Wednesday, August 15, 2012

"வாழ உலகினில் பெய்திடாய்"




ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ, கை கரவேல 
ஆழியுள் புக்கு, முகந்து கொடார்த் தேறி 
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து 
பாழியந் தோளுடையப் பற்பநாபன் கையில் 
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து 
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் 
வாழவுலகினிற் பெய்திடாய் நாங்களும் 
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் 
 http://balhanuman.files.wordpress.com/2010/05/andaal-new.jpg
ஆழியில் புகுந்து -  கடலுக்குப் போய், முகந்து - நீரை வாங்கி; 
கொடார்த்தேறி - கடலிலிருந்து நிலத்திற்கு 
கொண்டு வந்து தருகிறதாம் மேகங்கள். 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0AmtZkcF9RsWgfTRN_zNSKdqfAAq20zN6TOOKw1nC8ym3UHKESEJin6jyEwF-B9ERkzEXsJgXwyPYAa0UJqtiqVBWv92_LDXehNDQ6BkIjWd9362gaBjsxIKn6kTdJgyRkU6cPj0u1K8/s400/p4l1.jpg 
 பராக்கிரமம் உடைய பத்மநாபன் தோளில் இருக்கும் சக்கரம் 
மின்னுவது போல் மின்னி  மின்னல் அடித்து, 
வலம்புரிச் சங்கு அதிர்வது போல் - பாரத மகா யுத்தத்தில் 
பாஞ்சசன்னியம் என்ற கண்ணனின் சங்கு ஊதியவுடன் பாதிப் 
படை அந்த அதிர்வில் மாண்டு விழுந்ததாம்(super sonic waves)- 
இடி, இடித்து, சார்ங்கம் என்ற வில்லில் இருந்து புறப்படும் 
அம்புகள் போல் மழை சாரை, சாரையாக பொழியுமாம்.
வானம் பாத்த பூமியாய் எங்களை ஏமாற்றி விடாதே அப்பா! 
மழையைத் தா!
மேகத்தில் நீர் மறைந்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும், 
பரமனே அந்தர்யாமியாக உறைந்துள்ளான் 
 "வாழ உலகினில் பெய்திடாய்" என்று பாடுவதிலும் விஷயமிருக்கிறது. 
 பெருவெள்ளம் வந்து அழிவேற்படாத வகையில் 
மழையை அருளுமாறு முத்தாய்ப்பாக வருணனுக்கு ஞாபகப்படுத்துகிறாள்.
  http://mmimages.maalaimalar.com/Articles/2012/May/c7107a17-4544-4f5d-88ae-9c2c8258e867_S_secvpf.gif
சூரியன், வருணன் என்ற இருவருக்கும் - முப்பது முக்கோடி 
தேவர்களுக்கும் தலைவனான பரமாத்மாவிடம், மார்கழி நீராட 
மழை வேண்டி விண்ணப்பிப்பதே உகந்தது என்று ஆண்டாள் 
பாடுவதாக அமைந்த இந்த திருப்பாவைப்பாசுரத்தை 
கோவையில் வருணஜபத்தைத் தொடர்ந்து பக்தர்கள் கூடி 
அநுசந்தித்தித்து மழை வரப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள்..
 http://www.heritagewiki.org/images/thumb/9/99/Krishna-946833.jpeg/198px-Krishna-946833.jpeg
 மின்னலைச் சக்கரத்தின் பேரொளிக்கும், இடியை சங்கத்தின் 
முழக்கத்திற்கும், மழையை  சார்ங்கத்திலிருந்து புறப்பட்ட அம்பு 
மழைக்கு ஒப்பாக பாசுரத்தில் பாடி  கண்ணபிரானை மனம் குளிர 
வைத்து விடுகிறார் ! 
 Angry little animated cartoon thunder storm cloud launching lightning bolts and rainAngry animated cartoon thunder storm cloud launching lightning bolts and rainCrazy dangerous lightning animation
இதன் பின்னரும், அடியவர்  நீராடி மகிழ, மழைக்கொடையை 
வழங்காமல் கண்ணனால் இருக்க முடியுமா என்ன ? 
  Animated man in rain storm with green umbrellaLittle cartoon sunshine animation with glasses
ஆக்க சக்தியின் உருவகம் மழை. 
மழையில்லாமல் போனால் உயிர்கள் மடிந்து போகும்
 
ஆண்டாள் மழைக் கடவுளான வருணனை நோக்கி, ஆழி மழைக்கு அண்ணா! 
ஆழியுள் புகுந்து முகர்ந்து கொண்டு ஆர்த்து எழுந்து ஊழிக்கும் முதல்வனான 
நாரணன் போல உருவம் கறுத்து, அந்த பத்மநாபனின் கையிலுள்ள சக்கரம் 
போல மின்னி, சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்பட்ட சரமழை போல 
பெய்திடாய்  என்கிறாள்! மழையை மின்னலை மேகத்தை எதைப் பார்த்தாலும் 
கண்ணனே நினைவாக ஆழி  மழைப் பாசுரத்தில் அனுபவிக்கிறாள்....
   
