ஓம் கேம் காம் கம் பட் ப்ராணக்ர
ஹாஸி, ப்ராணக்ரஹாஸி
ஹும் பட் ஸர்வ சத்ரு சம்ஹாரனாய
சரப ஸாலுவாய பக்ஷிராஜாய ஹும்பட் ஸ்வாஹா
ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய
ஸ்ரீ சரபாஷ்டகம் துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால்துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.
11 நெய்தீபம் ஏற்றி வணங்குவது விஷேசம்..
ராஜகோபுரத்தின் வாசலில் காற்று வலிமையாக வீசுவதை உணரமுடிந்தது...
சரபேசர் : 1.சிவன் , 2. விஷ்ணு , 3. காளி(பிரத்யங்காரா தேவி), 4. துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம்தான் சரபேசர்.
எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடன், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகச் செருக்குடன் வந்த நரசிம்மத்தின் ஆவி அடங்கும்படி செய்த, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி.
இரணியனது வரத்தின் படியே,அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரணியனை வதம் செய்தார்.
அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார்.
நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.
பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் சிவன் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.
சரபம் என்ற சொல்லுக்கு எட்டு கால்களை கொண்ட பறவை, இரண்டு தலைகளை கொண்ட வடிவம் எனப் பொருள்.
பட்சிகளின் அரசன். சிங்கத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டது சரபம். இத்திருவடிவம் "சிம்மக்ன மூர்த்தி", "சிம்ஹாரி", நரசிம்ம சம்ஹாரர்" என்றும் அழைக்கப்படுகின்றது.
பறவை போன்ற பொன்னிறம், இரு இறக்கைகள், சிவப்பேறிய கண்கள் இரண்டு, கூரிய நகங்களுடன் கூடிய சிங்கத்தை போன்ற கால்கள் நான்கு. மனித உடல். கிரீடம் தரித்த சிங்க முகம். தந்தங்களை போன்ற கோரைப் பற்கள் என பயங்கர உருவமே சரபர்
சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபரின் மூன்று கண்கள்.
பிரத்யங்கரா எனும் காளியும், துர்க்கையுமே இறக்கைகள்.
இந்திரனே நகங்கள். காலனே தொடைகள்.
சரபர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும்.
தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி. சரப மூல மந்திரத்தினை 100 அலது 1000 முறை ஜெபித்து, அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாதம், சூலை போன்ற கொடிய நோய்கள் தீரும். மலட்டுத் தன்மை நீங்கும்.
சரப காயத்ரி மந்திரம் ஜெபிப்பது பாம்புகளிடமிருந்து காத்திடும்
மிக அகோரமாக எல்லா மிருகங்களும் இணைந்த உருவம் திடீரென தன் முன் தோன்றியவுடன் நரசிம்மருக்குகோபம் போய் பயம் வந்தது.
அந்தப் பயத்தினால் சரபேஸ்வரை தாக்க முற்பட்டபோது, சரபோஸ்வரின் ஸ்பரிசத்தால் நரசிம்மர் நாராயணானார்.
சுவாமி நடுக்கம் தீர்த்த பெருமான் என்ற பொருளில் கம்பகரேஸ்வரர் என்ற திருப்பெயருடனும், அம்பாள் அறம்வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி என்ற திருப்பெயருடனும் அருள் வழங்கும் சிறப்புடையது.
இரணியனுடைய குருதியைப் பருகிய நரசிம்மம் அறிவு திரிந்து உலகம் அனைத்தையும் அழிக்கத் தொடங்கியபோது இத்தலப் பெருமான் சரபப் பறவை உருக்கொண்டு அதன் கொடுமையை அடக்கியதால் சரபேஸ்வரர் என்ற பெயருடன் தனி மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருபுவனத்தில் ஆலயம் அருமையான அமைப்புடன் அமைந்துள்ளது....
நடுக்கம் தீர்த்த பெருமானா?
ReplyDeleteநேற்றைய தங்களின் பதிவினைப் பார்த்ததிலிருந்தே எனக்கு ஒரே நடுக்கமாகத்தான் உள்ளது.
என் நடுக்கத்தைத் தீர்க்கிறாரா இந்த உங்கள் பெருமான் என்று பாத்தூட்டு அப்புறமாத்தான் வருவேன். ;)
சரபேஸ்வரரை பற்றி இத்தனை தகவல்களா .. இதுநாள் வரை கோயிலில் ராகு கால வேளையில் துர்க்கைக்கு பூஜை செய்யும் முன் சரபேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்து பின் அடுத்து துர்க்கை வழிபாடு நடக்கும்.சரபேஸ்வரருக்கு முதல் ஆராதனை இது நாள் வரை புரியாமல் தரிசனம் செய்து வந்திக்கிறேன்...இன்று பதிவை படித்த பின் மனதில் ஒரு தெளிவு.அறியாத பல விபரங்களை தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி..!
