

துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, ஈச்சனாரி மகாலட்சுமி கோவில்.

ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷ?மீ ச ஸுந்தரீ
பாற்கட லிடைப் பிறந்தாள் - அது பயந்தநல்லமுதத்தின்
பான்மை கொண்டாள்
ஏற்குமோர் தாமரைப் பூ -
அதில் இணைமலர்த் திருவடி இசைத்திருப்பாள்
நாற்கரத் தானுடையாள் - அந்த நான்கினும் பலவகைத் திருவுடையாள்
அன்னை மகாலட்சுமியின் கடைகண் பார்வை இருந்தால் வெற்றி, சௌந்தர்யம், சௌபாக்கியம், கீர்த்தி, வீரம், சந்தானம், மேதை, கல்வி, துஷ்டி, புஷ்டி, ஞானம், சக்தி, சாந்தி, சாம்ராஜ்யம், ஆரோக்யம், மோட்சம் ஆகிய பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழலாம்..
கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில்
நடுவே மகாலட்சுமியும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் முப்பெருந்தேவியராக ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.
தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளி படும்.
பகல் 12.00 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளி படும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம்.

ஆடி மாதம் முழுதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால்
தினமும் அலங்காரம் செய்வார்கள்.
நான்காவது வாரம் காய்கறி களால் அலங்காரம் செய்வர்.
ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார்கள்.
வரலட்சுமி நோன்பு விழா மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து, வரும் பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.
யாருக்காகவும் எந்த பெயரிலும் அர்ச்சனை செய்யப்படுவதில்லை..
அம்மனுக்கு மட்டுமே அர்ச்சனை உண்டு..
கருவறை மும்பை மஹாலஷ்மி ஆலயத்தைப்போலவே அமைக்கப்பட்டுள்ளது..
மேற்குப்பிரகாரத்தில் பத்ம நாப ஸ்வாமி அறிதுயில் கொண்டு யோக நித்திரையில் அருகில் திருமகளுடன் அருள் புரிகிறார்..
மிகப்பெரிய சங்கும் சக்கரமும் கருத்தைக் கவருகிறது..
வட இந்திய கலாச்சாரத்தில் அமைக்கப்பட்ட தனிச்சிறப்பான
கோபுரம் கருத்தைக் கவருகிறது..









