பட்டுக்கு பிரசித்தி பெற்ற காஞ்சீபுரத்தில் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும்.
இரண்டு கரங்களை நீட்டி சேவை சாதிக்கும் பெருமாள்
இடதுகையில் இரட்டைவிரலை உயர்த்திக் காட்டியிருக்கிறார்.
இந்தியாவிலேயே இத்தகைய வித்தியாசமான அமைப்பு
இங்கு தான் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இடதுகையில் இரட்டைவிரலை உயர்த்திக் காட்டியிருக்கிறார்.
இந்தியாவிலேயே இத்தகைய வித்தியாசமான அமைப்பு
இங்கு தான் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன்
கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.
கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.
சங்கு சக்கரத்துடன் மூலவர் சதுர்புஜ ஆஞ்சநேயர்
இறைவன் மேற்கு நோக்கி உலகளந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம்
ஸாகர ஸ்ரீகர விமானம் எனப்படும்.
இறைவனை ஆதிசேஷன், மகாபலிச் சக்கரவர்த்தி ஆகியோர் தரிசித்துள்ளனர்.
மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம்
ஸாகர ஸ்ரீகர விமானம் எனப்படும்.
இறைவனை ஆதிசேஷன், மகாபலிச் சக்கரவர்த்தி ஆகியோர் தரிசித்துள்ளனர்.
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருஊரகம்எனப்படும்.
இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே கொடிமரத்திற்கு எதிரே உள்ள திவ்ய தேசம் ஆகும்.
இந்த கோயிலின் உள்ளேயே திருநீரகம், திருக்காரகம்,திருகார்வனம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது.
அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே நான்கு திவ்ய தேசங்கள்
வேறு எங்கும் பார்க்க முடியாத அமைப்பு.
. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு.
ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே.
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
எழுந்தருளியுள்ள பெருமாள் மிகவும் பிரம்மாண்டமானவர்.
108 திருப்பதிகளில் இந்த அளவு பிரமாண்ட தரிசனத்தை எங்கும் காணமுடியாது.
இதே போல் இங்கு ஆதி சேஷனும் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
இவரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நடக்கிறது. இவருக்கு திருமஞ்சனம் செய்து, பாயாசம் படைத்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை.

மகாபலி சக்ரவர்த்தி அசுர குலத்தை சேர்ந்த நல்லவன்.
தான தர்மங்களில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது. இதனால் அவனுக்க மிகுந்த கர்வம் ஏற்பட்டது.
நல்லவனுக்கு இந்த கர்வம் இருக்ககூடாது என்பதால், பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்கிறார்.
இதைக்கண்ட மகாபலி,""தாங்களோ குள்ளமானவர். உங்களது காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே என்றான். அவனது குல குருவான் சுக்கிராச்சாரியார், வந்திருப்பது பகவான் விஷ்ணு என்பதை அறிந்து அவன் செய்ய போகும் தானத்தை தடுத்தார்.
கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் எல்லாம் வீணாகிவிடும் என்பதால் மூன்றடி நிலம் கொடுக்க சம்மதித்தான்.

பெருமான் தனது திருவடியால் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை பாதாளத்திலும் வைத்து மற்றொரு அடி நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை படித்த மகாபலி தலை குனிந்து, இதோ என் தலை. இந்த இடத்தை தவிர வேறு ஏதுமில்லை, என்றான்.
பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி
பாதாளத்திற்கு அனுப்பினார்.
பாதாளம் சென்ற மகாபலி, பெருமாளின் பாதம் பட்டு பாதாள லோகம் வந்து விட்டோமே, தன்னால் அவரது உலகளந்த காட்சியை காண முடியவில்லையே என வருந்திய மகாபலி மன்னனுக்கு
பாதாள லோகத்திலேயே உலகளந்த கோலம் காட்ட வேண்டி பெருமாளை குறித்து, மகாபலி கடும் தவம் இருந்தான்.
இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள்,மகாபலிக்கு உலகளந்த திருக்கோலத்தை காட்டினார்.
பாதாள உலகத்தில் இருந்த அவனால் பெருமாளின் திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லை.
