Sunday, September 18, 2011

வண்ண வண்ண நீர்க்கோலம்

Flying through clouds


மாற்றம் ஒன்றே மாறாதது என்பதே நியதி !!



(ஆர்ப்பரிக்கும் ஒகேனேக்கல் நீர்வீழ்ச்சி)
[Hogenekkal.jpg]

தமிழ்நாடு நீர்க்கொள்கையைத் தண்ணீரில் எழுதிக் கடலுக்கு அனுப்பாமல் ராலிகான்சித்தி, ஹிவரே பாசார்போல் நீர்க்கொள்கையை மண்ணில் எழுதி பூமிக்குள் மழைநீரைச் சேமிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அண்ணா ஹசாரே உருவாக்கிய ராலிகான்சித்தி கிராமத்தை உலகமே வியந்து நோக்குகிறது.

Yosemite animated gif

ராலிகான்சித்தியை உதாரணமாக வைத்து உள்ளூர் மக்கள் ஹிவரே பாசார் என்ற வறண்ட கிராமத்தை வளமாக்கியுள்ளனர். மழைநீர் சேமிப்பில் மராட்டிய மாநிலத்தில் மாபெரும் புரட்சி நிகழ்ந்து வருகிறது. குறைந்தபட்சம் தமிழக அரசு ஒரு குழு அமைத்து ராலிகான்சித்தி, ஹிவரே பாசார் சென்று அவற்றைப்போல் ஒன்றை முயற்சிக்க வேண்டும்.


 மழையே மழையே வருவாயே! என வானம் வழ்ங்கும் அமுத துளிகளாக மழையை வரவேற்க வேண்டும்.


இவ்வாறு வரவேற்றால் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். வறண்ட பகுதிகள் வளமாகும். நதி, கால்வாய் உற்பத்தி இடங்களிலும் வனப்பகுதிகளிலும் பல்லுயிர்ப் பெருக்கம் வளம் பெறும். கடற்கரைச் சூழல் வளம் பெறும். நதிக்கரைகளில் சட்டத்துக்குப் புறம்பாகச் சுரங்கம் தோண்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





மழை வெள்ளமோ - நதி வெள்ளமோ - பேய் வெள்ளமோ எவையாயினும் தீர்க்க முடியாத பிரச்னை இல்லை. இந்தியாவில் நீரியல் நிபுணர்களுக்கும் பொறியாளர்களுக்கும் பஞ்சமா என்ன?
Yosemite animated gif


விக்டோரியா நீர்தேக்கம்


எவ்வளவோ திட்டங்கள்காகிதத்திலும் - நீர் நிர்வாக அமைப்புகள் இருந்தும் இன்னமும் இந்தியா கடலில் கலக்கும் முன்பே மழைவெள்ளம் மாசாவதையும், வீணாவதையும் தடுக்க முடியவில்லை. அதிக மழையால் நீர்த்தேக்கங்கள் தூர்படிந்து அதிக அளவில் மாசும் சேர்ந்து அதிக அளவு நீர் கடலில் கலந்து அதிக அளவில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதுதான் கண்ட பலன்.
Photobucket





Flying through clouds

Water slide fail

31 comments:

  1. நீரில் கோலம் நல்லாருக்கு!
    அனிமேஷன் படங்கள் அருமை!

    பாவி!இப்படி தள்ளி வுட்டுட்டானே!புடிங்க!புடிங்க!

    ReplyDelete
  2. புகைப்படங்கள் அத்தனையும் அதற்கேற்ற‌ வர்ணனைகளும் மிக அழகு!

    ReplyDelete
  3. சமூக சிந்தனையுள்ள அருமையான கருத்துக்களை அப்படியே புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள். மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  4. //ராலிகான்சித்தியை உதாரணமாக வைத்து உள்ளூர் மக்கள் ஹிவரே பாசார் என்ற வறண்ட கிராமத்தை வளமாக்கியுள்ளனர். மழைநீர் சேமிப்பில் மராட்டிய மாநிலத்தில் மாபெரும் புரட்சி நிகழ்ந்து வருகிறது. குறைந்தபட்சம் தமிழக அரசு ஒரு குழு அமைத்து ராலிகான்சித்தி, ஹிவரே பாசார் சென்று அவற்றைப்போல் ஒன்றை முயற்சிக்க வேண்டும்.//

    நல்லதொரு ஆலோசனை. தங்களைப் போலவே எழுச்சிமிக்க நம் முதல்வரின் கவனத்திற்கு இது சென்றால் மிகவும் நல்லது.