ஆஹா! இன்று மஹாலக்ஷ்மி மந்திரா!
ReplyDeleteஜோர் ஜோர் தான். பொறுமையாகப் பார்த்து படித்துவிட்டு மீண்டும் மெதுவாக வருவேன்.
ஈச்சனாரி விநாயகர் கோவில் சென்றதுண்டு... ஈச்சனாரி மகாலட்சுமி கோவில் உங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்... மிக்க நன்றி சகோதரி...
ReplyDeleteஓம் ஸ்ரீமாத்ரே நம:
ReplyDeleteஅருள் அன்னை
ஸ்ரீ மஹாராக்ஞ்யை
மாட்சிமை தங்கிய பேரரசி .
ஸ்ரீமத் ஸிம்ஹாஸனே ச்வர்யை
ஸிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பரதேவதை.
சிதக்னி குண்ட ஸம்பூதாயை
பேரறிவு என்னும் தீச்சுடரினின்று தோன்றியவள்.
தேவகார்ய ஸமுதயதாயை
இந்திரியங்களைப் பண்படுதுதலில் கண்ணும் கருத்துமாய் இருப்பவள்.
உத்யத்பானு ஸஹஸ்ராபாயை
எண்ணிக்கையிலடங்காத சூரியப் பிரகாசத்தை உடையவள்.
சதுர்பாஹூ ஸமன்விதாயை
நான்கு கரங்களை உடையவள்.
யா தேவீ ஸர்வபூதேஷூ புத்தி ரூபேணே ஸம்ஸ்திதா !
ReplyDeleteநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷூ சக்தி ரூபேணே ஸம்ஸ்தித !
ReplyDeleteநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:!!
யா தேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா !
ReplyDeleteநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேணே ஸம்ஸ்திதா !
ReplyDeleteநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷு ச்ரத்தாரூபேணே ஸம்ஸ்திதா !
ReplyDeleteநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மீரூபேணே ஸம்ஸ்திதா !
ReplyDeleteநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷு ஸ்ம்ருதிரூபேணே ஸம்ஸ்திதா !
ReplyDeleteநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷு தயாரூபேணே ஸம்ஸ்திதா !
ReplyDeleteநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரூபேணே ஸம்ஸ்திதா !
ReplyDeleteநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
முப்பெரும் தேவிகளின் சங்கமம்!
ReplyDeleteஅதனை அழகுடன் படைத்த ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வந்தனம்.
மேலிருந்து கீழ் மூணாவது படம் கண்களை விட்டு அகல மறுக்கிறது!
ReplyDeleteமுதல் படத்தில் சுபலாப லக்ஷ்மிக்கு படத்தின் மேல் உள்ள மண்டப அல்ங்காரமும், தீபங்களும் ஜொலிப்பது அழகாக உள்ளது.
ReplyDeleteஅதே போலவே ஜொலித்திடும் அழகான
HAPPY LAKSHMI POOJA என்னும் எழுத்துக்கள். ;)
மேலிருந்து நாலாவது வரிசையில் தாமரையுடன் லக்ஷ்மியையும், வீணையுடன் சரஸ்வதியையும், நடுவில் திரிசூலத்துடன் சக்தியையும் நிற்க வைத்துக் காட்டியுள்ளது, வித்யாசமாக அழகாக உள்ளது.
ReplyDeleteஅன்னை மகாலக்ஷ்மியின் கடைக்கண் பார்வை இருந்தால் பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழலாம்.
ReplyDeleteஆஹா! இதைக்கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பதினாறு செல்வங்களைப் பற்றி சென்ற ஆண்டு மிகவும் விரிவாக ஓர் பதிவு தனியாகவே வெளியிட்டு அசத்தியிருந்தீர்கள். அதுவும் ஞாபகம் வந்தது.
அன்னையின் கடைக்கண் பார்வை நம் மீது விழ, நாம் விழுந்து கும்பிட்டுப் பிரார்த்திப்போம்.
மும்பை மிகப்பெரிய வர்த்தக ஸ்தலமாகவும், செல்வச் செழிப்புடனும் விளங்குவதற்குக் காரணமே அங்குள்ள மும்பை மஹாலக்ஷ்மி மந்திர் தான் என்பார்கள்.
ReplyDeleteஅதே போன்ற வட இந்திய கலாச்சாரத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிச்சிறப்பான கோபுரம் கருத்தினைக் கவர்வதாக எழுதியுள்ளீர்கள்.
கோவை ஈச்சனாரியில் உள்ள மஹாலக்ஷ்மி மந்திரால், கோவை மக்களெல்லாம் செல்வச்செழிப்புடன் விளங்கட்டும். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழட்டும். ;)
வழக்கம்போல மிக அழகான படங்களுடன் கூடிய நல்லதொரு பதிவு.
ReplyDeleteஅற்புதமான விளக்கங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள். vgk
அனைத்தும் அருமை அக்கா ... உங்களின் பணி சிறக்கட்டும்....
ReplyDeleteputhithana thagaval .
ReplyDeletepagirvirkku nandri.
படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி. வாழ்த்துகள்
ReplyDeleteமலைமகளும் அலைமகளும் கலைமளுமாய் உள்ள ஓவியம் மிகுந்த அழகுடன் இருக்கிறது. அந்தக் கால ஓவியம் போல!
ReplyDeleteI can see the life in the Mahalakshmi's picture.Thank you for sharing this with all of us.
ReplyDeleteஅருமையான படங்களுடன் வழக்கம் போல அசத்திட்டீங்க! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பா மலர்!
http://thalirssb.blospot.in
மகாலட்சுமி கண்டேன்...
ReplyDeleteமகிழ்ச்சி கொண்டேன்...
அழகிய அற்புதமான அருமையான பதிவு! பகிர்விற்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteலசஷ்மி பூஜை படங்கள் அதி அற்புதம்!
ReplyDeleteஇந்த முறை கோவை போன போது ஈச்சனாரி பிள்ளையாரை மட்டும் பார்த்து வந்தோம் . வெகு நாட்கள் ஆகி விட்டது மகாலக்ஷ்மி கோவில் போய் . உங்கள் பதிவின் மூலம் தரிசனம் பெற்றேன். நன்றி.
ReplyDeleteஅன்னை மகாலக்ஷ்மியின் படங்கள் அற்புதம்!அருமையான பதிவு! பகிர்விற்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteஅன்று பார்க்காத முடியாத ஸ்வாமியை இன்று தங்கள் பதிவின் மூலம் கண்டதில் மகிழ்ச்சி...நன்றி.
ReplyDelete3890+6+1=3897
ReplyDelete