

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும் புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.-
- என திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் செயத பெருமையுடன் அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயிலில் காஞ்சிபுரம் திருப்புட்குழி திருத்தலத்தில் மங்களங்களை அருளும் மரகதவல்லி தாயாருடன்
விஜய வீர கோட்டி விமானத்தின் நிழலில் அருள்கிறார்.
புண்ணிய மிகு புரட்டாசி மாத அமாவாசை -மாளயபட்ச திதியில் வணங்க நலம் பல அருளும் சிறப்பான திவ்ய தேசமாகும்...
புண்ணிய மிகு புரட்டாசி மாத அமாவாசை -மாளயபட்ச திதியில் வணங்க நலம் பல அருளும் சிறப்பான திவ்ய தேசமாகும்...
![[vijayaraghavan2-small.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHZDIuoSTooBUa_3dIUGwHLAAna08OHUIDOejE-cg1tAgM4G94TNBHqi5qoHF9idoAHMpZoIf3smYVpfRAjPLuATYW10jkR5dyTKJeNtDhhMBdpzSyUkiPvDOIXepsSPYVLmVf8IQ7Lr8/s400/vijayaraghavan2-small.jpg)

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பிரார்த்தனை செய்யும் தலம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் ஒன்று.

தாயார் வறுத்தபயிறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் என அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
![[Thiruputkuzhi-gopuram-pushkarini._smalljpg.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb9vUlYTjLFMTzexc7QrRye23T2lEzgR3WlP5Da_B7jmwvtceflnWWuAUsLyxMoEcmmXc_qmfDLl9y5Vp0uKqC91SUToDI-xFgRo66GYFDbCzQkbkOa7mVzVb2vUWysymE_Hxg2nU-XpM/s1600/Thiruputkuzhi-gopuram-pushkarini._smalljpg.jpg)
ராமானுஜரின் குருவான யாதவப்பரகாசர் இங்கு தான் வசித்தார்.
அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் சிற்பக்கலையில் ஒரு அதிசயமாகும்.
உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார்.
உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார்.

ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மஹாள்ய அமாவ்சை -புரட்டாசி மாதத்தில் நிகழும் புண்ணிய தினம்
மிக விஷேச்ம்.
மஹாள்ய அமாவ்சை -புரட்டாசி மாதத்தில் நிகழும் புண்ணிய தினம்
மிக விஷேச்ம்.

திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு.
குழி என்றால் ஈமக்கிரியை செய்தல்.
ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை
செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது.

சீதையை தேடித அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது.
மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து
அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது.

அதன்படி ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார்.
இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது.

எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது.
ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார்.
எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது.
மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார்.
பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும்
சகல மரியாதை உண்டு.
சகல மரியாதை உண்டு.
ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு
வெளியில் உள்ளது.
வெளியில் உள்ளது.
![[Image1]](http://img1.dinamalar.com/Kovilimages/T_500_261.jpg)
விக்ருதி வருட திருப்புட்குழி பவித்ர உத்சவம்