எனவே மீண்டும் பெருமாளிடம் மன்றாடினான்.
பெருமாள் மகாபலிக்கு காட்சி தருவதற்காக இதே இடத்தில்
ஆதிசேஷனாக காட்சியளித்தார்.
இந்த இடமே தற்போது திருஊரகம் என அழைக்கப்படுகிறது.
இது உலகளந்த பெருமாளின் மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில் உள்ளது.

இந்தக் கோயிலுக்கு வருகிறவர்களுக்கு மகாபலிச் சக்ரவர்த்திக்கு
காட்சி தந்தது போல் பெருமாள் தினமும் காட்சி தந்து அருள்வார்.
தெரிந்து செய்திருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் அத்தனை பாவங்களையும் மன்னித்து அனுக்கிரஹம் கிடைக்கும் புனித ஸ்தலம் ..
பத்மாமணி
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். மூலவர் பெயர் ஸ்ரீ ஜகதீஸ்வர பெருமாள் நின்ற கோலத்தில் தரிசனம், விமானம் ஜகதீஸ்வர விமானம்,
தாயார் நிலமங்கைவல்லி, கோயிலின் தீர்த்தம் அக்ரூர தீர்த்தம்.
தாயார் நிலமங்கைவல்லி, கோயிலின் தீர்த்தம் அக்ரூர தீர்த்தம்.
கருணாகரப்பெருமாள் |
ராஜகோபுரம்
பலிபீடம்
கொடிமரம்
சதுர்புஜ ஆஞ்சநேயர் சன்னதி
மூலவர் கருணாகரப்பெருமாள்
உலகளந்த பெருமாள்
திருஊரகம் பற்றிய செய்தி அருமை... இந்த ஆன்மீக படைப்பும் அழகு...வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றாக இருக்கிறது.
ReplyDeleteஊரகம்,உலகளந்த பெருமாள் ஸ்தல புராணம்,அருமை.
ReplyDeleteஅழகிய படங்களுடன் நல்ல ஆன்மீக பதிவு. பகிர்வுக்கு நன்றி மேடம்.
மகாபலி அரசனுக்கும் திரு ஊரகத்திற்கும் இப்படி
ReplyDeleteஒரு தொடர்பு இருப்பது அபூர்வத் தகவல்
அருமையாக படங்களுடன் விளக்கி இருக்கிறீர்கள்
வரும் காலங்களில் கோவில் குறித்த முழுத் தகவல்கள்
வேண்டுமெனில் தங்கள் பதிவைத்தான் பார்க்கவேண்டும்
எனவும் அதற்கான தகவல் களஞ்சியம் தங்கள் பதிவுதான் என
அனைவரும் ஏகமனதாக ஒப்புக் கொள்ளும் நாள்
வெகு தொலைவில் இல்லை
தொடர வாழ்த்துக்கள்
இத்தல புராணம் இதுவரை நான் கேள்விப் படாதது ...அருமை !
ReplyDeleteRamani said../
ReplyDeleteமகாபலி அரசனுக்கும் திரு ஊரகத்திற்கும் இப்படி
ஒரு தொடர்பு இருப்பது அபூர்வத் தகவல்
அருமையாக படங்களுடன் விளக்கி இருக்கிறீர்கள்
வரும் காலங்களில் கோவில் குறித்த முழுத் தகவல்கள்
வேண்டுமெனில் தங்கள் பதிவைத்தான் பார்க்கவேண்டும்
எனவும் அதற்கான தகவல் களஞ்சியம் தங்கள் பதிவுதான் என
அனைவரும் ஏகமனதாக ஒப்புக் கொள்ளும் நாள்
வெகு தொலைவில் இல்லை
தொடர வாழ்த்துக்கள்//
அழகான அபூர்வமான கருத்துரைகளுக்கும், வாழ்த்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
This comment has been removed by the author.
ReplyDeleteRAMVI said...
ReplyDeleteஊரகம்,உலகளந்த பெருமாள் ஸ்தல புராணம்,அருமை.
அழகிய படங்களுடன் நல்ல ஆன்மீக பதிவு. பகிர்வுக்கு நன்றி மேடம்./
அழகிய அருமையான கருத்துரைக்கு நன்றி.