இறைவனின் கருணை மழையில் நனைந்த அனுபவத்தை 
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் 
என்று போற்றும் பாசுரம் நமக்கு அளிக்கிறது




Animated cabin scene with campfire beside river and running waterfall
 
 http://www.tamilhindu.com/wp-content/uploads/praying-varuna-150x150.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhyphenhyphenrLG6N_yo9wTsLeTLnT-o9qW5RiqZg-KYJW2JCgNpNzzhZGXOvN9wYnq5UzEt7ht5fq3zUTPHcYoJRKXrlMCUZ4kJsx234vQ_8IszYEIHW80-7iM-Pmpy7Qgo4qWRI9AtBgfWE1LXou4/s1600/cloud.jpeghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNQtjSdHQ6goT603pSUBwoyScWOL2yPZf7_MoiEFRFwzlg-VIZ_hvfPPkVV9D0JqQJPGuuWPVPtWU6axSNak2XKKeMsAG01l65G22tbUcR989fAPND3ir3WhhUxf96CW12hKZcMejBLSVF/s640/Copy+of+animated_rain11_20307.XDgif_320_320_256_9223372036854775000_0_1_0.gif
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi78sl118oCgwUESyAxNW8ooza9M94ONYC2RGa7mc5qpucTWTkJ3nSs3VEXrNFlEbEDkXOixNr9YgHPP-wSb5l4-WJSMpxq3S-LYsMBAI6cpD89MjJ2C2eWwxqX0679Z42yY9X1xxPHfTg/s400/130294_large.jpg 
 Continuous rolling ocean wave animation
 Moving animated running waterfall at night under stars and moonlight
 http://www.gifstop.com/images/weather/rain3.gif




















21 comments:

  1. எங்க ஊருல எல்லாவருஷமும் ஜூன் ஜூலை ஆகஸ்டில் நல்லா மழை பெய்யும். இந்தவருஷம் என்னாச்சோ மழையே இல்லே. அழிமழைக்கண்ண்ணந்தான் மழையைக்கொண்டு வரனும்

    ReplyDelete
  2. Graphics படங்கள் அசத்துகின்றன... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ரெண்டாவது படத்தில் பத்மனாபர் வெகு அழகு!

    ReplyDelete
  4. தொடர்ச்சியாக எம்பெருமானைப் பற்றிய பதிவு! சிந்தனையில் நிற்கும் கண்கவர் அழகுப் படங்களுடன் கூடிய பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  5. மிகவும் அழகான பதிவு+படங்கள்.
    மீண்டும் கருத்துச்சொல்ல இரவு வந்தாலும் வருவேன்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. முதல் மூன்று படங்களும் + ஆண்டாள் படங்களும் வெகு அழகாக உள்ளன.

    மூன்றாவது படம் மட்டும் புதிதாக இணைத்துள்ளீர்கள். இதுவரை பார்க்காத மிகச்சிறப்பான படமாக உள்ளது. ;)

    ReplyDelete
  7. கடைசிபடம் ஜோர். அதைவிட சூப்பரான படம் கீழிருந்து நாலாவதாகச் சுழலும் படம். A1 Picture.

    எப்படித்தான், எங்கிருந்து தான் உங்களுக்கு மட்டுமே இது போன்ற அனிமேஷன் படங்கள் கிடைக்கிறனவோ!

    அருமையோ அருமையாக உள்ளது.;))))

    ReplyDelete
  8. தாங்கள் இந்தப்பதிவினை வெளியிட்ட வேளை, மாதம் மும்மாரி பொழியட்டும்.

    காவிரி போன்ற நதிகளில் நீர் நிரம்பி வழியட்டும்.

    குளங்கள் ஏரிகள் வாய்க்கால்கள் கால்வாய்கள் கிணறுகள் போன்ற எல்லா நீர் ஆதாரங்களும் செழிப்புடன் விளங்கி மக்களின், குறிப்பாக விவசாயிகளின், துயரைத் துடைக்கட்டும்,

    ReplyDelete
  9. Please visit my post of today Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

    மேலும் ஓர் விருது காத்துக்கொண்டு உள்ளது.

    தயவுசெய்து தங்களுக்கான விருதினை ஏற்றுக்கொள்ள்வும்.

    அடுத்த வாரம் மேலும் ஓர் விருது என் மூலம் தங்களுக்குக் கிடைக்க உள்ளது.

    vgk

    ReplyDelete
  10. மழைக் காலத்திற்கு ஏற்ற பதிவு.
    ஊரில் மழை பெய்கிறதோ இல்லையோ
    தங்களின் பதிவில் நல்ல மழை!

