“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.’
ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராகவும் விளங்குபவரும்;
அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி,
அனைத்து பயங்களைப் போக்குபவரும்;
எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்;
மூன்று உலகங் களுக்குத் தலைவராக விளங்குபவரும்;
அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்குபவருமான
ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான
ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.
அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி,
அனைத்து பயங்களைப் போக்குபவரும்;
எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்;
மூன்று உலகங் களுக்குத் தலைவராக விளங்குபவரும்;
அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்குபவருமான
ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான
ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.
ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்ச திரயோதசி, ஹஸ்த நட்சத்திரம் தன்வந்திரியின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது.
திருமால் தன்வந்திரி என்னும் மருத்துவராக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக “தன்திரேயாஸ்’ என்று வட மாநில மக்கள் அனுஷ் டிக்கின்றனர்.
திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக
தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது.
தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது.
நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும்
நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு சிறப்பானது..!
நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு சிறப்பானது..!
அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரும் திரயோதசி நாளன்றே தீபாவளித் திருவிழா துவங்கிவிடுகிறது. இந்நாளில் 13 வெள்ளி அல்லது தங்கக் காசுகள் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது வடமாநில மக்களின் நம்பிக்கை.
இதே தன்திரேயாஸ் நாள் எமனுக்குரிய நாளாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, அன்றிரவு யமதீயா என்ற யம தீபம் ஏற்றப்படுகிறது.
தன்வந்திரி ஜெயந்தியன்று கோதுமை மாவும் வெல்லமும் சேர்த்து தயாரித்த அவலேகம் (அல்வா) முக்கிய நைவேத்தியமாகப் படைக்கப்படுவது வழக்கம். தீபாவளி லேகியம் தயாரிக்கும் வழக்கமும் தன்வந்திரி வழிபாட்டிலிருந்தே தொடங்கியதாம்..!
ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்து இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகி றது.
ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் அமிர்த கலசத்தை ஏந்திய வாறும் காட்டப்படுவது வழக்கம். அல்லது முன் இடக்கையில் அமிர்த கலசமும், வலக்கை யில் அட்டைப் பூச்சியை ஏந்தியும் தன்வந்திரி காட்சி அளிப்பதும் உண்டு. அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது.
முக்கியமான வைணவ ஆலயங்களில் தன்வந்திரிக்கென்று தனிச் சந்நிதி இருப்பதைக் காணலாம்.
திருவரங்கம் ஆலய தன்வந்திரி சந்நிதி பிரசித்தமானது.
இங்கே தன்வந்திரி ஹோமம் அருமையாகச்செய்து நோய் நீங்க பிரார்த்தனை செய்வது மிகவும் விஷேஷம்..!
வேலூர் அருகேயுள்ள வாலாஜாபேட்டை யில் தன்வந்திரிக்கென்று தனி ஆலயமே அமைந் துள்ளது. அனைத்து நோய்களுக்கும் நிவாரணமளிக்கும் ஹோமங்களும் இங்கு சிறப்பாகச் செய்யப்படுகின்றன.
கோவையில் தன்வந்திரி ஆலயம் உள்ளது.
ஆயுர்வேத மருத்துவ முறை மிகப் பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் கேரள மாநிலத்தில் தன்வந்திரி பகவானுக்கு பல ஆலயங்கள் உள்ளன.
ஆலப்புழை மாவட்டம், சேர்த்தலா வட்டத் திலுள்ள- மருதோர் வட்டம் ஸ்ரீ தன்வந்திரி ஆலயம் மிகப் பெரியதும் பிரபலமானதும் ஆகும்.
சேர்த்தலாவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
600 ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளூடு மூஸ் என்ற ஆயுர்வேத வைத்தியர் இப்பகுதியில் பிரபலமான அஷ்ட வைத்தியர்களில் ஒருவரா கத் திகழ்ந்தவர்.
