Saturday, August 18, 2012

சங்கடஹர மங்கல மாருதி


hanuman



 தெளிந்த நல் அறிவு வேண்டும்; தேகத்தில் வலிமை வேண்டும்!
பொலிவுறும் தேஜஸ் வேண்டும்; பண்பினில் துணிவு வேண்டும்!

அச்சமில் இயல்பு வேண்டும்; ஆரோக்ய உடலும் வேண்டும்!
இச்சைகள் அடக்கும் தன்மை இனியசொல் வினயம் வேண்டும்!

வினையாற்றும் திறமை வேண்டும்; விவேகம் நிரம்ப வேண்டும்!
அனுமனைத் தியானம் செய்தால் அனைத்துமே சித்தியாகும்!

தரிசிப்பவர்களுக்கு, எல்லாவிதமான நோய்களும் நீக்கி, எல்லா சிரமங்களை போக்கும் வகையில் சங்கடகர மங்கல மாருதி என திருவோணமங்கலம் - - நதி ஓடும் இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் பிரமாண்டமாக கும்பகோணம் அருகிலேயே ஆலங்குடி, குரு ஸ்தலம் குரு பார்வையுடன் ஆதிகாலத்தில் அந்தணர்கள் வேதம் ஓதிய  சிறப்பு மிக்க ஸ்தலமான..ஞானபுரியில் அமைந்து அருள் பொழிகிறார்...
.குடந்தை - மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆலயம் அமைந்துள்ளது..
32 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை செய்ய காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள சிறுதாவூரில் பூமிக்கு அடியில் இருந்து 40 அடி நீளம், 15 அடி அகலம், 30 அடி கனம் கொண்ட 380 டன் கல் அரசின் சிறப்பு அனுமதியுடன் எடுக்கப்பட்டன. 

கோதண்டராம பெருமாள் கோலத்தில் அமையும்படி ராமர், லட்சுமணர், சீதை சிறிய ஆஞ்சநேயர் மற்றும் லட்சுமி நரசிம்மர் சிலைகள் உருவாக்கப்பட்டு, ஞானபுரிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

ராமர், ராவணன் போரின் போது முக்கியமான நான்கு மூலிகைக்காக ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையையே எடுத்து வந்தார். 

நான்கு மூலிகைகள் விசல்ய கரணி, சந்தான கரணி, சவர்ண கரணி 
மற்றும் மிருத்த சஞ்சீவினி. 

வேல், அம்பு போன்ற இரும்பு பொருட்கள் உடலில் இருக்கும் இடத்தில் விசல்ய கரணியை வைத்து கட்டினால் உள்ளே இருக்கும் இரும்பு பொருள் வெளியில் வந்துவிடும். 

இதன் மூலம் ஏற்பட்ட புண்ணை சந்தான கரணி மூலிகை விரைவில் குணமடைய செய்யும். 

சவர்ண கரணி மற்றும் மிருத்த சஞ்சீவினி மூலம் உடலில் புண்கள் மூலம் ஏற்பட்ட தழும்புகளை சரி செய்ய முடியும். 

அதனால், இந்த நான்கு மூலிகைகள்  விஸ்வரூப ஆஞ்சநேயர் 
இடுப்பில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. 

 கோவிலின் பிரதான பெருமாளாக கோதண்டராமர் சுவாமி 
திருக்கோலத்தில் ராமபிரான் அருள்கிறார்..!
சகல ரோகங்களையும் நிவர்த்திப்பவராக இடுப்பில் சஞ்சீவி மூலிகைகளுடன் 32 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார்கள்..... 
லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார்,வராகமூர்த்தி, ஹயக்கிரீவர் சன்னிதிகளும் உண்டு. 