DrPKandaswamyPhD said...
ReplyDeleteநன்றாக இருக்கிறது./
நன்றி ஐயா.
மாய உலகம் said...
ReplyDeleteதிருஊரகம் பற்றிய செய்தி அருமை... இந்த ஆன்மீக படைப்பும் அழகு...வாழ்த்துக்கள்/
அழகிய அருமையான கருத்துரைக்கு நன்றி.
மிகவும் அருமையான தகவல்கள்.
ReplyDeleteஎவ்வளவோ கோயில்களுக்குச் சென்று எவ்வளவோ தெய்வீக விகரஹங்களை தரிஸிக்கிறோம்.
இருப்பினும் சிலவற்றில் மட்டும் நம் மனம் அப்படியே லயித்துப்போய் விடுவதுண்டு.
சிலசமயம் நம்மை மெய் மறந்து போக வைத்து விடுவதுண்டு.
சிலவற்றை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கணும் போல ஆவல் தோன்றுவதுண்டு.
சிலவற்றைப்பார்த்தால் ஒருவித பிரமிப்பு ஏற்படுவதுண்டு.
எனக்கு இந்த அனுபவம் அதிகம்.
அதுவும் சில அம்பாள் விக்ரஹங்கள் / சிலைகள், என்னுடன் வாய் திறந்து பேசுவதுபோல, புன்னகையுடன் அனுக்கிரஹம் செய்வதுபோல, ”நான் இருக்கிறேன், நீ எதற்கும் கவலைப்படாதே” என்று ஆறுதல் சொல்லுவதுபோல, ஒருவித பிரமையையே ஏற்படுத்தி விடுவதுண்டு.
அது போல என்னை பிரமிக்க வைத்த தெய்வச்சிலைகளில் இந்த காஞ்சீபுரம் உலகளந்த பெருமாளும் ஒருவர்.
1970 முதல் 1994 வரை, ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ இந்தப்பெருமாளையும், காஞ்சீ காமாக்ஷியை தரிஸிக்க பாக்யம் பெற்றிருந்தேன்.
கடைசியாக 1994 ஜனவரி மாதம் ஸ்ரீ மஹாபெரியவா ஸித்தியடைந்த செய்தி கேட்டு ஓடினேன். அப்போதும் கூட இந்தப்பெருமாள் கோயிலுக்கோ வேறு கோயில்களுக்கோ நான் போகவில்லை.
அதன் பிறகு ஓரிரு முறை அந்த ஊருக்கு நான் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோதும் ஸ்ரீ மஹாபெரியவாளின் அதிஷ்டானத்தை மட்டும் 12 பிரதக்ஷணங்கள் செய்து விட்டு, வேறு எங்குமே செல்லாமல் திரும்பி வந்து விட்டேன்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் இந்தப்பதிவின் மூலம் மீண்டும் அந்தப்பெருமாள் எனக்கு, படம் மூலம் இன்று காட்சி கொடுத்துள்ளார்.
ஆனாலும் தாங்கள் காட்டியுள்ளது அந்தக்கோயிலில் விற்கப்படும் படத்தின் பிமபம் மட்டுமேயன்றி, மூலவரின் ஒரிஜினல் தோற்றமல்ல என்பதும் தெரிகிறது.
பதிவிட்ட தங்களுக்கு என் நன்றிகள்.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தொடரட்டும் தங்களின் ஆன்மீகப்பணிகள்.
vgk
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமிகவும் அருமையான தகவல்கள்.
எவ்வளவோ கோயில்களுக்குச் சென்று எவ்வளவோ தெய்வீக விகரஹங்களை தரிஸிக்கிறோம்.
இருப்பினும் சிலவற்றில் மட்டும் நம் மனம் அப்படியே லயித்துப்போய் விடுவதுண்டு.
சிலசமயம் நம்மை மெய் மறந்து போக வைத்து விடுவதுண்டு.
சிலவற்றை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கணும் போல ஆவல் தோன்றுவதுண்டு.
சிலவற்றைப்பார்த்தால் ஒருவித பிரமிப்பு ஏற்படுவதுண்டு.
