Friday, August 3, 2012

அற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி


Popular Temples
 http://lordeswaran.files.wordpress.com/2010/06/15.jpg

 http://s4.hubimg.com/u/6145547_f520.jpg
 ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் ற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி. விழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்...
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ரிஷப வாகனம், சிம்மவாகனம், காம தேனு வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்..
அம்மன் உலா வரும் கோ ரதம் ,மிகச்சிறப்பானது..
அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் - 
பஞ்சமூர்த்திகள் கோயிலின் உள்ளே இருக்கும் தெப்ப மிதவையில் எழுந்தருளி மைய மண்டபத்தில்எழுந்தருளி அருள்பாலிப்பார்கள்...  
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும், தாயுமானவராலும், சேக்கிழாராலும் பாடல் பெற்ற தலம்

 ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஒன்பது அடுக்குகளை கொண்ட 
மேற்கு கோபுரமே ராஜ கோபுரம்..!
http://www.a1tamilnadu.com/img_content/Tiruvannaikkaval.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5RVBhWbpihdY-UG4bWeHbJSadUYnQDBxAgQheE0mM6aVHw9tKwN6UqRt8GlLCPDUijjWPkRyEARujuw6ukIV3tO7cIr9V3hfE36QOjE3KaHF8FocJmEoyhZgFemt28ahrfGynGKo1V6_a/s400/DSC00649.JPG
பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. 25 அடி உயர மதில் சுவர்கள் கொண்டவை..
சுவாமி மேற்கு நோக்கியும், 
அம்பாள் கிழக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர்.  
 http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSWq0tJYmLKTANqspkvb9ETIbC9SbdL9u-6t4NQSfchwuZifb7RQfeluhzK
நான்காவது பிராகார மதிற்சுவருக்குத் 'திருநீற்றான் மதில்' என்று பெயர். 
ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது.  

இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது. 

சுவாமிக்கு முன்னால் உள்ள 9 வாயில் சாளரம்  வழியே தரிசித்தால் நவதீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும்.

கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாக இருந்து வழிபட்ட நிலையில் அப்புண்ணியப் பேற்றால் திருப்பணி செய்த கோயில். 
சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்து காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்ட.  லிங்கத்தில் சிவன் எழுந்தருளி அன்னைக்குக் காட்சி தந்தார்.
அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் 
இது, பஞ்ச பூத தலங்களில் “நீர்’ தலமானது.
சிவனை வேண்டி தவமிருந்த ஜம்பு என்னும் முனிவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.
http://lordeswaran.files.wordpress.com/2010/06/17.jpg?w=500&h=352
நாவல் மரத்துக்கு “ஜம்பு’ என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்தததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்’ என பெயர் பெற்றார்.

பிரம்மோத்சவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். 

பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம்  ஆதலால் 
மேளதாளம் இசைக்கப்படுவதில்லை. 
சக்தி பீடங்களில் ஒன்றான அகிலத்தை (உலகம்) காப்பவளாக 
அம்பிகை அருளுவதால், “அகிலாண்டேஸ்வரி” என்றழைக்கப்படுகிறாள்.

அகிலாண்டேஸ்வரி,ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் 
பூஜிப்பதாக ஐதீகம்.  

மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். 
சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு 
அம்பாள் சன்னதி திரும்புவார். 

இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். 
இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து  வணங்குகின்றனர்.

ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம்.

 ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். 
அம்பாள் காலையில் லட்சுமியாகவும், 
உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், 
மாலையில் சரசுவதியாகவும் காட்சி தருகிறாள்.
சிவன், அம்பாளுக்கு  குருவாக இருந்து உபதேசம் செய்ய, 
அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள்.
 எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். 
சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது.
ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் அன்னாபிஷேகம் செய்யவது சிரமம். 
வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருப்பதால் அன்னாபிஷேகம் செய்கின்றனர்.
ஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக் காப்பிடப்படுகிறது.
மதுரையைப் போல,  சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து 
திருவிளையாடல் நிகழ்த்தினார்.
  நான்காவது திருச்சுற்று மதிலை எழுப்பிய பணியாளர்களுக்கு இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து திருநீறை கூலியாகக் கொடுத்ததாகவும் அது தங்கமாக மாறியதாகவும் வரலாறு உண்டு. 

