என்று பாடிய திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்
முத்தி லங்குமாறு வல்லுமை அஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள் கரு காவூர்எம்
அத்தர் வண்ணம்அழ லும் அழல் வண்ணமே
- என ஞான சம்பந்தர் முத்து சிவிகையில் பதினாறாயிரம் அடியார்களுடன் எழுந்தருளி தனக்கு முத்து சிவிகை, முத்து குடை முத்துச் சின்னங்கள் அளித்த பெருமானை நினைத்து நன்றிப் பெருக்கோடு திருகருகாவூர் பதிகத்தில் முத்து என்ற சொல்லை மங்கள சொல்லாக வைத்து பாடியுள்ள பாடல் சிறப்பு பெற்றது.
தொடர்புடைய ப்திவு..
http://jaghamani.blogspot.in/2012/08/blog-post.htm
கற்பகமாய் அருளும் கர்ப்பரட்சாம்பிகை
வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால்
சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
கௌதம முனிவர் செய்த பசுவதை பழி நீங்க திருக்கருகாவூர் வந்து புனித நீரில் நீராடி வழிபட்ட லிங்கம் கௌதமேசுவரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியின் எதிரே தனிச் சன்னதியில் அமைந்துள்ளது.
தட்சனது சாபத்தால் வேதனையுற்ற சந்திர பகவான் பங்குனி பௌர்ணமி நாளில் சிவ பூஜை செய்த பங்குனி பௌர்ணமி நாளில் நிலவின் ஒளி இறைவன் திருமேனியில் ஒளிர்கிறது..
திருக்கருகாவூர் திருக்கோயிலில் தல இறைவன்முல்லைவனநாதர் புற்று மண்ணினால் ஆனவர் .. விநாயகமூர்த்தி, நந்தி பகவான் மூவரும் சுயம்பு வடிவமாகவும், சிவன் சன்னதியின் பின்புறம் லிங்கோத்பவர் அமைந்திருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் அமைந்திருப்பது சிறப்பு
திருக்கருகாவூர் திருக்கோயிலில் தல இறைவன்முல்லைவனநாதர் புற்று மண்ணினால் ஆனவர் .. விநாயகமூர்த்தி, நந்தி பகவான் மூவரும் சுயம்பு வடிவமாகவும், சிவன் சன்னதியின் பின்புறம் லிங்கோத்பவர் அமைந்திருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் அமைந்திருப்பது சிறப்பு
சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ள இறைவனது சன்னதிக்கும், இறைவி சன்னதிக்கும் இடையினில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ள சோமாஸ்கந்த அமைப்பினை சேர்ந்தாற்போல் மும்முறை வலம் வந்து வணங்கினோம்..
திருக்கருகாவூர் அம்மை 64 சக்தி பீடங்களில்
முதன்மையான வீர சக்தியம்மன்
பொன்னி நதி பாய்வதால் வளம் செழிக்கும் தண் செய் வயல்கள்
சூழ் தஞ்சை வள நாட்டிலே, பாபநாசம் வட்டத்தில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது
சூழ் தஞ்சை வள நாட்டிலே, பாபநாசம் வட்டத்தில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது
ஆலயத்தின் உள்ளே நுழைந்ததுமே வடப்பக்கம் வசந்த மண்டபம்! .
சுவாமி கோயிலும் அம்பிகை கோயிலும்
தனித்தனி பிரகாரத்திற்குள் அமைந்திருக்கிறது.
அம்பாள் பாதத்தில் உள்ள ஸ்கந்தரை தங்கள் முந்தானையில் ஏந்தி அதனை தங்கத்தொட்டிலில் இட்டு சன்னதியை வலம் வந்தால் விரைவில் குழந்தை பேறு கிடைக்கும்.
சுகப்பிரசவம் அடைய கர்ப்பரட்சாம்பிகை திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது.
கர்ப்பரட்சாம்பிகையின் அருளால் வேதிகையின் கரு நலமுடன் வளர்ந்து வந்தது. சிவபெருமானின் கட்டளைப்படி காமதேனுவே பால் சுரந்து அவளுக்கு அளித்தது.
தன் மனைவியின் கருவை காத்தது போலவே இந்த உலகில் திருக்காவூரில் தங்களை வேண்டி தரிசிக்கும் எந்தவொரு பெண்களின் கருவிற்கும் எந்தவித இன்னலும் வராமல் பாதுகாக்க வேண்டும் என்று நித்துருவர் கர்ப்பரட்சாம்பிகையிடம் வேண்டிக் கொண்டார்.