முகப்பில் 176 உயரத்தில் ஆகம சாஸ்திரப்படி சப்த(ஏழு) நிலை ராஜகோபுரம் அமைகிறது. கோவில் உள்ளே புஷ்கரணியும்(குளம்) உருவாக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அன்னதான மண்டபம் எழுப்பப்படுகிறது. 
பாரதியார் பாடியது போல் பசி, பிணிகளை போக்கும்படியும், 
ஞானத்தை வளர்க்கும் படியும், ஆன்மிகம் வளரும்படி அமைக்கப்பட்டுள்ள  ஸ்தலத்திற்கு ஞானபுரி என பெயர் வைக்கப்பட்டு உலகத்திற்கு சேஷமம் ஏற்பட அமைந்துள்ள அருமையான ஆலயத்தில் நாங்கள் சென்ற சமயம் சிறிய திருவடியான அனுமனை பெரிய திருவடியான கருடன் வட்டமிட்டது கண்கொள்ளாக்காட்சியாக மெய்சிலிர்க்கவைத்தது...

முதலில் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் குரு பகவானை தரிசனம் செய்து பிரசன்னம் மூலம் இந்த அருமையான இடத்தை தேர்வு செய்து விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை கோவில் அமைக்கப்பட்டது..

சகல ரோக நிவர்த்தியாகஆஞ்சநேயரை தரிசிப்பவர்களுக்கு, எல்லாவிதமான நோய்களும் நீக்கி, எல்லா சிரமங்களை போக்கும் வகையில் சங்கடஹர மங்கல மாருதி என திருவோணமங்கலம் ஞானபுரியில் திகழ்கிறார்.

Gnanapuri site, is a Goshala… Peace..Silence… Happiness

ஆலய விக்ரஹங்கள் -  கோதண்ட ராமர்

25 comments:

  1. சங்க்டஹர மங்கல மாருதிக்கு நமஸ்காரங்கள். ;)))))

    ReplyDelete
  2. //தெளிந்த நல் அறிவு வேண்டும்; தேகத்தில் வலிமை வேண்டும்!

    பொலிவுறும் தேஜஸ் வேண்டும்; பண்பினில் துணிவு வேண்டும்!

    அச்சமில் இயல்பு வேண்டும்;
    ஆரோக்ய உடலும் வேண்டும்!

    இச்சைகள் அடக்கும் தன்மை இனியசொல் வினயம் வேண்டும்!

    வினையாற்றும் திறமை வேண்டும்; விவேகம் நிரம்ப வேண்டும்!

    அனுமனைத் தியானம் செய்தால் அனைத்துமே ஸித்தியாகும்!//


    அடடா! வெகு அருமையான வரிகள்.

    ஹனுமனைத் தியானம் செய்தால் அனைத்துமே ஸித்தியாகும் என்பதை சனிக்கிழமையான இன்று மிக அழகாகத் தெளிவாகச் சொல்லி விட்டீர்களே! சபாஷ்!!

    மெய்சிலிர்க்க வைக்கிறது என்னை!!!

    ReplyDelete
  3. //வாலாஜாபாத் அருகே உள்ள சிறுதாவூரில் பூமிக்கு அடியில் இருந்து 40 அடி நீளம், 15 அடி அகலம், 30 அடி கனம் கொண்ட 380 டன் கல் அரசின் சிறப்பு அனுமதியுடன் எடுக்கப்பட்டன//

    அடேங்கப்பா !
    3,80,000 கிலோ எடையுள்ள ஒரே கல்!!

    சூப்பரான தகவல் தான் .....

    இந்தத் தகவலுடன் கூடிய இந்தத் தங்களின் பதிவும் மிகவும் கனமான பதிவாக இருக்கும் போல உள்ளது.

    மேற்கொண்டு போய் மற்ற விஷயங்களையும் படிச்சுட்டு வாரேன் ....

    ReplyDelete
  4. விசல்ய கரணி, சந்தான கரணி, சவர்ண கரணி + மிருத்த சஞ்சீவினி என்ற நான்கு மூலிகைகள் பற்றியும்,
    அவற்றின் சிறப்பான குணங்கள் பற்றியும்...........

