



"கூற்றினை குருமாமணிக் குன்றினை
நின்றவூர் நித்திலத் தொத்தினை
காற்றினைப் புனலினைச் சென்றுநாடி
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே!'
மயர்வற மதிநலம் அருளும் எம்பெருமாள் தன் அடியார்களிடம் வாத்சல்யம்- அன்பும் பாசமும் கொண்டவர் என்பதால் ஆழ்வாரைத் தேடிப் போய் பாசுரம் பெற்றுவந்தார்.
அதனால்தான் பக்தவத்சலன் (இனிய தமிழில் பத்தராவிப் பெருமாள்) என்றழைக்கப்படுகிறார்.
நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை
நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலைக்
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.'


பாற்கடல்போல் பரந்து கிடக்கும் திருநின்றவூர் ஏரிக்கரையில் அமைந்து வராக க்ஷேத்ரம் என்று குறிப்பிடப்படும் திருநின்றவூர் ஸ்ரீ என்ற திருமகள் சிலகாலம் வாசம் செய்ததால் ஸ்ரீநிவாசக்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

பெற்ற தாயினும் சாலப்பரிவு கொண்டு, தன் தவறை மன்னித்த திருமகளை சமுத்திரராஜன் நெஞ்சுருக, "என்னைப் பெற்ற தாயே' எனப் போற்றியதால் திருநின்றவூரில் எழுந்தருளியுள்ள திருமகள் என்னைப் பெற்ற தாயார் என்ற இனிய தமிழ், திருநாமம் கொண்டு ஸ்ரீமத்ஸவித்ரீ நாயிகா என்றும் போற்றப்படுகிறார்.
ஈரேழு பதினான்கு உலகங்களைப் படைத்த களைப்பினால் திருமால் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த போது, பக்கத்திலிருந்த திருமகளுக்கும் வருணன் என்னும் சமுத்திர ராஜனுக்கும் தர்க்கம் ஏற்பட்டது.
கோபம் கொண்ட திருமகள் தேவமாதர்கள், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன் ஆகியோருடன் திருப்பாற்கடலை விட்டு நீங்கி, பூலோகம் வந்து திருநின்றவூரில் எழுந்தருளினாள்.
திருமகள் நீங்கியதால் திருப்பாற்கடல் பொலிவிழந்து போனது.

தன்னால்தானே இந்த நிலை ஏற்பட்டது என்று வருந்திய சமுத்திரராஜன்,
யோக நித்திரை கலைந்த திருமாலிடம் கூறி வருந்த, திருமகளிடம் சென்று அழைக்குமாறும், தான் பின்னால் வருவதாகவும் கூறி அனுப்பி வைத்தார்.
திருநின்றவூர் வந்த சமுத்திரராஜன், தனது தவறை மன்னித்து திருப்பாற்கடலுக்குத் திருமகள் திரும்ப வேண்டும் என வேண்ட, பின்னால் வந்த பெருமாள் பரிந்து பேசினார்.
பெருமாளின் பரிந்துரையை ஏற்று திருமகள் ஒரு தாயின் நிலையில் இருந்து சமுத்திரராஜனின் கோரிக்கையை ஏற்று திருப்பாற்கடலுக்குத் திரும்பினாள். பாற்கடல் மீண்டும் பொலிவுற்று பிரகாசமானதாகப் புராணம் கூறுகிறது.
பாற்கடலை விட்டு நீங்கி சிலகாலம் இத்தலத்தில் திரு என்ற திருமகள் இருந்ததால் திருநின்றவூர் என்ற காரணப்பெயர் ஏற்பட்டது....
கிழக்கு திருமுக மண்டலம் கொண்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் பக்தவத்சலப் பெருமாள் சங்கு, சக்கர மேந்தி அருட்காட்சிதருகிறார்.

பெருமாளின் வலதுபுறத்தில் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும், சுதாவல்லி என்ற திருநாமத்துடன் விளங்கும் ஒரு தாய்ப்பசுவின் கருணையை முகப்பொலிவில் பொழியும் என்னைப் பெற்ற தாயாரை வணங்கி வலம் வருகிறோம்.

