கொடுத்துவைத்தவர்கள் பதிவர் சந்திப்பு நிகழ்த்தி பதிவுகளும், காணொளிகளும், படங்களும் போட்டு கொண்டாடிக் களிப்பூட்டி அசத்துகிறர்கள்.
நிறைய குடும்பப் பொறுப்புகளில் கலந்துகொள்ளமுடியாதவர்களின் திருப்திக்கு ஒரு யோசனை..
பெரிதினும் பெரிது கேட்பதுதானே நல்லது.
அஸ்து தேவதை ததாஸ்து சொல்லி நடத்தி கொடுக்குமே !
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதையாக இருக்கிறதே... என்கிறீர்களா?
இரண்டுக்குமே ஆசைப்படலாம்! "அமெட் மெஜஸ்டி' கப்பலில் பயணிப்பதற்கு முடிவெடுத்தால்!
கப்பல் பயணம் செய்யும் அனுபவத்துக்கு வெளி மாநிலங்களுக்கு எங்கும் செல்ல வேண்டாம். சிங்காரச் சென்னையிலேயே அதற்கான வழியை உண்டாக்கியிருக்கின்றனர் அமெட் மெஜஸ்டி கப்பல் நிறுவனத்தினர்.
இனி கப்பல் பயணம் எங்கே, எப்படி, போன்ற கேள்விகளுக்கான பதில்கள்...
உல்லாசக் கப்பலில் முன்பதிவு செய்பவர்கள் குறிப்பிட்ட நாள்களில் சென்னை துறைமுகம் 7-வது நுழைவாயிலில் உள்ள "அமெட் மெஜஸ்டி' கப்பல் அலுவலகத்துக்கு, பயண நேரத்திற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு வரவேண்டும். அங்கு சுங்க அதிகாரிகளின் சில சட்ட சோதனைக்குப் பிறகு கப்பல் பயணத்துக்குச் செல்லலாம்.
என்னென்ன வசதிகள்?
9 அடுக்குகள் கொண்ட இந்த உல்லாசக் கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. கடலின் அழகை ரசித்துக் கொண்டே சாப்பிட வசதியாக உணவு விடுதி (சைவம், அசைவம்), நடுக்கடலில் வானின் அழகை ரசித்துக் கொண்டே குளியலாட வசதியாக நீச்சல் குளம், கண்கவர் நடன நிகழ்ச்சிகள், சிறார்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், கருத்தரங்கு கூடங்கள், அழகு நிலையங்கள், தங்குவதற்கான தனித்தனி அறைகள் என ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக பல்வேறு வசதிகள் இந்தக் கப்பலில் செய்துதரப்பட்டுள்ளன.
நடுக்கடலில் டும்... டும்...டும்!
ஏதாவது புதுமையை செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இப்போது அதிகரித்து வருகிறது. அம்மி மிதித்து... அருந்ததி பார்த்து... திருமணங்களை நடத்திய நம் நாட்டில், அதிலும் பல புதுமைகளை நிகழ்த்திட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாழ்நாளில் எப்படி ஒரு முறை பிறக்கிறோமோ, அதேபோல திருமணங்களும் மனிதனின் வாழ்க்கையில் ஒருமுறைதான் வருகிறது, அதில் புதுமைகளைப் புகுத்தத் தயங்குவதில்லை செல்வந்தர்கள். இந்தப் புதுமை விரும்பிகளுக்காக அமெட் உல்லாசக் கப்பல் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
திருமணத்துக்காக கப்பலை முன்பதிவு செய்துவிட்டால் அன்றைய தினம் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் தவிர, மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. 500 இருக்கைகள் கொண்ட திருமண அரங்கம் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவுக்கு போட்டி...
ஆழமான நீலக்கடலின் நடுவினில் அலைகளின் தாலாட்டில், அன்புக்குரியவர்களின் வாழ்த்துகளோடு திருமணங்களை நடத்துவது ஒன்றில் மட்டுமே திருமண வீட்டாரின் கவனம் இருக்கும் வகையில், மற்ற அனைத்து வசதிகளும் கப்பலில் கிடைக்கின்றன. அடுத்த மாதங்களில் வரும் திருமண முகூர்த்தங்களுக்கு இப்போதே ஆர்வத்துடன் பலர் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
சலுகைகளும் உண்டு...