    தகவல் களஞ்சியத்திடமிருந்து வந்துள்ள இன்றைய மிக முக்கியமான செய்தியினைக் கேட்க வியப்போ வியப்பாகத் தான் உள்ளது.

    சூப்பரான சுவையான தகவல்கள் தான்.

    ReplyDelete
  5. எத்தனை எத்தனை அருமையான தகவல்கள் !
    அள்ளித் தந்த புண்ணியவதிக்கு என் மேலான வணக்கங்கள் !

    ReplyDelete
  6. //அதனால், இந்த நான்கு மூலிகைகள் விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. //

    சகலரோக நிவாரணியாகிய சஞ்சீவி மலை மருந்தின் மகத்துவத்தால் ...
    இடுப்பொடிந்த [மாடுகள்] வர்கள் கூட இவரின் இடுப்பழகினை தரிஸித்தாலே போதுமே!

    உடனே அவர்களுக்கு இளமை திரும்பி

    “இ ஞ் சி இ டு ப் ப ழ கி ...
    ம ஞ் ச ச் சி வ ப் ப ழ கி ...
    ம ற க் க ம ன ம்
    கூ டு தி ல் லை யே ...”

    என ஆடிப்பாடிக்கொண்டு செல்ல முடியும் போலிருக்கே!

    மிகவும் நல்லதொரு தகவல் தான் !

    ReplyDelete
  7. //ஞானபுரி என்ற அருமையான ஆலயத்தில் நாங்கள் சென்ற சமயம் சிறிய திருவடியான அனுமனை பெரிய திருவடியான கருடன் வட்டமிட்டது கண்கொள்ளாக்காட்சியாக மெய்சிலிர்க்கவைத்தது...//

    ஞானமில்லாத என்னைப்போன்றவர்கள் இதுபோன்ற ஞானபுரிக்குச் செல்வது ஓரளவு நியாயமாக இருக்கும்......

    ஞான ஸ்வரூபியான தாங்களும் சென்று வந்தீர்களா ...... ?

    அதுசரி, ஞானம் மட்டுமே ஞானத்துடன் சேர வேண்டும் என்பதே, அந்தக் கோதண்டராமரின்,
    பெரிய திருவடியின் மற்றும்
    சிறிய திருவடியின் திருவுள்ளமாக இருந்திருக்கலாம்.

    அதைப்பற்றி ஞானசூன்யமான எனக்கு எப்படிப் புரியக்கூடும்?

    தாங்கள் சென்று வந்தது தான் உண்மையிலேயே நியாயம்.

    ஏனென்றால் தாங்கள் பார்த்து ரஸித்து மகிழ்ந்து வந்ததை, படமாக்கி, பதிவாக்கி, இன்று உலகில் பலரும் படிக்கும்படியாகச் செய்துள்ளீர்களே.

    அந்த மூர்த்திகள் பற்றி, பலரும் அறியச்செய்ய உங்களால் மட்டுமே முடியும் என அந்த மூர்த்திகளே, நினைத்து உங்களை தங்களிடம், அவர்களே வரவழைத்திருக்கலாம் தான்.

    பாராட்டுக்கள்.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. மனஅமைதி, நிசப்தம், சந்தோஷம் எல்லாவற்றையும் ஒருங்கே அள்ளித்தரும் கோசாலையை வெகு அழகாகக் காட்டியுள்ளீர்கள்.

    அவ்வளவு உயர்ந்த ஹனுமனை பகுதி பகுதியாகப் பிரித்து படுக்க வைத்தும், நிற்க வைத்தும் படமாக்கிக் காட்டியுள்ளது சூப்பராக உள்ளது.

    அதுவும் அவரின் இரு பாதங்களை மட்டும் தனியாகக் காட்டியுள்ளது அதைவிடச் சிறப்போ சிறப்பு. ;))))

    ReplyDelete
  9. Sorry. சென்ற பின்னூட்டத்தின் கடைசியில் ஹனுமன் என தவறுதலாக எழுதியுள்ளேன்.

