Thursday, August 9, 2012

ஸ்ரீ கிருஷ்ணலீலா தரங்கிணி


http://www.myhero.com/images/philosophers/krishna/krishna1.jpg
ஹிமகிரி தனயா பத்யம் ஹேமாசல சாப சமுதிதம் தேஜ: 
கிமபிமஹத்தம் மாத்யம்  ஸ்மர்த்தவ்யம் விக்னதிமி ஹரனாய
ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி'
-கதாகாலட்சேபம் செய்பவர்கள் முதல் பாடலான 
கணபதி துதி சுலோகத்தைப் பாடியே தொடங்குவது மரபு....
வரகூர் பெருமாள் நாராயண தீர்த்தரிடம் ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்தத்தை- கிருஷ்ண லீலைகளை -  நடனத்திற்கு ஏற்ப செய்திடப் பணித்த வண்ணம்,  வடமொழியில் "ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்னும் கிரந்தத்தை இயற்றினார்.
கருடபகவானைப் பாடி, பின்னர் பூரி ஜெகந்நாதரைப் பாடி 
பிறகு வரகூர் பெருமாளை,
"ஸர்வஞான க்ரியா சக்திம் ஸர்வ யோகீஸ்வர ப்ரபும் 
ஸர்வ வேதமயம் விஷ்ணும் ப்ரப விஷ்ணும் உபாஸ்மஹே' 
என்று போற்றுகிறார் நாராயண தீர்த்தர்...
தசாவதார கீர்த்தனைகள், கண்ணன் பிறப்பு, கண்ணனின் லீலைகள் என்று பாடி, இறுதியாக ருக்மிணி திருமணத்தை மிக விரிவாகப் பாடியுள்ளார். 
http://media1.santabanta.com/full1/Hinduism/Lord%20Krishna/lord-krishna-60d.jpg
 பாடல்களைப் பாடி நர்த்தனமும் புரிந்தார் நாராயண தீர்த்தர்.  
பாடலின் இசையில் மயங்கிய பெருமாளும் நடனம் புரிவாராம். 
அங்கே நட்டுவனாராக இருந்தவர் ஆஞ்சனேயர் . அதற்கேற்ப இங்குள்ள ஆஞ்சனேயரின் பெயர் தாளங்கொட்டி ஆஞ்சனேயர் என்பதாகும்
கோவிலில் ஒரு துறவி நடனமாடுவதை கிராமத்திலிருந்த 
ஆன்மிகவாதிகள் கண்டித்தனர். 
"இது வேங்கடவன் ஆணை. அவருமல்லவா என்னுடன் நடனமாடுகிறார்!' என்றார் நாராயண தீர்த்தர்.
"அப்படியெனில் அதை நாங்களும் காண வேண்டும்' என்று 
அவர்கள் சொல்ல, இறைவனை வேண்டினார் தீர்த்தர். 
இறைவனை வணங்கி நாராயண தீர்த்தர் பாட, சந்நிதிக்குள் 
பெருமாள் நடனம் ஆடினார். 
அவரது சலங்கை ஒலி ஜல்ஜல் என்று அனைவரது 
செவிக்குள்ளும் புகுந்து மெய்சிலிர்க்க வைத்தது. 
 http://www.lassiwithlavina.com/wp-content/uploads/2010/03/Krishna-11.jpg
வியாசர் பாகவதத்தில் ராதையைப் பற்றிக் கூறவில்லையே என்ற ஆதங்கத்தில், பூரி ஜெகந் நாதரே ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்தம் என்னும் பக்தி ரசம் சொட்டும் கிரந்தம் செய்தாராம். 
http://www.totalbhakti.com/wallpaper/image/thum_1280x1024/lord-krishna-768.jpg
ஜெயதேவர் கண்ணனின் லீலைகளைப் பாடவில்லையே என்று வருந்தி, நாராயண தீர்த்தராக அவதரித்து கண்ணனின் லீலைகளைப் பாடினார்,,,,
இன்றும் வரகூர் ஆலயத்தில் கிருஷ்ணலீலா தரங்கிணி பாடப்படுகிறது. ஜென்மாஷ்டமியிலும் நவமியிலும் சிறப்பாக உற்சவங்கள் நடக்கின்றன.

