைவான கருத்துரைகள் வழ்ங்கி சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete“ரெங்கம்மா.... மாயீ ரெங்கம்மா”
என்ற பாடல் ஸ்ரீ விட்டல்தாஸ் ஜய கிருஷ்ண தீக்ஷிதர் பாடிக்கேட்டுள்ளீர்களா? ரொம்ப நல்லா இருக்கும். அந்த ஞாபகம் வந்தது./
ஆம். அருமையான பாடல்..
நினைவு படுத்தியதற்கு நன்றிகள் ஐயா..
தென்னாங்கூர் பற்றிய அரிய நல்ல செய்திகளை சப்தரிஷிகள் மூலம் “மீனாக்ஷி அவதரித்த இடம்” என்று மஹாஸ்வாமிகள் சொல்லியுள்ளார்கள் என்பது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது; ))))
ReplyDeleteஜெய் கணேஷ் என்ற பெயரிலுள்ள நம் தொந்திப்பிள்ளையார் அருமை; ))))
மண்குட விநாயகர் எவ்வளவு சிரத்தையாக வடிவமைத்துள்ளார்கள்! ஆச்சர்யமாக உள்ளது. எப்படித்தான் இந்தப்படங்களையெல்லாம் வலைவீசுப் பிடித்து விடுகிறீர்களோ!!)))))
கடைசியில் நம் ஆஞ்சநேயரையும் கொண்டு வந்து அழகாகவே முடித்து விட்டீர்களே!!!!
தெய்வாம்சம் பொருந்திய தெய்வீகப் பதிவருக்கு வாழ்த்துக்கள், நன்றிகள், பாராட்டுக்கள்.
பிரியமுள்ள vgk
நல்ல பதிவு.
ReplyDeleteநல்ல பணி.
வாழ்த்துகள்.
தரிசனம்
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு அருமை நன்றி மேடம்!
ReplyDeleteஞானானந்தர் பற்றிய தகவலும், பாண்டுரங்கன் கோவில் பற்றிய தகவல்களும் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteபடங்கள் மிக அழகாக உள்ளன.
சொம்புகளாலேயே கணபதி,சந்தான கோபாலன் எல்லாம் சிறப்பாக இருக்கு.
நன்றி மேடம் பகிர்வுக்கு.
ஞானானந்தர் பற்றிய தகவலும், பாண்டுரங்கன் கோவில் பற்றிய தகவல்களும் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteபடங்கள் மிக அழகாக உள்ளன.
சொம்புகளாலேயே கணபதி,சந்தான கோபாலன் எல்லாம் சிறப்பாக இருக்கு.
நன்றி மேடம் பகிர்வுக்கு.
சந்தனக்காப்பு மற்றும் மண்குட விநாயகர் படங்கள் இன்றைய ஹைலைட்..
ReplyDeleteபடங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி
ReplyDeleteஞானானந்த சுவாமிகள் என்ற ஞானியைப் பற்றி இதுநாள்வரை அறியாத முட்டாள் சிறுவனாக இருந்த நான் இன்று விரிவாகத் தெரிந்து கொண்டேன். வேணுகோபாலனின் படத்தில் மெய்மறந்தேன். தொடரும் உங்கள் சேவைக்கு நன்றி நவில்கிறேன்...
ReplyDeleteஞானப்பேரொளி ஆட்கொண்டது சகோதரி...
ReplyDeleteஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது....
ReplyDeleteஞான பேரொளி கண்டேன் சிறப்பான இடுகை பாராட்டுகள் சிறந்த படங்கள் கண்ணைக் கவரும் எழில் மயக்கும் காட்சியமைப்பு .
ReplyDeleteஒரு ஆன்மீக மகானின் தரிசம் மனதுக்கு நிறைவாக அமைந்தது... சகோ...
ReplyDeleteஞானானந்தர் ஜீவித காலத்தில் அவரை என்னால் தரிசிக்க முடியவில்லை. பின்பு இரு நண்பர்களுடன் தபோவனம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இரவு அங்கே போய்ச் சேர்ந்தோம். உணவருந்தும் ஹாலில் எங்களைத் தங்க வைத்தார்கள். மறுநாள் 4 மணிக்கு எழுந்து அதிஷ்டானத்தை 108 முறை வலம் வரும் உத்தேசம் எங்களுக்கு. ‘மறக்காம எழுப்பி விடு’ என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு கண்ணயர்ந்தோம். முதல் நாள் திருவண்ணாமலை கிரிவலம் வந்ததின் அலுப்பு. நன்றாகத் தூங்கி விட்டோம். விடியலில் ஒரு கனவு. ஸ்வாமி அவரது அறையிலிருந்து வெளியே வந்து எங்களின் அருகே நடந்து என் தலைப் பகுதி அருகில் நின்று ‘எழுந்திருக்கலாமே’ என்று சொலவது போல. கண் விழிக்கவும் ஹால் கடிகாரம் 4 முறை மணி அடிக்கவும் மிகச் சரியாக இருந்தது. ஞானானந்தர் இருந்தபோது அப்படித்தான் எழுப்புவாராம். அப்புறம் ஒருவர் சொன்னார். உங்கள் பதிவு பழைய நினைவுகளைத் தட்டி எழுப்பியது.
ReplyDeleteதபோவனத்துக்கு மீண்டும் சென்றது போன்ற உணர்வைப் பெற்றேன்.
ReplyDeleteஒரு முறை செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினைத் தூண்டியது உங்கள் பகிர்வு.....
ReplyDeleteI felt very happy seeing the post.
ReplyDeleteOur Gurumami UMA was grown up in direct control of Swamikal.
Her voice is such a divine.
We are proud that she is our guru in learning songs written by swamikal.
We along with mami went to Thobovanam several times. UMA mamies mother stayed there itself and spent her last days in Dabovanam.
I felt very happy reading and seeing this article. Thanks Rajeswari for posting.
viji
நன்றி..
ReplyDeleteஅப்படியே கொஞ்சம் நம்ம கடைக்கும் வாங்க
http://mydreamonhome.blogspot.com
viji said...//
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப்பின் தங்களைத் தரிசித்தது
மிகுந்த மகிழ்ச்சி..
சுவாமிகளை நானும் சிறுவயதில் தரிசித்திருக்கிறேன்..
தபோவனம் சென்று தங்கியிருக்கிறேன்..
அம்மாவழி அப்பாவழி இரு தாத்தாக்களும் மிகவும் ஈடுபாட்டோடு எங்கள் ஊரில் இருக்கும் ஞானானந்தகிரி மடத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள்.....
என் சிறிய தாத்தா அந்த மடத்தில் விநாயகர் கோவில் அர்ச்சகராக இருந்தார்...
ஆன்மீக மனம் கமழும் அருமையான பகிர்வுக்கு நன்றி ...
ReplyDelete1387+6+1=1394 ;)
ReplyDeleteஇரண்டு பதில்களில் இரட்டிப்பு மகிழ்ச்சியே. நன்றிகள்.
இன்று மீண்டும் ஒருமுறை நிறுத்தி நிதானமாக படிக்க வாய்ப்புத் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி + நன்றிகள்.
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2013/12/89.html மூலம் இங்கு மீண்டும் வந்தேன்.
என்னிடம் இந்தப்பதிவினில் சந்தேகம் கேட்டுள்ளவர்களுக்கும் மெயில் மூலம் இந்த இணைப்பினை அனுப்பியுள்ளேன்.
நன்றியுடன் VGK