Wednesday, August 1, 2012

கற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி


http://i2.squidoocdn.com/resize/squidoo_images/590/draft_lens13725331module156006703photo_1_1324979092Animated-Lord-Shiva-Wallpapers-4.jpg
ஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி
விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே
பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம் தேஹிமே கர்ப்பரக்ஷகே
கார்த்யாயினி மஹாமாயே மஹா யோகின்ய தீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவம் பதிம் மேகுருதே நம:
கர்ப்பப்பை சம்பந்தமான நோயுள்ள பெண்கள், திருமணம் தடைபடும் பெண்கள் ஆகியோரும்  வழிபட்டு  பிரச்சினைகள் நீங்க பெற்று  எல்லா நலன்களும் நிறைந்து கற்பக விருட்சமாய் அருளும் முல்லைவனத் திருத்தலம் திருக்கருகாவூர்
[garbarakshambigai.jpg]
தீராத நோய் உடையவர்கள் ,  சரும நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு புனுகுச் சட்டம் சாத்தி  நோய் நீங்கப் பெறுகிறார்கள்.
முல்லைவனநாதரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.
அருமையாக பூத்துக்குலுங்கும் நந்தவனம் மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது...

வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும்  பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
திருமணமாக, குழந்தை செல்வம் பெற  கீழ்கண்ட ஸ்லோகத்தை தினமும் கர்ப்பரட்சாம்பிகை படத்தின் முன்பு சொல்ல வேண்டும்:


சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை ஸ்லோகம்:
ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதி நாதரி மன்னாத ஸாம்பசசிசூட
அரதிரிசூலின் சம்போ சுகப்பிரசவ கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே

சுகப்பிரசவம் ஆக 108 முறை ஜெபிக்க வேண்டும்:
ஹிமவத் யுத்தரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷினி
தஸ்யா ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணீபவேது.

தலவிநாயகராக கற்பகவிநாயகர் அருள்புரிகிறார் 
நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் 

இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ள  அமைப்பு அபூர்வமானது ...  
சோமாஸ்கந்தர் வடிவமைப்பில் உள்ள  சுவாமி, அம்மன், சுப்ரமணியர் மூன்று சன்னதிகளையும் ஒருசேர வலம் வர சுற்றுப்பிரகாரம் உள்ளது.
 சத்து ஆனந்தம் சித்து
அருள் ஆன்மா இன்பம்

( உண்மை) (மகிழ்ச்சி) (அறிவு)
சோ ஸ்கந்தர் உமா
முல்லை வனநாதர் ஆறுமுகர் கர்ப்பரட்சகி
  சோமாஸ்கந்த அமைப்பில்  மூன்று சன்னதிகளும் அமைந்து  புத்திரப்பேற்றையும், புத்திரப் பேறு சிதைவின்றிக் கிடைக்க கருவைக் காத்தருளுகின்ற அருள் பேற்றையும் வழங்கும் தலம்...

 அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் இப்பூவுலக மக்கள் பெற்று உய்யும் வண்ணம் பரம கருணாமூர்த்தியாகிய சிவபெருமான் திருவருளே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் மூவர் தேவாரத்தையும் பெற்று மக்கள் பலரும் நாளும் வந்து தம் காரியசித்தி அடையும் தலமாக விளங்கும் சிறப்புடையது திருக்கருகாவூர்

சுயம்பு மூர்த்தியாக லிங்கம் புற்று மண்ணினால் ஆகிய  சுவாமியின் திருமேனியில் சுவாமிக்கு நேரடியாக அபிசேகம் செய்வது இல்லை.

சுவாமியின் திருமேனியில் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. 

ஏகநாயகரும் சுயம்பு மூர்த்தியுமாகிய மூலலிங்கமூர்த்தி 
மாதவி வனேச்சுரர், முல்லை வனநாதர், கர்ப்ப புரீச்சுரர், 
கருகாவூர்க் கற்பகம் என்று அழைக்கப் பெறுகிறார்.


மகப்பேறு  திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்தும் குழந்தை வரம் இல்லாதவர்கள்வழிபடுவதற்கும், பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக செய்யும் பிரார்த்தனைக்கும் புகழ்பெற்ற தலம் 
கருக்காத்த நாயகி - கர்ப்பரட்சாம்பிகை - திருவருள் திறம்மிக்க தாயாக கோயில் கொண்டிருக்கிறாள். 

காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் ஒன்று 
1. கருகாவூர் - முல்லைவனம், 
2. அவளிவணல்லூர் - பாதிரிவணம், 
3. அரதைப்பெரும்பாழி - வன்னிவனம், 
4. இரும்பூளை - பூளைவனம், 
5. கொள்ளம்புதூர் - வில்வவனம் என்ற. 
ஐந்து  தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கமும் வழக்கில் உள்ளது
பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களான 5 சிவஸ்தலங்களை ஒரே நாளில் 5 கால பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்வது மிகச்சிறப்பு..

ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் 
பூசித்த லிங்கமும் உள்ளது

அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து தரும் நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்பது  நம்பிக்கை 

கருவுற்ற பெண்களுக்குச் சுகப்பிரசவம் உண்டாகும் பொருட்டு,
ஸ்ரீ கர்ப்பரக்ஷம்பிகையின் திருவடியில் வைத்து, மந்திரித்து
விளக்கெண்ணெய் தரப்படுகிறது
http://lh3.ggpht.com/-tVF3U2ObJq0/TXboVexf9xI/AAAAAAAABuo/p6GTmiV1lOs/11.jpg
முனிவர் சாபத்தினால் கரு கலைந்த வேதிகை அம்பாளிடம் பிரார்த்தனை செய்து முறையிட அம்பாள் கர்ப்பரட்சகியாகத் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக் காப்பாற்றி  குழந்தையாகக் கொடுத்தாள்.

இறைவியின் அருள் மகிமையைக் கண்டுணர்ந்த வேதிகை இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாகவே எழுந்தருளி, உலகில் கருத்தரித்தவர்களையும், கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்தனையால் அருள்பாலித்த தலம் திருக்கருகாவூர்  ..

அம்பாள் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகையாக ,கர்ப்பரட்சகி, கருக்காத்த நாயகி கரும்பனையாள் அருள் பொழிகிறாள்....

குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாததால் அம்பாள் காமதேனுவை அனுப்பி பால்கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் கீறவும் பால்குளம் தோன்றி  ஆலயத்திற்கு முன்புறம் க்ஷீரகுண்டம் என்று இன்றும் இருந்து வருகிறது. 
 
சுவாமி கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் சத்தியகூபம் தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்து அனைத்து ஞாயிறுகளிலும் முருகப் பெருமான்  தீர்த்தம் அருளுகின்றார்

பிரம்ம தீர்த்தம் - மார்கழித் திருவாதிரையில் நடராஜப் பெருமான் சிவகாமி அம்மையாருடன்  தீர்த்தம் அருளுகின்றார்

விருத்த காவிரி என்னும் முள்ளிவாய் தீர்த்தம்  பூஜைப் படித்துறையில் கருகாவூர்ப் பெருமான் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களிலும்  கர்ப்பரட்சகி ஆடிப்பூர நன்னாளிலும் தீர்த்தம் அருளுகின்றனர்.

 ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகியை நினைந்து வணங்கினால் கரு உண்டாகிறது. 
கரு நிலைக்கிறது. சுகப்பிரசவம் ஏற்படுகிறது. 

முற்பிறவிகளில் செய்த நற்செயல்களின் பலனாக மட்டுமே கிடைக்கக் கூடிய புத்திரபாக்கியம் கர்ப்பரட்சாம்பிகை சன்னதியில் வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வந்தால் வம்சதோஷம் நீங்கி புத்திரபாக்கியம் கிடைக்கும்   

அன்னை கர்ப்பரட்சாம்பிகை திருவருள் பெற்று குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்ய தங்கள் குழந்தைகளை அம்மன் சன்னதியில் குழந்தைகளுடன் வந்து பிரார்த்தனை நிறைவு செய்யும் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க அம்மன் சன்னதியில் குழந்தைகளை தொட்டிலில் இட்டு எடுக்க வசதியாக தங்கத்தொட்டில் கண்களையும் கருத்தையும் கவருகிறது...
முல்லைவனநாதர் எனப் பெயர் பெற்ற ஈசனுடன் தாயின் வயிற்றில் கொடுத்த கருவுக்கு உயிர் கொடுத்தும் கருவை சிதையாமல் காக்கும் கருகாத்த நாயகி  திருவருள் திறம் சிறக்க கோயில் கொண்டிருக்கிறாள். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihqPZKMneYdoy-48eHlZiSMNR20QCJDfHnFq2LdfdScqNFgnAW20W1Nri5hSnwyX_eRujWQxCeemoi5lca-lojwGD1kB3WEEGp0mdp-ZBBOon-42zkF5uVvhdj2nGau7bhLtuI4RlBpqE/s320/Garbharakshambika.gif
எல்லா நலன்களும் நல்கி, வாழ்வில் தோன்றாத் துணையாக இருந்து கருணை மழை பொழியும் கற்பகமாக அருள் பொழிகிறாள்...
avoor sivan temple
ஆலயத்தின் அழகுமிகு தோற்றம்
avoor sivan temple
இரட்டை நந்தி - வலதுபுறம் இருப்பது சுயம்பு
avoor sivan temple