இந்தக் கப்பலில் உல்லாசப் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ. 6,000 முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடுத்தர மக்களும் உல்லாசக் கப்பலில் சென்று கடலின் அழகை ரசிக்கும் வகையில் தம்பதி சிறப்பு சலுகை கட்டணம் ரூ. 6,901 (கணவர் ரூ. 4,999 + மனைவி ரூ. 1,902) என்று அமெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தக் கட்டணத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் கப்பல் இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குப் புறப்படும் கப்பல் கடல் தூரத்தில் 50 மைல் தூரம் சென்று மறுநாள் காலை 11 மணிக்கு துறைமுகம் வந்து சேரும்.
இதே போல்தான் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கும்...
பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களை இந்தக் கப்பலுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்து வரலாம். ஒரு மாணவருக்கு ரூ. 250 வீதம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. கடலில் சில கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கடலின் அழகை ரசிக்கும் வாய்ப்புடன், கப்பல் எவ்வாறு இயங்குகிறது, கேப்டன், தலைமை பொறியாளர், பைலட் ஆபிஸர் ஆகியோரின் பணிகள் எவை? என்பது உள்ளிட்ட கடல்சார் தொடர்பான முக்கிய விவரங்கள் மாணவர்களுக்குக் கற்றுத்தர சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பயண நேரத்தில் மாணவர்களுக்கு சிறப்பான சிற்றுண்டி வசதிகளும் வழங்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேடம் கலக்கல் பதிவு .
ReplyDeleteகப்பல் பற்றி சுவையான பதிவு .
மெல்லிய எழ்த்து நடை உங்கள் சிறப்பு .
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி
உங்கள் பார்வைக்கு ....
பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!
மேடம் கலக்கல் பதிவு .
ReplyDeleteகப்பல் பற்றி சுவையான பதிவு .
மெல்லிய எழ்த்து நடை உங்கள் சிறப்பு .
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி
உங்கள் பார்வைக்கு ....
பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!
நிஜமாகவே இது எனக்கு புதுத் தகவல். கட்டண விவரங்களுடன் செல்கிற கடல் தொலைவுவரை மிக டீடெயிலாக பதிவிட்டிருந்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அனைவருக்கும். நன்றி.
ReplyDeleteநல்ல தகவல்.... நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும் ...
ReplyDeleteபடங்கள் அருமை ........
ReplyDelete............
படங்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteவாவ் புதிய செய்தி
ReplyDeleteஅழகான படங்களுடன்
ம் ம் கலக்குறீங்க மேடம்
படங்கள் மிக அருமை
ReplyDeleteபடங்களும், பயணங்கள், நிகழ்ச்சிகள் பற்றிய தகவல் பறிமாற்றங்களும் அருமை.
ReplyDeleteபலருக்கும் உதவக்கூடும்.
படங்களும் பதிவும் அருமை
ReplyDeleteஅரிய செய்தி அசத்தல் பதிவு
ReplyDeleteநிச்சயம் ஒருமுறை போய்ப் பார்க்கவேண்டும்
அறிமுகம் செய்தமைக்கு நன்றி
(அவர்களது தொடர்பு முகவரி
அல்லது அவர்களது வெப்சைட் முகவரி
கொடுத்தால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்குமே)
அட நம்ம சென்னையில் இந்த வசதியெல்லாம் கிடைக்குதா? கட்டணம் கூட குறைவாக தான் இருக்குது. பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை.
படங்கள் அருமையாயிருக்கு.
ReplyDeleteநிச்சயமாக இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.
ReplyDeleteபலருக்கு உதவும் தகவல். உள்ளே சென்று பார்த்த உணர்வு தருகிறது. அருமை! படங்களும் அருமை!வாழ்த்துகள் சகோதரி.
ReplyDeleteவேதா.இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
ஆஹா சூப்பர் தகவல்கள்..கப்பலில் போக ஆசையா இருக்கு
ReplyDeleteஉல்லாச கப்பல் பற்றிய தகவல்கள் அருமை. படங்கள் மிக அழகு.நடுத்தர மக்களுக்கு ஏற்ற விதமாக இருப்பதால் குடும்பத்துடன் ஒரு வார இறுதியில் செல்லாலாம்.
ReplyDeleteநல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.
அஹா.. நல்ல செய்தி...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
அடடா! சிங்காரச் சென்னையிலேயே கிட்டிடும் ’அமெட் மெஜஸ்டி’ கப்பல் பயண வசதிகள் பற்றிய அழகழகான படங்கள், அருமையான விளக்கங்கள், மிகவும் பயனுள்ளவைகளே.
ReplyDelete//நடுக்கடலில் டும்... டும்...டும்!
ReplyDeleteஏதாவது புதுமையை செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இப்போது அதிகரித்து வருகிறது.//
ஆம். எங்கும் புதுமை. எதிலும் புதுமை. பாராட்டப்பட வேண்டியவை தான்.