கர்ப்பரட்சாம்பிகை அம்மன், இன்றும் தன்னை நாடிவரும் அனைத்து பெண்களின் கருவையும் காத்து வருகிறாள்
குடும்பத்தில் வம்ச வழி தோஷத்தால் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் ஸ்ரீ கர்ப்பர்ட்சாம்பிகை சந்நிதிக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் "நெய் தீபம்" ஏற்றி வணங்கி வந்தால் வம்ச வழி புத்திர தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் ஏற்படும்
இந்த விசேஷமான எண்ணெய்... கோளாறுகளோ பேறு கால ஆபத்துகள், பின்விளைவுகள் இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
இந்த விசேஷமான எண்ணெய்... கோளாறுகளோ பேறு கால ஆபத்துகள், பின்விளைவுகள் இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
ஆடிப்பூர நன்னாளில் அம்மை கர்ப்பர்ட்சாம்பிகை
தீர்த்தவாரி கண்டருளிகிறார்.
நடராஜர் மண்டபத்தில் உள்ள தேர் சக்கரமும், குதிரையும்
காணக் கண் கோடி வேண்டும்
தீர்த்தவாரி கண்டருளிகிறார்.
நடராஜர் மண்டபத்தில் உள்ள தேர் சக்கரமும், குதிரையும்
காணக் கண் கோடி வேண்டும்
கோவிலின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் அழகிய பூக்கள் நந்தவனமாக இருக்கும்.
ReplyDeleteபத்மா
கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்கு ஒரு முறை சென்று உள்ளேன்...
ReplyDeleteஅம்மனின் கருணையே தனி...
உங்கள் பதிவின் மூலம் மறுமுறை சென்று வந்த உணர்வு...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
Good Title ...
ReplyDeleteBeautiful Pictures ...
Excellent Details ....
Thanks for sharing !
புகைப்படங்கள் கோவிலை ஒரு முறையாவது தரிசிக்கும் என்னத்தை மனதில் தோற்றுவிக்கிறது! எனக்கு இன்னும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்!
ReplyDeleteஅருமையான பதிவு!
கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்கு இரண்டு மூன்று தரம் போய் இருக்கிறேன்.
ReplyDeleteஇன்று உங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்தேன்.
நன்றி.
அம்மா வழி ஊர். நான் பிறந்த ஊர் (ஹிஹி).
ReplyDeleteகட்டுரையைப் படித்தது அங்கே போய் வந்த உணர்வைக் கொடுத்தது. இப்பொழுது இவ்வளவு சுத்தமாக இருக்கிறதா?
ஆடிச் செவ்வாய் அன்று மிக மிக அருமையான
ReplyDeleteதரிசனம் தங்க்கள் பதிவால் கிடைத்தது
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
கர்ப்ப ரட்சாம்பிகை தரிசனம் கண் குளிர வைத்தது! அருமை!
ReplyDeleteஇன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html
ஆடிச் செவ்வாயில் அம்பாள் தரிசனம் பெற்றதுபோல் ஓர் உணர்வு !...மிகச் சிறப்பாக இருக்கின்றது ஆக்கம்
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள் சகோதரி .மிக்க நன்றி பகிர்வுக்கு .
My Heartiest Congratulations to you, Madam, for your Successful 625th Post.
ReplyDeleteAll the Best.
"YOU ARE THE BEST"
vgk
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திருமணத்தை முன்னிட்டு, திருக்கருகாவூர் கோயிலுக்கு சென்று இருக்கிறேன். உங்கள் பதிவை பார்த்ததும் அந்த நாள் ஞாபகம் வந்தது. வழக்கம் போல படங்களும் பதிவும் அருமை. திருச்சியில் திருக்கருகாவூர் அம்மன் பெயரில் டாக்டர் திருமதி ஜெயம் கண்ணன் அவர்கள் செயற்கை கருத்தரிப்பு மய்ய மருத்துவ மனை ( Garbba Rakshambigai Fertility Centre (P) Ltd ) ஒன்றை நடத்தி வருகிறார்.
ReplyDeleteகற்பகமாய் அருளும் காவியப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
ReplyDelete3909+2+1=3912
ReplyDelete