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
ReplyDeleteதயவுசெய்து விருதினை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு மட்டும் இரண்டு.
வழக்கம்போல் எல்லோருக்கும் தாங்களே தகவல் கொடுத்து விடவும்.
பிரியமுள்ள
vgk
படமும் படைப்பும் அழகு
ReplyDeleteஇந்தளவு தகவல்கள் கேள்விப்பட்டதேயில்லை... படங்கள், தகவல்கள், விளக்கங்கள்... என அனைத்தும் அருமை... (நானும் ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன்...) நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDelete”நடுக்கம் தீர்த்த பெருமான்”
ReplyDeleteஎன்று தலைப்பு கொடுத்துள்ளீர்கள்.
முதல் படத்தில் காட்டியுள்ள சிவனாரும், அவர் கழுத்தில் உள்ள பாம்பும், தலையில் உள்ள கங்கையும், நெற்றியில் உள்ள பிறைச் சந்திரனும் எல்லாமே நடுங்குவது போலல்லவா காட்டியுள்ளீர்கள் ! ;)))))
ஓஹோ! அது ஓர் அனிமேஷன் படமோ!! அதனால் தான் இந்த [Shake] நடுக்கம் உள்ளதோ!!!
OK OK மேற்கொண்டு போய் பார்த்து விட்டு வருகிறேன்.....
//ஓம் கேம் காம் கம் பட் ப்ராணக்ர
ReplyDeleteஹாஸி, ப்ராணக்ரஹாஸி
ஹும் பட் ஸர்வ சத்ரு சம்ஹாரனாய
சரப ஸாலுவாய பக்ஷிராஜாய ஹும்பட் ஸ்வாஹா//
அடேங்கப்பா!
நம் சத்ருக்களை ஒருவழியாக ஸ்வாஹா செய்து விடட்டும்!
நல்ல கரடுமுரடான மந்திரத்துடன் ஆரம்பமே ஜோராகத்தான் உள்ளது. ;)
//ஸ்ரீ சரபாஷ்டகம் துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால்துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.//
ReplyDeleteஅற்புதமானதொரு தகவல் இது.
ஸ்ரீ துர்க்கையம்மனையும் பெரும்பாலும் இராகு காலத்தில் தான் பூஜிக்கிறார்கள்.
......
மிகவும் பயனுள்ள அரியதொரு பகிர்வு! நன்றி சகோதரி!
ReplyDeletehttp://www.krishnaalaya.com
//ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி...... //
ReplyDeleteசரப மூர்த்தியைப்பார்த்தாலே ஸ்ரீ நரசிம்ஹர் அவதாரம் போலத்தான் தெரிகிறது.
//நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.
பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் சிவனை நடுக்கந்தீர்த்த பெருமான் என்றனர்//
அருமை அருமை மிக அருமையான சுவாரஸ்யமான கதையாக உள்ளது.
//சரபம் என்ற சொல்லுக்கு எட்டு கால்களை கொண்ட பறவை, இரண்டு தலைகளை கொண்ட வடிவம் எனப் பொருள்//
ReplyDeleteஎட்டுக்கால் பூச்சிகளை மட்டுமே நாமெல்லாம் நேரிடையாகப் பார்த்திருக்கிறோம்.
அதுபோல ரெட்டை மண்டையுள்ள குழந்தைகள் சிலரைப் பார்த்திருக்கிறோம். அதாவது அந்தக்கால ப்ளைமெள்த் கார் போன்ற நீண்ட மண்டையாக இருக்கும்.
எட்டுக்கால்கள் கொண்டவரும், பறவை இனத்தைச் சார்ந்தவரும், இரட்டை தலையுள்ளவரும், மனித உடல் கொண்டவருமான சரபரைக் கோயில்களில் தான் நாம் பார்க்க முடிகிறது.
//அம்பாள் அறம்வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி //
ReplyDeleteஎவ்வளவு அழகான பெயர்கள் ! ;)))))
/ராஜகோபுரத்தின் வாசலில் காற்று வலிமையாக வீசுவதை உணரமுடிந்தது/
ஆஹா! நீங்கள்
“நான் காற்று வாங்கப்போனேன் .... ஓர் கவிதை வாங்கி வந்தேன்”
என்ற பாடல் போலப் போய் காற்று வாங்கிவிட்டு சர்பேஸ்வரரையும் தரிஸித்து விட்டு வந்துள்ளீர்கள்.
இந்த கோயில் எங்கே இருக்கிறது எப்படிப்போக வேண்டும், எத்தனை மணிக்குப்போக வேண்டும் என்ற விபரங்கள் ஏதும் சொல்லவில்லை போலத்தெரிகிறதே!
