
ஸ்ரீ தேவி ஹி அம்ருதோத் பூதா கமலா சந்த்ர சோபனா !
விஷ்ணு பத்னீ வைஷ்ணவீ சவரா ரோஹாச சாரங்கினீ !!
ஹரிப்ரியா தேவ தேவி மஹாலஷ்மீ சஸீந்தரீ !!
மங்களம் தந்திடும் மலர் மகள்,
மாதவன் மார்பினில் வாசம் செய்யும் நில மகள் -
அவள் அருள் இருந்தால் வறுமை ஏது, வாட்டிடும் பிணிகள் ஏது?
துயர் விரட்டிட, தூக்கிய அவள் கைகளைத் நாம் தொழுதிட,
வந்து சேராதோ வளம் யாவும்! - அவள்தானே திருவரங்கத்திலேயும்
(நமக்கு) பக்கத்திலேயும் இருக்கும் ஸ்ரீதேவி!

பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னு நவரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே!
அழும் பிள்ளையாம் திருஞான சம்பந்தர் தனக்கு
ஓடிவந்து பாலூட்டிய அன்னை அவள்!
இசையால் என் பிள்ளை அம்புலி புனையும் பெருமானைப்
பாடித் துதிப்பான் என அன்னை அறிவாளன்றோ! -
மதுரையில் மீனாட்சியாய், காஞ்சியில் காமாட்சியாய்,
காசியில் விசாலாட்சியாய் - அவள் தானே
இட பாகத்தே வீற்றிருக்கும் உமையன்னை!
மலையிலே தான்பிறந்தாள். சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையி லுயர்த்திடுவாள், நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கி தரணிமிசை வாழ்வோமே!
அன்னையின்றி யாரும் அவதரிப்பாரோ?
அகிலம் முழுமைக்கும் அன்னையாம்,
அனைவருக்கும் அன்பெனும் அருளினால் காத்தருளும்
அந்த உலகத் தாயின்றி யாரும் தரணியில் தவழ்வரோ?
அவள் குழந்தைகள் அவளைப் பற்றி நினைக்கா விட்டாலும்,
அவர்களிடம் அவள் அன்பு என்றென்றும் குறைவதில்லை.


![[20_.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGrweL7j49EnzikjpmpenjkpbkDfOfqWPnQ051c7KgNAp6jN-iyzaAW_fl-HCnKGufw7z5QsRKa7gHszXv0NR96x44kjtbENiFoGqjFIlnfWEqebm3N6cOTcRyMWcrN-WRZoxeqss1qTk/s640/20_.jpg)
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே


ஸ்ரீநவசக்தி சுயம்பு துர்க்கையம்மன் ஆலயம்
குரோம்பேட்டையில் லக்ஷ்மிபுரம்-பச்சைமலை அடிவாரத்தில் ஸ்ரீநவசக்தி சுயம்பு துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது.
விவசாயி ஒருவர் தம் நிலத்தில் ஏர் உழுது கொண்டிருந்த போது திடீரென அவரது ஏர்க்கால் உடைந்து போக, அப்பகுதியில் இருந்த ஒரு கல்லில் இருந்து தொடர்ந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது.
இந்த அதிசயத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
ரத்தம் கசிந்தது வெறும் கல் அல்ல.அன்னை நவசக்தி துர்க்கையம்மனின் சுயம்பு மேனி திருவுருவம் என்று தெரிய வந்தது
அன்னையே இங்கு சுயம்புவாக எழுந்தளிருயுள்ளாள்.
இந்த அதிசயத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
ரத்தம் கசிந்தது வெறும் கல் அல்ல.அன்னை நவசக்தி துர்க்கையம்மனின் சுயம்பு மேனி திருவுருவம் என்று தெரிய வந்தது
அன்னையே இங்கு சுயம்புவாக எழுந்தளிருயுள்ளாள்.