"ஸ்ரீகோபாலன் என்னும் கார்மேகத்திலிருந்து பெருகிய- அவரது பெருங்கருணை என்னும் மழைத் தாரைகள், ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற மலைமீது விழுந்து பரவி, அவை முழுதும் ஒன்று சேர்ந்து, இந்த கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் ஆறாகத் தோன்றி, கிருஷ்ண பக்தர்கள் என்னும் வயலில் பாய்ந்தோடி, உலகை இன்பமுறவும் ஆனந்தமுறவும் செய்யும்!'
திரு . balasubramaniam G.M   ஐயா அவர்கள் அனுப்பிவைத்த
அருமையான ஓவியம்
 https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=610c35685a&view=att&th=1390fdbd1b7e884e&attid=0.1&disp=inline&realattid=f_h5pt0q6y0&safe=1&zw&saduie=AG9B_P8zGJs0Rg0M_zZnphEiwVHC&sadet=1344594534900&sads=j00z5AE4BEk0bmN14QS2QAN7330&sadssc=1

http://www.dollsofindia.com/dollsofindiaimages/shiva-pictures/young-krishna-on-lord-shivas-lap-AD85_l.jpg

33 comments:

  1. krishna photos are superb especially the child photos

    ReplyDelete
  2. நல்லதொரு நாளில் அருமை பகிர்வைக் கண்டு பரவசமடைந்தேன்.... மிக்க நன்றி...

    ReplyDelete
  3. நான் வரைந்த கண்ணனின் ஓவியம் ஒன்றை உங்களுக்குப் பரிசாக இந்தப் பெட்டியில் வைக்க முயன்று தோற்றேன். இருந்தால் என்ன.? என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. G.M Balasubramaniam said...
    நான் வரைந்த கண்ணனின் ஓவியம் ஒன்றை உங்களுக்குப் பரிசாக இந்தப் பெட்டியில் வைக்க முயன்று தோற்றேன்.

    இருந்தால் என்ன.? என் வாழ்த்துக்கள்.

    வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  5. திண்டுக்கல் தனபாலன் said...
    நல்லதொரு நாளில் அருமை பகிர்வைக் கண்டு பரவசமடைந்தேன்.... மிக்க நன்றி...

    கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  6. arul said...
    krishna photos are superb especially the child photos

    கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  7. superb pictures.
    It is my fortune I am able to see this posting just in time, before starting Janmashtami puja.
    Kannan varuvan
    nam ellorukkum arul purivan.

    G.M.Balasubramaniam may send his photo to my email. I sh be able to place your drawing on this picture.

    subbu rathinam
    http://meenasury@gmail.com

    ReplyDelete
  8. sury said...
    superb pictures.
    It is my fortune I am able to see this posting just in time, before starting Janmashtami puja.
    Kannan varuvan
    nam ellorukkum arul purivan.

    G.M.Balasubramaniam may send his photo to my email. I sh be able to place your drawing on this picture.

    subbu rathinam
    http://meenasury@gmail.com

    கண்ணன் வந்து
    அருள் புரியும் ஜன்மாஷ்ட்டமியின்
    அற்புத தருணத்தில்
    அளித்த
    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  9. ஹிமகிரி தனயா பத்யம் ஹேமாசல சாப சமுதிதம் தேஜ:

    ஆஹா.....

    ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியுடன் ஆரம்பித்துள்ள அருமையான பதிவு. ;)

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஹிமகிரி தனயா பத்யம் ஹேமாசல சாப சமுதிதம் தேஜ:

    ஆஹா.....

    ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியுடன் ஆரம்பித்துள்ள அருமையான பதிவு. ;)

    மனம் நிறைந்த இனிய ஜன்மாஷ்ட்டமி தின வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete
  11. இன்றைய கோகுலாஷ்டமிக்கு ஏற்ற பதிவு. சந்தோஷம் தருவதாக உள்ளது.

