Wednesday, August 15, 2012

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்


super-india_hw.gif (134787 bytes)
flag298_15082009


தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்  எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் -

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்கு அச்சமும் உண்டோ  என மனத்திற்கு ஊற்சாகமூட்டும் பொன்னாள் சுதந்திரத் திருநாளே!

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்?
"தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா – இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!-என்ற பாரதியின் வரிகளிலே நம்முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை அறியலாம்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவுஉலகமே உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியா சுதந்திரத்தையும் புது வாழ்வையும் பெற்று புதிய சகாப்தம் துவக்கியது. வரலாற்றில் மிகவும் அரிதானதருணம்..

நீண்ட காலம் அடைபட்டுக் கிடந்த ஒரு நாட்டின் மறுமலர்ச்சி  புத்துயிர் பெற்றது..

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின் சேவைக்காவும், மனிதநேயத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைக்கும் சக்தியை சுதந்திர தினம் வழங்குகிறது..

அநீதிகளைக் கண்டு, முறைகேடுகளைக் கண்டு கோபம் கொள்ள வேண்டும்;இது நமது நாடு; இதன் ஒவ்வொரு வளர்ச்சியும் தாழ்ச்சியும் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்..

நமது நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு , சமூக வாழ்க்கை முறையை புற்றுநோயைப்போல் பாதித்து வரும் ஊழலை உடனடியாக ஒழிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

அரசு, பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டியது அவசியம்...

நம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;
நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு’

"நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்;இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்” என்று விவேகானந்தர்கூறினார்.

 இளைஞர்களால் ஒரு செயலை எளிதாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும். இதனாலேயே விவேகானந்தர் ஆணித்தரமாகஇளைஞர் சக்தியை நம்பினார்.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இந்தியாவை அனைத்து துறையிலும் உயர்த்தி வருகின்றனர்.

இந்த எழுச்சியால், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது

வளர்ச்சியடைந்த நாடுகளே பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டன.
இந்தியா இதிலிருந்து தப்பித்து சீரான வளர்ச்சி அடைந்து வருவது, உலகநாடுகளை வியப்படையச் செய்தது.

இந்தியர்களின் கடின உழைப்பு தான், வளர்ச்சிக்கு காரணம்.

 இந்திய மக்கள்தொகையில் இளைஞர்கள் அதிகரித்திருப்பதே நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் இளைஞர்கள். இந்த இளமைத் துடிப்பு எந்த நாட்டுக்கும் இல்லை.

வல்லமை மின் இதழில் வெளியான ஆக்கம்.....






slide
[nt6.jpg]


.Orkut Scrap - India Independence Day: 7

19 comments:

  1. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சுதந்திர தின வாழ்த்துக்கள்.
    படங்களை எதிர்பார்த்து வந்தேன் - வீண்போகவில்லை.
    ஒரு படி மேலே பதிவும் மூவண்ணம். பின்னிட்டீங்க.

    ReplyDelete
  3. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு.

    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

    படங்கள் அனைத்தும் அழகாக கலர்ஃபுல் ஆக உள்ளன.

    மாதுளை முத்துக்களை மிதக்க விட்டுக் காட்டியுள்ள படம் வித்யாசமாக மிகவும் அழகாக, மூவர்ணங்களைக் காட்டுவதாக உள்ளது.

    எழுதியுள்ள செய்திகளும் அருமை.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. வல்லமையில் வெளிவந்த ஆக்கத்திற்கும் வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    நம் நாட்டில் இன்று 50% க்கும் மேலாக இளைஞர் சக்தி பரவி இருப்பதே நம் நாட்டின் பலமும், நம்பிக்கையுமாக உள்ளன.

    இளைஞர்கள் ஆக்கபூர்வமாக செயல்பட்டு, தங்களின் கடும் உழைப்பினால், இந்தியாவை உலகின் நம்பர் 1 நாடாக, வல்லரசாக மாற்றட்டும். ;)

    ReplyDelete
  7. இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
    வாழ்க இந்தியா! வளர்க ஒற்றுமை!

    ReplyDelete

  8. எங்கிருந்துதான் இவ்வளவு அழகிய படங்கள் உங்களுக்குக் கிடைக்கிறதோ. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அனைவருக்கும் இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  10. அருமையான படங்கள்... நன்றி...

    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளரட்டும்...
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    ReplyDelete
  11. இதயம் நிறைந்த சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  12. இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள். அனைத்து படங்களும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஆஹா. அருமையான பதிவு.
    உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்!
    வாழ்க! வளர்க!

    ReplyDelete
  16. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

    சுதந்திர தினத்தனறு வழக்கம் போல் அழகான படங்களுடன் கூடிய அருமையான பதிவு. எத்தனை எத்தனை படங்கள் - கன்ணைக் கவருகின்றன. கருத்துகளோ சிந்தையைத் தூண்டுகின்றன. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. எங்களின் இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. 3959+2+1=3962

    இட்ட பணியை இனிதே முடிக்க மேலும் ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் உள்ளன.

    15.08.2012ல் இப்போது வண்டி நிற்கிறது.

    ஆயிரம் நிலவை எட்டிப்பிடிக்க 13.08.2013க்கு அல்லவா செல்ல வேண்டும் ! ;)))))

    நல்லாவே என்னை சுளுக்கெடுத்து வேடிக்கை பார்க்கிறீர்கள்.

    இருக்கட்டும். இருக்கட்டும். ஏதோ ஒரு விதத்தில் தொடர்புகள் நீடிப்பதில் எனக்கோர் மகிழ்ச்சியே.

    ஆனால் ஒருநாள் ’இதுவும் கடந்து போகும்’. ;(

    ReplyDelete