    படுத்திருப்பவர் ஸ்ரீ கோதண்டராமர் அல்லவா!

    நிற்பவர் தான் நமது ஹனுமார் என்பதைப் புரிந்து கொண்டேன்....
    இப்போது.

    ReplyDelete
  10. ஒரு படத்தில் கோதண்டராமர், சிமிண்டு மூட்டைகளை தலைக்கு வைத்துக் கொண்டு ஹாயாகப்படுத்துள்ளார்.

    அடுத்தபடத்தில் ஹனுமனும் படுத்துள்ளார்.

    ஒரு படத்தில் அவ்வளவு உயரமாக ஹனுமார் கம்பீரமாக நிற்கிறார்.

    ஏதேதோ படங்களை ஆங்காங்கே இணைத்துள்ளதால் சற்றே குழப்பம் ஏற்பட்டு விட்டது.

    BEFORE ERECTION OF THE STATUES & AFTER ERECTION OF THE STATUES ஆகவும் இருக்கலாம்.

    யாம் அறியேன் பராபரமே!

    ReplyDelete
  11. எல்லாப்படங்களும் மிகவும் அழகாக உள்ளன. அருமையான பதிவு.

    தொடரட்டும் தங்களின் இத்தகைய ஆன்மிகப்பணிகள்.

    மனமார்ந்த வாழ்த்துகள். VGK

    ReplyDelete
  12. தெளிந்த நல் அறிவு வேண்டும்! வாக்கினிலே இனிமை வேண்டும்! எப்பொழும் என் இறைவனின் திரு நாமத்தினையே உச்சரிக்க வேண்டும்! எண்ணுவதும் எம் இறைவனையே நினைக்க வேண்டும்! ..... தங்களின் இனியப் பயணம் தொடரட்டும்! தொடர்கிறோம்!
    இனிய தகவல்களுடன் அருமையான பகிர்வு. நன்றி!

    ReplyDelete
  13. அருமையான விளக்கங்கள்... பாராட்டுக்கள்... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. வரலாற்று சுவடுகள் has left a new comment on your post "சங்கடஹர மங்கல மாருதி":

    ஆஞ்சநேயர் நாமம் வாழ்க!

    அனைத்து படங்களும் அருமை!

    கருத்துரைக்கு நிறைவான நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  15. வை.கோபாலகிருஷ்ணன் said...

    ஞானம் நிறைந்த கருத்துரைகளால் பதிவினை முழுமையாக்கி ரசிக்கவைத்த அருமையான கருத்துரைகளுக்கு இதயம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  16. படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்

    ReplyDelete
  17. விஸ்வரூப ஆஞ்சனேயர் அருமை.
    [தங்களின் பதிவில் வரும் படங்களை நகல் எடுக்கும் படி செய்தால் நலம்]

    ReplyDelete
  18. அருமையான பகிர்வு படங்கள் மனதில்
    ஒட்டிக்கொண்டது!...தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  19. ஞானபுரியையும், அனுமன் கோவிலையும் அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக தரிசித்து விட வேண்டியதுதான்!
    அறிமுகத் தகவலுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  20. நல்ல தகவல்!
    அருமையான படங்கள்.
    நன்றி

    ReplyDelete
  21. சங்க்டஹர மங்கல மாருதியை பார்த்தது இல்லை.
    பாரதி பாடியது போல் பசி, பிணி போக்கி
    ஞானத்தை வளர்த்து ஆன்மீகம் தழைக்க வந்த ஞானபுரி அனுமனை வழிப்பட்டு எல்லா நலமும் வளமும் பெறுவோம்.
    பெரிய திருவடி, சிறிய திருவடி ஒரு சேரகண்ட உங்கள் மெய்சிலிரிக்கும் அனுபவம் அருமை.
    நன்றி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. தெளிவான புகைப்படங்கள்! முக்கியமாய் படுத்திருக்கும் ராமரின் முகம் நிச்சலனமாக, தெய்வீகக்களை அதிகமாக உள்ளது!