    ReplyDelete
  5. //மழை வெள்ளமோ - நதி வெள்ளமோ - பேய் வெள்ளமோ எவையாயினும் தீர்க்க முடியாத பிரச்னை இல்லை. இந்தியாவில் நீரியல் நிபுணர்களுக்கும் பொறியாளர்களுக்கும் பஞ்சமா என்ன?//

    இந்தியாவில் எதற்குமே பஞ்சமில்லை.
    //என்ன வளம் இந்த திருநாட்டில்!
    ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில்?// பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

    நல்ல பொது நல சிந்தனைகளும், திட்டமிடுதலும் அதை உடனடியாக செயலாற்றுவதும், துணிவுடன் கூடிய தகுந்த நடவடிக்கை எடுப்பதுமான திறமை வாய்ந்த அரசியல் தலைவர்களுக்கு தான் பஞ்சமாக உள்ளதோ?

    ReplyDelete
  6. மாறி மாறி தோற்றமளிக்கும், கீழிருந்து நாலாவது படம் கொள்ளை அழகு.

    வானவில்லும், பறவைகளும், அதிலும் அந்தக்கிளிகள் அழகோ அழகு.

    ReplyDelete
  7. நீரில் கோலம் போட, அதுவும் வண்ண வண்ண நீர்க்கோலம் போட உங்களால் மட்டுமே முடியும்.

    படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து நீர் வீழ்ச்சிகளிலும், பொங்கி வழியும் நீர், மனதிற்கு மகிழ்ச்சியும், பேரெழுச்சியும், புத்துணர்ச்சியும், உற்சாகமும் அளிப்பதாக உள்ளன.

    அழகிய அருமையான இந்தப் பதிவுக்கு மிக்க நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  8. என்ன சொல்ல சகோதரி ...
    இயற்கை எழில் கொஞ்சும்
    அழகிய செயற்கை படங்கள்
    மேகத்தினூடே உபவாசம்....
    மலை நீருக்கிடையில் சகவாசம்....
    ஐயோ
    மனதை அள்ளுகிறது
    உங்கள் படங்கள்..

    ReplyDelete
  9. ஒகேனகல் இத்தனை அற்புதமாக இருக்கிறதே!

    ReplyDelete
  10. படங்களும் வர்ணனைகளும் அருமை.

    ReplyDelete
  11. படங்கள் அருமையோ அருமை!

    மழைத்துளி மண்ணில் சங்கமித்தால் நல்லது தான்!

    ReplyDelete
  12. அந்தமாதிரி இருக்கு

    மேகம் பயமா இருக்கு வேகமா வந்து முட்ட பாக்குது

    ReplyDelete
  13. அசையும் , அசையா அனைத்து படங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன.....

    ReplyDelete
  14. அருமையான பாங்கள்.அதைவிட அருமையான வர்ணனை.

    ReplyDelete
  15. படங்களின் மூலமாகவே நல்ல விழிப்புணர்வு தகவலை சொல்லிவிட்டீர்கள்.அனிமேஷன் படங்கள் எல்லாமே அற்புதம்.

    ReplyDelete
  16. தண்ணீரைப் பார்க்க பார்க்க எத்தனை ஆனந்தம்..
    படங்கள் அழகோ அழகு.. அதுவும் அனிமேஷனில் பார்க்கும்போது நிஜம் போல ஒரு தோற்றம்.

    ReplyDelete
  17. படங்களும் வர்ணனையும் அருமை அருமை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அனிமேஷன் படங்கள் அருமை!... வாழ்த்துக்கள் உங்கள்
    பகிர்வுக்கு ............

    ReplyDelete
  19. //(ஆர்ப்பரிக்கும் ஒகேனேக்கல் நீர்வீழ்ச்சி)//

    ஹையா !!! இந்த படம் ரொம்ப பிடிச்சிருக்கு .(சின்ன வயசு நினைவுகள் வருது) படங்களும் வர்ணனைகளும் அருமை .

    ReplyDelete
  20. படங்கள் அத்தனையும் அருமை. நல்ல கருத்துகள் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  21. ஹைய்யோ! என்ன அழகான காட்சிகள்!

    ReplyDelete
  22. இயற்கை எழில் கொஞ்சும்
    அழகிய செயற்கை படங்கள் அருமை

    ReplyDelete
  23. எல்ல அருவிப்படமும் சுட்டுட்டன் முடிந்தால் வழக்குத் தொடருங்கள்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

    ReplyDelete
  24. அனிமேட்டிங் படங்கள் அருமை.

    ReplyDelete
  25. படங்கள் எல்லாமே நல்லா இருக்குங்க.
    இப்படி புடிச்சு தள்ளி விட்டுட்டானே:(((

    ReplyDelete
  26. வணக்கம் அம்மா நீங்கள் என் தளம் தனிமரத்தை நாடி வந்தது இல்லை உங்களின் பணிச் சோலி நான் அறிவேன் இன்று உங்களின் பதிவு ஒன்றை உங்களின் அனுமதி இன்றி இணைத்து இருக்கின்றேன் புரிந்துணர்வுடன் தனிமரம் ! 
    நட்புடன் நேசன்!

    ReplyDelete