    ReplyDelete
  12. வை.கோபாலகிருஷ்ணன் said...
    இன்றைய கோகுலாஷ்டமிக்கு ஏற்ற பதிவு. சந்தோஷம் தருவதாக உள்ளது.



    சந்தோஷம் அளிக்கும் கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  13. /வரகூர் பெருமாள் நாராயண தீர்த்தரிடம் ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்தத்தை, கிருஷ்ண லீலைகளை, நடனத்திற்கு ஏற்ப செய்திடப் பணித்த வண்ணம், வடமொழியில் "ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி” என்னும் கிரந்தத்தை இயற்றினார்./

    மிகவும் அழகான அருமையான தகவல்.

    "ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி” என்ற இந்த கிரந்தத்தின் மஹிமையை அறிந்தவர்களுக்கே, அதன் ருசி தெரியும். ;)))))

    இன்றைக்கும் சிற்சில இடங்களில் இவை நாட்டுப்புறக்கலைஞர்களால் மிகச்சிறப்பாக செய்து காட்டி, நாடகமாகவும், நாட்டியமாகவும், வாய்ப்பாடலாகவும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன் said...

    மிகவும் அழகான அருமையான தகவல் பகிர்வுடன் அளித்த கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  15. //அங்கே நட்டுவனாராக இருந்தவர் ஆஞ்சனேயர். அதற்கேற்ப இங்குள்ள ஆஞ்சனேயரின் பெயர் ”தாளங்கொட்டி ஆஞ்சனேயர்” என்பதாகும்.//

    தாளங்கொட்டி வரவேற்க வேண்டிய தகவல் அல்லவா!

    தகவல் களஞ்சியத்திற்கு நன்றியோ நன்றிகள். ;)

    ReplyDelete
  16. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //அங்கே நட்டுவனாராக இருந்தவர் ஆஞ்சனேயர். அதற்கேற்ப இங்குள்ள ஆஞ்சனேயரின் பெயர் ”தாளங்கொட்டி ஆஞ்சனேயர்” என்பதாகும்.//

    தாளங்கொட்டி வரவேற்க வேண்டிய தகவல் அல்லவா!

    ரசனையுடன் அளித்த இனிய கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  17. //அவரது சலங்கை ஒலி ஜல்ஜல் என்று அனைவரது செவிக்குள்ளும் புகுந்து மெய்சிலிர்க்க வைத்தது.//

    தங்களின் இந்தப் பதிவும் என்னை மிகவும் மெய்சிலிர்க்கத்தான் வைக்கிறது.

    வெண்ணெய் திருடிக் கண்ணனைப்பற்றிய எவ்வளவு விஷயங்களை அழகாக, மிருதுவாக, ருசியாக, மணமாக, வெண்ணெய் போல, எளிதில் விழுங்குவதுபோல எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்!

    ReplyDelete
  18. //
    //"ஸ்ரீகோபாலன் என்னும் கார்மேகத்திலிருந்து பெருகிய

    அவரது பெருங்கருணை என்னும் மழைத் தாரைகள், ஸ்

    ரீநாராயண தீர்த்தர் என்ற மலைமீது விழுந்து பரவி,

    அவை முழுதும் ஒன்று சேர்ந்து,

    இந்த கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் ஆறாகத் தோன்றி,

    கிருஷ்ண பக்தர்கள் என்னும் வயலில் பாய்ந்தோடி,

    உலகை இன்பமுறவும் ஆனந்தமுறவும் செய்கிறது!”//

    இதில் எல்லாமே அடங்கிவிட்டது.

    தங்களின் சொல்லாடல்கள் என்றே நினைக்கிறேன்.

    இதைப் படித்து முடித்ததும் அகம் மகிழ்ந்து போனேன்.

    மனமார்ந்த இனிய ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    இதற்காகவே தங்களைத் தாங்களே ஒரு ஷொட்டு கொடுத்துக்கொள்ளவும். ;)

    ReplyDelete
  19. கீழிருந்து ஐந்தாவது படம் மட்டும் இதுவரை திறக்கப்படவே இல்லை.

    மற்றபடங்கள் யாவும் அழகாகவே உள்ளன.