சிவன் கட்டிய மதில் “திருநீற்றான் திருமதில்” என்றும், பிரகாரம்
“விபூதி பிரகாரம்” என்றும் அழைக்கப்படுகிறது.
சிவன் விபூதிச்சித்தராக வந்து, பிரகாரம் கட்டும் வேலையை முடித்த விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.

கோச்செங்கட்சோழன் :கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்து. பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர்.  
மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்து  சிவனை வழிபடுவதிலும் போட்டி உண்டாகவே சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது. 
சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கி    சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மறு பிறவியில் சோழ பேரரசனாக பிறக்கும் பாக்கியத்தை அருளினார்...















சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்து. , கோச்செங்கட்சோழ மன்னர் எனப் பெயர் பெற்றார்..
ஒரு நாழிகை  கழித்து குழந்தை பிறந்தால்  சோழ குலம் மேன்மேலும் விருத்தியாகும்..என குழந்தையின் ஜனன கால பலன்கள்.கூறினர் அரண்மனை ஜோதிடர்கள்.....

குழந்தை ஒரு நாழிகை கூடுதலாக,இயற்கைக்கு மாறாக தாயின் கருவறையில் இருந்ததால் பனிக்குட நீர் அவன் கண்களில் புகுந்து பிறக்கும் போதே கண்கள் சிவப்பாக பிறந்து  செங்கண்ண சோழன் என்று பெயர் பெற்றார்..

 முற்பிறவிப் பயனால், யானைகள் புக முடியாதபடி கோச்செங்கட் சோழன் சிவனுக்காக கட்டிய 70 மாடக்கோவில்களுள் முதல் மாடக்கோவில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.   

சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டி யானை புகாதபடி திருப்பணி செய்த மன்னனுக்கு  சன்னதி இருக்கிறது.

ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். 

ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். 
உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.
வினாயகருக்கு உக்கிரம் தணித்த விநாயகர் என்று பெயர்.  மனசாந்தி வேண்டுவோர்  வழிபடுகிறார்கள்.. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipo1G7NzJUyao8iNWAQhhTbmVbtcYRQfJfC5BFr3OikkjSCas4UaUKy_USQeSe2uSaaUuihp6aHQgMa9LWXaPYYWNu9Mf5nQ3cazU3khx5oXJUf1oGirIOfRHaR29ZtCXA0vC_E4xy0xA/s1600/ganapathy.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeA-a2rqbglj5MCzFl-2Tn3kwbkg1c3ZMvOIyQvXme-IOHW9_dsQJhXTFtqA8oRaJKZP1QheAmfGer1UrBZI0XSKrdXe2gNtGMC6uaqEViJ83CqNKnWgBlm-XeCO-Ela8DayCZ5x9hcMg/s1600/gana+london+1A.jpg
கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி 
அம்பாள் தவமிருந்தபோது, அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார்.

ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. 

எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், 
பள்ளியறை பூஜை கிடையாது.

ஆனால், பள்ளியறை இருக்கிறது.

இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர், 
மீனாட்சியே செல்கின்றனர். 

சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு 
சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை

வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் 
வல்லமை பெற, அகிலாண்டேஸ்வரியை வேண்டினார்.

அவருக்கு அருள அம்பாள், வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள்.  , வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்துகொள்கிறேன்” என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார்.

அதே நாளில் கோயிலுக்கு வந்த வரதர் என்ற பக்தர் ஏற்க   பிரபலமான கவி காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம் 
பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.

முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். முருகனும், காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய அபூர்வம். நிலையில் காட்சி தருகிறார்.

சிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது, இதனால் எப்போதும் கோவில் கருவறையில் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்போதும் பாதி நீரில் நனைந்தபடியே இருக்கிறது.

அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமாகவும்  விளங்குகிறது.  அம்மனின் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பர்.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlVlg4ki8jluXb1sKzQ72FtY94oo41NKu3m9A9Poobkz33h7O8fBlXEr_XgznoOjnMvpZal8bn2zY2EpPXNRM3o0D7GNSneSDqRHz34HIAm9H-_5ofptSHu8ZT6e6cn0DHhbJX6HspetKo/s1600/P1100928.JPG


25 comments:

  1. ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அழகான பதிவு. மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  2. திருவானைக்கோயிலில் நாமத்துடன் யானையா?

    ஓஹோ அருகே உள்ள ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு,
    தன் சிநேகிதி யானையை சந்திக்க வந்திருக்குமோ?

    இருக்கலாம் இருக்கலாம்
    நிச்சயம் அப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete
  3. வை.கோபாலகிருஷ்ணன் said...

    திருவானைக்கோயிலில் நாமத்துடன் யானையா?

    ஓஹோ அருகே உள்ள ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு,
    தன் சிநேகிதி யானையை சந்திக்க வந்திருக்குமோ?

    இருக்கலாம் இருக்கலாம்
    நிச்சயம் அப்படித்தான் இருக்கும்.

    ஸ்ரீரங்கத்துக் காகத்தை திருவானைகாவல் மதிலை இடித்துத்தள்ள வந்துள்ளதாக வைஷ்ணவர் கூறுவதாக சொல்வார்களே ..

    யானையாராவது சினேகிதமாய் இருக்கட்டும் என்றுதான்....

    ReplyDelete
  4. மேலிருந்து கீழாக 2nd & 3rd படங்கள் திறக்கப்படவில்லை.

    பிறகு அவற்றையும் பார்த்து விட்டு கருத்தளிக்க வருவேன்.

    இதுவரை காணப்படும் அனைத்துப் படங்களும் மிக அழகாக உள்ளன.

    ReplyDelete
  5. ஒரு பதிவிற்கு எவ்வளவு தகவல்களை சேகரிக்கிரீர்கள்! அதுவும் தினமும், மலைப்பாக இருக்கிறது! எப்படி சாத்தியம் ஆகிறது இது?

    படங்கள் அனைத்தும் அருமை!

    ReplyDelete
  6. ”சிங்க்ம் துரத்தினாலும் சிவன் கோயிலுக்குள் செல்லமாட்டார்கள், வைஷ்ணவர்களில் பலரும்” என்று கேள்விப்பட்டுள்ளேன்.

    நீங்கள் சொல்லியுள்ள காக்கைக் கதையும் சுவையாகவே உள்ளது.

    நாமமாவது பட்டையாவது எல்லாம் நாம் [மனிதர்களால்] குழைத்து, இடப்படுபவைகள் தானே.

    காதல் உணர்வுடன் வந்துள்ள இந்த ஸ்ரீரங்கம் யானையை திருவானைக் கோயிலில் யாரால் தடுத்துவிட முடியும்? அதைத்தடுக்க யானை பலமல்லவா தேவைப்படும்! ;)

    வரும் 30 08 2012 சென்னையில் எனக்கு மிகவும் வேண்டியதொரு தெரிந்த குடும்பத்தின் பெண்ணுக்கு கல்யாணம். பத்திரிகை வந்துள்ளது.

    பெண் பெயரும் அகிலாண்டேஸ்வரி தான். பெண் வீட்டார் ஸ்மார்த்தாள் [விபூதிப்பட்டை கேஸ்] தான்.