அன்னையின் சுயம்புத் திருமேனி ஆரம்பத்தில் சாதாரணமாக காட்சியளித்தாலும் பின்னர் அவளது அருட்கடாட்சத்தால் கண், காது, மூக்கு என்று ஒவ்வொன்றாய் தோன்ற ஆரம்பித்து தற்போது பூரண உருவுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து அருளாட்சி செய்து வருகிறாள்.
துர்க்கையன்னையை நினைத்து செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் வெகு சிறப்புடன் எந்தத் தடங்கலும் இன்றி நடை பெறுகின்றன என்பது பக்தர்களின் அனுபவமாக இருந்து வருகிறது.
போக்குவரத்து வசதி::
இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது




எல்லையற்ற கருணை பொழியும் எல்லம்மன்
காசியிலே விசாலாட்சியாக,
மதுரையிலே மீனாட்சியாக,
காஞ்சியிலே காமாட்சியாக,
திருவல்லிக்கேணியில் அருள் தரும் தாயாக எல்லம்மன் காட்சி தருகிறாள்.
கோவிலில் உள்ளே சென்றதும் முதலில் கொடிமரம், பிறகு கிழக்கு முகம் பார்த்த வண்ணமாக காட்சித் தரும் எல்லம்மனை காணலாம்.
சக்தி விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதி, காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி சன்னதி, வன்னி மரம், நாகதேவியர் சன்னதி, எல்லம்மன்
உற்சவ சன்னதி, பக்த ஆஞ்சநேயர் சன்னதி இவைகள்யாவும் இங்கு உள்ளது.
சிறப்புகள்:
இங்கு ஆடி மாதம் பிரம்மோற்சவம் 13 நாட்கள் சிறப்பாக நடைபெறும் நவராத்திரி, கந்த சஷ்டி விழா, சித்திரையில் ஆயிரத்தெட்டு அபிஷேகம் சிறந்த முறையில் நடக்கிறது.
பிள்ளைப் பேறு, திருமணம் நடக்க, நோய் நொடிகள் தீர, கடன் தொல்லைகள் விலக, புகழ் பெற, எல்லாவித பிரச்சினைகளுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் இங்கு வந்து வணங்கினால் நன்மைகள் பெருகி கேட்டவரம் கிடைக்கும்.
சர்க்கரை வியாதி கொண்டவர்கள் அந்நோய் தீர அம்மனை வேண்டி அம்மனுக்கு சர்க்கரை காப்பால் அலங்காரம் செய்து வியாதி தீர்த்துள்ளார்கள்.
போக்குவரத்து வசதி:
இந்த ஆலயம் 48, சுந்தரமூர்த்தி வினாயகர் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5ல் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.





ஆகா - ஆகா - ஆன்மீகம் வளர்க்கும் அன்புச் சகோதரி - எத்தனை எத்தனை பதிவுகல் - ஆன்மிகத்தின் அடிப்படையில். படங்களும் விளக்கங்களும் - தூள் கெளப்புறீங்க போங்க. திருவல்லிக் கேணியில் எல்லம்மனை சர்க்கரை நோய் தீர வழி படலாமா ? தகவலுக்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.
ReplyDeleteஉண்மையான ஆன்மீகத் தேடல்
ReplyDeleteமனிதனை மதிப்புமிக்கவனாக்கும் வழி!
அதற்கு ஆற்றுப்படுத்தும் தங்கள் இடுகைகள் அருமை.
முதல் பதிவாக உங்கள் பதிவை
ReplyDeleteஅம்பாள் முக தரிசனத்துடன் தரிசித்தேன்
படங்களும் தங்கள் கவித்துவமான விளக்கங்களும்
உள்ளத்தை கொள்ளை கொள்கிறது,நன்றி
தொடர வாழ்த்துக்க
சர்க்கரை வியாதி கொண்டவர்கள் அந்நோய் தீர அம்மனை வேண்டி அம்மனுக்கு சர்க்கரை காப்பால் அலங்காரம் செய்து வியாதி தீர்த்துள்ளார்கள்.//
ReplyDeleteபுதிய தகவல் நன்றி!