    இன்றும் என் உறவினர் ஒருவர் வீட்டுக்கு இந்த கோபாலகிருஷ்ணனை ஸ்பெஷலாக அழைத்து, உப்புச்சீடை, வெல்லச்சீடை, முறுக்கு, தட்டை, தேன்குழல் போன்ற அனைத்து பிரஸாதங்களையும் கொடுத்து, அவர்களின் வீட்டு, கணினியிலேயே விடியவிடிய வேண்டுமானாலும் அடித்துக்கொள்ளலாம் என்று அன்புக் கட்டளை இட்டுவிட்டதால் .......

    ஏதோ இன்றும் என்னால் தங்கள் பதிவினைப்படித்து [அவர்களையும் படிக்க வைத்து], பின்னூட்டமிடவும் முடிந்தது.

    எல்லாம் அந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் அருள் தான்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  20. அருமை அக்கா நல்ல ஒரு பதிவு ... அனைத்து படங்களும் அருமை ...

    ReplyDelete
  21. கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அற்புதம்!

    இன்று என் தளத்தில்
    ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  22. பொறுத்தமான நாளில் பொறுத்தமான பதிவு. படங்கள் எல்லாமே அழகு

    ReplyDelete
  23. கிருஷ்ண பெருமானின் மீது எல்லோரும் ஏன் மோகம் கொள்கிறார்கள் என்று இப்போது புரிகிறது! இவ்வளவு அழகாக இருந்தால் யாருக்குத்தான் அவர் மேல் காதல் வராது!

    எல்லா புகைப்படமும் அழகு என்றாலும் இரண்டாவது படம் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கிறது!

    ReplyDelete
  24. நன்னாளில் மனம்கவர்ந்த கிருஷ்ணன்.

    அருமையான படங்கள்.

    ReplyDelete
  25. எம் கிருஷ்ணன் பதிவு என்றாலே பரவசம் அடைவேன்! மிகுந்த பரவசமடையச் செய்த பதிவினை அனைவரும் அறியும் வண்ணம் அழகுற பகிர்ந்தமைக்கு நன்றி!
    http://www.krishnaalaya.com

    ReplyDelete
  26. கண்ணனின் படங்கள் அனைத்தும் அருமை..

    ரசிக்கவைக்கும் அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  27. ஆஹா. அற்புதமான படங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. கட்டுரை எழுதியவர்,தகவல்களை எங்கிருந்து பெற்றார்?
    இல்லை அவர் வரகூர்காரரா?

    வரகூரான் நாராயணன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா..

      ஆலய பிரவசனசொற்பொழிவில் கேட்டதை கட்டுரை வடிவில் படங்களை இணைத்து வழங்கியிருக்கிறேன்..

      கருத்துரைக்கு இனிய நன்றிகள் ,...!

      Delete
  29. நாரயணதீர்த்தரின் ஜீவ சமாதி மேலத்திருப்பூந்துருத்தியில் உள்ளது.வரகூர் இங்கிருந்து அருகில்தான் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் நாராயணதீர்த்தர் ஆராதனை மூன்றுநாள் விழாவாக நடைபெறும். இதனை திருப்பூந்துருத்தி வெங்கடேசன் முன்னின்று நடத்துகிறார்.மேலும் கிருஷ்ண ஜன்மாஷ்டமியும் வெகு விமர்சையாக திருப்பூந்துருத்தியில் நடைபெறும்.பல வித்வான்க‌ள் திருவையாற்றைப் போலவே இங்கேயும் வந்து இசையால் ஆராதனை செய்வார்கள்.

    ReplyDelete
  30. நாராயண தீர்த்தர் பாடிய அவ்வளவு தரங்கமும் வரகூர் பெருமாள் முன்பு
    தான் பாடப்பெற்றது. இந்த வருட உரியடித் திருவிழா 29-08-2013
    கிருஷ்ணர் விளையாட்டும் தரங்கமும் கேட்க வாரீர்.

    ReplyDelete
  31. 3915+7+1=3923 ;))

    4 பதில்களுக்கு நன்றிகள்

    ReplyDelete