    மாப்பிள்ளை யார் தெரியுமா? ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவர்களின் புதல்வர் வெங்கட் பாலாஜி ஐயங்கார்.

    இந்தப் பத்திரிக்கையைப் பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷமாக இருந்தது.

    நீங்கள் அதையே ஓர் நாமம் போட்ட யானைப்படத்தின் மூலம் காட்டியதும் அந்த சந்தோஷம் எனக்கு இரட்டிப்பு ஆகிவிட்டது.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் said...

    இரட்டைக்குழந்தைகளாகப் பிறக்க வாழ்த்துகள் !

    ஒன்று திருமண்ணுக்கு !
    மற்றொன்று திருநாமத்துக்கு !!

    ஒன்று பிறந்தால் ஆறுமாதம் திருமண்

    மறு ஆறுமாதம் திருநாமம் !!

    அப்படித்தானே கோவில் யானைக்கு தீர்ப்புச்சொன்னார் ஒரு வெள்ளைக்கார நீதிபதி !

    அவர் திருமண்ணைக் கண்டாரா !
    திரு நாமத்தைக் கண்டாரா !!

    ReplyDelete
  8. //அவர் திருமண்ணைக் கண்டாரா !
    திரு நாமத்தைக் கண்டாரா !!//

    ஒரே சிரிப்பான தீர்ப்பு தான்.

    இதே போலத்தான் வைஷ்ணவக் கோயில்களில் U & V நாம வழக்கும் நடைபெற்றது.

    யானையின் நாமம் பட்டை என்றதும் ”சாமி” என்ற படத்தில், புரட்சிகரமான சாஸ்திரிகளாக வரும் விவேக் ஜோக் அடிப்பாரே .... அந்த சற்றே அசிங்கமான ஜோக்கும் ஞாபகம் வந்தது.

    ஆனாலும் அந்த அசிங்கத்தை மிதித்தால் காலில் சேத்துப்புண் வராது என்கிறார்கள் சிலர்.

    சுடச்சுட அதை மிதிமிதியென்று மிதிப்பவர்களையும் பார்த்துள்ளேன்.

    அதையே லாரிலாரியாக கொள்முதல் செய்துகொண்டு போய் பேப்பர் தயாரிக்கிறாராம் ஓர் புத்திசாலி தொழிலதிபர். அதை செய்தித்தாளில் படித்து வியந்து போனேன்.

    ReplyDelete
  9. //இரட்டைக்குழந்தைகளாகப் பிறக்க வாழ்த்துகள் !

    ஒன்று திருமண்ணுக்கு !
    மற்றொன்று திருநாமத்துக்கு !!//

    அந்தக் கல்யாணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திவர நினைத்துள்ளேன்.

    அந்த மணபெண்ணை எனக்கு அவளின் சின்னக்குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கம்.

    ஒவ்வொன்றாக அடுத்தடுத்து ஓரிரு ஆண்டுகள் இடை வெளியில் இரண்டு ஆண் குழந்தைகளாக அவளுக்குப் பிறக்கட்டும்.

    தாங்கள் சொல்வதுபோல ஒரே பிர்ஸவத்தில் இரண்டு குவாகுவா வேண்டாம்.... பாவம் .... அவள் மிகவும் கஷ்டப்படுவாள்.

    ReplyDelete
  10. மற்றுமொரு அற்புத படைப்பு...

    பாராட்டுக்கள்...
    நன்றி…

    ReplyDelete
  11. இரண்டாவது படத்தில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பளிச்சென தரிஸனம் தந்து விட்டாள் இப்போது.
    குறையொன்றும் இல்லை. மிகுந்த சந்தோஷம்.

    எனக்கு மிகவும் பிடித்த கரும் பச்சைக் கலரில் புடவை, முரட்டு மாலை, காதில் ஸ்ரீசக்ர வடிவில் தாடங்கம், பாதாதி கேஸம் என்னைப்பார் என கீழ் நோக்கி ஒன்றும், மேல் நோக்கி ஒன்றுமாக இரண்டு அபய ஹஸ்தங்கள். அருகே அம்மனின் இடது பக்கம் எரியும் உயரமான ஒற்றை விளக்கு தீபம். அப்படியே கர்ப்பக்கிரஹத்தில் இருப்பது போன்ற ஆச்சர்யமான வடிவம்

    அருமையான படம்! ;)))))

    ReplyDelete
  12. மாறிமாறி காட்சியளிக்கும் முதல் படமும், யானைக்கும் சிலந்திக்கும் அருள் பாலித்த ஸ்ரீ ஜ்ம்புநாத லிங்கமும், அதன் பின்னனியில் அம்பாளும் மூன்றாவது படத்தில் அருமையாக இப்போது திறந்து காட்சி அளிக்கிறது. மிகவும் சந்தோஷம். ;)

    ReplyDelete
  13. கீழிருந்து நாலாவது படம் போட்டோ கவரேஜ் வெகு அருமை.

    மிகச்சிறப்பு வாய்ந்த மதியம் தினமும் நடைபெறும் உச்சிக்கால பூஜையை வர்ணித்துச் சொல்லியிருப்பது அழகு.

    பஞ்சப்பிரகாரம், விபூதிப்பிரகாரன் என ஒன்று விடாமல் சொல்லி அசத்தி விட்டீர்கள்.

    நவத்துவாரங்களின் வழியாகக் குனிந்து சிவனை தரிஸிப்பதன் தாத்பர்யம் ... அடடா .... எவ்ளோ தகவல்கள். சபாஷ், மேடம்.

    ReplyDelete
  14. தன் தாயாரின் உக்கிரம் தணித்த நம் குண்டுப்பிள்ளையார், தொந்திப் பிள்ளையார் பற்றி கூறியிருப்பதும், அவரை படம் பிடித்துக் காட்டியிருப்பதும் மிகவும் பிடித்துள்ளது.

    பஞ்சபூத ஸ்தலங்களில் [நீருக்கான] இதுவும் ஒன்று என்பதும், ஜம்புபலம் என்றால் நாவற்பழம் என்றும் எல்லாமே அழகாக விபரமாகச் சொல்லி விட்டீர்கள்.

    அழகிய படங்களுடன், அருமையான விளக்கங்களுடன், மிக அற்புதமாக பதிவு.

    என்ன இருந்தாலும் நீங்க நீங்க தான்.
    YOU ARE "T H E B E S T" ;)))))

    ReplyDelete
  15. ஆடி வெள்ளியா இப்போ.ஊர் ஞாபகம்தான் வருது.எப்போதுபோல படங்களே பக்தியை வரவைக்குது.நன்றி ஆன்மீகத்தோழி !

    இப்போ உங்கள் பக்கம் வரக்கூடியதாக இருக்கிறது.துள்ளவில்லை !

    ReplyDelete
  16. எனக்கும் மிகவும் பிடித்த கோவில்.

    அற்புதமான படங்களுடன் தகவல்களும் தந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  17. ஆதி சங்கரர் அணிவித்த தாடங்க மகிமையை ஸெளந்தர்யல்ஹரீயில்
    இப்படி கூறுகிறார்:

    பயங்கரமான மூப்பு மரணங்களை விலக்குகிற அமிருதத்தைச் சாப்பிட்டுங்கூட இந்திரன் முதலிய எல்லா தேவர்களும் பிரளயகாலத்தில் அழிவுறுகிறார்கள். கொடிய விஷத்தைச் சாப்பிட்ட சிவனுக்குக் காலத்தின் முடிவு இல்லை என்றால் அதன் காரணம் உன் காதிலுள்ள தாடங்க மகிமைதான்.

    நீங்கள் உக்கிரம் தணிய ஆதிசங்கரர் தாடங்கத்தை அணிவித்தார் என்றவுடன் எனக்கு நான் படித்தது நினைவு வந்து விட்டது. பகிர்ந்து கொண்டேன்.
    படங்கள் எல்லாம் அருமை.
    நன்றி.