நோயாளிகள் அவரிடம் வந்து ஒரு வட்டம் (ஒரு முறை) மருந்து அருந்தினாலே நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
அவரால் பூஜிக்கப்பட்ட தன்வந்திரி விக்கிரகமே இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கே வட்டவடிவமான கருவறையில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் தன்வந்திரி. அவருக்கு எதிரே கருடன் சந்நிதியும், திருச்சுற்றில் பகவதி, கணபதி, சாஸ்தா, சிவன் சந்நிதிகளும் உள்ளன. இங்குள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட கொடிமரம் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டது
இந்த ஆலயத்தில் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பாக தினமும் மோர்க்குழம்பும் கீரைக் கூட்டும் நிவேதனம் செய்யப்படுகின்றன. இதை பக்தர்கள் சாப்பிட்டால் தீராத வயிற்று வலி தீருமென்று நம்புகின்றனர்.
வல்லாரை இலை, மாந்தளிர், புளியாரை இலை, நல்ல மிளகு, மல்லி, சீரகம், சுக்கு, ஓமம் போன்ற மருந்துச் சரக்குகளைச் சேர்த்து தயிரில் கலக்கி மோர்க்குழம்பும்; உப்பு, புளி, மிளகு மற்றும் கொத்தமல்லி விதை சேர்த்து தயாரித்த கீரைக் கறியும் பிரசாதமாகத் தயாரிக்கப்படுகின்றன.
வைக்கம் மகாதேவருக்கும் இதுவே பிரசாதமாகும்.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
பதிவு அருமை படங்களும் கண்னைக்கவரும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எல்லாரும் - நோய் நொடியில்லாமல் - நல் வாழ்வு வாழ தன்வந்த்ரி பகவானை வேண்டிக் கொள்வோம்!.. வாழ்க.. வளமுடன்!..
ReplyDeleteஎல்லாரும் - நோய் நொடியில்லாமல் - நல் வாழ்வு வாழ தன்வந்த்ரி பகவானை வேண்டிக் கொள்வோம்!.. வாழ்க.. வளமுடன்!..
ReplyDeleteசிறப்பான தகவல்கள் + படங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஸ்ரீ தன்வந்தரியின் தரிசனம் சுபம். அனைவருக்கும் ஆரோக்கியத்தை அருளட்டும்.
ReplyDeleteஅழகான படங்கள் நல்ல பதிவு. வாழ்த்துகள். நன்றி அம்மா.
தன்வந்தரியின் தரிசனத்திற்க்கு மிக்க நன்றிம்மா!!
ReplyDeleteமிக மிகச் சிறப்பான தகவல்கள்! அழகான படங்களும்...
ReplyDeleteமுன்பு நானும் தன்வந்திரி பற்றி அறிந்திருக்கவில்லை..
தற்போது 12 வருடங்களாக போற்றி வணங்கும் என் இஷ்ட தெயங்வங்களுள் இவரும் உள்ளார்!...
நல்ல பகிர்வு! மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
ஆரோக்கியம் தரும் தன்வந்திரியின் தரிசனம்,தகவல்களை மேலும் தங்கள் பதிவினால் அறிந்துகொண்டேன்.முதலாவது மந்திரம் நான் தினமும் பாராயணம் செய்கிறேன்.படங்களுடன் சிறப்பான தகவல்கள்.நன்றி
ReplyDelete’ஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்தரி ஜயந்தி’ என்ற தலைப்பில் தாங்கள் எழுதியுள்ள அருமையான பதிவினைப் பார்க்கும் / படிக்கும் பாக்யம் பெற்றேன்.
ReplyDeleteஆஹா!! எவ்வளவு படங்கள்!!!!!
எவ்வளவு விஷயங்கள்!!!!!
பிரமித்துப்போனேன்.
>>>>>
திருமாலின் 24 அவதாரங்களில் இது 17வது அவதாரமா?
ReplyDeleteநல்லதொரு தகவல்.
பக்க விளைவுகள் ஏதும் இல்லாத தீங்கற்ற ஆயுர்வேத சிகித்சை முறைகளை அமிர்த கலசமாகக் கொடுத்தருளியுள்ள பகவான் அல்லவா ஸ்ரீதன்வந்தரி!
நல்லது.
>>>>>
ஸ்ரீரங்கத்தில் இந்த தன்வந்தரி சந்நதியை தரிஸித்துள்ளேன்.
ReplyDeleteஎன் சின்ன அண்ணா ஆயுர்வேத சிகித்சைகள் அளிக்கும் மருத்துவராக ஆரம்ப நாட்களில் இருந்ததால் என் இல்லத்தில் அந்த நாட்களில் பல்வேறு கஷாயங்கள் + சூர்ணங்கள் கைமுறையில் தயாரிக்கப்பட்டன. வீட்டில் எப்போதுமே ஒருவித இயற்கை மருந்து வாடை வீசும். அப்போது எனக்கு 10-15 வயதுகள் மட்டுமே.
