ஓணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் சிறப்பு யானைத் திருவிழாவாகும்.
10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங்களாலும் அலங்கரித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவது கண்கொள்ளாக்காட்சி !
யானைகளுக்கு சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்
கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும்.
ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் கொண்டாடப்படுகிறது. சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவது பிரமிக்கவைக்கும்...
ஓணம் பண்டிகை ஒரு பூத்திருவிழா ...
புத்தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழும் ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ..
கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமானதால் ஓணத்திருநாளையும் பூக்களின் திருவிழாவாகப் பூத்து மலரவைக்கிறது..
அத்தப்பூ என்ற பூவை பறித்து பூக்கோலத்தில் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.
தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர்.
முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர்.
பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும்.
தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்கள் வண்ணமயமாய் கோலத்தை அழகுபடுத்தும்..
கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி பெண்கள் மகிழ்வோடு ஆடும் கைகொட்டுக்களி நடனப் பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.
நேற்றைய பொன் ஓணம்
ReplyDeleteஇன்று
ஒளி வீசும் ஓணமாக!
மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே!!
யானைப்படங்கள் அத்தனையும் அழகு.
ReplyDeleteபடகுப்படங்கள் கொள்ளை அழகு.
இன்று கொடுத்துள்ள ஒருசில பூக்கோலங்களும், ஓர் கோலத்தில் எரியும் அழகான பிரகாஸமான விளக்குகளும், மனதுக்கு சற்றே இதமாக உள்ளது.
ReplyDeleteநடுவில் ஓர் படத்தில் த்னியாக கோலம் போலக் காட்டியுள்ள பூக்குவியல் அழகோ அழகு ! ;)
கீழிருந்து நாலாவது படத்தில் வழவழப்பான ஒளிரும் தரையினில் காட்டப்பட்டுள்ள, மிகப்பெரிய, வட்ட வடிவ, தனிக்கோலமும், HAPPY ONAM என்ற பூக்களால் எழுதப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களும் அபார அழகு ! ;)
ReplyDeleteஜரிகை வேஷ்டி கட்டி, இலைமுன் அமர்ந்து, கையினில் அப்பளத்தைப் பிடித்துள்ள பொடியனை சென்ற ஆண்டைவிட மிகப்பொடியனாகக் காட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteஇருப்பினும் அவன் நல்ல அழகு தான், சமத்தோ சமத்து தான், என் பேரன் ’அநிருத்’ போலவே ;)))))
கேரளப்பெண்களின் அழகான நாட்டிய அலங்காரமும், அவர்களுக்கு அடியில் [கீழே] காட்டியுள்ள பதார்த்தங்களும் சூப்பரோ சூப்பர்.
ReplyDeleteபார்க்கப் பார்க்கப் பசியைக் கிளப்புதே!
;)))))
நுனி இலை வடிவில் ஒரு தட்டு, அதற்குள் மிகசரியாகப் பொருந்துமாறு நுனி இலை, உணவுப்பதார்த்தங்கள், கப்புகள், முள்கரண்டு, ஸ்பூன் அடடா ஒரே அசத்தலாக உள்ளதே! ;)
ReplyDeleteசாதம் மட்டும் பளீச்சென்று வெள்ளைக்கலரில் இல்லை பாருங்கோ! ;(
அதுதான் அவர்கள் ஸ்பெஷல்!
முதல் படத்தினில் கதக்களி நடனம் புரிபவர் என்ன ...... மிகப்பெரிய டி.வி. டிஷ் ஆண்டனாவை தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டுள்ளார்!
ReplyDeleteகடைசிபடத்தில் நம் தீபாவளிக் கலசம் ஜோராக கொளுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் அனைத்துமே அருமையோ அருமை. நல்ல பதிவு. வாழ்க!
//கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமானதால் ஓணத்திருநாளையும் பூக்களின் திருவிழாவாகப் பூத்து மலரவைக்கிறது..//
ReplyDeleteஆவணி மாதமே மிகவும் விசேஷ்ம் தான். அதுவும் ஆவணி மாத சித்திரை நட்சத்திரத்தை ஒட்டியே, பொதுவாக விநாயகர் சதுர்த்தி வரும்.[இந்த ஆண்டு மட்டும் சற்று அது எட்டிப்போய் விட்டது]
தங்களின் இந்தப்பதிவும் பூத்து மலர்ந்து நன்கு வாஸம் எழுப்பி என்னை மயங்க வைக்கிறது.
கவலைகள். மன் வருத்தங்கள் எல்லாவற்றையும் தங்களின் பதிவு எப்படியோ துரத்தி, என்னை சற்றேனும் மகிழ்விக்கத்தான் செய்கிறது.
ஏதோ ஒரு சிறிய இன்பம் கிடைக்கத்தான் செய்கிறது.
இதே மகிழ்ச்சி தொடரட்டும் ! ;)))))
அத்தனை படங்களும் அழகு.வண்ணப் பூக்களால் கோலமா....கொள்ளை அழகு.யானை ஊர்வலம்....ஓணம் என்பதின் விளக்கம் அறிந்துகொண்டேன்.கேரளாவின் அழகான படங்கள் யாழ் மண்ணையும் ஞாபகப்படுத்துகிறது !
ReplyDeleteஓணம் குறித்த உங்களது நேற்றைய மற்றும் இன்றைய பதிவின் வாயிலாக நிறைய தெரிந்துகொண்டேன்!
ReplyDeleteபடங்கள் வழக்கம் போல் அருமை! தொடருங்கள் சகோ!
அழகிய மலர் அலங்காரம் பல்சுவை விருந்து என ஓணம் பற்றிய பதிவு மிக அருமை
ReplyDeleteஇந்த படங்களை எல்லாம் எப்படி பிடிக்கிறீர்கள் சகோதரி..??
ReplyDeleteஅருமை..
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி
ஓணாஷம்ஷகள் ராஜேஸ்வரி....
ReplyDeleteஓணம் சத்யம் அடிபொளி...
படங்கள் எல்லாம் அதி அற்புதம்பா...
யானைகளின் அணிவகுப்பும், பெண்களின் நடனமும், உணவும் பூக்களின் கோலமும் அசத்துகிறது...
நிறைய அறியாத விஷயங்கள் அறியவும் முடிந்தது.
இன்றும் திருவோணம்...
உங்களுக்கும் ஓண திருநாள் நல்வாழ்த்துகள்பா...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.
பொன் ஓணம் பற்றிய உங்கள் பகிர்வும் படங்களும் அசத்தல்....
ReplyDelete