மங்களங்களை அருளும் மரகதவல்லித்தாயார் தரிஸித்தோம்.
ReplyDeleteசந்தோஷம்.
நல்ல ஒரு தொகுப்பு. வாழ்த்துகள் சகோதரி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
இடுகையும் படங்களும் அசத்தல்.. அசையும் கற்குதிரையை பற்றிய தகவல் புதுசா இருக்கு.
ReplyDeleteமங்களவல்லித்தாயார் அசத்தலாக இருக்கிறாங்க.
ReplyDeleteபடங்கள் super
ReplyDeleteமரகதவல்லி தாயாரை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் இன்று....
ReplyDeleteஇந்த பகிர்வுக்கான ஸ்தல புராணமாக ஜடாயுவின் ஈமக்கிரியைகள் செய்யவும் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கவும் ஜடாயு வேண்டிக்கொண்டதாலும்...
ஈமக்கிரியை செய்யும்போது வெப்பம் தாங்காது இரு தேவிகளும் இடம் மாறியது இன்றளவிலும் சன்னதி இடம் மாறி இருப்பதும்....
தாயாரின் கருணை பொங்கும் கண்களை கண்டதும் என் பிள்ளைக்காக நான் ஒரு கோரிக்கையும் வேண்டிக்கொண்டேன் ராஜேஸ்வரி அருள் பாலிப்பாள் என்ற அதீத நம்பிக்கையுடன்....
எத்தனை அழகு எத்தனை அழகு நீல நிறத்தில் உடையும் தலை க்ரீடமும் பின்புறம் தங்க ஜடையும் அதில் பொருத்தி இருக்கும் ஐந்து தலை நாகமும்....
அசையும் கல்குதிரைக்கான விவரங்கள் எல்லாம் கொடுத்து அதை வடிவமைத்தவர் இனி இன்னொன்று இது போல் செய்யமாட்டேன் என்று வைராக்கியமாக உயிர் விட்டதையும் படித்தபின் அந்த அசையும் கல்குதிரை பார்க்க படம் தேடினேன் கிடைக்கவில்லை.. அதனால் என்ன அம்பாள் அருளால் நேரில் போய் தரிசிக்க வாய்ப்பு இறைவன் அருளவேண்டும்....
உங்கள் ஆன்மீக பதிவுகள் படிக்க படிக்க இறைவன் எனக்கு ஆயுள் கொஞ்சமாவது நீட்டிக்க கூடாதா இங்கு படைத்திருக்கும் தெய்வங்களின் சன்னிதிகளை தரிசிப்பேனா என்ற ஏக்கம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை....
இனி ஒரு பிறவி வேண்டாம் என்றும், மீறி பிறக்க நேரிட்டால் பூமிமாதாவின் ஒரு அங்கமாக இறைவன் பாதம் தொடும் மண்ணாக பிறக்க அருள் புரி தாயே...
அருமையான கட்டுரை அழகிய படங்கள் இறையாசி என்றும் கிட்டட்டும் உங்களுக்கு...
அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி பகிர்வுக்கு...
வழக்கம்போல படங்கள் எல்லாம் சூப்பர்.
ReplyDeleteமிக நல்ல அரிய விஷயங்களை தொகுத்துதந்தத்ர்கு நன்றி. இனிமேலெதக்கோவிலுக்கு செல்வதற்கு முன் உங்கள் பதிவில் அந்த கோவில் இருக்கிறதா என்று பார்த்த பின்னரே செல்லவேண்டும் அப்பொழுதுதான் நன்றாக பார்க்க முடியும்
ReplyDeleteஅழகிய படங்கள், அபூர்வ தகவல்கள்,..
ReplyDeleteநன்றி தோழி..
வழக்கம் போல் அழகான படங்களுடன் நல்ல பகிர்வு.
ReplyDeleteஅருமையான படங்கள்.
ReplyDeleteஅசையும் கல்குதிரை அதிசயம்.வடித்த சிற்பியின் பக்தி சிலிர்க்க வைக்கிறது!
ReplyDeleteஅழகான படங்கள்
ReplyDeleteமன நிறைவான தரிசனம்!
ReplyDeleteஆனந்த தரிசனம்
ReplyDeleteஆலய வழிபாடு
அழகான படங்கள
அருமைமிகு வண்ணங்கள்
காணாத காட்சிகள்
கணகவர் சிற்பங்கள்
தேனாக இனித்திட
தெரிவித்தேன் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நல்ல பகிர்வு.... எப்போதும் போல படங்கள் பகிர்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்!
ReplyDeleteவழக்கம்போல படங்கள் எல்லாம் சூப்பர்...
ReplyDeleteஅனைத்து படங்களும் அருமை.
ReplyDeleteமனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.
நாளுக்கேத்த பதிவு.படங்கள் அருமை.
ReplyDeleteஅழகியபடங்கள் மேலும் அறிய தகவல்
ReplyDeleteகள்.
மங்களம் அருளும் மரகதவல்லி தாயார் .. படங்களுடன் பதிவு பரவசம்.. பகிர்வுக்கு நன்றி மேடம்
ReplyDeleteஅருமையான படங்கள். நன்றி
ReplyDelete;)
ReplyDeleteகுறையொன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா!
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா!!
1075+2+1=1078
ReplyDelete