    ReplyDelete
  11. அன்பு இராஜராஜேஸ்வரி உங்கள் பின்னூட்டத்திலிருந்து திரு.கோபலகிருஷ்ணனின் அவார்ட் பற்றித் தெரிந்து கொண்டேன்,. அக்கறை எடுத்துச் சொன்னதற்கு மிகவும் நன்றி. என்னை ஆண்டவள் சொன்னாள். சேன்னையில் மழை இரண்டு நாட்களாக இரவில் பெய்கிறது.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  12. உலக நலத்திற்கு மழை வேண்டி பிரார்த்திக்கும் அருமையான பகிர்வுக்கு இதயம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. Malai vendi prathikkum kulumathilil ennaium serthunkal pl....
    Ali malai Kanna......
    Venduthalai nerivettru Kanna.....
    Arputhamana padankal.....

    Ennai maranthu en kaikalai padathukku mun neethiviten malaiyil nanivatharku......

    Congragulation receiving award From Respected Gopalakrishnan Sir.
    viji

    ReplyDelete
  14. //வல்லிசிம்ஹன் said...
    அன்பு இராஜராஜேஸ்வரி உங்கள் பின்னூட்டத்திலிருந்து திரு.கோபலகிருஷ்ணனின் அவார்ட் பற்றித் தெரிந்து கொண்டேன். //

    தங்களுக்கு மட்டுமல்லாது, திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இன்னும் பலருக்கும் தகவல் கொடுத்து, அவர்களையும் ஆங்காங்கே பாராட்டியுள்ளார்கள், மேடம்.

    108 பேர்களில் 107 பேர்களின் வலை இணைப்புகளை நான் கொடுத்துள்ளதால், அவர்களுக்கு இந்த வேலை சற்றே சுலபமாகியிருக்கலாம்.

    என்னதான் இணைப்புகள் நான் கொடுத்து உதவியிருந்தாலும், சிரமத்தைப்பாராமல், அதில் உள்ள பலருக்கும் தகவல் கொடுத்து, கையோடு அவர்களைப் பாராட்ட வேண்டும் என்ற நல்ல மனமும் தங்கமான குணமும்,
    அவர்களிடம் நிறையவே உள்ளது.

    அது தான் எனக்கும் அவர்களிடம் மிகவும் பிடித்துள்ள மிக்வும் பாராட்ட வேண்டிய குணமாகத் தெரிகிறது.

    அவர்களின் இந்த மகத்தான செயலுக்கு என் மனமார்ந்த நன்றிகளை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதைச் சுட்டிக்காட்டியுள்ள தங்களுக்கும் என் நன்றிகள்.

    அன்புடன்
    VGK



    அக்கறை எடுத்துச் சொன்னதற்கு மிகவும் நன்றி. என்னை ஆண்டவள் சொன்னாள். சேன்னையில் மழை இரண்டு நாட்களாக இரவில் பெய்கிறது.
    நன்றி அம்மா.//

    ReplyDelete
  15. வல்லிசிம்ஹன் said...
    //என்னை ஆண்டவள் சொன்னாள். சேன்னையில் மழை இரண்டு நாட்களாக இரவில் பெய்கிறது.
    நன்றி அம்மா.//

    எங்கள் ஊர் திருச்சியிலும் நேற்று இரவு லேசாக மழை பெயதது மேடம்.

    இருப்பினும் காவிரி நதி வரண்டு கிடப்பதைப் பார்க்க கண்ணீர் தான் வருகிறது.

    விரைவில் மேலும் நிறைய மழை பெய்து தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல், காவிரி பொங்கிப் பாய்ந்தால் மனம் சந்தோஷமடையும்.

    இவர்களின் பதிவினால் நிச்சயம் அதுபோல நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ;)))))

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  16. Nalla pathivu. Enga oriel ethu tapping alum idavapaathi Masai (June) il kandipaa Masai vat humdrum. Back to school pokum nodal naal puthiya uniform poodurikku athellam Korda nanainch the papa poi yummu avlavu Masai around kaalathila annual ippa anthrax alavauku illai enraalum amazing a irukku.

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post ""வாழ உலகினில் பெய்திடாய்"":

    //viji said...

    Congragulation receiving award From Respected Gopalakrishnan Sir.
    viji//

    ஆஹா! தோழியின் தோழி அவர்களின் சொற்களில் இனிமை அதிகமாகவே உணரமுடிகிறது,

    மனமார்ந்த இனிய நன்றிகள், திருமதி விஜி மேடம்.

    அன்புடன் vgk

    இனிமையான கருத்துரைகளுக்கு நிறைவான நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  18. அற்புதமான படங்களுடன் மணக்கிறது பதிவு.
    திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. Wow, What a use of Internet to create a feeling of rain , inside the blog. And that too with the famous Pasuram.புல்லரிச்சு போச்சு!

    Superb!
    I experienced the sense of rain, within my mind, and outside, in Hyderabad right now, it is cool and cloudy.

    Thanks.

    ReplyDelete