.வருண பகவானாகிய சமுத்திரராஜனுக்கு அருளிய பெருமாளின் திருக்கோவில் (தேவர்கள் வந்து வணங்கும்) விமானம் உத்பலா விமானம்

108 திவ்விய தேசங்களில் 58-ஆவது திருத்தலமாக விளங்கம் திருநின்றவூரை, பகவத் ஸ்ரீராமானுஜர் வடமொழியில் மங்களா சாசனம் செய்திருப்பது கூடுதல் சிறப்பு.
திருநின்றவூரில் சேவை சாதிக்கும் ஸ்ரீ பக்தவத்சல பெருமாளின் திருநாமம்,
ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் 742-ஆவது வரியில்
"லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல!' என்று வணங்குகிறோம்..
தன்னைச் சரணடைந்தவர்களின் குற்றங்களையும் குணமாகக் கொண்டு, அவர்களுக்கு அருள்புரியும் தாய்ப்பசுவின் தன்மை கொண்டவன் என்று சிறப்புடன் கொண்டாடப்படுகிறார்.

வருடம் முழுவதும் உற்சவங்கள் விமரிசையாக தொடர்ந்து நடைபெறுகின்றன.
ஆனி மாதம் சுவாதியில் நடைபெறும் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.
நித்தியக்கிரம பூஜைகளும், ஆலயத்தின் சுத்தமான பராமரிப்பும், பத்தராவிப் பெருமாள் மற்றும் என்னைப் பெற்ற தாயாரின் தரிசனமும் மனதிற்கு நிறைவைத் தரும் ....
சென்னை- திருவள்ளூர் ரயில் வழியில் 33-ஆவது கிலோமீட்டரில் உள்ளது திருநின்றவூர்.



