    ReplyDelete
  23. கையெடுத்து வ‌ண‌ங்க‌ச் செய்கின்ற‌ன‌ ... ப‌ட‌ங்க‌ளும் த‌க‌வ‌ல்க‌ளும்!

    வை. கோ. சாரின் ர‌சிப்பும் ருசிப்பும் வெகு சிர‌த்தை! அவ‌ரால் ப‌கிர‌ப்ப‌ட்ட‌ விருது ப‌ற்றிய‌ த‌க‌வ‌லை அக்க‌றையோடு என‌க்கு அறிவித்த‌மைக்கு த‌ங்க‌ளுக்கு ந‌ன்றியும்!

    ReplyDelete
  24. //நிலாமகள் said...

    வை. கோ. சாரின் ர‌சிப்பும் ருசிப்பும் வெகு சிர‌த்தை! //

    என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி நிலாமகள் மேடம், வணக்கம்.

    தாங்களும் இப்போது இதுபோலச் சொல்லி விட்டீர்கள்.

    இதுபோல ஒரு நீண்ட பட்டியலில் உள்ளோர் பலரும், என்னை, இதுபோன்ற பின்னூட்டங்கள் மூலமும், மெயில் மூலமும், சுட்டிகள் மூலமும், தொலைபேசி மூலமும், என்னைத் தட்டிவிட்டு, எழுத வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஏதோ நானும் இவர்களின் அன்றாடப் பதிவினை மட்டும் சிரத்தையாகப் படித்து, பல்வேறு பின்னூட்டங்கள் தந்து கொண்டிருக்கிறேன்.

    எனக்கு இவர்களின் பதிவினில் மட்டும் ஓர் தனி ஈடுபாடு இருந்து வருகிறது. என்னுடைய ஆத்ம திருப்திக்காகவும் விமர்சங்கள் தந்து வருகிறேன்.

    இதனால் மற்றவர்களின் பதிவுகளை நான் அதிகமாக படிக்க முடிவதில்லை, என்பதும் உண்மைதான்.

    என் மனதுக்குப் பிடித்தமான ஒருசில குறிப்பிட்ட பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே நான் வாடிக்கையாகச் சென்று வருகிறேன்.

    //அவ‌ரால் ப‌கிர‌ப்ப‌ட்ட‌ விருது ப‌ற்றிய‌ த‌க‌வ‌லை அக்க‌றையோடு என‌க்கு அறிவித்த‌மைக்கு த‌ங்க‌ளுக்கு ந‌ன்றியும்!//

    தங்களுக்கு மட்டுமல்ல மேடம். அன்று அவர்கள், நான் விருதினைப் பகிர்ந்து அளித்த 108 பதிவர்களில், சரிபாதியான சுமார் 54 க்கும் மெற்பட்டவர்களுக்கு, தகவலும் கொடுத்து பாராட்டியும் உள்ளார்கள்.

    எனக்கே அவர்களின், மிகவும் சிரத்தையான இந்தச்செயல், மிகவும் வியப்பளிப்பதாக இருந்த்து.

    அடுத்த வாரம் இதே போல வேறொரு மெகா விருது அளிப்பு விழா ஒன்று உள்ளது.

    அதற்கும் அவர்கள் மூலம் தங்களுக்குத் தகவ்ல் வரலாம்.

    ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த வாத்ஸல்யத்துடன் உள்ள இந்த எங்களின் மிக அதிசயமான ஆரோக்யமான நட்பு, ஏதோ எழேழு ஜன்மமாகத் தொடரும் ஒன்றாக இருக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது.

    தொடரட்டும் .........

    என்றும் அன்புடன் தங்கள்,

    VGK

    ReplyDelete
  25. 3997 + 11 + 1 = 4 0 0 9

    ஒரே பதிலானாலும் ’ஞானம் நிறைந்த கருத்துக்கள்’ என ஏதேதோ சொல்லி மகிழ்வித்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete