ஸ்ரீராமர் -- "ராமஜயம்"
ராம நாமம், தாரக மந்திரம், மகா மந்திரம்.
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமுமின்றித் தீருமே
இம்மையே 'இராம' வென் றெழுத்திரண்டினால்
இராம"-'ராமா', என்னும் பதம் அஷ்டாக்ஷ்ரத்தின்
இரண்டாமெழுத்தும் பஞ்சாக்ஷ்சரத்தின் இரண்டாமெழுத்தும்
கூடி நின்றதால் 'தாரக மந்திர'மாகிறது...சடாக்ஷ்ரத்திலும் இரண்டாமெழுத்தாகவே அமைந்திருக்கிறது.
அஷ்ட கரும வித்தையிலும், கந்தச்சஷ்டிக் கவசத்திலும்,
அனுக்கிரகத் தானத்தையே பெற்றிருக்கின்றது.
"ராமன்' என்பதற்கு ஆனந்தமாக இருப்பவன்,
ஆனந்தம் தருபவன் என்று இருவிதமான பொருள்கள் உண்டு.
ஆனந்தம் தருபவன் என்று இருவிதமான பொருள்கள் உண்டு.
மனதில் மகிழ்ச்சி இருக்கும்போது,
புறச்சூழ்நிலைகள் ஒருவனை பாதிப்பதில்லை.
சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை முகத்தினன் ..
தர்மத்தை நிலைநாட்டிய ராமர் எந்தநிலையிலும்
மனதில் மகிழ்ச்சியையும், முகத்தில் மலர்ச்சியையும் கொண்டிருந்தார்..
கங்கையும், காவிரியும் ஓடும்வரையில் சீதாராம சரிதம் பாரத நாட்டில்
இருந்து அனைவரையும் தாய் போல் பக்கத்தில் இருந்து காக்கும்
ராமாயணத்தில் ஆதிமுதல் அந்தம் வரை எக்கதையினை நோக்கினும்
"ராமஜயம்" என்னும் மகாமந்திரத்தின் பேரருட்திறம்
விளங்கி நிற்பதை காணலாம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராம நாமத்தை ஜெபித்து உய்வோம்....
ஜெய் ஸ்ரீ ராம். ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!!
கோசலையின் மணிவயிறு, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான
ராமனைப் பெற்றெடுக்கும் பேறு பெற்றது.
அவள் தன் பிள்ளையைக் கண்ணின் மணிபோல காத்து வந்தாள்.
பிள்ளை வெளியூருக்குக் கிளம்பினால் அப்பா தன் பங்குக்கு பணமும்,
அம்மா பசிக்கு கட்டுச்சோறும் கொடுத்து அனுப்புவது அக்கால வழக்கம்.
ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டி வந்தது.
அப்போது தசரதர் பிள்ளைக்கு "சத்தியம்' என்னும் பணத்தை தந்தார்.
கோசலை ஒரு விசேஷமான கட்டுச்சோறு செய்து கொடுத்தாள்.
"ஒருநாள் இருநாள் அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கெட்டுப்போகாதது இது' என்று ராமனிடம் சொன்னாள்.
""என் கண்ணே! ராகவா! நீ எந்த தர்மத்தை பக்தியோடு அனுசரித்து வந்தாயோ அந்த தர்மத்தையே கட்டுச்சோறாக தருகிறேன்.
அதை என்றென்றும் பின்பற்று. அது உன் உடனிருந்து காக்கும்,''
என்று ஆசியளித்தாள்.
அன்பர்கள் இடரை அகற்றிடவேண்டி அயோத்தியில் வந்தது ஸ்ரீ ராமஜயம்
அசுரரை அழித்து அறந்தழைத்தோங்க அமைதி அளித்தது ஸ்ரீ ராமஜயம்
அசுரரை அழித்து அறந்தழைத்தோங்க அமைதி அளித்தது ஸ்ரீ ராமஜயம்
ஆதவன் மரபில் அழகிய உருக்கொண்டு அவதரித்தது ஸ்ரீ ராமஜயம்
ஆரணம் கமழும் வேதமாமுனிவன் அருளைப் பெற்றது ஸ்ரீ ராமஜயம்
ஆரணம் கமழும் வேதமாமுனிவன் அருளைப் பெற்றது ஸ்ரீ ராமஜயம்
இருள் வடிவான அலகையைக்கொன்று மருள் ஒழித்தது ஸ்ரீ ராமஜயம்
இருடியின் மகத்தை இலக்குவனோடு இமைபோல் காத்தது ஸ்ரீ ராமஜயம்
இருடியின் மகத்தை இலக்குவனோடு இமைபோல் காத்தது ஸ்ரீ ராமஜயம்
ஈசனை ஒத்தகௌதமன் இல்லாள் இடரை ஒழித்தது ஸ்ரீ ராமஜயம்
ஈசனோடு இந்திரன் இமையவர் எவரும் ஏத்தநின்றது ஸ்ரீ ராமஜயம்
ஈசனோடு இந்திரன் இமையவர் எவரும் ஏத்தநின்றது ஸ்ரீ ராமஜயம்
உண்மையின் வடிவாய் பீஜாக்ஷரத்தை ஓர்வாய் என்றது ஸ்ரீ ராமஜயம்
உறுதியை கொடுத்து மறதியைகெடுத்து உலகத்தை காப்பது ஸ்ரீ ராமஜயம்
உறுதியை கொடுத்து மறதியைகெடுத்து உலகத்தை காப்பது ஸ்ரீ ராமஜயம்
ஊனமில் உடலும் உயரிய பொருளும் உடனே தருவது ஸ்ரீ ராமஜயம்
ஊமைபோன்ற உயிர்களும் பேசும் உயர்வை அளிப்பது ஸ்ரீ ராமஜயம்
ஊமைபோன்ற உயிர்களும் பேசும் உயர்வை அளிப்பது ஸ்ரீ ராமஜயம்
என்றும் நமக்கு இன்பம் அளித்து இங்கே இருப்பது ஸ்ரீ ராமஜயம்
எமக்கு இது சாது பிறர்க்கு இது தீது என்பது அற்றது ஸ்ரீ ராமஜயம்
எமக்கு இது சாது பிறர்க்கு இது தீது என்பது அற்றது ஸ்ரீ ராமஜயம்
ஏதுமற்று ஏங்கி நிற்போர் தமக்கு ஏற்றம் தருவது ஸ்ரீ ராமஜயம்
ஏனஉருகொண்ட வனியை ஏந்தி இருக்கையில் வைத்தது ஸ்ரீ ராமஜயம்
ஏனஉருகொண்ட வனியை ஏந்தி இருக்கையில் வைத்தது ஸ்ரீ ராமஜயம்
ஐம்பூதங்களை அடிமையாய்க் கொண்ட அனுமன் உரைத்தது ஸ்ரீ ராமஜயம்
ஐம்முகத்தவனும் பங்கயத்தவனும் அமரரும் உரைப்பது ஸ்ரீ ராமஜயம்
ஐம்முகத்தவனும் பங்கயத்தவனும் அமரரும் உரைப்பது ஸ்ரீ ராமஜயம்
ஒருவழி நில்லாது அலையுறு மனத்தை ஒருவழிப்படுத்தும் ஸ்ரீ ராமஜயம்
ஒருவனும் யான் எனநினை என்று உண்மை உணர்த்தும் ஸ்ரீ ராமஜயம்
ஒருவனும் யான் எனநினை என்று உண்மை உணர்த்தும் ஸ்ரீ ராமஜயம்
ஓங்காரப் பொருளே உண்மையின் வடிவாய் ஓர்வாம் என்பது ஸ்ரீ ராமஜயம்
ஓவியம்தனிலும் காவியம் தனிலும் ஊக்கமளிப்பது ஸ்ரீ ராமஜயம்
ஓவியம்தனிலும் காவியம் தனிலும் ஊக்கமளிப்பது ஸ்ரீ ராமஜயம்
ஒளவையைப்போன்று அருணகிரிக்கும் அறத்தை உரைப்பது ஸ்ரீ ராமஜயம்
ஒளடதம் போன்று படிபோர் தமக்கு அனைத்தும் அளிப்பது ஸ்ரீ ராமஜயம்.
ஒளடதம் போன்று படிபோர் தமக்கு அனைத்தும் அளிப்பது ஸ்ரீ ராமஜயம்.
எளிய தமிழில், ராமனையே நேரில் உட்காரவைத்து,
அவனுக்கே அவன் கதையைச் சொல்லுவதாக அமைந்த பாடல் இது!
மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா
தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா
புஜபலத்தோடே ஜனித்தாய் ராமா ராமா
தாடகையைச் சங்கரித்தாய் ராமா ராமா
பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா
கல்லைப் பெண்ணாக்கி வைத்தாய் ராமா ராமா
வில்வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா
ஜனகன் வரலாறு கேட்ட ராமா ராமா
தனக்கு முனிவன் பதிலுரைக்க ராமா ராமா
தனுசைக் கையில் எடுத்தாய் ராமா ராமா
மனதில் கிலேசமற்றாய் ராமா ராமா
வில்முறிய சீதை கண்டு ராமா ராமா
நல்மணம் செய்துகொண்டாய் ராமா ராமா
மங்களங்கள் பாடவே ராமா ராமா
தங்கினீர் மிதிலை தன்னில் ராமா ராமா
பரசுராமன் வில் முறித்தீர் ராமா ராமா
கரிசனமாய் அயோத்தி சென்றீர் ராமா ராமா
சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா
சிறக்கவே அயோத்தி நகர் ராமா ராமா
"அயோத்தியா காண்டம்"
அயோத்திக்கு அரசனாக ராமா ராமாஅவனிதனில் தசரதரும் ராமா ராமா
உந்தனையே வேண்டிக் கொண்டார் ராமா ராமா
சிந்தை களித்திருந்தார் ராமா ராமா
சிற்றன்னை கைகேசியை ராமா ராமா
பற்றில்லாது கூனியுமே ராமா ராமா
பக்குவமாய் தான் கலைத்து ராமா ராமா
பரதர் முடி பெற்றிடவே ராமா ராமா
உத்தரவு கேளென்று ராமா ராமா
ஊக்கமுண்டாக்கி விட்டாள் ராமா ராமா
தாய்மொழி தவறாமலே ராமா ராமா
தவவேடம் தான் கொண்டாய் ராமா ராமா
தசரதரும் விசனம் கொள்ள ராமா ராமா
தான் நடந்தாய் கானகமும் ராமா ராமா
சீதையுடன் புறப்படவே ராமா ராமா
லக்ஷ்மணரும் கூட வந்தார் ராமா ராமா
பக்தரெல்லாம் புலம்பிடவே ராமா ராமா
பலநீதி சொல்லி தான் நகர்ந்தாய் ராமா ராமா
கங்கைக் கரை அடைந்தாய் ராமா ராமா
நங்கை சீதையுடன் ராமா ராமா
ஓடம்விட்ட குகனுடன் ராமா ராமா
உறவுகொண்டு அங்கிருக்க ராமா ராமா
சேனையுடன் பரதர் வர ராமா ராமா
சிறப்புடனே பாதுகைக்கு ராமா ராமா
பட்டம்கட்டி அரசுசெய்ய ராமா ராமா
பரதரும் திரும்பிச் சென்றார் ராமா ராமா
"ஆரண்ய காண்டம்"
அத்திரி முனியைக் கண்டு ராமா ராமா
அப்புறம் தண்டகம் சேர்ந்தாய் ராமா ராமா
கொடிய விராதகனை ராமா ராமா
மடிய சங்காரம் செய்தாய் ராமா ராமா
தண்டகவனத்து ரிஷிகள் ராமா ராமா
அண்டவர காத்து நின்றீர் ராமா ராமா
பஞ்சவடி தீரம் சென்றாய் ராமா ராமா
பர்ணசாலை கட்டி நின்றீர் ராமா ராமா
சூர்ப்பனகையைக் கண்டீர் ராமா ராமா
தீர்ப்பான் தம்பி என்றீர் ராமா ராமா
தம்பியால் பங்கமடைந்தாள் ராமா ராமா
வெம்பி மனம் வாடினாள் ராமா ராமா
கரதூஷணாதியரை ராமா ராமா
வர முறையிட்டாள் ராமா ராமா
கோதண்டத்துக்கு இரையாக ராமா ராமா
கூக்குரலிட்டு ஓடிவந்தார் ராமா ராமா
சூர்ப்பனகை தூண்டுதலால் ராமா ராமா
ஆர்ப்பரித்தான் ராவணனும் ராமா ராமா
மாரீசனை மானாக வர ராமா ராமா
மருமகனும் வேண்டிக் கொண்டான் ராமா ராமா
மாரீசன் மறுத்ததற்கு ராமா ராமா
தாறுமாறாய்க் கூறிவிட்டான் ராமா ராமா
சீதை முன்னே மான் வரவே ராமா ராமா
அதைப் பிடிக்கப் பின்சென்றாய் ராமா ராமா
அம்புபட்டு விழுந்தது மான் ராமா ராமா
நம்பும்படி கூக்குரலிட ராமா ராமா
சிந்தை கலங்கிடவே ராமா ராமா
சீதை வருந்தினாளே ராமா ராமா
ராவண சந்யாசி வந்தான் ராமா ராமா
நிலத்தோடே சீதையை ராமா ராமா
தேரின்மேல் எடுத்துச் சென்றான் ராமா ராமா
தெரிந்தெதிர்த்த ஜடாயுவும் ராமா ராமா
சிறகொடிந்து நிலத்தில் விழ ராமா ராமா
சீதை வரம் தந்து சென்றாள் ராமா ராமா
தேடிவரும் வழியில் ராமா ராமா
தென்பட்ட ஜடாயுவுக்கு ராமா ராமா
நல்வரமும் தானளித்தாய் ராமா ராமா
செல்வழியில் கவந்தன் வர ராமா ராமா
சேர எமலோகம் தந்தீர் ராமா ராமா
சபரிக்கு முக்தி தந்தீர் ராமா ராமா
தினமும் காலையில் இந்தபாராயணத்தைப் பக்தியுடன் படிப்பவர் சிறந்த ரத்தினமாவார். ரகுகுல திலகமான ராமச்சந்திரமூர்த்தியின் திருவருளால் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு அடைவார்.
புன்சிரிப்பும், இனிய பேச்சும் கொண்டவரே!
செந்தாமரைக் கண்களால் அருள்பவரே!
அகன்ற நெற்றியை உடையவரே!
நீண்ட குண்டலங்களை அணிந்தவரே!
ரகுவம்ச திலகமே! ராமபிரானே!
உமது மலர்முகத்தைத் தியானிக்கிறோம். பகைவர்களுக்கு பயத்தைக் கொடுப்பவரே!
வேண்டியவர் விரும்பும் வரங்களைத் தருபவரே!
சிவதனுசை முறித்து சீதாதேவியை திருமணம் செய்தவரே!,
ராமபிரானே! உமது மலர்முகத்தை வணங்குகிறோம்.
பத்மம், அங்குச ரேகைகளைக் கொண்ட கைகளால்
பக்தர்களுக்கு மங்களத்தை அருள்பவரே!
ஞானியர்களின் மனம் என்னும் வண்டால் சேவிக்கப்படுபவரே!
கவுதம மகரிஷியின் மனைவியான அகல்யாவின் சாபத்தைப்
போக்கியவரே! ராமபிரானே! உமது மலர்முகத்தைப் போற்றுகிறோம்.
வேதங்களால் துதிக்கப்படுபவரே! நீலவண்ணம் கொண்டவரே!
ரகுவம்ச நாயகரே! நீலரத்தினம் பதித்த ஆபரணங்களை அணிந்தவரே!
ரகுவம்ச நாயகரே! நீலரத்தினம் பதித்த ஆபரணங்களை அணிந்தவரே!
பக்தியில் சிறந்தவர்களால் பூஜிக்கப்படுபவரே!
முத்துக்கள் இழைத்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவரே!
பட்டாபிஷேக ராமபிரானே! உமது மலர்முகத்தைச் சிந்திக்கிறோம்.
எல்லாவித பாவங்களையும் போக்குபவரே!
கிரகதோஷத்தை நீக்குபவரே! பார்வதிதேவியும்,
பரமேஸ்வரனும் பக்தியுடன் பூஜிக்கும் திருநாமத்தைக் கொண்டவரே!
விஷ்ணுசகஸ்ர நாமத்தால் ஆராதிக்கப்படுபவரே! ராமபிரானே!
பரமேஸ்வரனும் பக்தியுடன் பூஜிக்கும் திருநாமத்தைக் கொண்டவரே!
விஷ்ணுசகஸ்ர நாமத்தால் ஆராதிக்கப்படுபவரே! ராமபிரானே!
உமது மலர்முகத்தை எண்ணி மகிழ்கிறோம்.
2
ReplyDelete=
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
2
ReplyDelete=
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
அழகான படங்களுடன்
ReplyDeleteஅற்புதமான விளக்கங்கள்.
மகிழ்ச்சி! ;)))))
//இராம"-
ReplyDelete'ராமா' என்னும் பதம்
அஷ்டாக்ஷரத்தின்
இரண்டாமெழுத்தும்
பஞ்சாக்ஷ்சரத்தின்
இரண்டாமெழுத்தும்
கூடி நின்றதால்
'தாரக மந்திர'மாகிறது...//
அருமையான விளக்கம்.;)))))
//ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டி வந்தது.
ReplyDeleteஅப்போது தசரதர் பிள்ளைக்கு "ஸத்தியம்'
என்னும் பணத்தை தந்தார்.//
ஸத்யம் வத !
ஸத்யமேவ ஜயதே!
=======
கோசலை ஒரு விசேஷமான கட்டுச்சோறு செய்து கொடுத்தாள்.
"ஒருநாள் இருநாள் அல்ல.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கெட்டுப்போகாதது இது'
என்று ராமனிடம் சொன்னாள்.
”என் கண்ணே! ராகவா! நீ எந்த தர்மத்தை பக்தியோடு அனுசரித்து வந்தாயோ அந்த தர்மத்தையே கட்டுச்சோறாக தருகிறேன்.
அதை என்றென்றும் பின்பற்று. அது உன் உடனிருந்து காக்கும்”
என்று ஆசீர்வதித்தாள்.//
தர்மம் சர !
தர்மமே வெல்லும் !!
===========
கோசலை கொடுத்த கட்டுச்சோற்றை உண்ட மகிழ்ச்சி ஏற்பட்டதே எனக்கும் இந்தத்தங்களின் பதிவைப் பார்த்ததும், படித்ததும். மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.
ReplyDelete;)))))
//எல்லாவித பாவங்களையும் போக்குபவரே!
ReplyDeleteகிரகதோஷத்தை நீக்குபவரே!
பார்வதிதேவியும், பரமேஸ்வரனும் பக்தியுடன் பூஜிக்கும் திருநாமத்தைக் கொண்டவரே!
விஷ்ணுசகஸ்ர நாமத்தால் ஆராதிக்கப்படுபவரே!
ராமபிரானே! உமது மலர்முகத்தை எண்ணி மகிழ்கிறோம்.//
ஸ்ரீராமரைப்பற்றியும்,
ஸ்ரீராம நாம மஹிமைகளைப்பற்றியும்
வெகு அழகாகச் சொல்லியுள்ள பதிவு.
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
பா ரா ட் டு க் க ள்,
வா ழ் த் து க ள்,
ந ன் றி க ள்.
vgk
ராமனின் சிறப்புகளை பறைசாற்றும் அருமையான பதிவு, படங்கள் அனைத்தும் அருமை!
ReplyDeleteஅருமைங்க.. படங்களும் பகிர்வும்.
ReplyDeleteதினமும் உங்கள் பதிவுக்கு வந்தபின் பிற பதிவுகளை பார்வையிடுதல் நல்லது.கோவிலுக்குப் போன உணர்வு ஏற்படுகிறது.அற்புதம்.ஸ்ரீராமஜெயம்
ReplyDeleteபடங்களும் பகிர்வும் சிறப்பு.
ReplyDeleteதர்மத்தையே சோறாக்கிக் கட்டித்தருவது சுவையானது. இப்போது தான் படிக்கிறேன்.
ReplyDeleteநடுவில் ஒரு படத்தில் ஒரு நபரின் பின்னணியில் அனுமார் தெரிகிறாரே -ஏதானும் கதை உண்டா?
ஆனந்த ராமாயணம் - சென்னை நண்பர் வீட்டில் தினமும் சொல்வார்கள்.
T.N.MURALIDHARAN சொன்னது எனக்கும் பல நேரம் தோன்றியதுண்டு.
ReplyDeleteஸ்ரீராமஜயம்
ReplyDeleteஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்... பக்தியில் திளைத்தேன்.