திருநின்றவூர் சிறப்பை அறிந்தேன்... படங்கள் அருமை... நன்றி...
ReplyDelete(பதிவிடும் நேரத்தை மாற்றி விட்டீர்களோ...)
அசத்தும் அற்புதமான படங்களுடன் கூடிய அற்புத பதிவு! நன்றி சகோதரி!
ReplyDeleteமிகவும் அழகான தலைப்பு.
ReplyDeleteஇன்று மிகவும் முக்கியமானதோர் நல்ல நாள்.
மீண்டும் இரவினில் வருகை தந்து மேலும் சில கருத்துக்கள் கூறுவேன்.
அதுவரை அம்மன் என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
VGK
arputham.
ReplyDeletesubbu rathinam.
தலைப்பு அருமை! நிறைய தகவல்கள்!பல படங்கள் கண்களை விட்டு அகல மறுக்கிறது!
ReplyDeleteதிருவருள் பொழியும் திருநின்றவூர்
ReplyDeleteஎன்ற இன்றைய சிறப்பான தங்களின் பதிவினில் எனக்கு மிகவும் பிடித்தமான முதல் பட இணைப்புக்கு [என் ஈஸ்வரிக்கு] என் மனமார்ந்த சிறப்புப் பாராட்டுக்கள். ;)))))
//மயர்வற மதிநலம் அருளும் எம்பெருமாள் தன் அடியார்களிடம் வாத்சல்யம் [அன்பும் பாசமும்] கொண்டவர் என்பதால் ஆழ்வாரைத் தேடிப் போய் பாசுரம் பெற்றுவந்தார். //
ReplyDeleteவாத்சல்யம் [அன்பும் பாசமும்] கொண்டவர்கள் இதே பெருமாள் போலவே, தன் மனதுக்குப் பிடித்தமானவர்களுக்காக எதையும் செய்வார்கள் தான்.
அதுபோலவே அந்த மனதுக்குப் பிடித்தவர்களிடம் உரிமையுடன் எதையும் தானே கேட்டுப் பெறுவார்களும் கூடத்தான்.
இது இயற்கை தான்.
அபரிமிதமான அன்பினால் ஏற்படும் அரிய செயலே.
இதில் வியப்பேதும் இல்லை!
//பெற்ற தாயினும் சாலப்பரிவு கொண்டு, தன் தவறை மன்னித்த திருமகளை சமுத்திரராஜன் நெஞ்சுருக,
ReplyDelete"என்னைப் பெற்ற தாயே' எனப் போற்றியதால் திருநின்றவூரில் எழுந்தருளியுள்ள திருமகள்
”என்னைப் பெற்ற தாயார்”
என்ற இனிய தமிழ், திருநாமம் கொண்டு ஸ்ரீமத்ஸவித்ரீ நாயிகா என்றும் போற்றப்படுகிறார்.//
அழகான தகவல் இது.
அவரவர்களுக்கு அவரவர்களைப் பெற்ற தாயார் மிகவும் ஒஸத்தி தானே!
அந்தத் தாய் மூலம் தானே ...
நாம் என்றைக்குப் பிறந்தோம்?
நம் பிறந்த நாள் எது?
நம் பிறந்த மாதம் எது?
நம் பிறந்த நக்ஷத்திரம் எது?
நம் பிறந்த ஊர் எது?
நம் பிறந்த நேரம் எது?
என்பதை நாம் அறிய முடிகிறது?
நமக்கு அனைத்தையும், இந்த உலகத்தையும், புரியவைக்கும் முதல் ஆசான் தாயல்லவோ !
அவர்களின் அந்தத்தகவல்கள் மூலம் அல்லவா நம் ஜாதகமே கணிக்கப்படுகிறது!!
ReplyDelete//பாற்கடலை விட்டு நீங்கி சிலகாலம் இத்தலத்தில் திரு என்ற திருமகள் இருந்ததால் திருநின்றவூர் என்ற காரணப்பெயர் ஏற்பட்டது....//
பெயர் காரணம் ...... மிகவும் அற்புதமான தகவல் ......
இன்று நம் தகவல் களஞ்சியத்திலிருந்து. ;)))))
//பெருமாளின் வலதுபுறத்தில் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும்,
ReplyDelete“சுதாவல்லி” என்ற திருநாமத்துடன் விளங்கும் ’ஒரு தாய்ப்பசுவின் கருணையை முகப்பொலிவில் பொழியும் என்னைப் பெற்ற தாயாரை’ வணங்கி வலம் வருகிறோம்.//
ஆஹா! ஒரு தாய்ப்பசுவின் கருணையை முகப்பொலிவில் பொழியும் .....
எப்பேர்பட்ட மிகச்சிறந்த உதாரணம் இது..... அழகோ அழகு தான்.
சுதாவல்லி ....... ஆஹா, என் ஆனந்தவல்லி போலவே !!
//"லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல!//
ReplyDelete- ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்
ஆஹா, எங்கிருந்து எங்கு வந்து மிகச்சரியாக முடித்துப்போட்டுச் சொல்லிவிட்டீர்கள்.
மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளதே!
அழகான படங்களுடன் கூடிய அற்புதமான இன்றையத் தகவல்கள்
ReplyDeleteமிகச்சிறப்பான இந்த நாளின் பெருமையைப் பறை சாற்றுவதாக உள்ளதுடன்,
என் மனதிலும் அப்படியே
நி ன் று விட்டது .......
இ ந் த த் தி ரு நி ன் ற வூ ர். ;)
தாய்ப்பசுவின் தன்மை போன்ற
ReplyDeleteகருணையும்,
உண்மையும்,
மென்மையும்,
மேன்மையும்
கொண்ட தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல நூற்றாண்டுகள் வாழ்ந்து மேலும் பல ஸத் விஷயங்களை எங்களுக்கு
”கோக்ஷீரம்” போல
தரவேணுமாய் எதிர்பார்க்கிறேன்.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான வாழ்த்துகள்.
அநேக ஆசிகள்.
பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
பிரியமுள்ள,
VGK
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteசிறப்பான திருநாளில் வாதஸல்யமான ஆசிகளுடன் அருமையான கருத்துரைகள் அளித்து பதிவை நிறைவாக்கியதற்கு இனிய நன்றிகள் ஐயா..
தல வரலாறு,அழகிய படங்கள்!அருமை
ReplyDeleteகோவிலுக்கு பின்புறம் பெரிய ஏரியும், கரையில் ஏரி காத்த பிரமாண்டமான ஸ்ரீராமன் சிலையும் உண்டு.
ReplyDeleteஅருமையான பதிவு
சிறப்பான பகிர்வு தொடர வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteதிருநின்றவூர்! அழகு தமிழில் நிற்கும் அழகான பெயர்! உங்கள் பதிவின் படங்களும் கண்முன்னே நிற்கின்றன.
ReplyDeleteதிவ்ய தலமான திருநின்றவூர் சிறப்பான தர்சனம் கிடைத்து மகிழ்ந்தோம்.
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - எத்தனை எத்தனை படங்கள் _ அத்தனையும் கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தக்க படங்கள். விளக்கங்களோ அருமை அருமை - மெதுவாகப் படம் பார்த்துப் படித்தேன். திரு நின்ற ஊரின் தல வரலாறு அருமையாய் கூறப்பட்டிருக்கிறது.
ReplyDeleteவழக்கம் போல் ந்ண்பர் வை.கோவின் மறுமொழிகள் சிந்தனையைத் தூண்டுகின்றன.
நல்வாழ்த்துகள் இராஜ இராஜேஸ்வாரி - வை.கோ - நட்புடன் சீனா
அருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
நன்றி. வாழ்த்துகள்.