எல்லையே இல்லாத எல்லையமன். சிறப்பான புகைப்படங்கள்.
ReplyDeleteவழக்கம்போல படங்கள் மனதில் ஒட்டுகிறது
ReplyDeleteபகிதியருள் படைப்புகளுக்கு நன்றி சகோதரி.
நான்காவது படம் கொள்ளை அழகு. தேவியின் அருள் முகத்தை காண கண் கோடி வேண்டும்.
ReplyDeleteஎல்லையில்லா அம்மனை தரிசித்தால் எல்லையில்லா மகிழ்ச்சி தரும் என்பதில் ஐயமில்லை...அருமையான ஆன்மீக பதிவுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்
ReplyDeleteஆகா ,ஆகா,என்ன அருமையான படங்கள்!
ReplyDeleteபுண்ணியம் சேர்க்கும் அன்னையின் தரிசனம் !
ReplyDeleteமங்களம் தந்திடும் மலர் மகள்,
ReplyDeleteமாதவன் மார்பினில் வாசம் செய்யும் நில மகள் -
அவள் அருள் இருந்தால் வறுமை ஏது, வாட்டிடும் பிணிகள் ஏது?
துயர் விரட்டிட, தூக்கிய அவள் கைகளைத் நாம் தொழுதிட,
வந்து சேராதோ வளம் யாவும்!
பதிவு அருமை ,இந்த வரிகள் பிடித்துள்ளது .
கடைசிப் படம் எண்ணத்தை ஒருமுகப்படுத்தும்
பகிர்வுக்கு நன்றி
புண்ணியம் சேர்க்கும் அன்னையின் தரிசனம் !
ReplyDeleteமுதல் படத்தில் தான்ய லக்ஷ்மியோ தனலக்ஷ்மியோ!
ReplyDeleteஅடியில் சங்கத்தின் மீது ஆந்தையா?
பின்புற அம்பாள் நெற்றிக்கண் திலகமே ஒரு மூன்றாவது கண்ணாக!
மூக்கில் புல்லக்கு வளையம் ஜோர்ஜோர்!!
விநாயகரும் 3 வது நெற்றிக்கண்ணுடன்!
கீழே எலியார் எதையோ கடித்தபடி ஆந்தையாரைக் கண்டு ஆச்சர்யம் மிக்கவராக!
வெள்ளி முகத்துடன், முத்து மாலையுடன், அந்த வரலக்ஷ்மி அம்மன், அழகான அந்த மண்டபம், வாழை மரங்கள், கோலம், மல்லிகைக்குவியலில் செந்தாமரை இதழ் விரித்தது போல மற்ற புஷ்பங்களுடனும் ஜோராக; கலசம் மஞ்சள் பூசிய தேங்காயுடனோ! உற்றுப்பார்ப்பதற்குள் ஓடி விடும் மாறி விடும் படங்கள், பக்திப்பரவசம் ஏற்படுத்துதே!
ReplyDeleteதங்கக்காசு மாலையுடன், விரிந்த ரோஸ் கலர் பாவாடை + தங்கக்கலர் பார்டர் - அந்த புறப்பாட்டு அம்மன் அழகோ அழகு!
ReplyDeleteஅழகிய சந்தனக்காப்புடன் சிவந்த புன்னகைபுரியும் உதடுகளுடன் அம்மன் அலங்காரம் அருமையோ அருமை.
ReplyDeleteகம்பீரமான சிம்ஹ வாகனத்தில் எழுந்தருளும் அம்பாள் ..... அடடா!
துர்க்கையம்மன், எல்லையம்மன் எல்லாம் பார்த்து, படித்து, எல்லையில்லா ஆனந்தப்பட்டேன்.
ReplyDelete//சர்க்கரை வியாதி கொண்டவர்கள் அந்நோய் தீர அம்மனை வேண்டி அம்மனுக்கு சர்க்கரை காப்பால் அலங்காரம் செய்து வியாதி தீர்த்துள்ளார்கள்.//
இன்சுலின் போல இது ஒரு இனிமையான செய்தியாக உள்ளதே!