>>>>>
என் வீட்டிலேயே மிகப்பெரிய அழகான தந்வந்தரி பகவானின் படம் உள்ளது. பாற்கடலில் இருந்து கையில் அமிர்த கலசத்துடன் எழுந்தருளும் படம். ’கொண்டையாராஜ்’ என்பவரால் வெகு அழகாக நேர்த்தியாக வரையப்பட்டது.
ReplyDelete50 ஆண்டுகள் ஆகியும் இன்றும் பத்திரமாகவும் புதுப்பொலிவுடனும் அப்படியே பூஜை அறையில் உள்ளது.
>>>>>
தன்வந்தரி கோயில்கள் அமைந்துள்ள இடங்கள், ஸ்லோகங்கள், அவரை வணங்குவதால் ஏற்படும் சுகங்கள், அவருக்குப் படைக்கும் நைவேத்ய அல்வா முதலிய அனைத்து விஷயங்களையும், தெள்ளத்தெளிவாக தங்களுக்கே உரித்தான தனி அழகுடன் சொல்லியுள்ளது, அல்வா போல இனிப்பாகவும், மிருதுவாகவும், சுலபமாக ருசிக்கக்கூடியதாகவும், மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ReplyDeleteபதிவைப் பார்த்தாலே, படித்தாலே ஆரோக்யம் ஏற்படும் போல ஓர் புத்தணர்வு ஏற்படுகிறது.
இதுதான் தங்கள் பதிவுகளின் தனித்தன்மை.
ஸ்பெஷல் பாராட்டுக்கள் ;)))))
>>>>>
மனதுக்கும் தேகத்திற்கும் ஆரோக்யம் தரும் அழகான பதிவு தந்துள்ளதற்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
ReplyDeleteஅன்பான இனிய பாராட்டுக்கள்.
மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
நீடூழி வாழ்க !
-oOo-
திருமாலுக்கு 24 அவதாரங்களா ?
ReplyDeleteநிறைய அரிய தகவல்களுடன் சிறப்பாக
வந்துள்ளது பதிவு.
வாங்க ஸ்ரவாணி ..
Deleteதங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றிகள்..
அபூர்வ அவதாரங்கள்
http://jaghamani.blogspot.com/2012/12/blog-post_4.html
பதிவில் 24 அவதாரங்களும் விவரிக்கப்பட்டுள்ளன,..
பார்த்து கருத்துகளை தெரிவியுங்கள்.. நன்றிகள்..!
தன்வந்திரி ஜெயந்தி பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். திருமால் அவதாரம் பத்து என்றுதான் அறிந்துள்ளேன். அது என்ன கணக்கு 24 அவதாரங்கள்.? கொஞ்சம் விளக்கவும்.
ReplyDeleteஸ்ரீரங்கம் தன்வந்திரி சந்நிதி தரிசித்து இருக்கிறேன்.
தன்வந்திரி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
வணக்கம் அம்மா
ReplyDeleteநல்ல தகவல்களையும் நல்லதொரு தரிசனத்தையும் பகிர்ந்துள்ளீர்கள்.
//நோய்கள் வராமல் இருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு சிறந்தது// அனைவரும் தன்வந்திரியை வணங்குவோம் அம்மா. பகிர்வுக்கு நன்றி.
மருத்துவர்கள் தங்களின் வழிகாட்டும் கடவுளாக தன்வந்திரியை கருதுகிறார்கள். ஸ்ரீரங்கத்தில் தரிசித்திருக்கிறேன். தங்களுடைய கட்டுரையும் படங்களும் இறைவனையே நேரில் கண்ட அனுபவத்தை எங்களுக்கு உணர்த்துகின்றன. உங்கள் இறைத்தொண்டு வாழ்க! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
ReplyDeleteதன்வந்திரி பகவானுக்கு தினமும் மோர்க்குழம்பும் கீரைக்கூட்டும் நிவேதனம் செய்வது போன்ற பல அரிய தகவல்களுடன் வழக்கம் போல் விதவிதமான படங்களுடன் சிறப்பாக அமைந்துள்ளது இப்பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதன்வந்திரி பகவான் எல்லோருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தை தரட்டும்.