// நெய்தீபம் ஏற்றி வணங்குவது விஷேசம்//
நெய்யைக் கையில் வைத்துக்கொண்டு இந்தக்கோயில் எங்கே உள்ளது, எப்படிச்செல்வது எனத் தெரியாமல் பக்தகோடிகளில் சிலராவது விழிப்பார்கள் அல்லவா!
தயவுசெய்து சொல்லுங்கோ, ப்ளீஸ்.
வை.கோபாலகிருஷ்ணன் said...//
ReplyDeleteகும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருபுவனத்தில் ஆலயம் அருமையான அமைப்புடன் அமைந்துள்ளது....
ஏற்கெனவே குழுவினருடன் சென்றிருந்த போது உடன் வந்தவர்கள் திருபுவனம் பட்டுப்புடவை எடுக்கவே ஆர்வம் காட்டி கோவிலுக்கு வர மறுத்துவிட்டனர்..
இம்முறை குடும்பதோடு சென்று இராகுகால பூஜையில் சிறப்பாக கலந்துகொண்டோம்...
வை.கோபாலகிருஷ்ணன் said...//
ReplyDeleteகும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருபுவனத்தில் ஆலயம் அருமையான அமைப்புடன் அமைந்துள்ளது....
ஏற்கெனவே குழுவினருடன் சென்றிருந்த போது உடன் வந்தவர்கள் திருபுவனம் பட்டுப்புடவை எடுக்கவே ஆர்வம் காட்டி கோவிலுக்கு வர மறுத்துவிட்டனர்..
இம்முறை குடும்பதோடு சென்று இராகுகால பூஜையில் சிறப்பாக கலந்துகொண்டோம்...
கடைசிபடம் கொள்ளை அழகு.
ReplyDeleteகைலாஸமலை. அழகு நந்தியார்.
வழவழப்பாக கருகருப்பாக பளீச்சென்று பிரதிபலிக்கும் லிங்கம்.
சிவனே எனப்படுத்திருக்கும் குழந்தை சிவன் .... எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படம் ...
ஜோர் ஜோர் ;)))))
கோயிலின் இருப்பிடத் தகவலுக்கு மிக்க நன்றி, மேடம்.
ReplyDeleteஅடடா! திருபுவனம் போய் பட்டுப்புடவை வாங்காமல், பார்க்காமல் வந்த ஒரே பெண்மணி தாங்களாகவே இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
நீங்களே பட்டுப்போன்ற மனமுடையவர் தானே!
திருபுவனம், காஞ்சீபுரம், பனாரஸ் பட்டெல்லாம் தங்களுக்குத் தேவையே இருக்காது தான். போன் செய்தால் வீட்டுக்கே எல்லாவற்றையும் டஜன் கணக்கில் வரவழைக்கவும் முடியும் தங்களால். அம்பாளின் அருள் உள்ளவர். வாழ்க வாழ்கவே !
சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி!!
ReplyDeleteசரபேஸ்வரர் பற்றிய அருமையான தகவல்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteFABULOUS BLOG RIBBON AWARD
ReplyDeleteஎன்ற விருதினை இன்று என் வலைப்பதிவின் மூலம் 108 பதிவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட செய்தியினை, அநேகமாக அனைத்துப் பதிவர்களுக்கும் தாங்களே அறிவித்து, வாழ்த்தி வந்துள்ளது கண்டு மனம் நெகிழ்ந்து போனேன்.
தங்களின் வாத்ஸல்யத்துடன் கூடிய நட்புக்கு தலை வணங்கி மகிழ்கிறேன்.
தேனீ போன்ற தங்களின் சுறுசுறுப்புக்கு
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி.
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி.
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி.
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
நன்றி,நன்றி,நன்றி.
தங்கள் உதவிக்கு 1008 தடவைகள் சஹஸ்ரநாமம் போலக்கூட நன்றி கூறலாம் தான்.
ஏதோ அஷ்டோத்ர நன்றிகள் மட்டுமே கொடுத்துள்ளேன்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
தயவுசெய்து விருதினை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு மட்டும் இரண்டு.
வழக்கம்போல் எல்லோருக்கும் தாங்களே தகவல் கொடுத்து விடவும்.
பிரியமுள்ள
vgk ///
விருது அளித்து பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...
இந்த மாத ஆரம்பத்தில்தான் அழகான, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சரபேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றேன். விரைவில் எனது பதிவிலும் காணலாம். உங்கள் இடுகை சிறப்பானது.
ReplyDeleteஸ்ரீ....
அழகான படங்களுடன் அருமையான பகிர்வு..
ReplyDelete