//அம்மி மிதித்து... அருந்ததி பார்த்து... திருமணங்களை நடத்திய நம் நாட்டில், அதிலும் பல புதுமைகளை நிகழ்த்திட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாழ்நாளில் எப்படி ஒரு முறை பிறக்கிறோமோ, அதேபோல திருமணங்களும் மனிதனின் வாழ்க்கையில் ஒருமுறைதான் வருகிறது, அதில் புதுமைகளைப் புகுத்தத் தயங்குவதில்லை செல்வந்தர்கள்.//
திரு. சாவி அவர்கள் எழுதிய வாஷிங்டனில் திருமணம் போல கேட்கவே குதூகலமாக உள்ளது.
//இந்தப் புதுமை விரும்பிகளுக்காக அமெட் உல்லாசக் கப்பல் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.//
மிகவும் உல்லாசமான ஏற்பாடு தான்.
வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்.
//திருமணத்துக்காக கப்பலை முன்பதிவு செய்துவிட்டால் அன்றைய தினம் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் தவிர, மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. 500 இருக்கைகள் கொண்ட திருமண அரங்கம் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.//
ReplyDeleteஉடனடியாக கப்பலை முன்பதிவு செய்து விடுங்கள். பதிவர்கள் அனைவரும் இப்போதே குடும்ப சஹிதம் புறப்படத்தயாராக இருக்கிறோம்.
அழைப்பிதழை ஓர் பதிவு மூலம் வெளியிட்டாலே போதும்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.
vgk
@ Ramani said...
ReplyDeleteஅரிய செய்தி அசத்தல் பதிவு
நிச்சயம் ஒருமுறை போய்ப் பார்க்கவேண்டும்
அறிமுகம் செய்தமைக்கு நன்றி
(அவர்களது தொடர்பு முகவரி
அல்லது அவர்களது வெப்சைட் முகவரி
கொடுத்தால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்குமே)/
அவர்களது வெப்சைட் முகவரி
http://ametcruises.com/
Thank you.for comments.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//திருமணத்துக்காக கப்பலை முன்பதிவு செய்துவிட்டால் அன்றைய தினம் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் தவிர, மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. 500 இருக்கைகள் கொண்ட திருமண அரங்கம் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.//
உடனடியாக கப்பலை முன்பதிவு செய்து விடுங்கள். பதிவர்கள் அனைவரும் இப்போதே குடும்ப சஹிதம் புறப்படத்தயாராக இருக்கிறோம்.
அழைப்பிதழை ஓர் பதிவு மூலம் வெளியிட்டாலே போதும்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.
vg/
எஙகள் குடும்பம் மிகமிகப் பெரியது. ஒரு கப்பலெல்லாம போதாதே!
கருத்துரைக்கு நன்றி ஐயா.
யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
ReplyDeleteமேடம் கலக்கல் பதிவு .
கப்பல் பற்றி சுவையான பதிவு .
மெல்லிய எழ்த்து நடை உங்கள் சிறப்பு .
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி//
சுவையான கருத்துரைக்கு நன்றி
கடம்பவன குயில் said...
ReplyDeleteநிஜமாகவே இது எனக்கு புதுத் தகவல். கட்டண விவரங்களுடன் செல்கிற கடல் தொலைவுவரை மிக டீடெயிலாக பதிவிட்டிருந்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அனைவருக்கும். நன்றி./
கருத்துரைக்கு நன்றி
வெங்கட் நாகராஜ் said.../
ReplyDeleteநல்ல தகவல்.... நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும் .../
கருத்துரைக்கு நன்றி
stalin said...
ReplyDeleteபடங்கள் அருமை ......../
நன்றி
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை./
கருத்துரைக்கு நன்றி
siva said...
ReplyDeleteவாவ் புதிய செய்தி
அழகான படங்களுடன்
ம் ம் கலக்குறீங்க மேடம்/
அழகான கருத்துரைக்கு நன்றி
மதுரன் said...
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை/
கருத்துரைக்கு நன்றி
M.R said...
ReplyDeleteபடங்கள் மிக அருமை/
கருத்துரைக்கு நன்றி
சத்ரியன் said...
ReplyDeleteபடங்களும், பயணங்கள், நிகழ்ச்சிகள் பற்றிய தகவல் பறிமாற்றங்களும் அருமை.
பலருக்கும் உதவக்கூடும்.//
அருமையான கருத்துரைக்கு நன்றி
காந்தி பனங்கூர் said...
ReplyDeleteஅட நம்ம சென்னையில் இந்த வசதியெல்லாம் கிடைக்குதா? கட்டணம் கூட குறைவாக தான் இருக்குது. பகிர்வுக்கு நன்றிங்க.