கடைசிக்கு முந்திய படத்தில் விநாயகருக்கு அஸ்திவாரம் முதல், மொட்டைமாடி வரை அழகாக பொறுமையாக பல்வேறு பழங்களை அடுக்கிய அன்பருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள். இருபுறமும் அன்னாசியை வைத்து அதன் மேல் ஒரு பழத்தை அழகாக அளவாக உரித்து வைத்து, பன்னீர் திராக்ஷைகளையும் பக்குவமாக வைத்து அசத்தியுள்ளார் பாருங்கள்!
ReplyDeleteஅவர் அவ்வாறு அசத்தியுள்ளதை ’தான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகமும்’ என்ற நல்லெண்ணத்தில், கஷ்டப்பட்டு கவரேஜ் செய்து, புகைப்படமாக எடுத்து, எங்களுக்கும் காட்டியுள்ள உங்கள் செயல் அதைவிட அசத்தல் அல்லவோ!
கடைசி படம் பற்றி:
ReplyDeleteஆஸாபாசங்கள், துன்பங்களே நிறைந்த இந்த உலக வாழ்க்கை, பல்வேறு சபலங்கள், கலர் கலரான ஆசைகள், நம்மை அன்றாடம் ஆட்டிப்படைக்கும் சுழல் சுழலான மாயைகள் எல்லாமே நன்கு காட்டப்பட்டுள்ளன.
தினமும் மிகுந்த சிரத்தையுடன் தரப்படும் தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வந்தால், மேற்படி சிரமங்களிலிருந்து தப்பித்து, ஒளி வீசும் சூர்யன் போன்ற அந்தத்தெய்வத் திருவடிகளை நிச்சயம் அடையலாம் என்று காட்டியுள்ளீர்கள் என எனக்குத் தோன்றியது.
அழகான பதிவு. அருமையான பதிவு. அசத்தலான படங்கள்.
புரியாதவர்களுக்கும் புரிய வைக்கும் எளிமையான விளக்கங்கள் - கல் மனதையும் கரையச்செய்யும் விதமாக!
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றிகள். vgk
அருமையான ஆன்மீகப்பதிவு!படங்கள் அற்புதம்.நன்றி.
ReplyDeleteஅழகிய படங்களுடன் துர்கை அம்மன்,எல்லம்மன் கோவில் பற்றிய தகவல்கள் அருமை.
ReplyDelete//சர்க்கரை வியாதி கொண்டவர்கள் அந்நோய் தீர அம்மனை வேண்டி அம்மனுக்கு சர்க்கரை காப்பால் அலங்காரம் செய்து வியாதி தீர்த்துள்ளார்கள்.//
தகவலுக்கு நன்றி மேடம்.
அம்மன் அருள் கூறும் இடுகை. படங்களும் மிக அருமை. சக்தியின் கருணையோ கருணை. அருமையான பகிர்வு. மிகுந்த நன்றி சகோதரி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
This comment has been removed by the author.
ReplyDeletecheena (சீனா) said...
ReplyDeleteஆகா - ஆகா - ஆன்மீகம் வளர்க்கும் அன்புச் சகோதரி - எத்தனை எத்தனை பதிவுகல் - ஆன்மிகத்தின் அடிப்படையில். படங்களும் விளக்கங்களும் - தூள் கெளப்புறீங்க போங்க. திருவல்லிக் கேணியில் எல்லம்மனை சர்க்கரை நோய் தீர வழி படலாமா ? தகவலுக்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா./
நட்புடன் வழங்கிய நல்வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா,
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteஉண்மையான ஆன்மீகத் தேடல்
மனிதனை மதிப்புமிக்கவனாக்கும் வழி!
அதற்கு ஆற்றுப்படுத்தும் தங்கள் இடுகைகள் அருமை.//
மதிப்பு மிக்க கருத்துரைக்கு நன்றி.
Ramani said...
