நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே , எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான். யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான்
ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது
தன்னம்பிக்கையுடன் முயன்றால் தடைக்கற்களே படிக்கற்களாகும் அதிசயம் நிகழ்த்தப்படுவதை கண்கூடாகக்காணலாம்...
தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு . செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும். ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம்
நம் பிள்ளைகளின் தன்னம்பிக்கையையும் சூழ்நிலைக்கேற்றபடி வளர்க்க வேண்டும்.
மன உறுதியுடனும் உடல் உறுதியுடனும்
எல்லாம் நன்மைக்கே என்று எதையும் நேர் முகமாகமான (positive) எண்ணங்களுடன் லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு செய்யும் செயலைப் புதுமையான முறையில்செயல் பட முனைய வேண்டும்...
பயனுள்ள எதைப் பற்றியாவது சிந்தித்து பிரச்சினைகளை எதிர் நோக்கும்போது அமைதியாகவும் தெளிவாகவும் மனதை வைத்திருத்தல் தன்னம்பிக்கையின் திறவுகோல்...
பிறருடன் கலந்து பேசி அவர்களைப் புரிந்து கொள்வதால் அவர்களது அனுபவம் கிடைக்கும்.
வாழ்க்கைஉன்னதமான ஒன்றாக முடிந்தவரை குறைகள் மற்றவர்களுக்குத் தெரியுமுன் சரி செய்ய முயலுதல் அவசியம்...
பிறரைக் கவர்ந்து புரிய வைத்து :ஏற்றுக் கொள்ளச் செய்தல் தன்னம்பிக்கைத் தத்துவம் ஆகும்...
ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் தேனீ பெறும் தேன் மனிதனால் பறித்துக்கொள்ளப்பட்டாலும் தேன் உண்டாக்கும் கலையை தேனீயிடமிருந்து மனிதனால் ஒருபோதும் திருடமுடியாது ..
துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற
வேண்டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் வெல்ல முடியும்.
கவலையும் காணாமல் போய்விடும்.
மகோன்னதமான மனப்பான்மை கொண்ட தேனீயின் சுறு சுறுப்பும் , எறும்பின் தனித்துவமும் தன்னம்பிக்கையின் தித்திப்பு ...மனிதன் கற்க வேண்டிய பாடம்...
நனைந்த விறகை பிடித்திருக்கும் கைகளுக்கு தீப்பந்தம் பிடிக்க கற்றுத் தருவதும் ,
தோல்விகளின் கூரிய பற்களால் கிழிந்து ஓட்டம் நின்று போன இருதயத்தை, ஒட்ட வைத்து தைத்து மீண்டும் இயங்க வைக்க போராடும் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணரின் வேலையைச் செய்வதும் தன்னம்பிக்கை தானே !
. ஊனமுற்ற நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் மனித மனங்களின் கால்களில் சக்கரத்தை கட்டி விட்டு ஓட வைப்பதும் தன்னம்பிக்கையே !1
தன்னம்பிக்கையுடன்
ReplyDeleteதித்திப்புத் தத்துவத்தைப் படித்துவிட்டு
பிறகு எப்போதாவது திரும்ப வருவேன் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது.;)
அருமையான தத்துவங்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி வருகிறேன் பிறகு...
மிக அருமையான பதிவு.....
ReplyDeleteமரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன்.
ReplyDeleteநம்பிக்கை மனசை சுத்தம் செய்கின்றன//
அருமையாக இருக்கிறது.
மனிதனுக்கு தன்னம்பிக்கை அவசியம் என்பதை அழகாய் சொல்லிவிட்டீர்கள் படங்கள் எல்லாம் அழகு.
பூனை தன் முகத்தை சிங்கமாக நினைத்துப்பார்க்கும் படம் அருமையான தத்துவமாக உள்ளது.
ReplyDeleteவிண்ணை நோக்கி படிகளில் ஏறிச்செல்பவரின் கற்பனை படமும் அழகோ அழகு தான்.
எப்படித்தான் பொருத்தமான படங்களாகத் தேர்ந்தெடுத்து பதிவு போடுகிறீர்களோ!
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. ;)))))
/நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே!
ReplyDeleteஎவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான்.
யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான்/
சூப்பர், கேட்கவே மிகவும் அழகாகத்தான் உள்ளது. ;))))
/நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே!
ReplyDeleteஎவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான்.
யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான்/
சூப்பர், கேட்கவே மிகவும் அழகாகத்தான் உள்ளது. ;))))
/செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது.
ReplyDeleteஉடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும்.
ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம்/
/நீ வைக்க மறுக்கும் நம்பிக்கையை உன்மேல் வேறுயார் வைக்க இயலும்?/
/பெற்றோர்கள் காலத்திற்கேற்ப தாங்களும் மாற்றிக் கொள்ளவேண்டும்./
அடடா! எனக்கே எனக்குத் தாங்கள் சொல்லும் உபதேசம் போல உள்ளது.
நன்றியோ நன்றிகள். ;)))))
/பிறரைக் கவர்ந்து புரிய வைத்து, ஏற்றுக் கொள்ளச் செய்தல் தன்னம்பிக்கைத் தத்துவம் ஆகும்./
ReplyDeleteஇந்தத் தன்னம்பிக்கை என்ற தத்துவ குணம் தங்களிடம் நிறையவே உள்ளது.
எங்களை எல்லோரையும் தங்களின் பதிவுகள் மூலம் கவர்ந்து விட்டீர்கள்.
நாங்களும் தங்களையும் தங்களின் தங்கமான குணத்தையும் நன்கு புரிந்து கொண்டு விட்டோம்.
;)))))
/ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் தேனீ பெறும் தேன் மனிதனால் பறித்துக்கொள்ளப்பட்டாலும் .....
ReplyDeleteதேன் உண்டாக்கும் கலையை தேனீயிடமிருந்து மனிதனால் ஒருபோதும் திருடமுடியாது./
தேன் போன்ற இனிமையான தத்துவ விளக்கம்.
ஒன்றல்ல இரண்டல்ல 108 தேனீக்கள் சேர்ந்தது போன்ற தங்களின் ஆர்வத்துடன் கூடிய கடும் உழைப்பினை நேற்றே என்னால் முற்றிலுமாக உணர முடிந்தது, ;)))))
தங்களின் தேன் போன்ற பதிவுகள் தரும் கலையைத்தான் என்னால் ஒருபோதும் திருட முடியாமல் உள்ளது. ;(
அனைத்தும் அருமை சகோ!
ReplyDeleteஎறும்புகளின் ஊர்ந்து செல்லும் படங்களும் விளக்கங்களும்
ReplyDeleteகரும்பாய் இனித்தன;
மிக்க மகிழ்ச்சி.
இந்த அரிய பெரிய தத்துவங்களையெல்லாம் மிகச்சுலபமாகப் புரிந்து கொள்வதுபோல அவ்வப்போது எடுத்துச்சொல்ல தஙகளைப்போன்ற தங்கமானவர் எப்போதும் என் அருகிலேயே இருக்க வேண்டும்.
அதுவே யானை பலம் வந்ததுபோல இருக்கும், என்னைப் போன்றவர்களுக்கு..... !
என்ன செய்ய? எல்லாவற்றிற்குமே கொடுப்பிணை வேண்டுமே!
ஏதோ தங்களை அவ்வப்போது தொடர்பு கொண்டு தங்களின் பொன்னான ஆலோசனைகளை, அம்பாளின் அருள் வாக்கு போல, கேட்பதிலேயே எனக்கு ஓரளவு நிம்மதியாக உள்ளது.
அதுவாவது நீடித்தால் ... சரியே!
படங்கள் அத்தனையும் அழகோ அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteஇன்னும் நிறைய பாராட்டி எழுத வேண்டும் என்ற ஆசை மனதில் நிறையவே உள்ளது.
இங்கு இன்று சூழ்நிலை அதற்குத் தகுந்தாற்போல இப்போது இல்லை.
கற்பூரமாகப் புரிந்து கொள்வீர்கள் என்ற தன்னம்பிக்கை எனக்கு உள்ளது.
தன்னம்பிக்கையளிக்கும் தங்கமான பதிவினைத் தந்துள்ள என் தங்கத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
நிறைவான நன்றிகள்.
பிரியமுள்ள
VGK
தன்னம்பிக்கையுடன் நன்றி ராஜராஜேஸ்வரி அக்கா ...அருமை.......
ReplyDeleteவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பல முறை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி அக்கா....
ReplyDeleteவித்தியாசமான பதிவு .வாழ்த்துக்கள்.