படங்கள் அனைத்தும் அருமை./
அருமையான கருத்துரைக்கு நன்றி
FOOD said...
ReplyDeleteகலக்கல் கப்பல் பயணம். பகிர்விற்கு நன்றி சகோ./
அருமையான கருத்துரைக்கு நன்றி
அமைதிச்சாரல் said...
ReplyDeleteபடங்கள் அருமையாயிருக்கு./
கருத்துரைக்கு நன்றி
Lakshmi said...
ReplyDeleteநிச்சயமாக இது ஒரு புது அனுபவமாக இருக்கும்./
ஆம் புதிய அனுபவம் பெற் விரும்புபவர்களுக்கு உதவும்.
கருத்துரைக்கு நன்றி
kovaikkavi said...
ReplyDeleteபலருக்கு உதவும் தகவல். உள்ளே சென்று பார்த்த உணர்வு தருகிறது. அருமை! படங்களும் அருமை!வாழ்த்துகள் சகோதரி.
வேதா.இலங்காதிலகம்.
வாழ்த்துக்களுக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி
சோதிடம்’’ சதீஷ்குமார் said...
ReplyDeleteஆஹா சூப்பர் தகவல்கள்..கப்பலில் போக ஆசையா இருக்கு/
கருத்துரைக்கும் நன்றி
RAMVI said...
ReplyDeleteஉல்லாச கப்பல் பற்றிய தகவல்கள் அருமை. படங்கள் மிக அழகு.நடுத்தர மக்களுக்கு ஏற்ற விதமாக இருப்பதால் குடும்பத்துடன் ஒரு வார இறுதியில் செல்லாலாம்.
நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி./
அருமையான கருத்துரைக்கு நன்றி
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅஹா.. நல்ல செய்தி...
பகிர்வுக்கு நன்றி../
கருத்துரைக்கு நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅடடா! சிங்காரச் சென்னையிலேயே கிட்டிடும் ’அமெட் மெஜஸ்டி’ கப்பல் பயண வசதிகள் பற்றிய அழகழகான படங்கள், அருமையான விளக்கங்கள், மிகவும் பயனுள்ளவைகளே./
அருமையான கருத்துரைக்கு நன்றி..ஐயா
கப்பல் பயணம்
ReplyDeleteசும்மா கலக்கலா இருந்துச்சு சகோதரி....
விததியாசமான, சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி
ReplyDeleteசிங்கார சென்னையிலும் இந்த வசதி வந்து விட்டதா .அடுத்த முறை புக் செய்ய வேண்டியதுதான் .வித்யாசமான புதிய தகவல் ,அருமையான பகிர்வு ,நன்றிங்க
ReplyDeleteநடுத்தர வர்க்கத்தினருக்கான கப்பலை பற்றி ரொம்ப விரிவாக எழுதியிருக்கிங்க. அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமுதல் படமே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.
ReplyDeleteபுதிய தகவல்.நல்ல அனுபவமாக இருக்கும். பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteகப்பல படம் கலக்குது மேடம்.... கலக்கல்
ReplyDeleteகப்பல்.....
ReplyDeleteபயணிக்கும் ஆசை வருகிறது
அய்... உல்லாசக் கப்பல்.
ReplyDeleteபுதிய தகவல்,நன்றி
ReplyDeleteஆகா!போய்வர ரொம்ப ஆசையாக இருக்கே!
ReplyDeleteநானு நானு.....
ReplyDeleteசென்னைல இருந்தேன்னு தான் பெயர். இவ்ளோ பெரிய விஷயம் எனக்கு தெரியவே இல்லை.. இப்ப ராஜேஸ்வரி நீங்க சொல்லி தான் எனக்கே தெரியுது...
கப்பல் உட்புறத்தோற்றம் வெளித்தோற்றம் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு... ஆனா காஸ்ட்லியா இருக்கே.....
எப்டியோ ரமணி சார் ஃபேமிலி போகறதுக்கு அட்ரஸ் எல்லாம் கேட்ருக்கார்.. யாரார் வரீங்களோ இங்கயே சொல்லிருங்கப்பா... ரமணி சார் செலவுல எல்லாரும்போய்ட்டு வந்துரலாம்..
அருமையா இருக்குப்பா..அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....
சூப்பர் தகவல்கள். சுவாரஸ்யமாக இருந்தன.
ReplyDeleteஅரிய புதிய தகவல்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
1046+4+1=1051 ;)
ReplyDeleteபதில்களுக்கு நன்றிகள்.