ReplyDeleteமுதல் பதிவாக உங்கள் பதிவை
அம்பாள் முக தரிசனத்துடன் தரிசித்தேன்
படங்களும் தங்கள் கவித்துவமான விளக்கங்களும்
உள்ளத்தை கொள்ளை கொள்கிறது,நன்றி
தொடர வாழ்த்துக்கள்//
கவித்துவமான கருத்துரைக்கு நன்றி ஐயா.
கோகுல் said...
ReplyDeleteசர்க்கரை வியாதி கொண்டவர்கள் அந்நோய் தீர அம்மனை வேண்டி அம்மனுக்கு சர்க்கரை காப்பால் அலங்காரம் செய்து வியாதி தீர்த்துள்ளார்கள்.//
புதிய தகவல் நன்றி!//
இனிமையான கருத்துரைக்கு நன்றி.
சாகம்பரி said...
ReplyDeleteஎல்லையே இல்லாத எல்லையமன். சிறப்பான புகைப்படங்கள்.//
சிறப்பான கருத்துரைக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteமகேந்திரன் said...
ReplyDeleteவழக்கம்போல படங்கள் மனதில் ஒட்டுகிறது
பகிதியருள் படைப்புகளுக்கு நன்றி சகோதரி.//
பகிதியருள் கருத்துரைக்கு நன்றி.
ராதா ராணி said...
ReplyDeleteநான்காவது படம் கொள்ளை அழகு. தேவியின் அருள் முகத்தை காண கண் கோடி வேண்டும்.//
கருத்துரைக்கு நன்றி.
மாய உலகம்4u said...
ReplyDeleteஎல்லையில்லா அம்மனை தரிசித்தால் எல்லையில்லா மகிழ்ச்சி தரும் என்பதில் ஐயமில்லை...அருமையான ஆன்மீக பதிவுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்//
நல்வாழ்த்துக்களுக்கு நன்றி
சென்னை பித்தன் said...
ReplyDeleteஆகா ,ஆகா,என்ன அருமையான படங்கள்!//
அருமையான கருத்துரைக்கு நன்றி.
koodal bala said...
ReplyDeleteபுண்ணியம் சேர்க்கும் அன்னையின் தரிசனம் !//
அருமையான கருத்துரைக்கு நன்றி.
மங்களம் தந்திடும் மலர் மகள்,
ReplyDeleteமாதவன் மார்பினில் வாசம் செய்யும் நில மகள் -
அவள் அருள் இருந்தால் வறுமை ஏது, வாட்டிடும் பிணிகள் ஏது?
துயர் விரட்டிட, தூக்கிய அவள் கைகளைத் நாம் தொழுதிட,
வந்து சேராதோ வளம் யாவும்!
பதிவு அருமை ,இந்த வரிகள் பிடித்துள்ளது .
கடைசிப் படம் எண்ணத்தை ஒருமுகப்படுத்தும்
பகிர்வுக்கு நன்றி//
அருமையான கருத்துரைக்கு நன்றி.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமுதல் படத்தில் தான்ய லக்ஷ்மியோ தனலக்ஷ்மியோ!
அடியில் சங்கத்தின் மீது ஆந்தையா?
பின்புற அம்பாள் நெற்றிக்கண் திலகமே ஒரு மூன்றாவது கண்ணாக!
மூக்கில் புல்லக்கு வளையம் ஜோர்ஜோர்!!
விநாயகரும் 3 வது நெற்றிக்கண்ணுடன்!