தன்னம்பிக்கை பற்ரிய அருமையான பகிர்வு
ReplyDeleteதித்திப்பு என்றாலே கூடுதல் சுவை. தித்திப்பு தத்துவமும் படங்களும் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
ReplyDeleteஇரயில் பயண வாழ்க்கையில் தன்னம்பிக்கை அவசியம் என்பதனை சிம்பாலிக்காக பதிவின் இறுதியில் கொடுத்திருப்பது சிறப்பு! அத்தனை படங்களும், பகிர்வில் பகிரப்பட்ட கருத்துக்களும் நினைவில் நிறுத்த வேண்டியவை! பகிர்விற்கு நன்றி சகோதரி!
ReplyDeleteநல்ல கருத்துக்கள். ரசித்தேன்.
ReplyDelete"பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
ReplyDeleteவிண்டுமி போனால் முளையாதாம்-கொண்டபேர்
ஆற்றுலுடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல்"---
ஆற்றலுடன் தன்னம்பிக்கையும் வேண்டும். நல்ல கருத்து!
தன்னம்பிக்கை வந்தால் பூனையும் சிங்கமாகும்.
ReplyDeleteadengappaaaaaaa.....
ReplyDeletepadangalum-
paadangaum-
arumai!
படித்து முடித்ததும் என் நம்பிக்கையின் பலம்
ReplyDeleteகொஞ்சம் அதிகரித்திருப்பது நிஜம்
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
பயனுள்ளபதிவு
தொடர வாழ்த்துக்கள்
அந்தக் கடைசிபடம் பல்வேறு தகவல்களைத் தருவதாக அமைந்துள்ளது.
ReplyDeleteஎந்த ஒரு சிறிய இடத்தையும் வீணாக்காமல் எத்தனை எத்தனை சிறிய ஜீவன்கள், பயம் என்பதே சற்றும் இல்லாமல், குடும்பமே நடத்தி தங்கள் பிரஜைகளின் உற்பத்தியைப் பெருக்கி வருகின்றன!
அவற்றிற்கு உள்ள தன்னம்பிக்கைகூட நமக்கு ஏனோ இருப்பதில்லை.
எங்கள் வீட்டில் புத்தம் புதிதாக வாங்கி வைத்துள்ள இரண்டாவது ஸ்பிலிட் ஏ.ஸி யின், வெளிப்புற கம்ப்ரெஸர் யூனிட்டில் அணில்கள் குடும்பமே நடத்தி வந்ததில், ஏ.ஸி. யில் குளுமை வராமல் போய்,வாரண்டி பீரியடிலிருந்தும், ரூ.8000 செலவழித்து கம்ப்ரெஸ்ஸர் என்ற ஓர் உதிரி உறுப்பினை மாற்றும் படியாக ஆனது.
ஸ்ரீராமரால் அன்புகாட்டிய அணில்களைத்துரத்தி விட்டு, வலைக்கம்பிகள் போட்டதில் எனக்கு மிகவும் வருத்தமே!
சோர்ந்த மனதுக்கு ஊக்கம் தரும் தன்னம்பிக்கை பதிவு.பகிர்விற்கு நன்றி
ReplyDelete******************
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.ஒவ்வொரு முறையும் எனக்கும் தெரிவித்து வாழ்த்துவதற்கும் நன்றி மேடம்.
தோல்விகளின் கூரிய பற்களால் கிழிந்து ஓட்டம் நின்று போன இருதயத்தை, ஒட்ட வைத்து தைத்து மீண்டும் இயங்க வைக்க போராடும் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணரின் வேலையைச் செய்வதும் தன்னம்பிக்கை தானே !//
ReplyDeleteதத்துவம் ஒவ்வொன்று முத்துகள் அதன் ஒத்த படங்கள் காட்சிகள் மனதை ஒரு முக படுத்துகிறது ஒரு சில நொடிகளில் ........ஒரு தியானத்தை அனுபவித்தது போல அருமை தோழி
வாசிக்க வாசிக்க மனதில் தைரியம் ஏறுவதுபோல...படங்களும் விளக்கங்களும்...ஆன்மீகத்தோழியா தத்துவத் தோழியா நீங்கள் !
ReplyDeleteதன்னம்பிக்கையின் தித்திப்புக்கு ஈடிணையேது...?!
ReplyDeleteஅருமை.....
ReplyDeleteஅருமை.....
ReplyDeleteஅருமை.....
ReplyDeleteஅருமை.....
ReplyDeleteஅருமை.....
ReplyDeleteஅருமை.....
ReplyDeleteநீயே உன் மேல் வைக்க மறுக்கும் நம்பிக்கையை வேறு யார் உன் மேல் வைக்க முடியும் .....அற்புதமான வாக்கியம்....அனைத்துமே அருமை
ReplyDeleteஉங்களுடைய இந்தஇடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்!
ReplyDelete