    அர்ச்சகர் அம்மாள் மாதிரி சேலை அணிந்து பூஜை செய்வதை பார்த்து இருக்கிறேன்.

    ReplyDelete
  18. பதிவிற்குள் நுழைந்ததும் தஞ்சை பெரிய கோவில் தெரிந்தது. மீண்டும் ஒருமுறை பதிவின் பெயரைப் பார்த்துக் கொண்டேன். ஆனைக்காவில் இருக்கும் அகிலாண்டேஸ்வரி பற்றி அநேக செய்திகள். கடைசிப் படம் வைணவ திருக்கோலத்தில் யானையும் தகர டின்னோடு பாகனும். கொஞ்சம் குழப்பம்தான்.

    பொதுவாக ஒரு பதிவினைப் படித்தவுடன் எனது கருத்தினை சொல்லி விட்டுத்தான் மற்றவர்கள் கருத்துரைகளைப் படிப்பேன். ஆனால் உங்கள் பதிவில் மட்டும் மற்றவர்கள் கருத்துரைகளையும் சேர்த்தே பார்த்து விட்டுத்தான் பின்னர் எனது கருத்துரைகளை போடுவேன். காரணம் திரு VGK சார்
    ( வை.கோபாலகிருஷ்ணன்) என்ன சொல்லியிருக்கிறார் என்ற ஆவல்தான். ஈஸ்வரன் கோயிலில் நாமத்துடன் வந்த பெருமாள் கோயில் யானையைப் பற்றிய அவரது நகைச்சுவை கருத்து எனது குழப்பத்தை தீர்த்தது. வாய்விட்டு சிரிக்கவும் வைத்தது. எல்லாம் நன்மைக்கே என்பது இதுதான் போலிருக்கிறது. நன்றி!

    ReplyDelete
  19. // தி.தமிழ் இளங்கோ said...

    பொதுவாக ஒரு பதிவினைப் படித்தவுடன் எனது கருத்தினை சொல்லி விட்டுத்தான் மற்றவர்கள் கருத்துரைகளைப் படிப்பேன். ஆனால் உங்கள் பதிவில் மட்டும் மற்றவர்கள் கருத்துரைகளையும் சேர்த்தே பார்த்து விட்டுத்தான் பின்னர் எனது கருத்துரைகளை போடுவேன்.

    காரணம் திரு VGK சார்
    ( வை.கோபாலகிருஷ்ணன்) என்ன சொல்லியிருக்கிறார் என்ற ஆவல்தான்.

    ஈஸ்வரன் கோயிலில் நாமத்துடன் வந்த பெருமாள் கோயில் யானையைப் பற்றிய அவரது நகைச்சுவை கருத்து எனது குழப்பத்தை தீர்த்தது.

    வாய்விட்டு சிரிக்கவும் வைத்தது.

    எல்லாம் நன்மைக்கே என்பது இதுதான் போலிருக்கிறது. நன்றி!//

    Thank you very much Sir, for watching my Comments to this particular Madam's post.

    There are so many people like you.

    I am making my Comments, only for the interested people like you.

    My Computer System / Net Work is totally out from 5th Night.

    I am typing this matter from some other system, where from I am not able to type in Tamil.

    Let us see later .... Sir,

    Yours,
    vgk

    ReplyDelete
  20. தாடங்க மகிமை விளக்கும் அழகான பதிவு

    படங்கள் எல்லாம் அருமை. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  21. அன்னை அகிலாண்டேஸ்வரி அருள் பெற பிராத்திக்கின்றேன்

    ReplyDelete
  22. 3798+11+1=3810 ;))

    2 பதில்கள் கிடைத்துள்ளன. மகிழ்ச்சி

    ReplyDelete
  23. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (11/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  24. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/11.html

    ReplyDelete