கீழே எலியார் எதையோ கடித்தபடி ஆந்தையாரைக் கண்டு ஆச்சர்யம் மிக்கவராக!//
வட நாட்டில் ஆந்தை மகாலட்சுமியின் வாகனமாம்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவெள்ளி முகத்துடன், முத்து மாலையுடன், அந்த வரலக்ஷ்மி அம்மன், அழகான அந்த மண்டபம், வாழை மரங்கள், கோலம், மல்லிகைக்குவியலில் செந்தாமரை இதழ் விரித்தது போல மற்ற புஷ்பங்களுடனும் ஜோராக; கலசம் மஞ்சள் பூசிய தேங்காயுடனோ! உற்றுப்பார்ப்பதற்குள் ஓடி விடும் மாறி விடும் படங்கள், பக்திப்பரவசம் ஏற்படுத்துதே!//
பக்திப்பரவசமான கருத்துரைக்கு நன்றி ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதங்கக்காசு மாலையுடன், விரிந்த ரோஸ் கலர் பாவாடை + தங்கக்கலர் பார்டர் - அந்த புறப்பாட்டு அம்மன் அழகோ அழகு!//
அழகோ அழகு கருத்துரைக்கு நன்றி ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅழகிய சந்தனக்காப்புடன் சிவந்த புன்னகைபுரியும் உதடுகளுடன் அம்மன் அலங்காரம் அருமையோ அருமை.
கம்பீரமான சிம்ஹ வாகனத்தில் எழுந்தருளும் அம்பாள் ..... அடடா!/
கம்பீரமான கருத்துரைக்கு நன்றி ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதுர்க்கையம்மன், எல்லையம்மன் எல்லாம் பார்த்து, படித்து, எல்லையில்லா ஆனந்தப்பட்டேன்.
//சர்க்கரை வியாதி கொண்டவர்கள் அந்நோய் தீர அம்மனை வேண்டி அம்மனுக்கு சர்க்கரை காப்பால் அலங்காரம் செய்து வியாதி தீர்த்துள்ளார்கள்.//
இன்சுலின் போல இது ஒரு இனிமையான செய்தியாக உள்ளதே!//
இனிமையான கருத்துரைக்கு நன்றி ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...//
ReplyDeleteநவரஸங்களாய் கருத்துரைகள் வழங்கி பதிவுக்கு பொருள்கூட்டிய அருமையான வரவுக்கு நன்றிகள் ஐயா.
ஸ்ரீதர் said...
ReplyDeleteஅருமையான ஆன்மீகப்பதிவு!படங்கள் அற்புதம்.நன்றி./
அற்புதமான கருத்துரைக்கு நன்றி
விக்கியுலகம் said...
ReplyDeleteபலன் தரும் பதிவுக்கு நன்றிங்கோ மேடம்!//
பலன் தரும் கருத்துரைக்கு நன்றி
RAMVI said...
ReplyDeleteஅழகிய படங்களுடன் துர்கை அம்மன்,எல்லம்மன் கோவில் பற்றிய தகவல்கள் அருமை.
//சர்க்கரை வியாதி கொண்டவர்கள் அந்நோய் தீர அம்மனை வேண்டி அம்மனுக்கு சர்க்கரை காப்பால் அலங்காரம் செய்து வியாதி தீர்த்துள்ளார்கள்.//
தகவலுக்கு நன்றி மேடம்.//
அழகிய கருத்துரைக்கு நன்றி
kovaikkavi said...
ReplyDeleteஅம்மன் அருள் கூறும் இடுகை. படங்களும் மிக அருமை. சக்தியின் கருணையோ கருணை. அருமையான பகிர்வு. மிகுந்த நன்றி சகோதரி.
வேதா. இலங்காதிலகம்./
அற்புதமான கருத்துரைக்கு நன்றி
அன்னை அம்மன் கருணை பேசும் அருமையான பதிவு.
ReplyDeleteDr.எம்.கே.முருகானந்தன் said...
ReplyDeleteஅன்னை அம்மன் கருணை பேசும் அருமையான பதிவு./
அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.
Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.//
அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.
அருமையான பதிவு...படங்கள் அற்புதம்...
ReplyDeleteAha Fentastic pictures. Very informative. I noted down the address for future visit.
ReplyDeleteI enjoyed all the pictures and especially the Devi with fruit decoration. Really wounderful.
viji
966+8+1=975 ;)))))
ReplyDeleteநிறைய பதில்கள் மன நிறைவினைத் தந்துள்ளதே ! மிக்க நன்றி. ;)))))