எனக்கு இந்த அனுபவம் அதிகம்./
இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டதுண்டு. மலரும் நினைவுகளாக ஆத்மார்த்தமான கருத்துரைகளுக்கு ந்ன்றி ஐயா.
ஆனாலும் தாங்கள் காட்டியுள்ளது அந்தக்கோயிலில் விற்கப்படும் படத்தின் பிமபம் மட்டுமேயன்றி, மூலவரின் ஒரிஜினல் தோற்றமல்ல என்பதும் தெரிகிறது.
ReplyDeleteபதிவிட்ட தங்களுக்கு என் நன்றிகள்.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தொடரட்டும் தங்களின் ஆன்மீகப்பணிகள்./
மூலவர் தரிசனம் மன்தில் .
ஆன்மீகத் தகவலுக்கு நன்றிகள் தோழி..
ReplyDeleteஅரிய தகவல்களுடன் எடுத்ததுமே கண்சிமிட்டும் விளக்கின் ஒளி...
ReplyDeleteஓங்கி உலகளந்த பெருமாளின் விஸ்வரூபம் காஞ்சிபுரத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு நேர்ல கைப்பிடிச்சு கூட்டிட்டு போய் காண்பித்தது போன்று இருக்கிறது ராஜேஸ்வரி....
இப்படி ஒவ்வொரு கோவிலாக நீங்கள் எங்களை கூட்டிட்டு போய் காண்பிக்கும்போது மனம்நிறைந்து நாங்கள் எல்லோரும் நீங்க என்னிக்கும் நலமுடன் இருந்து இந்த தெய்வீக சேவையை தொடரவேண்டுமென்று மனமுருக பிரார்த்திக்கிறோம்பா...
நம்முடைய ஊரில் இல்லாமல் இப்படி பாலைவனத்தில் உட்கார்ந்துக்கொண்டு மனம் வெறுமை அடைந்துவிடாமல் இருக்க தினம் தினம் என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போற புண்ணியம் மொத்தம் உங்களுக்கு தான்...
எத்தனை நன்றி சொன்னாலும் போதாதுப்பா...
அழகிய விஸ்வரூபத்துடன் இருக்கும் பெருமாளை பார்க்கும்போது உடல் சிலிர்க்கிறது....
அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி அருமையான பகிர்வுக்கு...
ரமணி சார் சொன்னது அத்தனையும் நிஜமேப்பா...
ReplyDeleteஊருக்கு வந்துட்டு கோவிலுக்கு எங்காவது போகனும்னா நிம்மதியா உங்க வலைப்பூ வந்துட்டு போகலாம்....
Very nice writings Rajeswari.
ReplyDeletei visited the temples few times.
But i felt very informative and can view close pictures from your post only.
Thanks dear.
viji
இதற்கு முன் வந்த வாமன அவதாரம் படத்துக்கும் இந்தப் பதிவில் உள்ள வாமனாவதாரப் படத்துக்கும் வித்தியாசம் பாருங்கள். இது நன்றாயிருப்பதாய் என் அபிப்ராயம்.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteநான் இதுவரை காஞ்சி சென்றதில்லை. தங்கள் பதிவின் மூலம் பெருமாளின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.
ReplyDeleteநல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.
அருமையான பகிர்வுக்கு நன்றி சகோ ......
ReplyDeleteஊரகம்,உலகளந்த பெருமாள் ஸ்தல புராணம்
ReplyDeleteஅருமை.
நான் சென்றிருக்கிறேன்.ஆனால் பதிவை படித்த பின்பு பார்த்த பல விஷயங்களும் அர்த்தத்துடன் நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteVery good and detailed article. I had also written about this temple after I visited Kanchipuram; but not as detailed as your post. Very good.
ReplyDelete997+2+1=1000 ;)))))))))))))
ReplyDeleteஆயிரம் நிலவே வா ! ஓர் ஆயிரம் நிலவே வா !! ;)))))
என் மிகபெரிய நீ.....ண்.....ட பின்னூட்டம்.
அதற்கான தங்களின் இரண்டு பதில்கள்.
அருமை. மகிழ்ச்சி. சந்தோஷம் ...... என்றும் தொடரட்டும். ;)))))