ReplyDeleteஎல்லா ஊரிகளில் உள்ள தனவந்திரி பகவனைபற்றிய அருமையான செய்திகளை தந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
படங்களுடன் பகிர்வு அருமை.
ReplyDeleteதன்வந்திரி ஜெயந்தி பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி அம்மா.
தாங்கள் குறிப்பிட்ட அபூர்வ அவதாரங்கள் என்ற தங்களின் http://jaghamani.blogspot.com/2012/12/blog-post_4.html பதிவினைப் போய்ப் பார்த்தேன், படித்தேன். ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்ட 24 அவதாரங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
ReplyDelete1 சனகன் 2 சனந்தன் 3 சனத் குமாரன் 4 சனத் சுஜாத 5 வராக அவதாரம் 6, நர நாராயணர் அவதாரம் 7 கபில அவதாரம் 8 தத்தாரேயர் அவதாரம் 9 யக்ஞ அவதாரம் 10 ரிஷபதேவ அவதாரம் 11 பிருது அவதாரம் 12 மச்ச அவதாரம் 13 கூர்ம அவதாரம் 14 தன்வந்திரி அவதாரம் 15 மோகினி அவதாரம் 16 நரசிம்ம அவதாரம் 17 வாமன அவதாரம் 18 பரசுராம அவதாரம் 19 வியாச அவதாரம் 20 இராம அவதாரம் 21 பலராம அவதாரம்
22 கிருஷ்ண அவதாரம் 23 புத்தர் அவதாரம் 24 கல்கி அவதாரம்
அவதாரம் என்றாலே அழிப்பது என்ற பொருளில்தான் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் திருமால் பெருமை பேசும் அவதாரங்கள் பத்து என்பதே சரி. மற்றவை திருமாலின் வெவேறு அம்சங்கள். நவ நாராயணர்கள் அவதாரம் என்பது ஒருவரா இருவரா என்று பார்க்க வேண்டும். இருவர் என்றால் ஒரு அவதாரம் எண்ணிக்கையில் அதிகமாகும்.
கடுமையான உழைப்பு உங்களுடையது. விரிவான விளக்கமான தங்களது பதிவிற்கு நன்றி.
தாங்கள் குறிப்பிட்ட அபூர்வ அவதாரங்கள் என்ற தங்களின் http://jaghamani.blogspot.com/2012/12/blog-post_4.html பதிவினைப் போய்ப் பார்த்தேன், படித்தேன். ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்ட 24 அவதாரங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
ReplyDelete1 சனகன் 2 சனந்தன் 3 சனத் குமாரன் 4 சனத் சுஜாத 5 வராக அவதாரம் 6, நர நாராயணர் அவதாரம் 7 கபில அவதாரம் 8 தத்தாரேயர் அவதாரம் 9 யக்ஞ அவதாரம் 10 ரிஷபதேவ அவதாரம் 11 பிருது அவதாரம் 12 மச்ச அவதாரம் 13 கூர்ம அவதாரம் 14 தன்வந்திரி அவதாரம் 15 மோகினி அவதாரம் 16 நரசிம்ம அவதாரம் 17 வாமன அவதாரம் 18 பரசுராம அவதாரம் 19 வியாச அவதாரம் 20 இராம அவதாரம் 21 பலராம அவதாரம்
22 கிருஷ்ண அவதாரம் 23 புத்தர் அவதாரம் 24 கல்கி அவதாரம்
அவதாரம் என்றாலே அழிப்பது என்ற பொருளில்தான் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் திருமால் பெருமை பேசும் அவதாரங்கள் பத்து என்பதே சரி. மற்றவை திருமாலின் வெவேறு அம்சங்கள். நவ நாராயணர்கள் அவதாரம் என்பது ஒருவரா இருவரா என்று பார்க்க வேண்டும். இருவர் என்றால் ஒரு அவதாரம் எண்ணிக்கையில் அதிகமாகும்.
கடுமையான உழைப்பு உங்களுடையது. விரிவான விளக்கமான தங்களது பதிவிற்கு நன்றி.
Very nice post. viji
ReplyDeleteexcellent post
ReplyDeleteGood effort
ReplyDelete