13 comments:

  1. தகவலுக்கு நன்றி. இன்று ஆவணியாவட்டமாதலால் கற்பரக்ஷாம்பிகையை தரிஸிக்க சற்றே தாமதமாகத்தான் வர இயலும்.

    அம்பிகை என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. முதல் படம் வெகு அழகு!

    ReplyDelete
  3. தங்களின் வலைத்தொகுப்பினை தனியாக
    சேமித்து வருகிறேன்.
    கொவில் பற்றிய தகவல்களை கேட்பவர்களுக்கு எளிதில் தெரிவிக்க மிக்க பயன்படும்.
    ஆன்மீக உலகுக்கு நீங்கள் நல்ல வழிகாட்டி; வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
  4. மிகச்சிறப்பான பதிவு! படங்கள் கொள்ளைக் கொண்டன மனதை! தொடரட்டும் உங்கள் ஆன்மீக யாத்திரை!

    இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

    ReplyDelete
  5. திருக்கருகாவூர் சென்று தரிசித்த நினைவுகள் பதிவைப் பார்த்ததும்நிழலாடுகிறது. தங்கத் தேரில் என் பேரனை வைத்து இழுத்ததும் பசுமையாக இருக்கிறது. வழக்கம்போல் பதிவு சிறப்பாக உள்ளது. சில படங்கள் திறக்கவில்லை.

    ReplyDelete
  6. மனதுக்கு ஆறுதல் அளிக்கும் பல்வேறு அழகான தகவல்களுடன், வழக்கமான மிகச் சிறப்பான படங்களுடன், தரப்பட்டுள்ள மிகவும் மகிழ்ச்சியளிக்கும் பகிர்வு.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. “கற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி”

    என்ற தலைப்பை அவசரமாகப் படித்து விட்டு, என்னுடைய முதல் பின்னூட்டத்தில் ”கற்பரக்ஷாம்பிகை” என்று எழுத்துப்பிழையுடன் எழுதி அனுப்பி விட்டேன். ;(

    தவறுக்கு வருந்துகிறேன். அதை ”கர்ப்ப ரக்ஷாம்பிகை” என மாற்றிப் படிக்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    ஸ்லோகங்களைப் பகிர்ந்துள்ளது பலருக்கும் மிகவும் பயனளிப்பதாக அமையும். நன்றி.

    ReplyDelete
  8. கற்பகமாய் அற்புதமாய் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  9. கர்ப்ப ரட்சாம்பிகை கோவிலின் ஸ்தல வரலாறு அறிந்தேன். எனக்கு தெரிந்த தோழி இக் கோயிலில் தந்த எண்ணெய்யை பலவீனமான தன் தங்கையின் பிரசவ சமயத்தில் கொடுத்து அம்மனின் அருளை வேண்டினாள்..அப்பொழுதுதான் இந்த அம்மனின் அருட் பிரசாதத்தை கேள்விப்பட்டேன்..தெய்வாதீனமாக வை.கோ அண்ணனிடம் இந்த அம்மனை பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது..அவர்கள்தான் உங்களின் இந்த லிங்க்கை கொடுத்து உதவினார்கள் ..திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையின் மகிமை படித்து அறிந்தேன் ..மேடம்.. தங்களின் ஆன்மீக சேவை தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. பதிவின் முதல் படத்திலேயே ஐயனின் அருளும் அம்மனின் அருளும் கிடைக்கப் பெற்றேன். அனைத்து படங்களும் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  11. அழகிய படங்கள் விளக்கங்கள், நல்ல தகவல்கள் . நன்றி

    ReplyDelete